இடுகைகள்

குற்றங்களை செய்வதற்கான முன்தயாரிப்பு கற்பனைகள் - முப்பொழுதும் கொலைக் கற்பனைகள்

படம்
  ஒருவர் மனதில் வன்முறை எண்ணம் வருகிறது என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். உடல், மனம் ஒத்திசைவு குறைந்தவர்கள், தனது உடலின் மனதின் எல்லைகளைப் புரிந்தவர்கள் கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது ஆக்கப்பூர்வமாக அமைந்தால் ஆராய்ச்சி, கதைகள் என செல்லும். ஆனால் இன்னொரு இருள் பக்கம் நகர்ந்தால் அது ஒருவழிப்பாதை. இருட்டில் அப்படியே நகர்ந்து செல்லவேண்டியதுதான். நரகத்தின் பாதை அது. சமூகத்தை விட்டு தனியாக ஒருவர் இருக்க நினைத்தால், அதை குணப்படுத்தும் மருந்துகள் மனநல மருத்துவத்தில் சிகிச்சையில் கிடையாது. அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதுதான் ஒரே சிகிச்சை. இந்த ஏரியாவில் கொலைகள் நடந்தால், தொடர் கொலைகாரர் என ஒருவர் அறியப்பட்டால் அது நான்தான் என தனது நண்பனிடம் துணிச்சலாக கூறி கொலை செய்வதில் இறங்கினார் ஜாசன் மாசே. இருபது வயதில் இளைஞர், இளம்பெண் என இருவரை படுகொலை செய்தவர். கொலைகளை ஒரே நாளில் செய்தார். கற்பனையும் அதில்   எல்லை இல்லாத வன்முறையும் கொண்ட காட்சிகளைக் கண்டு கொலைகளை செய்யத் தொடங்கியவர்தான் ஜாசன்.  முன்னரே ஜாசன், விலங்குகளை சித்திரவதை செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதைப் பார்த்து ப

மனதில் பெருகும் எல்லையில்லாத வன்முறைக்கான காரணம்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஒருவர் மனதில் தோன்றும் அளவிடமுடியாத வன்முறைக்கு என்ன காரணம்? குறிப்பிட்ட சாதியினரின் ரத்தத்தில் வன்முறை உள்ளது என சிலர் கூறலாம்.ம ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அட்ரியன் ரைன் என்பவரின் தலைமையில் அமைந்த குழுவினர், மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை வன்முறைக்கு காரணம் என்று கண்டறிந்தனர்.   இவரின் ஆராய்ச்சியில் வன்முறையாளர்களின் மூளையில் உணர்ச்சிகளை இயக்கும் மூளையின் பகுதியில் நிறைய பகுதி செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் இந்த மனிதர்கள் செய்யும் செயல்களின் பயமே இருக்காது. ஆக்ரோஷமாக, குறைந்த எதிர்வினையாற்றும் விதமாக செயல்படுவார்கள். இவர்களை எளிதாக தூண்டிவிட முடியும். எடுக்கும் முடிவுகளிலும் பொறுமை, நிதானம் இருக்காது. அனைத்துமே அதிரடியாகத்தான் வன்முறையை இலக்காக கொண்டுதான் இயங்குவார்கள்.   கற்பனையின் துணையால் சூழலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்கள் இவர்கள். பிறரை விட சிறப்பான தகுதிகள் கொண்டவர்கள் என நினைத்துக்கொண்டு வன்முறையைக் கையாள்வார்கள். கொலை செய்யாமல் இவர்களால் வாழவே முடியாது என கொலையை வல்லுறவுவை பிராண வாயு போல நின

