இடுகைகள்

கொரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ப்ரீலான்ஸ் டிடெக்டிவ் கொலைக்குற்றத்திற்கு தீர்வு கண்டுபிடிக்கிறார்! - ஆக்சிடென்டல் டிடெக்டிவ் 2015

படம்
        Director: Kim Joung-hoon Writer(s): Kim Jung-Hoon The crux of the film is loosely inspired from Strangers on a Train    புத்தக கடை நடத்திவருகிறார் இளைஞர் ஒருவர். அவருக்கு மணமாகிவிட்டது. அவருடைய மனைவி வேலைக்கு சென்றபிறகு அந்த நகரில் நடந்த கொலைக்குற்றங்களை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காண்பது இளைஞருக்கு பிடித்தமான வேலை. அவர் காவல்துறையில் சேர முயன்று தோற்றுப்போனவர். எனவே, காவல்துறையில் சேராமலேயே நம்மால் குற்றங்களை தீர்க்கமுடியும் என காவல்நிலையத்திற்குள் போய் தனக்கு தெரிந்த விஷயங்களை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி அவமானப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் காவல்நிலையத்தில் உள்ள அவரது நண்பரே கொலை வழக்கு ஒன்றில் அநியாயமாக மாட்டிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற இளைஞர் நினைக்க, அவருக்கு இன்ஸ்பெக்டர் உதவிசெய்தால் அதுதான் படத்தின் மையமான புள்ளி   படம் முழுக்க கொரியப்படங்களுக்கு உண்டாக குடும்பம், பாசம், நேசம், நெகிழ்ச்சி , காமெடி என அனைத்தும் கொண்டதாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நாயகனுக்கான எந்த காட்சியும் கிடையாது. ஏன் சண்டையில் கூட அத்தனை அடிகளையும் வாங்கி மருத்துவமனையில் முனகிக்கொண்டே படுத்தி

வொயிட் காலர் டிரெஸ்ஸில் ரத்தவெறியாட்டம்! எ கம்பெனி மேன் 2012

படம்
        Movie: A Company Man Country: South Korea Release Date: Oct 18, 2012 Director: Im Sang Yoon    ஹியூங் டூ என்பவர் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். அவரின் உடைகள், ஆபீஸ் அப்படி தோற்றம் காட்டும். ஆனால் ஆபீசிற்கு கீழே  உள்ள பாதாள அறைகளில் முழுக்க யாரை போட்டுத்தள்ளவேண்டும் என அசைன்மெண்டை நிறைவேற்றும் ஆபீஸ், துப்பாக்கிகள், பிளான் என அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. என்சிஎம் என்ற அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார் ஹியூங் டூ. ஒருமுறை போலீஸ் அலுவலகத்தில் நடக்கும் அசைன்மெண்டில், ஒருவனைக் கொல்ல பள்ளியை விட்டு இடைநின்ற ஆளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அவனைக் கொன்றுவிடுவதுதான் திட்டம். ஆனால் அவனது இளம் வயது ஹியூங்கை யோசிக்க வைக்கிறது. அதனால் அவனை உயிர்பிழைக்க வைத்து, பராமரிக்கிறார். அவனது குடும்பத்திற்கு பண உதவிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் பிறரை கொலை செய்யும் நிறுவனத்தின் வேலை கூட ஹியூங்கிற்கு எதற்கு இந்த வேலை என்று தோன்றுகிறது. அப்போதுதான் அவருக்கு ஆபீசில் கொலைகளை பிறருக்கு செய்யச்சொல்லி வழங்கும் இயக்குநராக பணி உயர்வு கிடைக்கிறது.  அதேசமயம் அவர் காப்பாற்றி

வடகொரியா - தென்கொரியா போர்! - போர்விவரங்கள் காலக்கோடு வழியாக அறியலாம்!

