இடுகைகள்

இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இசையை திட்டமிட்டு உருவாக்குவதில்லை! - ரோஜர் ராபின்சன்

படம்
ரோஜர் ராபின்சன் கவிஞர் ரோஜர் ராபின்சன், தனது கவிதைகளுக்காக (தி போர்ட்டபிள் பாரடைஸ்) டி.எஸ். எலியட் பரிசை வென்றிருக்கிறார். அவரிடம் அவருடைய படைப்பு பற்றி பேசினோம்.  பரிசு வென்றது எப்படியிருக்கிறது? நான் கவிதை எழுதிவிட்டு அதற்கு பரிசுகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முடிந்தளவு என்னுடைய கவிதைகளை மக்கள் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பரிசு மூலம் கவனம் ஈர்க்கப்பட்டு மக்கள் கவிதைகளை வாசித்தால் நல்லது.  எலியட் கூட அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால் அவர் வாழ்ந்தது முழுக்க இங்கிலாந்தில். அதேபோல நீங்கள் இங்கிலாந்தில் பிறந்து டிரினாட்டில் சிறுவனமாக இருக்கும்போது சென்றிருக்கிறீர்கள்.  பின்னர், இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறீர்கள். படைப்புக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறது.  படைப்புக்கு டிரினாடுதான் சரியான இடம். ஆனால் இங்கிலாந்தில் வணிகச்சந்தை உள்ளது. பதிப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் இங்குள்ளன.  உங்களை கார்டியன் பத்திரிகை டப் கவிஞர் என்று அழைத்திருக்கிறதே? முன்னர் சில டப் ஆல்பங்களை நான் செய்திருக்கிறேன். அதனால் மக்கள் என்னை இப்பெயர

மனமறிய ஆவல் - மின்நூலைத் தரவிறக்கும் முகவரி!

படம்
மனமறிய ஆவல் - கடிதங்களின் தொகுப்பை நீங்கள் கீழேயுள்ள மீடியாஃபயர் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கிப் படிக்கலாம். நன்றி. http://www.mediafire.com/file/xsnh69yhbmlq4ml/%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25AE%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AF_%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2521.pdf/file

சுந்தரசாமியுடன் தேநீர் குடித்தபோது... கடிதங்கள்!

படம்
நூல்வெளி தேநீர் குடிக்கவெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. சு.ரா பற்றி அறச்சலூர் சிவராஜ் ஏராளமான பதிவுகளை எழுதி வருகிறார். ஏதேனும் ஒருவகையில் மெய்யருள் போன்றவர்களும் அவரின் வார்த்தைகளை மெய்மறந்து கூறும்போது அவரின் நினைவுகள் தோன்றும். சு.ரா பற்றி முருகு கூறியபோது, பெரிய ஆச்சரியம் தோன்றியது. வார்த்தைகளை திருத்தி செம்மையாக்கி எழுதுவார் என்று கூறினார். அப்படித்தான் புளியமரத்தின் கதை நூலைப் படித்தேன். நாவல் படித்தாலும் அதனை வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு படிக்கவேண்டும் என்பதை நான் நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் இந்த நாவலைப் படிக்கவேண்டும். அறச்சலூர் பிரகாஷ், அன்று  காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். இன்று அவர் பதவி உயர்வு பெற்று ஊர் நீங்கிச்சென்றுவிட்டார். அன்று, தீவிரமாக பல்வேற நூல்கள் படிப்பதும், திரைப்படங்களைப் பார்ப்பதுமாக இருந்தார். இதில் ஆச்சரியம். அவரிடம் படிப்பவர்களைப் பற்றி அங்கதம் கேட்பதற்கு படு சுவாரசியமானது. புத்தகங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் கடன் கொடுக்க மாட்டார்கள். பிரகாஷ் அண்ணா என்னை நம்பிக் கொடுத்தார். புத்தகத்தைப் படித்துவிட்டு நானும் சரியா

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது ஆளுமைகளின்          கடிதங்கள் இரா.முருகானந்தத்திற்கு எழுதியவை காப்புரிமை: இரா.முருகானந்தம்               All Rights Reserved. வலைப்பூவடிவ பதிப்பு உரிமை : ஆரா பிரஸ் நூல்தொகுப்பு: ஷான் ஜே, ஜோஸஃபின் ஆசிரியரின் அனுமதி பெற்று பிரசுரிக்கப்படுகிறது. வாசிக்கலாம் ஆனால் வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. சுந்தர ராமசாமி                                            18.09.2001 அன்புள்ள திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு,      வணக்கம். உங்கள் 15.08.2001 கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உடல்நலம் சற்றுக்குறைவாக இருந்ததால் பதிலெழுதப் பிந்தி விட்டது. மன்னியுங்கள்.      இன்னும் ஐந்தாறு மாதங்கள் நான் இங்குதான் இருப்பேன். வசதி இருக்கும்போது நீங்கள் வரலாம். நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வருவதால் வருவதற்கு முன் தொலைபேசித்தொடர்பு கொண்டு என் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.(என் தொலைபேசி எண்: 223159) என்னை சந்திக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை அதிகம் அசௌகரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. இந்தப்பக்கம் வர நேர்ந்தால் அவசியம் இங்க