இடுகைகள்

இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள் இயற்கைச் சூழல் ஞானம்

இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள் இயற்கைச் சூழல் ஞானம்     நாம் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. நாம் இயற்கையின் பிரிக்கமுடியாத பகுதியே என்பதை உணர்வோம். நாம் வாழும் பூமியின் இயற்கைச் சமன்நிலையைக் காப்பதும், இயற்கைச் சூழலுள் வாழ்வதும், நம்மிடமுள்ள இயற்கை வளங்களுக்குள் வாழ்வைக் கற்போம். நாம் தாக்குப்பிடிக்கும் சமூகத்தை, தனது மூலவளங்களை நாம் மட்டுமின்றி, எதிர்கால வாரிசுகளும் குறைவின்றி பெற்றுப்பயன் பெறும் வகையில் அளவுடனும், கவனத்துடனும் பயன்படுத்தும் சமுதாயத்தை விட்டுச் செல்வோம். இதற்கு ஏற்ற மண்ணைச் சாரமிழக்கச் செய்யாத வேளாண்மையை, ஆற்றல் ஊதாரித்தனமற்ற, சிக்கனமான பொருளாதாரத்தை இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் மதிப்பு கூடிவாழும் சமுதாயத்தை அமைப்போம். அடிமட்ட ஜனநாயகம்     தன் வாழ்வைப் பாதிக்கும் எதைப்பற்றியும், தனது கருத்தைத் தயக்கமின்றிக் கூறும் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதனும் பெறத்தகுதி பெற்றவனாவான். யாருடைய கருத்தையும் எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. மக்கள் பங்கேற்பு, பங்களிப்பை அரசின் அனைத்து நிலைகளிலும் வளர்க்க முயல்வோம். மக்கள் பிரதிநிதிகளாகத்  தேர்ந்தெடுக்கப்படுவோர், தேர்ந்தெட

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம் எஸ்.பி உதயகுமார் தமிழில்: ஜீவா ‘’அரசியல்வாதியையும் மாதவிலக்கு பட்டையையும் அவ்வப்போது விலக்கிவைக்க வேண்டும்’’ என்று ஒரு ஆட்டோ வாசகம் அறிவித்துச் செல்கிறது. மாற்றவில்லை என்றால் அவற்றால் நோய் வரக்கூடும். நடக்கவும் முடியாத தாத்தாக்கள் அதிகாரமையமாக நகர்கிறார்கள். ஊழல் நாயகர்கள் புரட்சி வீரர்களாக முழங்குகிறார்கள். அசிங்கமான அகவாழ்வு, மேடையில் கண்ணகி வேஷம் போடுகிறது. இந்தியா மாற்றம் வேண்டி எதிர்பார்த்து நிற்கிறது. அவர்களை மாற்றலாம்; ஆனால் அவர்களுக்கு மாற்றாக யார் உள்ளார்கள்? புதிய தூய அரசியல்வாதிகளை உடனே மந்திரத்தினால் உருவாக்கிவிட முடியுமா? மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அலங்காரமாக அன்றி ஆத்மார்த்தமாகச் சொல்லும் அரசியல்வாதி யார்? அவர்களின் தகுதி, பண்பு, அர்ப்பணிப்பு, உழைப்பு எப்படி இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட தலைவர்களை உருவாக்குவது, பயிற்றுவிப்பது, அரசியல் தத்துவம் சொல்லிக்கொடுப்பது, நாடுபற்றி, மக்கள் பற்றி, உலகம் பற்றிச் சிந்திக்கச் செய்வது எப்படி? நாம் நாட்டின் நிலை என்ன? கிழக்கிந்தியக் கம்பெனிக் கொள்ளையர்களிடம் சிக்கிய நாட்டைப் போராடி விடுவித்த

