இடுகைகள்

கொரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவத்தை வணிகமயமாக்கும் சதியைத் தடுக்கும் மக்கள் மருத்துவரின் கடைசி முயற்சி! - டாக்டர் ரொமான்டிக் 2

படம்
            டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 பத்து எபிசோடுகள்   இந்த முறை தலைமை மருத்துவமனையின் பவுண்டேஷன் தலைவராக டாக்டர் டூ பதவியேற்கிறார் . மூன்று ஆண்டுகள் அவமானப்பட்டபிறகு அதற்கு பழிவாங்க காத்திருக்கிறார் . அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறது . டோல்டம் மருத்துவமனையை மூடிவிட்டு , அங்கு ஆடம்பர மருத்துவ சேவைகளை வழங்கும் மையத்தை கட்ட நினைக்கிறார் . ஆனால் அதற்கு தடையாக அவரே நியமித்த பேராசிரியர் பார்க் இருக்கிறார் . பார்க்கைப் பொறுத்தவரை அவர் நல்ல மனிதர் அல்ல . ஆனால் சிறந்த மருத்துவர் . எந்த நோயாளியாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தீர்மானித்துதான் ஆபரேஷன் செய்வார் . ஆனால் அவரது இந்த கொள்கை டோல்டம் வந்ததும் செமையாக அடிவாங்குகிறது . அங்கு சீப் டாக்டராக உள்ள டீச்சர் கிம் இவரை சிம்பிளாக தைரியமில்லாத துணிச்சல் இல்லாத கோழை என்று திட்டுவதோடு , பார்க்கும்போதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் கேலிசெய்து விடுகிறார் . இதனால் பார்க்கின் ஈகோ கடுமையாக காயம்படுகிறது . முக்கியமாக அவர் டீச்சர் கிம்மை விட தகுதி குறைவானவர் கிடையாது . ஆனால் கடந்த காலத்தில் முடிவெடுக்க தடுமாறியபோது , நோ

பகைவனுக்கும் அருளும் இதயநோய் மருத்துவனின் ரத்தசரித்திரம்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இறுதிப்பகுதி

படம்
        பகைவனுக்கும் அருளும் நெஞ்சமுடைய மருத்துவனின் ரத்தசரித்திரம் ! டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் இறுதிப்பகுதி கொரிய தொடர் எம்எக்ஸ் பிளேயர் முன்னமே கூறியது போல வெறும் காதல் கதை என்பதாக எடுக்காமல் , வடகொரியா , தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வெறுப்பு , அரசியல் சதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கொரிய தொடர் . துருக்கி தொடர்கள் போல வளவளவென நீளாமல் இருபது எபிசோடுகளில் கதையை நிறைவு செய்திருப்பதற்கு தொடரின் இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும் . பார்க் குவான் இதயநோய் மருத்துவர் . அவரின் அப்பா புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரின் நண்பர் சோய் செய்த அறுவை சிகிச்சை தோற்றுப்போக , மனசாட்சிப்படி அது மருத்துவமனையின் , மருத்துவரின் தவறு என்று சாட்சி சொல்ல தயாராகிறார் . ஆனால் மருத்துவமனை சேர்மன் மருத்துவமனையைக் காப்பாற்ற , ஊழல் பிரதமரின் செல்வாக்கைப் பெற்று பார்க் குவானின் அப்பாவை வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கிறார் . உதவி என்று அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் திரும்பி வரக்கூடாது என்பதுதான் தென்கொரியா , வடகொரியா அரசியல்வாதிகளுக்குள் ப

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மருத்துவரின் கனவும், அவரை பகடைக்காயாக்கும் மருத்துவமனை சூழ்ச்சிகளும்! - எ மிராக்கிள் - துருக்கி தொடர் - முதல் பாகம்

படம்
              எ மிராக்கிள் துருக்கி தொடர் குட் டாக்டர் எனும் தென்கொரிய தொடரை ரீமேக்கியிருக்கிறார்கள் . ஆனால் காட்சிகளில் நடித்துள்ளவர்கள் நிறைய வேறுபாடுகளை காட்டியுள்ளதோடு காட்சிகளும் மாற்றப்பட்டுள்ளன . ஆட்டிசமும் , சாவன்ட் சிண்ட்ரோம் என்ற குறைபாடும் கொண்ட அலி பாபா , ஹயாத் எனும் பன்னோக்கு மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறான் . அவனை அங்கு தலைமை மருத்துவராக உள்ளவர் தனது செல்வாக்கினால் சேர்க்கிறார் . காரணம் , அவனை வளர்த்து கவனித்துக்கொண்டது அவர்தான் . ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் அவனை வைத்தே தலைமை மருத்துவரை வேலையை விட்டு நீக்கலாம் . என அரசியல் விளையாட்டு நடக்கிறது . இந்த அரசியல் விளையாட்டு அலியை பந்தாடியதா , அவனது அறுவை சிகிச்சை நிபுணராகும் கனவு என்னவானது என்பதைத்த்தான் தொடர் சொல்லுகிறது . தொடரில் மொத்தம் 22 எபிசோடுகள் , ஒரு எபிசோடு என்பது நாற்பது நிமிடங்ங்கள் வருகிறது . ஆட்டிசம் பாதிப்பு பற்றிய எண்ணங்களை இத்தொடர் மாற்றும் என உறுதியாக நம்பலாம் . இயல்பான வாழ்க்கை என்பது ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு சாத்தியமில்லை . ஆட்டிச குறைபாட்டிற்க

