இடுகைகள்

மாங்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குப்பை என அவமானப்படுத்தப்படும் நாயகனின் எழுச்சியும், போராட்டமும்!

படம்
  காட் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்  ரீட்மாங்காபேட்.காம் ஜின் ஃபேன் என்பதுதான் நாயகன் பெயர். ஆனால் அதை விட அதிகமாக ட்ராஷ் என அவரை வசைபாடும் சொல்தான் கதையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜின்னுக்கு அவரது தாய் மூலமாக சிறு பாம்பு ஒன்று ஆன்ம ஆற்றல் விலங்காக மாறுகிறது. ஆனால், அதன் சக்தி என்ன அதை எப்படி வளர்ப்பது என அவருக்கும் தெரிவதில்லை. அவரது அப்பாவுக்கும் தெரிவதில்லை. ஜின்னின் அண்ணன் முறை உறவுகள் கூட தற்காப்புக்கலை சக்தியில் தளர்ச்சியில் உள்ளவனை அடித்து உதைக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென அவனின் ஆன்மாவை அழுத்தி இன்னொரு ஆன்மா உள்ளே வருகிறது. அதுதான் நவீனகாலத்தில் உள்ள இளைஞன் ஒருவனின் ஆன்மா. விபத்தில் இறந்தவன், தொன்மைக் காலத்தில் உள்ள ஜின் ஃபேனின் உடலுக்குள் புகுகிறான். சொல்லும்போது இருக்கும் ஆச்சரியம். கதையாக படிக்கும் போது வற்றிவிடுகிறது.  எதிர்கால உலகில் இருந்து வருபவன், தொன்மைக்காலத்தில் உள்ளவர்களை விட நவீனமாக யோசிக்கவேண்டும். திட்டமிடவேண்டும் அல்லவா? ஆனால் அப்படியான ஐடியா ஏதுமின்றி தற்காப்புக்கலை கற்று மெல்ல முன்னேறுகிறான். அதுதான் கதையை சாதாரண கதையாக மாற்றுகிறது. லின் ஃபேனின் அப்பா சிறந்

4 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்க உலகிற்கு வரும் வாள் போராளி!

படம்
  கிரேட் மேக் ரிடர்ன் 4000 இயர்ஸ் எகோ காமிக்ஸ் ரீட்மங்காபேட்.காம்  தொன்மைக்கால வீரர்களின் தலைவன் லூகாஸ் ட்ராமன். இவர் தலைமையில் ஐந்து வீரர்கள் இணைந்து வேலை செய்து தீயசக்திகளை அழிக்க முயல்கிறார்கள். ஒரு சண்டையில், டெமிகாடின் தலைவரான லார்ட் மூலம் லூகாஸ் சிறைபிடிக்கப்படுகிறார். 4 ஆயிரம் ஆண்டுகள் சிறைவாசம் கழித்து விடுவிக்கப்படுகிறார். அவரது ஆன்மா, பிளாக் குடும்ப மூன்றாவது பிள்ளையான ஃபிரே பிளாக்கின் உடலில் புகுகிறது.  ஃபிரே பிளாக், மந்திரவாதம் கற்க முயன்று அதில் தோற்று, பள்ளி நண்பர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். அவனது குடும்பத்தாரால் ஊதாசீனம் செய்யப்படுகிறான். அவன் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தபிறகே, லூகாஸின் ஆன்மா அவனது உடலில் புகுகிறது. அதற்குப் பிறகு நடைபெறும் பரபர சம்பவங்கள்தான் கதை.  இந்த காமிக்ஸ் கதையில் சுவாரசியம் என்னவென்றால், ஃபிரே பிளாக் உடலில் லூகாஸ் புகுந்தபிறகு செய்யும் நகைச்சுவைதான். பள்ளி செல்லும் சம்பவங்களில் இந்த நகைச்சுவை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக, ஃபிரே பிளாக் தனது பெண் ஆசிரியை மீது காதல் கொள்ளும் சம்பவம். ஃபிரே பிளாக், வகுப்பில் உள்ள இசபெல்லா என்ற நன

நிலவுக்குச் சென்று எஸ்பெல் இனக்குழுவைக் காப்பாற்றும் டோராமன் - நோபிடா டீம் - டோராமன் -மூன் எக்ஸ்ப்ளோரேஷன்

படம்
  டோராமன் – நோபிட் குரோனிக்கல் – மூன் எக்ஸ்ப்ளோரேஷன் ஜப்பான் மாங்காஅனிமேஷன் நோபிட் பள்ளி மாணவன். ஒருநாள் நிலவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ரோவர் ஏதோ ஒரு சக்தியால் தாக்கப்பட்டு பழுதாகிறது.. அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான் நோபிட். அதற்கு டோராமன் ரோபோ உதவுகிறது. நோபிட்டும் டோராமன்னும் சேர்ந்து நிலவுக்கு மந்திரக்கதவு மூலம் போகிறார்கள். அங்கு சென்று, களிமண்ணால் முயல்களை உருவாக்கி முயல்களுக்கான உலகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில் நோபிட்டின் பள்ளியில் லூகா என்ற சிறுவன் சேர்கிறான். எப்போதும் தொப்பி அணிந்தபடியே இருப்பவன் வினோதமான தெரிகிறான். அவன் நோபிட்டின் நிலவு பற்றிய கருத்துகளைக் கேட்டு ஆச்சரியப்படுகிறான். அவன் நிலவு பற்றி செய்யும் ஆராய்ச்சிகளை அறிய நினைக்கிறான். அப்படித்தான் பள்ளி நண்பர்கள் பலரும் சேர்ந்து நோபிட்டின் வீட்டிலுள்ள மந்திரக்கதவு மூலம் நிலவுக்கு செல்கிறார்கள். அங்கு வாழ்பவர்களுக்கும் லூகாவிற்கும் தொடர்பு உள்ளது. இதுபற்றிய கதையை பார்த்து தெ(பு)ரிந்துகொள்ளுங்கள்.   இந்த தமிழ் படத்திற்கு டப்பிங் பேசியவர்கள் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் க