பசுமை அரசியல்2

இந்திய சுயராஜ்யமும் பசுமை இயக்க கொள்கை சாசனமும்  ஆங்கிலத்தில் பில் கோல்யர் தமிழில்:ஜீவா பசுமை இயக்கத்தின் உலகத் தலைவர்கள் பசுமை இயக்கத்தின் உருவாக்கம், தத்துவம் ஆகியவற்றில் மகாத்மா காந்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். காந்தியின் விடுதலை இந்தியா பற்றிய எதிர்பார்ப்பு இன்றைய நவீன பசுமை சிந்தனையுடன் மிகுந்த பொதுத் தன்மை கொண்டதாக உள்ளதைக் காண்கிறோம். அவருடைய சிந்தனைகள் எவ்விதம் முழுமையாக பொருந்தி வருகிறது என்பது பசுமைச் சிந்தனைகளில் மிக அரிதாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பொருத்தப்பாடு எத்தனை சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளது என்பதும் சிந்தனைக்குரியது. காந்தியம், பசுமை எனும் இரண்டு தத்துவங்கள் எவ்வாறு ஒரு மையப்புள்ளி நோக்கிக் குவிகின்றன என்பது குறித்த முழுமையான புரிதல் அவசியம். குறிப்பாக முதல் உலகப்போர் சார்ந்த குறுகிய பார்வையே பெரிதும் பசுமை குறித்த  அக்கறை மீது படிந்துள்ளது.     இந்த நோக்கத்துடன்தான் நான் காந்தியின் இந்திய சுயராஜ்யம் நூலை ஆராய முயல்கிறேன். விரிந்த பசுமை அக்கறையுடன்  இந்திய சுயராஜ்யம் எவ்விதம் பொருந்தும் என்பதைக் காட்டுவதிலும் பசு

பசுமை அரசியல்1

பசுமை அரசியல் காந்தியும் பசுமைக் கட்சியும் இந்திய சுயராஜ்யமும் பசுமை இயக்கமும்    பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்    பசுமை அரசியல் போராளிக்கான அகிம்சைப் பாதை இயற்கையைக் காக்கும் பத்துக் கட்டளைகள் அணுமின்சக்தி ஆபத்தானது பசுமை மின்சக்தியே தீர்வு பசுமை இயக்க முன்னோடிகள் காந்தியும் ஜெர்மன் பசுமைக்கட்சியும் ஆங்கிலத்தில்: பெல்ரா கே கெல்லி தமிழில்: ஜீவா நாம் நம்மை காந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென முதலிலேயே எச்சரிக்க விரும்புகிறேன். அப்படிச் சொல்லிக்கொண்ட சிலரை நான் வன்முறையற்ற இயக்கத்தில் சந்தித்தேன். 1936 மார்ச் 28 அன்று மகாத்மா காந்தியே ‘காந்தியம்’ என்று ஒன்று இருக்கக் கூடாது என்று சொன்னார். தான் எந்த ஒரு குழுவையோ, புதிய கோட்பாட்டையோ, புதிய போதனைகளையோ விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றார். அவர் தனது சத்தியத்துடனான எண்ணற்ற பரிசோதனைகளை சொல்லவே விரும்புவதாகவும், தனது வாழ்வு அத்தகைய பரிசோதனைகளின் திரட்சியே என்றும் கூறுகிறார். அவரது சுயசரிதையில், ‘’எனது அரசியல் தளத்திலான பரிசோதனைகள் பற்றி இந்தியாவில் மட்டுமல்ல, நாகரிக உலகில் பல பகுதிகளிலும் அறிவ

சேட்டன் பகத்:இளைஞர்களின் இந்தியா

சேட்டன் பகத் இளைஞர்களின்            இந்தியா   கட்டுரைகளும் பத்திகளும் தமிழில்: வின்சென்ட் காபோ ஆங்கில பதிப்பாளர் முகவரி: ரூபா பப்ளிகேஷன்ஸ்(பி) லிமிடெட்., 7/16, அன்சாரி ரோடு, தர்யாகன்ஞ் நியூ டெல்லி – 110002. காப்புரிமை: சேட்டன் பகத் All rights reserved. மூல நூல்: What young india wants தமிழ் வலைப்பூபதிப்பு: ஆரா பிரஸ் தொகுப்பு: அரசமார் மற்றும் ஜெய்ஸன் மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com இதனை அனைவரும் படிக்கலாம். வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. சேட்டன் பகத் எழுதியுள்ள ஐந்து நாவல்கள் வெளியான காலத்திலிருந்து இன்றுவரையிலும் மிக அதிகமான அளவில் விற்பனையாகி சாதனை படைத்துவருகின்றன. இவரது நாவல்களை தழுவி பல இந்தித் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பத்திரிகைகளில் கட்டுரைகள், பத்திகள் எழுதுவதோடு மாணவர்களுக்கான உத்வேகம் தரும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கிவரும் சேட்டன் பகத் உலகின் 100 பெரும் அதிகாரம் கொண்ட மனிதர்களில் ஒருவராக டைம்ஸ் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 100 சிறந்த புதுமைத்திறன் கொண்ட வணிக மனிதர்களில் ஒருவராக ஃபாஸ்ட நிறுவனத்தின் பட்டியலில் ஒருவராக இடம்பெற்றுள்ளார