இடுகைகள்

அழகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்டுபிடிப்பாளரை மறைத்த அவரின் அழகு! - ஹெடி லாமர் - இன்றைய வைஃபை தொழில்நுட்பத்தின் அடிப்படையை உருவாக்கியவர்

படம்
    அமெரிக்க நடிகையான ஹெடி லாமர் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையாகவே பலருக்கும் தெரியும் . ஆனால் அவர் பொறியியலில் ஆர்வம் கொண்டு தனது வீட்டில் க ண்டுபிடிப்புக்கான அறை ஒன்றை வைத்திருப்பது பலருக்கும் தெரியாத சங்கதி . ஆங்கில உலகில் அழகு , நடிப்பு என இரண்டும் சேர்ந்த கலவையாக மக்களைக் கவர்ந்தவர் , லாமர் . 1914 ஆம் ஆண்டு வியன்னாவில் பிறந்தார் . இயற்பெயர் ஹெட்விக் கீஸ்லெர் . நடிப்பு ஆர்வத்திற்காக பள்ளிப்படிப்பை கைவிட்டார் . முதலில் செக்கோஸ்லோவியா சென்றவர் , பின்னாளில் அமெரிக்காவிற்கு வந்தார் . அங்குதான் தனது பெயரை ஹெடி லாமர் என்று மாற்றிக்கொண்டார் . படிப்பு கைவிட்டாலும் ஏராளமான நூல்களைப் படித்து தனக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொண்டார் . போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துவது , தனது விமானத்துறை காதலரான ஹோவர்ட் ஹியூஹெஸ் மூலம் வேகமாக செல்லும் விமானத்தை தயாரிக்க உதவினார் . இதனை அமெரிக்க விமானப்படை பின்னாளில் வாங்கிக்கொண்டது . சிறு மாத்திரை மூலம் நீரை கார்பனேட்டட் பானமாக மாற்றுவது என பல்வேறு ஐடியாக்களை சாத்தியப்படுத்தினார் . இரண்டாம் உலகப்போரின்போது , மக்கள் கஷ்டப்படுவதை அவரால் ப

பெமினா - சாதித்த பெண்கள்! எளிய மக்களின் பிரச்னைகளை டிவியில் பேசிய தொகுப்பாளர்

படம்
          ஷானாஸ் ஹூசைன் ஆயுர்வேத அழகு கலைஞர் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆயுர்வேத அழகுக்கலைஞர் இவர். தனது தந்தையிடம் கடன் வாங்கி மும்பை பிளாட்டில் தனது மருத்துவமனையைத் தொடங்கினார். முதலீடு 35 ஆயிரம் ரூபாய். வெளிநாட்டு முக அழகு கலைஞர்களிடம் பல்வேறு விஷயங்களை கற்றவர்தான்.ஆனால் ஆயுர்வேதம் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். செயற்கையான வேதிப்பொருட்கள் வேண்டாமே என்று யோசித்ததால் நேர்ந்த மாற்றம் இது. முதன்முதலில் ரோஸ் சார்ந்த ஸ்கின் டோனர் ஒன்றை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஏற்றம்தான். இன்று சந்தையில் இவரது நிறுவனத்தின் 375 பொருட்கள் பரபர விற்பனையில் உள்ளன. ஹார்வர்டு பல்கலையில் தனது பிராண்ட் பற்றி மாணவர்களுக்கு உரையாற்றியுள்ளார். அவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றிலும் ஹூசைன் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 40 ஆயிரம் பேர்களுக்கு அழகுசிகிச்சை சார்ந்த பயிற்சியை வழங்கியுள்ளார் ஹூசைன். இவரது போர்ட்ரைட் ஓவியர் ஒன்றை ஓவியர் எஃப் ஹூசைன் வரைந்தார். அதனை லண்டன் கிரிஸ்டி நிறுவனம் ஏலத்தில் விற்றது. ஆயுர்வேத அழகு சிகிச்சையை உலகம் முழுக்க கொண்டுபோய

காதல் வார்த்தைகள் இவ்வளவா? - வரலாற்றில் புழங்கியவை!

