இடுகைகள்

ஐ லவ் சாக்லெட்!

படம்
சாக்லெட் சாப்பிடுவோமா?  தியோபுரோமா கோகோ பருவகால மரத்தின் பழங்களிலிருந்து சாக்லெட் பெறப்படுகிறது . இம்மரத்தின் பெயரை கடவுளின் உணவு என்று வரையறுக்கிறது கார்னெல் யுனிவர்சிட்டி . பிரேசில் , இந்தோனேசியா , நைஜீரியா , மேற்கு ஆப்பிரிக்கா , தென்கிழக்கு ஆசியா ஆகிய இடங்களிலிருந்து 79 சதவிகித கோகோ பெறப்படுகிறது . பப்பாளி சைசில் உள்ள கோகோ பழத்தில் 50 விதைகள் உள்ளே இருக்கும் . கையால் பறிக்கப்பட்ட பழங்களிலிருந்து பெறப்பட்ட விதைகள் , அதனைச் சுற்றியுள்ள வெள்ளை சதைப்பற்றுடன் வாழை இலைகளால் ஏழு நாட்களுக்கு மூடி வைக்கப்படுகின்றன . சாக்லெட் மணம் கிளம்பியவுடன் வெள்ளைநிற பகுதி அகற்றப்பட்டு வெயிலில் காயவைக்கப்படுகின்றன . சிதைந்த விதைகள் நீக்கப்பட்டு , மற்ற விதைகள் நன்கு வறுக்கப்படுகின்றன . மெஷினில் செலுத்தப்படும் விதைகள் து்ண்டாக்கப்பட்டு உமிகள் அகற்றப்படுகின்றன . இப்போதுள்ளது நிப் - இதுவே சாக்லெட் . பல்வேறு முறைகளிக் திக்கான பசைபோல இருக்கும் . இதில் சர்க்கரை , பருப்புகள் , பாலாடை ஆகியவை சேர்த்தால் சாப்பிடுவதற்கான சாக்லெட் ரெடி .  தொகுப்பு: ரோஜர் வின்சி, பானுமதி கேமுலா நன்

ஜெகஜ்ஜால கில்லாடி விக்டர்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள்   ஜெகஜ்ஜால கில்லாடி விக்டர்! ரா . வேங்கடசாமி பொ கீமியா என்பது செகஸ்லோவேகியா நாட்டிலுள்ள மாநிலம் . அதிலுள்ள ஹோஸ்டைன் நகர மேயருக்கு மகனாகப் பிறந்தவர்தான் விக்டர்லஸ்டிக் (1890-1947) என்னும் ஏமாற்றுப் பேர்வழி. ஜெர்மனியிலுள்ள டிரெஸ்டன் நகரிலிருந்த ஒரு சிறந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு கற்றுக்கொண்ட பாைஷகள் ஜெர்மன் , ஆங்கிலம் , பிரெஞ்சு இத்தாலியன் போன்றவை. பாரிஸ் சென்ற தன் மகன் பாரிஸில் நன்றாகப் படிக்கிறான் என்று நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் பாரிசில் காஸனோவாக திரிந்த விக்டர் கேளிக்கை நாயகனானார் . பிரிட்ஜ் , போக்கர் , பில்லியார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தார் . அமெரிக்காவின் புதிய பணக்காரர்கள் , ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் வருவது அப்போதைய பிரபல நாகரீகமாக இருந்தது. அவர்கள் வரும் சொகுசு கப்பல்களில் , சீட்டு விளையாடும் புலிகள் சிலர் ஊடுருவி இருந்தனர் . இவர்களிடம் சிக்கிய பணக்காரர்களில் ஒருவர் கூட பணத்தை இழக்காமல் வீடு போய் சேர்ந்ததில்லை . பிரபு வம்சம் என்று தற்பெருமை தாளம் வாசித்த விக்டர் , சூதாட்ட கேங்கில் தன்னையும் இணைத்துக்கொண்டார

நேர்காணல்: பிர்ஜித் ஸ்வார்ஷ், மூத்த பத்திரிகையாளர்

படம்
முத்தாரம் நேர்காணல் "உண்மையை பேசும் மக்கள் அரசிடம் கொடுக்கும் விலை அசாதாரணமானது" பிர்ஜித் ஸ்வார்ஷ் , மூத்த பத்திரிகையாளர் . தமிழில் : ச . அன்பரசு நன்றி : hrw.org வட ஆப்பிரிக்காவிலுள்ள மேற்கு சகாரா மற்றும் செனகல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள மாரிடானியா உலகிலேயே கடைசியாக (1981) அடிமை முறையை ஒழித்த நாடு . 2007 ஆம் ஆண்டு அதனை குற்றமென அறிவித்தது . அராபியர்கள் , பெய்டர்கள் , வடகிழக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெர்பர்கள் , ஆப்பிரிக்க அடிமைகள் இங்கு வசிக்கின்றனர் . ஆப்பிரிக்க மாரிடானிய மக்களுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்த வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை மூத்த பத்திரிகையாளரான பிர்ஜித் ஸ்வார்ஷ் பேசுகிறார் . மாரிடானியாவில் இன்னும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லையா ? இதற்கு ஆதாரம் ஏதேனும் கிடைத்திருக்கிறதா ? அரசு தவிர்த்த பிற இயக்கங்கள் அடிமை முறைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன . அரசின் பங்கு இதில் மிக சொற்பம் . ஹராடைன் இன மக்கள் கடும் வறுமையில் வதங்குகிறார்கள் . வசதியான குடும்பங்களின் ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்ப்பதே இவர்களின் பணி . கிராமங்களில

அசர வைக்கும் ராணுவச்சோதனைகள்!

