இடுகைகள்

செபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி

படம்
  சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.   2013-2015ஆம் ஆண்டு கார்மிசல் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி   பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம், ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்

ஒரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் இன்னொரு நிறுவனம் - மோசடி மன்னன் அதானி - பகுதி 6

படம்
  பகுதி ஐந்தில் விடுபட்டு போன மின்னஞ்சல்  ஓபல் நிறுவனம் குருநால் நிறுவனம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதானி பவர் நிறுவனத்தில் 4.69% பங்குகள் அல்லது பத்தொன்பது சதவீத பங்குகளை ஓபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பரிவர்த்தனை கூட மொரிஷியஸிலுள்ள பிற நிதி நிறுவனங்களைப் போலவே சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஓபல் இன்வெஸ்ட்மென்ட் என்பது மொரிஷியஸைச் சேர்ந்த போலி நிறுவனம். அங்குள்ள, பெருநிறுவன ஆவணங்களை ஆராய்ந்ததில் ஓபலின் நிறுவனத் தலைவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஓபல் நிதி நிறுவனம் பற்றிய செய்திக்கட்டுரைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஊடகங்கள் இந்த நிதி நிறுவனம் எப்படி அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவு வாங்கியது என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை. ஓபல் நிதி நிறுவனத்திற்கு எந்த வலைத்தளமும் இல்லை. அதன் பணியாளர்கள் பற்றிய தகவல்களும் கூட லிங்க்டு இன் தளத்தில் இடம்பெறவில்லை. முதலீடு தொடர்பான மாநாட்டில் நிறுவனம் பங்கேற்றதிற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஓபல் நிறுவனம், பன்மைத்தன்மையோடு பல்வேறு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய

மோசடி மன்னன் அதானி - பகுதி 3 - கண்டும் காணாமலும் தூங்கிய செபி...லாபம் சம்பாதித்த அதானி

படம்
  அதானியால் கீழே கிடந்த இந்தியா மேலே உயர்ந்தபோது... இந்தியப் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது புதிதல்ல. முதலீட்டு நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டுமென்பது சட்ட விதி. பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகள் முதலீட்டாளர்கள் அல்லாதோரிடம் இருப்பது முக்கியம். இதன்மூலம் பங்குகளின் விலையை ஏற்றி விற்று தனிநபர் லாபம் சம்பாதிப்பது குறையும், பங்குகளை விற்பதில் மோசடி செய்வது தவிர்க்கப்படும். இந்திய பங்குச்சந்தையைக் கவனிப்பவர்களுக்கு, பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பங்குகளை வெளிநாட்டில் தொடங்கியுள்ள நிறுவனங்கள் மூலம் கட்டுப்படுத்தி வருவது புதிதான செய்தியல்ல. இப்படி வெளிநாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் பங்குகளின் விலையை ஏற்றி இறக்கி மாற்றுவதோடு, அரசுக்கு முறையான தகவல்களைத் தராமல் தவிர்க்கிறார்கள். அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பலவற்றின் பங்குகளை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றி இந்திய ஊடகங்கள் முன்னமே கேள்வி எழுப்பியிருந்தன. இந்திய அரசியல்வாதிகளும் இதுபற்றிய கேள்விகளை எழுப்பினாலும் ப