படம்
pixabay இணையம் வந்ததிலிருந்து பழமையான தகவல் தொடர்புமுறைகள் பலவும் தேக்கத்தை சந்தித்துள்ளன. இன்று காதல் சொல்ல ரோஜா, ஆர்ச்சி அட்டைகளை தேடுவதை விட ஜிஃப் ஃபைலாக அனுப்புவது இன்னும் எளிமையாக உள்ளது. காதலைச் சொல்ல, குறிப்பிட்ட நபரை அழகாக இருக்கிறான் என்று சொல்ல என்ன வார்த்தையை முன்னர் பயன்படுத்தினார்கள் என்று அறிந்தால் நன்றாக இருக்குமே! அதற்காகத்தான் சில சொற்களை உங்களுக்கு அறியத் தருகிறோம். பக் ஹவுஸ்  காதலில் வீழ்ந்தேன் என்று சொல்கிறார்களே அதை ஒத்தது. புதிதாக காதல் செய்பவர்கள் இரவு முழுக்க போனில் பேசுவார்கள். சீனா - ரஷ்யா கூட அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு அரசியல் சமாச்சாரங்களை பேசியிருக்க மாட்டார்கள். காதலில் மூழ்கி பைத்தியமாக திரிந்து நண்பர்களை ஒரண்டுக்கு இழுப்பதும் இவ்வகையில் சாரும். இதனை 21ஆம் நூற்றாண்டில் பக் ஹவுஸ் - Bughouse என்கிறார்கள். BUSS பஸ் என்றால் கிஸ் என்று பொருள். அன்று பிரெஞ்சில் பைசர், ஸ்பானிஷில் பெசோ, இத்தாலியின் பசியோ என்று சொல்லி முத்தம் கேட்டனர். பாசன் - bassen  என்ற சொல்லிலிருந்து உருவாகி வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்த சொல் தோன்றி புழங்கிய காலம் 1

வலியில்லாத அழகு சிகிச்சை வருகிறது!- மூலக்கூறு சிகிச்சை முறை!

படம்
வலியில்லாத அழகு சிகிச்சை! கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வலியற்ற முக அழகு சிகிச்சை முறையான மூலக்கூறு சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது. நோய்க்கு இணையாக மக்கள் அறுவை சிகிச்சைக்கு பயப்படுகின்றனர். காரணம், இதிலுள்ள வலி, ரத்தப்போக்கு, தையல் ஆகியவைதான்.  தற்போது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வலியற்ற அழகு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். இதற்கு மோலிக்குலர் சர்ஜரி (molecular Surgery) என்று பெயர். உடலிலுள்ள திசுக்களின் வடிவத்தை மாற்றிச்செய்யும் இச்சிகிச்சை, அழகு சார்ந்த விஷயங்களுக்கானது. ”எளிமையாக அனஸ்தீசியா கொடுத்து ஐந்து  நிமிடங்களில் இந்த மூலக்கூறு சிகிச்சையைச் செய்து முடிக்கலாம். இதன் செலவும் மிக குறைவானது” என்கிறார் மருத்துவர் மைக்கேல் ஹில். இம்முறையில் காது, மூக்கு ஆகியவற்றை சீர் செய்யலாம். சிறிய ஊசிகள், மின்சாரம், 3டி வடிவ பொருட்களை இதில் பயன்படுத்துகின்றனர். இதில் முகத்திலுள்ள குருத்தெலும்பில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை செலுத்தி வளையும் தன்மைக்கு மாற்றுகின்றனர். பின்னர், அதனைத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். திசுக்களை அழிக்காமல் குருத்தெலும்பை வளைக

ஒருவர் அழகானவர் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் அழகாக இருக்கிறார் என நாம் முடிவு செய்வதற்கு காரணம் என்ன? ரேமண்ட் சர்ட், கெனித் பார்க்கர் பேண்ட் போட்டதற்காக ஒருவரை நாம் அழகாக இருக்கிறார் என்று கூறிவிடுவதில்லை. காரணம், உடை ஒருவரை கவனிக்க வைக்கலாம். ஆனால் கண்கள்தான் அவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்று கூறும். அப்படி கூறுவதற்கான விஷயமாக உளவியலாளர்கள் வரையறுப்பது முகத்தின் வடிவம். நீளமாக, வட்டமாக சதுரமாக என பெரும்பாலும் யாரையேனும் நினைவுபடுத்தும் பழகிய முகம்போல இருப்பவர்களே அழகானவர்கள் என்று கூறப்படுகிறார்கள். நாம் இப்படி சொன்னதற்காக, மனைவியையோ, காதலியையோ நீ அவளைப்போல என உதாரணம் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டால், எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். நன்றி:பிபிசி