சாத்தானின் விசுவாசியால் கொல்லப்பட்ட மக்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0   சில கொலைகாரர்கள் உண்டு. இவர்கள் கொலை செய்வது என்பது தங்களின் மகிழ்ச்சிக்காகவே. போரில் ராணுவ வீரர்களைப் பாருங்கள். அவர்கள் அவர்களின் அடையாளம் அறியாத இன்னொரு நாட்டு ஆட்களை கொல்லுகிறார்கள். எதற்காக, அவர்களைப் பற்றி வீர ர்களுக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்கு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். ஆனால் ராணுவ வீர ர்களைப் பொறுத்தவரை கட்டளைகளை மீறாமல் சட்டத்திற்கு உட்பட்டு கொலைகளை செய்கிறார்கள். கேட்டால் தேசியவாதம், நாட்டுப்பற்று என ஏதேனும் உளற வேண்டும்தான். இதற்கான உருட்டுகளைத்தான் காசுக்கு விலைபோன இன்றைய இந்தியா, குடியரசு, மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் செய்தி சேனல்கள் போன்ற ஊடகங்கள் செய்வார்கள். மக்களைக் கொல்ல நாட்டுப்பற்று மட்டுமல்ல மதமும் கூட ஒரு கருவிதான். இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அதிகளவில் மத ரீதியானபடுகொலைகள்தான் அதிகம். அந்த வகையில் ரிச்சர்ட் ராமிரெஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் சாத்தனை வழிபடுவதாக தன்னைக் கூறிக்கொண்டவர். குத்துபட்டு, ரத்தம் பீறிட ஒருவர் இறப்பதைப் பார்ப்பதே தனக்கு மகிழ்ச்சி என சிறைக்காவலர்களிடம் பேசியவர் ரா

கொலை செய்வதற்கு காரணம் தேவையில்லை! - கொலைகாரர்களின் உளவியல் ரகசியம்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 கொலை செய்வதற்கான காரணங்கள் என்பதை காவல்துறையினர் எப்போதும் தேடுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் எந்த காரணமும் இல்லை என்று சொல்லும் குற்றவாளிகள் உலகில் உண்டு. அவர்களில் ஒருவர்தான் கில்மோர். இவர், 1976இல் எரிபொருள் நிலையத்திற்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு பணியாற்றிய மேக்ஸ் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அவரும் பணிந்தார். கையில் உள்ள, ட்ராயரில் உள்ள பணத்தைக் கூட தர நினைத்தார். ஆனால் கில்மோர் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட வில்லை. முட்டிபோட்டு உட்காரவைத்து பின்புறத்தில் இருந்து சுட்டுக்கொன்றவர், அதை தனக்கும் தன்னை விட்டுச்சென்ற காதலிக்குமான நினைவுப்பரிசாக நினைத்தார். இதற்குப் பிறகு அப்படியே சென்றவர், மோட்டல் ஒன்றில் நுழைந்தார். அங்கு இருந்தவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டியவர், அவர் அதற்கு பணிந்தவுடன் அவரையும் கொன்றார். கில்மோரை அவரது உறவினரே காட்டிக்கொடுத்தார். எதற்காக அந்த கொலை செய்தார் என்றால் தான் தொடர்ச்சியாக கொலை செய்யவேண்டும். மிரட்டிய விவகாரம் தெரிந்தால் காவல்துறை அவரை கைது செய்துவிடும் என கில்மோர் நினைத்தார். மூன்றாவது கொலை செய்

சூழல் மாசுபாடு பற்றிய தகவல்களை கசியவிடும் நிதித்துறை அதிகாரி! கலகத் தலைவன் - மகிழ் திருமேனி

படம்
  கலகத் தலைவன் இயக்கம் மகிழ் திருமேனி   மகிழ் திருமேனி வணிக ரீதியான படங்கள் எடுப்பவர். அதேசமயம் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாத வகையில் நேர்த்தியான திரைக்கதையோடு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் கலகத்தலைவனையும் கூறலாம். கலகத்தலைவன் தொழிற்சாலை கழிவுகள், சூழல் மாசுபாடுகள் எப்படி மக்களை பாதிக்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை அதிகாரம், அரசு, தொழில்துன்றை என்ன செய்கிறது என்பதை நேர்மையாக பேசியுள்ளது. வஜ்ரா என்ற வணிக வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் பெரும் நிறுவனம். குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லும் வாகனத்தை தயாரித்து அதை சந்தைப்படுத்தும் அறிவிப்பை வெளியிடுகிறது. ஆனால் மாசுபாட்டு ஆய்வில் அதிக மாசு ஏற்படுவது தெரிய வருகிறது. அதை நிறுவனம் மறைத்து பங்குச்சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கிறது. ஆனால் வஜ்ராவின் மாசுபாட்டு ரகசியம் ஊடகங்களுக்கு கசியவிடப்படுவதால் நிறுவனம் கடுமையான விமர்சனங்களையும் சந்தையில் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. இதனால் வஜ்ராவின் தலைவர் பழங்குடிகளை கொன்று சாதித்த இரக்கமில்லாத ராணுவ கமாண்டோ ஒருவரை ரகசிய உளவாளியை கண்டுபிடிக்க அமர்த்