படம்
          ny times       கொரியப் போர் ! 25 ஜூன் 1950 வடகொரியப் படைகள் தென்கொரியாவிற்குள் நுழைந்தன . 27 ஆம் தேதி ஐ . நா அமைப்பு தென்கொரியாவை காப்பாற்றுவதற்கான உதவியை பிற நாடுகளிடம் கேட்டது .22 இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் அங்கு விரைந்தன . 7 ஜூலை 1950 டக்ளஸ் மெக் ஆர்தர் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசு படைகள் திரண்டன . கொரியாவின் தென்கிழக்கு பகுதியை நோக்கி படைகள் சென்றன . 7-9 அக்டோபர் 1950 அமெரிக்க படைகள் வடகொரியாவின் பகுதிகளை நோக்கி முன்னேறியது . அக்டோபர் - நவம்பர் 1950 சீனா , வடகொரியாவுக்கு ஆதரவாக கொரியப்போரில் குதித்தது . 14 மார்ச் 1951 ஐ . நா படைகள் தென்கொரியாவின் சியோல் நகரை முற்றுகையிட்டன . இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர் . 11 ஏப்ரல் 1951 அமெரிக்க படைத்தலைவர் டக்ளஸ் மெக்ஆர்தர் படைப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார் . 23-25 ஏப்ரல் 1951 ஜேம்ஸ் கார்ன் தலைமையிலான படை வடகொரியாவின் பகுதிளளை நோக்கி முன்னேறியது . 10 ஜூலை 1951 இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்தன . 28

அணுகுண்டு ஆராய்ச்சிக்கு முன்னாள் உளவாளியை கடத்திச்செல்ல முயலும் சதி! - ஒகே மேடம் - கொரியா

படம்
  ஒகே மேடம்     ஒகே மேடம் கொரியா, வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வரும் முன்னாள் உளவாளி ஒரு பெண். அவரை தென்கொரிய அரசு பாதுகாக்கிறது. காரணம் அவரது தந்தை ஒரு அணு விஞ்ஞானி. இந்த பெண் மூலம் அணு குண்டுகளை தயாரிக்கும் பணியை வடகொரியா செய்ய நினைக்கிறது. ஆனால் உளவாளியாக இருந்த பெண், மெல்ல குடும்பத் தலைவியாகி பலகாரக்கடை நடத்தி வருகிறார். கிடைக்கும் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு பெண் பிள்ளையைப் பெற்று படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அம்மாவின் ஜீன் ஸ்ட்ராங்காக பதிந்து இருப்பதால், சிறுமி பள்ளியில் சக மாணவர்களை புரட்டி எடுத்து விட்டே வீடு திரும்புகிறாள். அதேநேரம் அவளுக்கு பெற்றோர் தன்னை வெளியே எங்கும் கூட்டிச்செல்ல மாட்டேன்கிறார்கள் என்று வருத்தம் உள்ளது. அப்போது குளிர்பான நிறு்வனம் மூலம் ஹவாய் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்குதான் விதி குறிக்கிடுகிறது. அதே விமானத்தில் முன்னாள் உளவாளிப் பெண்ணை கடத்திச்செல்ல வடகொரியா ஆட்கள் வருகி்ன்றனர். அவர்களை எப்படி முன்னாள் உளவாளிப் பெண் சமாளித்து பிற விமானப் பயணிகளை காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. படம் காமெடி, உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் என நி

மனதை திருடும் கூட்டம்! பௌண்டி ஹன்டர்ஸ் 2016

படம்
      பௌண்டி ஹன்டர்ஸ் 2016          பௌண்டி ஹன்டர்ஸ் 2016 சீன, தென்கொரிய, ஹாங்காங் தயாரிப்பு இயக்கம் ஷின் டெரா இன்டர்போலில் வேலை செய்த இருவர்(லீசான், அயோ), அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள். அவர்கள் பிழைக்க ஏற்றுக்கொள்ளும் வேலை, தனிநபர்களுக்கு பாதுகாப்பு தருவது. அதிலும் முன்கோபத்தால் ஆவேசப்பட்டு லீசான் செய்யும் பல்வேறு செயல்களால் நண்பர்கள் இருவரும் வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு நிருபரை காப்பாற்றச் செல்கிறார்கள். அங்கு அந்த நிருபரைக் கொல்ல மூன்று பேரைக் கொண்டு குழு முயல்கிறது. அதை லீசான் அண்ட் கோ தடுக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. படம் சீரியசும், காமெடியும் கலந்து எடுத்த கொரியப்படம். இதில் லீ சான்(லீ மின் ஹோ)  பாத்திரம்தான் வீர தீர சாகசத்தில் முன்னே நிற்கும் பாத்திரம். இவர்களுக்கு, நிருபரைக் குண்டு வைத்து கொன்ற குழுத்தலைவியிடம்() சந்திப்பு ஏற்பாடாகிறது. அவர்களோடு இணைந்துகொண்டால்தான் உயிர்பிழைக்கும் நிலை. குழு தலைவிக்கு ஏராளமான சொத்து கிடக்கிறது. இதனால் பிரைவேட் ஜெட்டில் பறந்து, டைம்பாம்செட் செய்து மக்களைக் கொல்பவர்களை கண்டுபிடித்து மின்அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நம்பிய

