இடுகைகள்

மனநலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆளுமைக் குறைபாடுகளை போக்கும் மனநல தெரபி முறைகள்!

படம்
pixabay மையப்படுத்திய தெரபி இதில் உளவியலாளர் நோயாளியை சுதந்திரமாக பேச வைக்கிறார். இதன் காரணமாக அவர் தனது மனதிலுள்ள அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்துகிறார். இவற்றில் உளவியலாளர் பங்கு நோயாளி சொல்வதை முழுமையாக கவனித்து உள்வாங்குவது மட்டுமே. இதனால் தான் செய்தது சரி, தவறு என வாதிடுவதை மெல்ல நோயாளி கைவிடும் வாய்ப்பு ஏற்படுகிறது. தன் செயல்சார்ந்து வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை இந்த தெரபி ஒருவருக்கு வழங்குகிறது. தெரபி அளிப்பவர் நோயாளி மீதான கரிசனம், நேர்மறையான எண்ணதுடன் அவரை அணுகுகிறார். அவரின் கண்களின் வழியாக உலகைப் பார்ப்பதால் உளவியலாளருக்கும், நோயாளிக்கும் நம்பிக்கையான உறவு ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை சிறப்பாக பயனளிக்கும்   வாய்ப்பு பெருகிறது. ரியாலிட்டி தெரபி நோயாளிக்கு உறவுகளை பராமரிக்க பாதுகாக்க வளர்க்க தெரியாத சிக்கல் இருக்கும். இதனால் குறை, புகார், வசை பாடாமல் எப்படி உறவை வளர்ப்பது என இந்த தெரபி வழியாக உளவியலாளர் கற்றுத் தருகிறார். தன் வாழ்க்கையை நடத்துவதற்கான சுதந்திரம், பணி சார்ந்த அங்கீகாரம், குடும்பம், உறவுகள், நட்பு, உணவு உடை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த தெரபி உறுதி செய்க

உங்கள் லைஃப்ஸ்டைலை மாற்றும் ஆப்கள்!

படம்
லைஃப்ஸ்டைல் ஆப்ஸ்! பாக்கெட் கோச் தினசரி நீங்கள் மெசேஜ் அனுப்பும் பிற ஆப்களைப் போலவே இருக்கும். ஆனால் இதில் பல்வேறு டிப்ஸ்களை உங்களுக்கு மெசேஜ் போலவே தருகிறார்கள். இதில் உங்களுக்கு விரக்தி, மனச்சோர்வு இருந்தால் சரிசெய்ய உதவுகிறார்கள். டெசர்ட் ஐலேண்ட் இது ஒரு சர்வே போலத்தான். நீங்கள் எந்த ஆப்பை எத்தனை முறை ஆன் செய்து என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து டைம்ஸ் ஆப் இந்தியா போல சார்ட் போட்டு விளக்குகிறார்கள். இதிலிருந்து நமக்கு ஏற்படும் மனநிலை பாதிப்பை அடையாளம் காணலாம். ஸ்மைலிங் மைண்ட் தியானம் செய்வதும் இன்று டிஜிட்டலாகி விட்டது. இந்த ஆப்பில் அதனைப் பார்ப்பதோடு அதிகாலையில் எழுந்து செய்தால் உங்கள் உடல்நலமும், மனநலமும் தேறுவதற்கு வாய்ப்புள்ளது. மூட்ஃப்ளோ உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆப் இது. இதில் மனநிலை பற்றிய அறிக்கையைப் பெற்றால் உங்களது மனநிலையை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஸ்டஃப் இதழ்

மனநல பிரச்னைகளை சினிமாவில் சரியாக காட்டுவதில்லை! - ஷகீன் பட்

படம்
மன அழுத்தம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றை இன்று அனைவரும் பேசி வருகிறோம். காரணம், பணி, குடும்பம் என பல்வேறு விஷயங்கள் இடியாப்பம் போல ஒன்றாக கலந்து நம் மனதைப் பாதிக்கின்றன.   திரைப்பட எழுத்தாளர் ஷகீன் பட் இதுபற்றிய ஐ ஹேவ் நெவர் பீன் அன் ஹேப்பியர் என்ற நூலை எழுதியுள்ளார். தன் இருபது ஆண்டு, மனச்சோர்வு விடுதலைப்போராட்டம் பற்றிய நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். நீங்கள் எழுதியுள்ள நூலில் மனச்சோர்வு எப்படி உறவுகளை பாதித்தது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில் இதனை எப்படி எதிர்கொண்டார்கள்.? என் குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு பிரச்னை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனால் நூல் வெளியானபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் அறையில் இருக்கும்போது, தனியாக இருக்க விரும்ப அதிகம் விரும்பியிருக்கிறேன். மனதிற்கு நெருக்கமானவரிடம் கூட சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள முடியாது. இதனால்தான் நான் பிறருக்கு சொல்லவேண்டிய விஷயங்களை நூலாக்கியுள்ளேன். இதனை படிக்கும்போது குழந்தை வளர்ப்பை ஆண்களும் செய்யவேண்டும், மனச்சோர்வு காலகட்டம், பாதிப்பு ஆக

போதை, வல்லுறவு கொலை - எலக்ட்ரீசியன் முதல் சீரியல் கொலைகார பயணம்!