படம்
ராணுவச்சோதனைகள் ! உடலே கவசம் ! கடலின் ஆழத்திலும் பாதிப்படையாத கடல் சிங்கத்தின் ரத்த ஓட்டம் , 34 ஆயிரம் அடி வரை பறக்கு வாத்தின் (Anser indicus) திறன் ஆகியவற்றை வைத்து அமெரிக்காவின் DARPA டீம் வெயில் , மழை , பனி , வேதிப்பொருள் , நோய் , கதிர்வீச்சு , விண்வெளி என அத்தனையிலும் தாக்குப்பிடிக்கும் சூப்பர்ஹீரோவை உருவாக்க முயற்சித்து வருகின்றனர் . உறங்காத போராளி தூக்கம் நல்லதுதான் . மும்முரமான போரில் வீரர் தூங்கிவிட்டால் என்னாகும் ? எனவே தற்போது அமெரிக்கா தூங்காமல் இருக்க Modafinil எனும் மருந்தை வீரர்களிடம் சோதித்து வருகிறது . நாற்பது மணிநேரம் தூங்காமல் வைத்திருக்க இம்மருந்து உதவும் . மூளையில் காந்த அலைகள் பயன்படுத்தி தூங்காமல் வைத்திருப்பது குறித்த ஆராய்ச்சியும் அங்கு நடந்து வருகிறது . தொலைவில் உணர்தல் ! இஎஸ்பி பவரை அமெரிக்காவின் பென்டகன் நம்புவதோடு இந்த ஆராய்ச்சியில் 20 மில்லியன் டாலர்களைக் கொட்டியுள்ளது . எதிரி நாட்டின் அணு உலைகள் , ஆயுதங்களை இவ்வழியில் கண்டுபிடிக்க முடியுமா என புதுமையாக ட்ரை செய்த காலம் 1972-1996. பின்னர் 2002 ஆம் ஆண்டு சிஐஏ வெளி

ஆண்களை இப்படிச்சொல்லி அவமானப்படுத்தலாம்!

படம்
காட்டன் ஜெல் ! சிங்கப்பூரின் நேஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் , கழிவுப்பருத்தியில் ஏரோஜெல் தயாரித்திருக்கிறார்கள் . என்ன பிரயோஜனம் ? குடிநீரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் , காயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை குறைக்கவும் இவை உதவுகின்றன . பேராசிரியர் நான் பாங் தின் , மின்ங் துவாங் ஆகியோர் தலைமையில் ஆராய்ச்சிக்குழுவினர் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு பருத்திகளைப் பெற்று அதன் இழைகளிலிருந்து ஏரோஜெல்லைத் தயாரித்துள்ளனர் . இதற்கு முன்பு இவர்கள் காகிதங்களிலிருந்து ஏரோஜெல் தயாரித்திருந்தனர் . எடையற்ற , உறிஞ்சும் தன்மை கொண்ட ஏரோஜெல்லை தயாரிக்கும் செலவும் பிற ஜெல்களை விட குறைவு . " காயங்களுக்கு அருகில் தோலில் செலுத்தப்படும் பருத்தி இழை ஜெல் பதினாறு மடங்கு பெரிதாகி ரத்த இழப்பைக் கட்டுப்படுத்தும் . இது செல்லுலோஸ் ஸ்பான்ச்சுகளை விட வேகமானவை ." என்கிறார் ஆராய்ச்சியாளர் துவாங் . கமர்சியல் மார்க்கெட்டில் ஜெல்லை சந்தைப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர் .    2 பிட்ஸ் ! Scnapsidee என்ற ஜெர்மன் சொல்லுக்கு , குடிபோதையில் சூப்பர் ஐடியாஜி என தோன

அகதிகளை கடத்தும் கடத்தல் குழு!

படம்
அகதிகளை கடத்தும் பார்டர் கடத்தல் குழு !- மர்மங்களும் பின்னணியையும் தடமறியும் முயற்சி - ச . அன்பரசு " அடுத்த செவ்வாய்க்கிழமை உங்களுக்கு ஆறு பாக்ஸ் வந்து சேரும் " என்ற கரகர குரல் போனில் ஒலிக்க , ஓகே சொல்லி டோனா கதீயா தலையசைக்கிறார் . அழகான பங்களாவில் வசிக்கும் கதீயாவின் பிஸினஸ் மனிதர்களை வைத்து மனிதர்களுடனேதான் . குழப்புகிறதா ? பதினெட்டு ஆப்பிரிக்கர்களை அன்று கொலம்பியாவிலிருந்து நிகரகுவா எல்லையில் விட்டுவருவது இவரின் டாஸ்க் . ஆனால் உடனே அதை செய்துவிடமாட்டார் கதீயா . உதவிகேட்பவர்களை உடனே நம்பி மேய்ப்பராக உதவினால் அவரின் தங்கமுட்டைத் தொழில் அன்றோடு காலி . உதவி கேட்பவர்கள் சில பாதுகாப்பு செக்போஸ்ட்களை தாண்ட கேள்விகள் உண்டு . பார்டர் பிஸினஸ் ! எதிர்முனையில் வரும் ரெஃபரென்ஸ் பதிலில் திருப்தியானால் மட்டுமே பயணம் லெமன் அழுத்தி தொடங்கும் . டவுட் கலைந்தவராக உடனே ஆப்பிரிக்கர்களை கூட்டிவர வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் கதீயா . " என்னை அவர்களின் நண்பர்கள் சிபாரிசு செய்