தொழிலதிபரின் மகனை மீட்க போராடும் பாடிகார்டுகள்! - சைகான் பாடிகார்ட்ஸ் 2016 கொரியா

படம்
          சைகான் பாடிகார்ட்ஸ் 2016 Director: Ken Ochiai Writers: Ken Ochiai (story), Michael Thai (screenplay) |   Stars: Thai Hoa , Kim Ly , Chi Pu | See full cast & crew  » இரண்டு காமெடியான பாடிகார்ட்ஸ் சீரியசாக வேலைபார்த்து லீ மில்க் கம்பெனியின் புதிய இயக்குநராகும் இளைஞரை எப்படி எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இரண்டு பேர் நாயகர்களாக நடித்தால் என்னவிதமாக டெம்பிளேட்டை பயன்படுத்துவார்கள். ஒருவர் வேலையில் சீரியசாக இருப்பார். இன்னொருவர் அனைத்தையும் சொதப்பி வைத்தபடி பேசிக்கொண்டே இருப்பார். இந்த கதையிலும் அதேதான். சைகான் பாடிகார்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டுபேர். வேலையில் ஆட்களை பாதுகாப்பதை விட போகும் இடமெல்லாம் கடைகளை, பார்களை உடைத்து அதற்கு கம்பெனியை பில் கட்ட வைப்பதுதான் வேலை, ஹாபி எல்லாமே. இந்த நிலையில் இவர்களையும் நம்பி லீ மில்க் என்ற கம்பெனி ஒனரின் இளம் வயது மகனை பாதுகாக்கும் அசைன்ட்மென்ட் வருகிறது. அதுவும் ஏஜெண்ட் ஒருவரின் தங்கை மூலம். அந்த தங்கையை அண்ணனின் நண்பராக மற்றொர

டவர்ஸ்கை என்ற கட்டடத்திற்குள் நேரும் விபத்து, அதைச்சுற்றிய உள்ளே வெளியே விளையாட்டு! - தி டவர் - கொரியா

படம்
            தி டவர்  இயக்குநர், இசை, ஒளிப்பதிவு பல மாடிக் கட்டிடம். கிறிஸ்மஸ் அன்று, ஏராளமான மக்கள் அங்கு ஒன்றுகூடுகிறார்கள். அங்கு மக்கள் வாழிடம், ஆபீஸ் என அனைத்தும் உண்டு. அங்கு பூ தூவுவதற்காக வரும் சாப்பர்  திடீரென கட்டிடத்தின் மீது மோதுகிறது. அங்குள்ள மக்களின் நிலை என்னாகிறது என்பதுதான் படம்.. படத்தின் ஹீரோ என்று யாரை சொல்வது? தீயணைப்புத்துறை கேப்டனாக நடித்துள்ளவரை சொல்லலாம். அவர்தான் இறுதியில் உயிரை நைவேத்தியமாக்கி மக்களை காப்பாற்றுகிறார். இத்தனைக்கும் அவரது மேலதிகாரி கூட மக்களை காப்பாற்ற நினைக்கவில்லை. ஆனால் குழு தலைவராக மக்கள் தான் முக்கியம் என நின்று சாதிக்கிறார். இத்தனைக்கும் கிறிஸ்மஸ் கேக்கை மாலையில் வாங்கிக்கொள்கிறேன் என்று ஆர்டர் செய்துவிட்டு வேலைக்கு வந்தவர். இறுதியில் அஞ்சலிக்கு உடல் கூட கிடைக்காமல் போகிறது. கதைக்குள் ஆழமாக போய்விட்டோம். மனைவியில்லாத செக்யூரிட்டி ஆபீசர், கட்டிட நிர்வாகியான பெண்ணை காதலிக்கிறார் அவரும்தான். ஆனால் இருவரும் சொல்லிக்கொள்வதில்லை. செக்யூரிட்டி ஆபீசரின் மகள்தான் காதல் தூதராக இருவரையும் சேர்த்து வைக்கிறார். உலகில் தன்னுடைய நாயைத்தவிர முக்கியமானது