படம்
டீன் கோரல் சிறுவயதில்.... அசுரகுலம் டீன் கோரல் கோரலுக்கு எதுவுமே நீட்டாக இருக்கவேண்டும். உடை முதல் தான் செக்ஸ் வைத்துக் கொண்டு கொல்லும் இளைஞர்கள் முதற்கொண்டு அப்படித்தான். ஃபிளைவுட் டேபிளில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதில் தான் வெட்டும் சதையின் துணுக்குகள், மலம், வாந்தி எல்லாம் வந்து விழ வேண்டும் என நினைப்பார் கோரல். அனைத்தும் யாருக்கும் தெரியாமல்தான் நடந்து வந்தது. கோரலும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு அசுர ஆட்டம் ஆடினார்.  ஆனால் நினைத்தது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன? 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதி.  காவல்நிலையம். டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்த வந்த போன் அழைப்பு அது. இளைஞன் ஒருவன் பதற்றத்துடன் பேசினான். இங்கு நான் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டேன். சீக்கிரம் வாங்க சார் என்ற அவனின் குரலில் வழிந்த பதற்றத்தை போலீசார் விரைவில் உணர்ந்தனர். போனை வைத்துவிட்டு சைரன் ஒலிக்க காரை கிளப்பினர். முகவரி? 2020 லாமர் ட்ரைவ். அவர்கள் அங்கே சென்று சேரும் முன், போனில் அழைத்த ஹென்லி பற்றி பார்த்துவிடுவோம். ஹூஸ்டன் என்ற பகுதி, நகரின் குற்றங்கள் மலிந்த இடம். அங்குதான் கோரல் வாழ்ந்து வந

இன்பமா? துன்பமா? - பிஎடிஎஸ்எம்(BDSM) பற்றி ஒரு பார்வை

படம்
18 வயதிற்கு மேல் மட்டும்.... பிடிஎஸ்எம் என வலியை அனுபவிக்கும் கிளப்புகள் மேற்குலகில் உண்டு. இதனை ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே போன்ற படங்களிலும் காட்டியுள்ளனர். எ கேர்ள் வித் ட்ராகன் டாட்டூ போன்ற படத்தில் அழுத்தமாகவே அதனைச் சொல்லியிருப்பார்கள். ஆனால் சரியான வித த்தில் அல்ல. அதில் நிறைய விதிகள் உண்டு. பரஸ்பர உடன்பாட்டுடன்தான் அங்கு உறவு என்பது நிகழ்கிறது என பிடிஎஸ்எம் குழுக்கள் கூறுகின்றனர். உண்மை எதுவோ அதுபற்றி விஷயங்கள் பஸ்ஃபீட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உள்ளன. அதில் சில விஷயங்கள் உங்களுக்காக. பிடிஎஸ்எம் என்பதில் பல்வேறு வகைகள் உண்டு. இதில் ஒருவர் பாலுறவை விட அதனை அனுபவிக்கும் முறையை கவனமாக உருவாக்குவார். இது கைவிலங்குகள், முகமூடிகள், சாட்டை, கத்தி, கபடா என  படுக்கை அறையில் ரணகள பொருட்களின் களஞ்சியங்களை வைத்து செக்ஸ் அனுபவிக்கும் மனநிலை. பிஎடிஎஸ்எம் என்று டைப் செய்தாலே ரணகள வீடியோக்கள் கூகுளில் வரும். ஆனால் இது ஒரு  உணர்வுநிலைதான். மசாஜ் போல. முழுக்க செக்ஸை நோக்கியதல்ல என்கிறார் பிடிஎஸ்எம் ஆய்வாளர் கிளாரிஸே தோர்ன். இது முழுக்க விதவிதமான பொருட்கள் இருப்பதால், ஆக

பௌர்ணமி மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பௌர்ணமி நிலவு நம்மை பைத்தியமாக்குமா? நிலவுக்கும் மனநிலைக்குமான தொடர்பு இன்று தொடங்கவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று மனநிலை மருந்துகளை சாப்பிடுவது என்பது சிலரின் பழக்கம். ஆனால், கிரேக்கர்கள்தான் இதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் அரிஸ்டாட்டிலின் கருத்தான நிலவு, நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை நம்பினர். அதோடு, தொழுநோய் போன்றவற்றுக்கும் நிலவுக்கும் தொடர்புள்ளதாக கூறிவந்தனர். ஆனால் இதற்கு வலுவான எந்த அறிவியல் ஆய்வும் கிடையாது. ஆனால், மூளையிலுள்ள நீர்மத்தில் நிலவின் ஈர்ப்புவிசை பௌர்ணமியன்றி மாறுதல்களை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அது குணநலன்களில் மாறுபாடு ஏற்படுத்தும் அளவு வலிமையானதல்ல என்கிறது அறிவியல்துறை. தற்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப்படி, பௌர்ணமி தினத்தன்று ஒப்பீட்டளவில் கொலைகள் குறைந்து வருவதாக கூறுகிறது. எப்படிங்க ப்ரோ என்று கேட்டுவிடாதீர்கள். ஆய்வுகள் அப்படித்தான் டக்கென ஒரு விஷயம் சொல்லிவிட்டு செல்லும். பௌர்ணமி அன்று முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயற்சியுங்கள். அப்படியாவது பக்கத்து சீட