தூங்கி எழுந்தால் காதலன் பெயரில் இன்னொருவன் படுக்கையில் இருக்க, தவிக்கும் காதலி! - பியூட்டி இன்சைட் 2015 -

படம்
            பியூட்டி இன்சைட்  Directed by Baik (Baek Jong-yul) Produced by Park Tae-joon Written by Kim Sun-jung Noh Kyung-hee Based on The Beauty Inside by Drake Doremus Starring Han Hyo-joo Music by Jo Yeong-wook Cinematography Kim Tae-gyeong       இன்றுள்ள மனிதர், நாளைக் காலையில் இருப்பதில்லை. அதாவது இன்று அவர் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பொறுத்து நாளை வேறுமாதிரியாக உலகை எதிர்கொள்வார். கொரியாவில் வாழும் கிம் வூ ஜின், வித்தியாசமான பல்வேறு பர்னிச்சர்களை உருவாக்கும் திறன் கொண்டவர். இவருக்கு இரவில் படுத்து தூங்கி காலையில் எழுந்தால் முகம், உடல் என வேறு ஆளாக மாறிவிடுவார். மனம், புத்தி எல்லாமே சரியாக இயங்கும். ஆனால் உடலின் அனைத்து அளவுகளும் மாறிவிடும். கண்பார்வை, உடலில் அணியும் ஆடைகளின் அளவு, செருப்பின் அளவு.  இப்படிப்பட்ட பாதிப்பு இருக்கும் இவர், அவரது அம்மாவுக்கே பாரமாகிறார். இதனால் தனியாக தான் தயாரிக்கும் நாற்காலி தொழிற்சாலையிலுள்ள அறையில் தங்கிக்கொள்கிறார். கிம் தினசரி தான் மாறும் புதிய மனிதரின் அடையாளத்துடன் கணினியில் தன் அனுபவத்தை பதிவு செய்து வைப்பது முக்கியம். வயதுக்கான பிரச்னைகளோ

மனிதர்களை நம்பாமல் வாழும் இளம் தொழிலதிபர் ரோபோவுடன் காதலில் வீழ்கிறார்! - ஐயம் நாட் எ ரோபோட் - கொரிய சீரியல்

படம்
                aji3 robot         ஐயம் நாட் எ ரோபோட் 30 பிளஸ் எபிசோடுகள் கிம் பினான்சியல் நிறுவனத்தின் இயக்குநர் கிம் யின் கியூ. தனி மாளிகை ஒன்றில் அலர்ஜி காரணமாக தனியாகவே வாழ்கிறான். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வாழ்க்கை நண்பர்கள் இல்லை. விருந்தினர்கள் இல்லை. அனைத்தும் மெஷின்கள்தான். இந்த நிலையில் அவனுக்கு சான்டா மரியா என்ற ரோபோ நிறுவனத்திடமிருந்து அழைப்பு வருகிறது. மனிதர்களைப் போன்ற உணர்வுகளைக் கொண்ட ரோபோவை தயாரித்துவிட்டோம் என்று. அப்படியா என ஆச்சரியத்தோடு செல்கிறான். பார்த்தவுடனே அஜி3 என்ற ரோபோவை பிடித்து விடுகிறது. அதனை வாங்கிக்கொள்வதோடு அவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவுவதாக சொல்லுகிறான். கிம் பரிசோதனை செய்து பார்ப்பதாக கூறும் நேரத்தில் ரோபோவை அனுப்பி வைக்கமுடியாத தவறு ஒன்றை ஆராய்ச்சியாளர் செய்துவிடுகிறார். இதனால் டாக்டர் ஹான், தனது முன்னாள் காதலி ஜோ ஜியாவை ரோபோ போல நடிக்க கேட்டுக்கொள்கிறார். அஜி3 யின் முகம் கூட ஜோ ஜியாவை மாடல் செய்ததுதான். அந்த நேரத்தில் பணக்கஷ்டத்திலும் தங்க இடம் இல்லாமலும் கஷ்டப்படும் ஜியா அதனை ஏற்கிறாள். கிம்மின் வீட்டுக்கு சென்று நடிக்கத் தொடங்குகிறாள்.