குற்றங்களின் மீது விரிக்கப்படும் சைபர் வலை! ஃபேப்ரிகேட்டட் சிட்டி 2017 korea

படம்
          ஃபேப்ரிகேட்டட் சிட்டி 2017 korea இயக்கம் Park Kwang-hyun ஒளிப்பதிவு Nam Dong-geun இசை Kim Tae-seong கம்ப்யூட்டர் கேமர் மீது அநியாய கொலைப்பழி சுமத்தப்பட்டு, 24 மணிநேரத்திற்குள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. உண்மையில் அந்தக்கொலையை செய்தவர் யார்? கொலைப்பழியை எதற்கு கம்ப்யூட்டர் கேமர் மீது போட்டார் என்பதுதான் கதை. படத்தின் தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டை எப்படி கேப்டன் தலைமையிலான குழு உயிரைக்கொடுத்து மீட்கிறது என்ற காடசி அது. அதில் கேப்டன் தனது குண்டு நண்பன் ஹாரியை மீட்க போராடி அதனாலேயே உயிரை விடுகிறான். ஹாரி இதனால் கடுமையாக மனக்காயம்பட்டு அலறுகிறான். ஐயையோ படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் செத்தால் எப்படி படம் பார்ப்பது என்று நாம் யோசிப்பதற்குள், அது கம்ப்யூட்டர் கேம் என்று  பிறகுதான் தெரிகிறது. வேலைக்கு செல்லாமல் கம்ப்யூட்டர் கேம் விளையாடி வெறித்தனமாக வாழும் இளைஞன்தான் கேப்டன். ஆம் அவனது ஆன்லைன் விளையாடு சகாக்கள் அவனை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். கொலைப்பழி கேப்டன் மீது போடப்படுகிறது. அவன் ஏன் கொலை செய்தான் என்பதற்கு, க

நாட்டை உருக்குலைக்கும் அதிபுத்திசாலி கிரிமினல் மாஸ்டர்! - மாஸ்டர்

படம்
          மாஸ்டர் இயக்கம் Cho Ui-seok ஒளிப்பதிவு Yoo Eok Kim Jung-woo இசை Dalpalan Jang Yeong-gyu கொரியாவில் நூதனமாக நிதிமோசடி செய்யும் அதி புத்திசாலியை காவல்துறை ஒருவர் எப்படி ஸ்கெட்ச் போட்டு பிடிக்கிறார் என்பதுதான் கதை. கொரிய படங்களைப் பொருத்தவரை பெண்களை விட ஆண்கள் அட்டகாச அழகுடன் இருக்கிறார்கள். படத்தில் காவல்துறை அதிகாரி கேப்டன் கிம் அப்படிப்பட்டவர்தான். நாம் இ்ங்கு கூறுவதை அங்கு வசனமாகவே எழுதிவிட்டார்கள்(தமிழ் டப்பில்). படத்தின் உயிர் நாடியே ஒன் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி மக்களிடம் பேராசையைத் தூண்டிவிட்டு பணத்தை முதலீடு செய்ய வற்பறுத்தும் நிதி நிறுவனர் கதாபாத்திரம்தான். ஜி.ஐ. ஜோவில் வெள்ளுடை அணிந்த ஸ்டோர்ம் ஷாடோதான், இந்த பாத்திரத்தில் பின்னி எடுத்திருக்கிறார். வணிகம் செய்து ஏமாற்றுபவரின் வசன உச்சரிப்பு, உடல் மொழி என அத்தனையிலும் அட்டகாசப்படுத்துகிறார்  மனிதர். படத்தில் காதல் கிடையாது. சேசிங், அனல் பறக்கும் ஆக்சன்கள் கிடையாது. ஆனால் படம் பார்க்க நன்றாக இருக்கிறது. நிதி மோசடி, பங்குச்சந்தை என்ற விஷயம் பலருக்கும் புரியாது என்றாலும் நிதானமாக படத்தின் போக்கிலேயே என்ற நடக்கிறது

