பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார். 1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர். தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ஏமி நோயாள