வீடியோ எடுத்து லட்சம் சம்பாதிக்க முயன்று கம்யூனிச இயக்கத்திடம் மாட்டிக்கொள்ளும் நாயகன்! - லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப்

படம்
  லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப் இயக்கம் மெர்லபா காந்தி விப்லா என்ற இளைஞர், யூட்யூப் சேனல் ஒன்றை நடத்துகிறார். பிறரது போனைப் பிடுங்கி சப்ஸ்கிரைப் செய்யும் நிலை. அவர் தனியாக சில இடங்களுக்கு பயணித்து யூட்யூப் வீடியோ செய்ய நினைக்கிறார். அப்படி செய்ய நி னைத்து மாவோயிஸ்ட்டுகள் உள்ள காட்டுக்கு சென்று பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் கதை.   படத்தில் இயக்குநர் மெர்லபா காந்தி, மாவோயிஸ்ட் இயக்கம் அதன் கொள்கை, அரசு, அதிலுள்ள அதிகாரிகளால் அமைதிப் பேச்சுவார்த்தை எப்படி தகர்ந்துபோகிறது என்பதையெல்லாம் பேசுகிறார். படத்தில் கம்யூனிஸ்ட் ஒருவரின் மகன்தான் விப்லா. அவருக்கு அப்பாவின் கொள்கையை விட காசுதான் முக்கியம். எனவே யூட்யூப் சேனல் தொடங்கி அப்பாவிடம் ஒரு லட்சம் காசு வாங்கி ஊர்சுற்றி வீடியோ போட்டு காசு சம்பாதிப்பதுதான் நோக்கம் இந்த நேரத்தில் அவர் அவரைப் போலவே வீடியோ பதிவிடும் இன்னொரு நபரைப் பார்க்கிறார். அவர்தான் வசுதா. டிஜிபியின் பெண்.   டெல்லியில் படிக்கும் அவளை சீண்டிவிட்டு கமெண்டுகளைப் போடுகிறான். இதில் கோபமாகும் வசுதா, ஆந்திரப் பிரதேசத்தின் ஆரகு காட்டு

இஸ்ரேலிய அரச பயங்கரவாதம், தேசியவாதத்திற்கு எதிராக நிற்கும் இயக்குநர் - நாடவ் லாபிட்

படம்
  கலக இயக்குநர்   இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாடவ் லாபிட். இப்படி அறிமுகப்படுத்துவதை விட விவேக் அக்னிகோத்ரி என வலதுசாரி இயக்குநர் எடுத்த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை குப்பை, வக்கிரம் என சொன்னவர் என்றால் எளிதாக புரியும். உலகத் திரைப்பட திருவிழாவில் தங்க மயிலுக்கான பரிசுப்போட்டியில் காஷ்மீர் ஃபைல்ஸ் எப்படி இடம்பெற்றது. வக்கிரமான குறிப்பிட நோக்கத்தை அடிப்படையாக கொண்டபடம் என வெளிப்படையாக விமர்சித்தார் இயக்குநர் நாடவ் லாபிட்.   உண்மையில் யூதர்கள் பற்றி இப்படியொரு படத்தை யாரேனும் எடுத்தால் கூட எனக்கும் பீதியாகிவிடும். உண்மையில் இது கௌரவமான செயல் அல்ல. முக்கியமான பிரச்னைகளை பேச வேண்டுமெனில் அதற்கான தன்மையில் இயல்பில்தான் பேசவேண்டும்.   47 வயதான சினிமா இயக்குநர் பாரிஸ் நகரில் வாழ்கிறார். ஒன்றை செய்வதை விட அதைப்பற்றி பேசுவது எளிது. அப்படித்தான் நிறையப் பேர் சொல்லுவார்கள். இஸ்ரேலிய இயக்குநரான நாடவ் எடுத்த சினானிம்ஸ் என்ற படம் 2019ஆம் ஆண்டு தங்க கரடி விருது வென்ற படமாகும். 2021இல் எடுத்த அஹெட்ஸ் நீ என்ற படம், கேன்ஸ் திரைப்பட விருதில் ஜூரிவிருதை வென்றது. இந்த படம் இஸ்ரேல் நாட்ட