மூளை குறைபாடு கொண்டவனை பலிகடாவாக்கும் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம்! - மிராக்கிள் இன் செல் நெம்பர் 7

படம்
மிராக்கிள் இன் செல் நெம்பர் 7 கொரியா இயக்கம்  லீ ஹ்வான் கியூங் கதை - Lee Hwan-kyung Yu Young-a Kim Hwang-sung Kim Young-seok ஒளிப்பதிவு  Lee Dong-jun இசை  Kang Seung-gi அண்மையில் இதுபோன்ற நெகிழ்ச்சியான படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கும்படியான படம் இது.  மூளை குறைபாடு கொண்ட அப்பாவுக்கும், அவனது மகளுக்குமான உணர்ச்சிகரமான நெகிழ்ச்சி தரும் உறவுதான் படத்தின் கதை.  வணிக வளாகத்தில் கார்களை பார்க்கிங் செய்யும் இடத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறான் லீ யோங். தன் மகள் யெ செங்கிற்கு பள்ளிக்குச்செல்ல அவள் விரும்பும் பை ஒன்றை வாங்கித்தர காசு சேர்த்து வருகிறான். அப்போது கடையில் லீ பார்த்து வைத்த பையை, போலீஸ் கமிஷனரின் மகள் வாங்கி விட, அந்தப்பை என் மகளுக்கு வாங்க நினைத்திருந்தேன் என லீ கடையில் வாதிட ரசாபாசமாகிறது சூழ்நிலை. கமிஷனர் லீயின் நிலைமை புரியாமல் அவனை கடுமையாக தாக்குகிறார்.  பின்னர் ஒருநாள் அவன் தன் மகளுக்கு பள்ளிக்கான பை வாங்க சேர்த்த காசை எண்ணிக்கொண்டிருக்கிறான் லீ. அப்போது அங்கு வரும் கமிஷனரின் மகள், அவனை பள்ளிக்கான பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்துச் செல்கிறாள். ஆனால் போகும் வழிய

பிண கூராய்வளர் செய்யும் தவறும், அதன் பின்விளைவுகளும் - நோ மெர்சி

படம்
நோ மெர்சி  2010  தென்கொரியா இயக்கம் கிம் ஹையான் ஜுன் ஒளிப்பதிவு  கிம் வூ ஹையான் இசை பார்க் ஜி மன் சுயநலத்திற்காக நாம் செய்யும் சில செயல்கள், பிறரை எப்படி காயப்படுத்துகிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் அப்படி காயப்பட்டவர்கள் திரும்ப அந்த நிகழ்ச்சிகளை நினைவூட்டி நம்மையும் அதுபோல இயலாமையில் சிக்க வைத்தால் எப்படியிருக்கும் அந்த வலி, வேதனை? ஏழைகள் நிறைய விஷயங்களை மன்னித்துவிடுவது அவர்களுக்கு இருக்கும் இயலாமையில்தான். அவர்களுக்கும்  அனைவரைப் போலத்தானே உணர்ச்சிகள் இருக்கும். படம் சொல்லுவதும் அதுதான். மருத்துவர் காங், நாட்டிலேயே புகழ்பெற்ற பிணக்கூராய்வாளர் மற்றும் கல்லூரி பேராசிரியர். அவரிடம் ஒரு பிணத்தைக்கொண்டு வருகிறார்கள். அந்தப் பிணத்தில் தலை, கை, கால்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. ஒரு கை மட்டும் காணவில்லை. கொலை நடந்த விதம் பற்றி காங் தனது யூகங்களை சொல்லி காவல்துறைக்கு நிறைய உதவிகளைச் செய்கிறார். இதை வைத்தே காவல்துறையினர் குற்றவாளியை நெருங்குகின்றனர். லீ என்ற சூழல் போராட்டக்காரனை கைது செய்துவிடுகின்றனர். அப்போது பார்த்து காங், பிண கூராய்வு பற்றிய அறிக்கையை கூட தயாரிக்காமல் தனது மகள் வெள

