இடுகைகள்

பேச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டிலேயே வேலை செய்யும் முறை தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது! - எதை பெற்றோம்? எதை இழந்தோம்?

படம்
                வொர்க் பிரம் ஹோம் ! கொரோனா வேகமாக பரவியபோது ஐடி நிறுவனங்களோடு பிற நிறுவனங்களும் சங்கடத்தோடு வேறு வழியின்றி அறிவித்த விஷயம் வீட்டிலேயே வேலை செய்யலாம் என்பதுதான் . நிறைய நிறுவனங்கள் ஆபிசிலுள்ள கணினிகளை கூட சொந்த செலவில் பணியாளர்களின் வீடுகளுக்கு மாற்றிக்கொடுத்தன . இணைய இணைப்பிற்கும் வசதி செய்தன . சில நிறுவனங்கள் இதனை செய்யாமல் அரசு போல வேலையைக் காப்பாற்றிக்கொள்ள இதைச் செய்வது எல்லாம் உங்கள் பொறுப்பு என ஒதுங்கிக்கொண்டன . அதிக தொலைவிலிருந்து மெட்ரோ ரயில் , உள்ளூர் ரயில் பிடித்து வருபவர்களுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது . ஆபீசில் உட்கார்ந்து மதிய உணவிற்கு நம்ம வீடு வசந்தபவன் போகலாமா இல்லையென்றால் பாரதி மெஸ்ஸா என கூகுள் செய்தவர்களின் உற்பத்தித்திறன் கூட கூடியது உண்மை . கூகுள் மீட் , ஜூம் மீட்டிங் என கலந்துரையாடல்கள் தொடர்ந்தன . நெருங்கிய அலுவலக நண்பர்களுடன் போனில் பேசினாலும் நேரடியாக அவர்களைப் பார்த்து பேசுவது போல சூழல்கள் அமையாத்து பலருக்கும் சிக்கலாகவே இருந்தன . உங்கள் நண்பர்கள் ஆபீசில் ஜெராக்ஸ் எடுக்கும்போது , நோட்டில் கையெழுத்து போடும்போது , வாட

நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்! - கூ ஆப் துணை நிறுவனர் மயங்க்

படம்
          மயங்க் பைடாவட்கா கூ , சமூக வலைத்தளம் , துணை நிறுவனர் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிகளை எப்படி பார்க்கிறீர்கள் ? இன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் முக்மூடிகளை அணிந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள் . இவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளியிட முன்வருவதில்லை . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன . போலிசெய்திகள் , வதந்திகள் அதிகம் வருகின்றன . இதனை தீர்க்க அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது . இதன்மூலம் யார் செய்தியை உருவாக்குகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கமுடியும் .. அரசு இந்த வகையில் வெறுப்பு பேச்சு , போலிச்செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் அரசின் கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன் . உள்நாட்டு ஆப்கள் மூலம் வெளிநாட்டு சமூகவலைத்தள ஆப்களை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா ? இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கான சந்தை உள்ளது . அதனைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் சிறிதே முயன்றால் போதுமானது . ரெட்பஸ் என்ற நிறுவனம் இந்திய நிறுவனம்தான் , இணைய வழியில் பஸ்களை புக் செய்யும் பெரும் நிறுவ

சமூகத்தோடு இளைஞர்கள் உரையாடுகிறார்களா?

படம்
giphy தெரிஞ்சுக்கோ! இன்று பேச்சு முழுக்க சமூக வலைத்தளங்கள் வழியாக நடந்தாலும், பேசுவது நாம்தானே. பேசுவது முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது. உரையாடலின் இடத்தை பெரும்பாலும் இன்று இமோஜி என்ற படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. குறைந்த உழைப்பில் அதிக விஷயங்களை இதன்மூலம் சொல்லிவிட முடிகிறது. அதுபற்றிய டேட்டா இதோ.... பார்ட்டியில் கலந்துகொள்பவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் புதிதாக இருக்கிறார்கள் என்கிறார் பிரபல செஃப் அலிசன் ரோமன். நாம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 140 முதல் 180 வார்த்தைகளை பேசுகிறோம். அதேசமயம் அதேநேரத்தில் 400 வார்த்தைகளை கவனிக்கிறோம். இதுவரை உலகிலேயே அதிக நேரம் பேசியது இருவர்தான். சமூகம், அக்வாரியம், மூளையின் சக்தி பற்றி இருவரும் சேர்ந்து 54 மணிநேரம் 4 நிமிடங்கள் பேசியிருக்கின்றனர். இங்கிலாந்திலுள்ள கஃபேக்களில் குறைந்தது 900 புதிய நபர்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதை சாட்டி கஃபே திட்டம் மூலம் ஊக்குவிக்கிறார்கள். சமூகம் தொடர்பான நிகழ்வுகளில் அமெரிக்கர்களின் பங்கேற்கு மொபைல் அளவில்தான் உள்ளது. இம்முறையில் 89 சதவீதம் பேர் சமூகத்தோடு இணைந்துள்ளனர். நன்றி -

மூளையின் எண்ணங்கள் பேச்சாக...

படம்
மூளையின் எண்ணங்கள் பேச்சாக... அண்மையில் மூளையின் எண்ணங்களை அப்படியே நாம் புரிந்துகொள்ளும் விதமாக பேச்சாக்கும் கருவியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர். இதற்காக குழந்தைகளின் கதைகளைத் தேர்ந்தெடுத்து இம்மாடலைத் தேர்ச்சியடையச் செய்துள்ளனர். கருத்துகளைப் புரிந்துகொண்டு, அதனைப் பேச்சாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், 69 சதவீத வார்த்தைகள் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளன. மேலும் 25 வாய்ப்புகள் இதற்காக அளிக்கப்பட்டுள்ளன. உரையாடல்கள்  மற்றும் அதன் ஒலிகள் என்பதை வகைப்படுத்துவது கடினமான ஒன்று. மூளையிலுள்ள பேச்சு மையங்கள் சிக்னல்களை ஒலியாக மாற்றுவது ஆகியவற்றை செய்ய முயற்சிக்கிறோம் என்கிறார் கோபால அனுமன்சிபள்ளி. -நியூஸ்அட்லஸ்