ஓவிய ஆசிரியனின் அன்பை பள்ளியில் படிக்கும் மனைவி புரிந்துகொண்டாளா? மை லிட்டில் பிரைட்

படம்
ஜஸ்ட் வாட்ச்  மை லிட்டில் பிரைட் 2004 தென்கொரியா இயக்கம் - ஹோ ஜூன் கிம் திரைக்கதை யூ சுன் 2 வெளிநாட்டிலிருந்து நாயகன் திரும்பி வருகிறான். அவன் கையில் ஒரு சிறுமியின் புகைப்படத்தை வைத்திருக்கிறான். அவளை  அவன் விரும்பினாலும் வெளியே சொல்லவில்லை. ஆனால் அவன் நினைத்த விஷயம் அவன் குடும்பத்திற்கு நெருக்கமான தாத்தா ஒருவரின் விருப்பத்தின் பேரில் நடக்கப்போகிறது என்பதை அவன் அப்போது அறியவில்லை. விமானநிலையத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்களின் உறவினரான தாத்தா ஒருவரை தனக்குப் பிடித்த பள்ளி மாணவியின் துணையுடன் சென்று சந்திக்கிறான். அவர் சிம்பிளாக நான் இறக்கப்போகிறேன். எவ்வளவு நாட்கள் வாழ்வேன் என்று தெரியாது அதற்குள் என் பேத்தியை நீ கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என படாரென குண்டைத் தூக்கி போடுகிறார். நாயகனுக்கும் பள்ளிச்சிறுமிக்கும் திகீரென்று ஆகிறது. பள்ளிச்சிறுமிக்கு பள்ளியில் பல பெண்கள் சைட் அடிக்கும் பள்ளி சிறுவன மீது ஒருதலைக் காதல். இந்த நிலைமையில் தான் எப்படி இன்னொருவரை கல்யாணம் செய்துகொள்ள முடியும்? அதுவும் நட்பாக வேறு பழகுகிறோம் என மனம் புழுங்குகிறார்கள். பெரியவர்களின் செல்வாக்குதா ன்

சைக்கோ கொலைகாரனை விரட்டி வேட்டையாடும் போலீஸ்காரரும், மாஃபியா தலைவரும்! - தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில்

படம்
ஃபிளிக்கரிங் மித் தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில் கொரியா 2019 இயக்குநர் : லீ வோன் டே ஒளிப்பதிவு: பார்க் சியூ சியூங் இசை: ஜோ யாங் வூக் கொரியாவில் முன்னால் செல்லும் காரை இடித்து ஒருவரை கீழிறங்கச் செய்து அவரை கொலை செய்கிறான் கொலைகாரன் ஒருவன். காவல்துறை இந்த வழக்கை தனித்தனியாக வழக்குகளாக கருதுகிறது. ஆனால் ஒரு போலீஸ்காரர் மட்டும் இந்த வழக்குகளை தொடர் கொலைகள் என்று கூறுகிறார். அதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார். ஆனால் அவரின் மேலதிகாரி அதனை ஏற்க மறுக்கிறார். தனித்தனி கொலைகள் என்கிறார். இதனால் அவருக்கும் மேலதிகாரிக்கும் முட்டல் மோதலாகிறது. மேலதிகாரி, கடத்தல் வழக்கு ஒன்று உள்ளது. முதலில் அதைப்பார். இந்த வழக்கை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கிறேன் என்கிறார். அப்போது சைக்கோ கொலைகாரன் அடுத்து கேங்ஸ்டரை கொல்ல முயல்கிறான். ஆனால் கேங்ஸ்டர் திருப்பி தாக்கியதால் கைகளில் மார்பிலும் காயமுற்று கொலைமுயற்சி தோற்றுப்போக அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறான். யார் தன்னை தாக்கியது என அறிய கேங்ஸ்டர் விரும்புகிறான். எதிரிகளா அல்லது வேறு யாருமா என்று அறிய நினைத்து தன் குழுவை நகரம் முழுக்க அனுப்புகிறான். கூடுதலாக காவல்துறையில

குற்றவாளிகளைப் பிடிக்க ஹோட்டல் நடத்தும் காவல்துறையின் சாணக்கிய குழு! - எக்ஸ்ட்ரீம் ஜாப்

படம்
எக்ஸ்ட்ரீம் ஜாப் கொரியா - 2019 இயக்கம் – லீ பையங் ஹியோன் ஒளிப்பதிவு – நோ சுயங் போ இசை – கிம் டா சியோங்   போதைப்பொருள் மாபியா குழுவை பிடிக்கவேண்டும். ஆனால் அவர்களைப் பற்றிய அணுவளவு தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்ன செய்வது? அதற்குத்தான் காவல்துறை கோ என்ற போலீஸ்காரர் தலைமையில் ஐந்து போலீஸ்காரர்களைக் கொண்ட படையை அமைக்கிறது. இவர்கள் போதைக்குழுவைக் கண்டுபிடிக்க உணவகம் ஒன்றில் சந்திக்கின்றனர். ஆனால் என்ன முயன்றும் அவர்களை இவர்களால் கண்டுபிடித்து குற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியவில்லை. அதனால், உணவகம் ஒன்றை தொடங்கி அங்கே காத்திருப்பது, சரியாக ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர்களை கைது செய்ய நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உணவகத்தை பெயருக்கு நடத்த முயல்கிறார்கள். அப்போது சக போலீஸ்காரர், முயற்சிக்கும் ஃபிரைடு சிக்கன் வெற்றிபெறுகிறது. இதனால் அவர்கள் கடை அப்பகுதியில் விரைவிலேயே புகழ் பெற்றுவிடுகிறது. இதனால் அவர்கள் போதைக்கும்பலை பிடிக்க முடியாமல் நாள்தோறும் ஹோட்டலை நடத்துவதும் வரும் காசை எண்ணிப் பார்ப்பதுமாக போகிறது. போதை மாபியாவை இந்தக்குழு எப்படி பிடித்தது, ஹோட்டலை நடத்தினார்கள

ஆசையை துறக்கும் உலகின் சிறந்த வாள் வீரன்! - தி வாரியர்ஸ் வே

படம்
வாரியர்ஸ் வே -கொரியா(2010) இயக்கம் –லீ சியூங்மூ ஒளிப்பதிவு - வூ ஹியூங் கிம் இசை ஜேவியர் நவரெட்டே உலகில் மிகச்சிறந்த வாள் வீரனாக ஆசைப்படும் வீரன் ஒருவனின் கதை. அவனுக்குள் இருக்கும் கருணை உணர்வு அவனை வீழ்த்திவிடும் என அவனது குரு எச்சரிக்கிறார். அதையும் மீறி எதிரிப்படையினரைச் சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்க்கிறான்.  அது அவரது குருவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர் தன் சீடன் கொன்ற ஆட்களைத் தவிர்த்த மீதி ஆட்களைத் திரட்டிக்கொண்டு அவனை பின்தொடர்கிறார். நாயகன் குழந்தையை எடுத்துக்கொண்டு தனது நண்பன் வாழ்ந்த ஊரை நோக்கிப் போகிறான். அங்கு நண்பன் இல்லை. ஆனால் அவன் நடத்திவந்த விடுதி இருக்கிறது. அங்கேயே தங்கும்போதுதான் அங்கு அடிக்கடி வந்து பொருட்களையும் பெண்களையும் கொள்ளையடித்துப்போகும் படைவீரன் ஒருவனைப் பற்றி தெரிய வருகிறது. அவனைப் பழிவாங்க துடிக்கும் இளம்பெண்ணுக்கு நாயகன் உதவுகிறான். அந்த ஊரின் பிரச்னையில் தலையிட வேண்டாம் என்றாலும் சூழல் அவனை விடுவதாக இல்லை. இந்த நிலையில் அவன் அந்த ஊர் மக்களைக் காப்பாற்றினானா? இளம்பெண் தன் அப்பாவைக் கொன்றவனை பழிவாங்