இடுகைகள்

டிவி தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு வழக்குரைஞரை சிறையில் தள்ளி நினைவிழப்புக்கு ஆட்படுத்தும் சைக்கோ! - இன்னோசன்ட் டெஃபென்டெண்ட்

படம்
  இன்னொசென்ட் டிஃபென்டண்ட் ஜி சங், உம் கி ஜூன், ஜோ ஜே யூன் தென்கொரிய டிவி தொடர் 18 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்   பார்க் ஜூங்கு( ஜி சங்) என்பவர் அரசு வழக்குரைஞர். இவர் பெரு நிறுவனமான சோமியாங் குழுமத்தின் இயக்குநராக உள்ள சுன்கோ என்பவரின் தம்பி மின்கோவை கொலைக்குற்றத்திற்காக கைது செய்ய முயல்கிறார். ஆனால் இந்த முயற்சியால், பார்க் ஜூங்கு அவரது மனைவியை கொன்றார் என குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கூடுதலாக அவரை சிறை அதிகாரிகள் தனிமை அறையில் போட்டு சித்திரவதை செய்ய அவர் நினைவிழப்பு பிரச்னைக்குள்ளாகிறார். இதனால் வழக்கு தாமதமாகிறது. பார்க் ஜூங்கு நேர்மையான வழக்குரைஞர். எனவே, வழக்குரைஞர் துறையில் அவருக்கு எதிராக பெரும் சதிகள் நடைபெறுகின்றன. அவரது நண்பனே பணத்திற்கும், ஐ.நா கௌன்சிலில் கொரிய வழக்குரைஞர் என்ற பதவிக்கு ஆசைப்பட்டு ஜூங்குவை குற்றவாளியாக்குகிறான். மரணதண்டனை பெற்றுத் தரவும் தயங்குவதில்லை. இந்த நிலையில் பார்க் ஜூங்குவிற்காக பொது வழக்குரைஞராக இளம் பெண் வழக்குரைஞர் வாதாட வருகிறார். அவர் பார்க் ஜூங்குவிடம் ஏற்கெனவே வழக்கில் தோற்றவர். ஆனால் வழக்கில் ஏதோவொன்று ஈர்

சீனாவின் கலைப்பொக்கிஷங்களை விற்கும் தொழிலதிபர் குழுவோடு மோதும் தடய அறிவியல் துறை - ட்ரூத் - சீன டிவி தொடர்

படம்
  ட்ரூத் - சீன  டிவி தொடர்  யூட்யூப்  தடய அறிவியல் பற்றிய நிறைய தொலைக்காட்சி தொடர்களை உலகமெங்கும் எடுத்து வருகிறார்கள். ட்ரூத் சீனாவில் ஒளிபரப்பாகிய டிவி தொடர்.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் லின் என்பவர், வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில் மரணமடைகிறார். அவர் மரணமடைவது காரோடு நீருக்குள் மூழ்கி என்பது அப்போதைக்கு பரபரப்பான குற்றச்செய்தியாகிறது. அதற்குப் பிறகு அப்பாவை வழிகாட்டியாக கொண்ட லின்னின் மகள், காவல்துறையில் சேர்ந்து தடய அறிவியல் துறையில் வேலை செய்கிறாள். பின்னாளில் அவர்கள் ஒரு வழக்கை துப்பறிய அதில் அவளது அப்பாவின் மரணமும் இடையில் ஒன்றையொன்று சந்திக்க கடந்தகால குற்றங்களை எப்படி தேடித்துருவி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே மையக் கதை.  பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு சார்ந்த கதை கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தாலும் இதில் சண்டைகள் ஏதும் கிடையாது. எப்படி தடய அறிவியல் மூலம் அரசு வழக்குரைஞர்க்கு வழக்கின் சாட்சியங்களை உறுதிப்படுத்துகிறார்கள் என்பதே முக்

கொரியாவிலிருந்து கற்போம்!- புகழ்பெற்று வரும் வார்த்தைகள்

படம்
  இட்ஸ் ஓகே டு நாட் பி ஓகே  கொரோனா காலத்தில் நெட்பிளிக்ஸில் ஏகப்பட்ட கொரிய டிவி தொடர்களை பார்த்த மக்கள், அந்த மொழி வார்த்தைகள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி கூட குறிப்பிட்ட வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இப்படி பொது அறிவை வளர்த்துக்கொள்ளாவிட்டால் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எப்படி நிரூபிப்பது...  ஹலியு தென்கொரிய டிவி தொடர், படம், இசை, ஃபேஷன், உணவு ஆகியவற்றை எல்லாவற்றையும் இந்த சொல்லால் குறிக்கலாம்.  மன்ஹ்வா தென்கொரிய கார்ட்டூன்களைக் குறிக்கும் சொல். ஜப்பானிய மங்கா தாக்கத்தால் உருவான கார்ட்டூன், காமிக்ஸ் நூல்களை இப்படி சொல்கிறார்கள்.  டேபக் அற்புதம், ஆஹா என்று புகழ்கிறார்களே அதேதான்.  ஹாஜிமா  இப்படி செய்யாதே என்று கூறுவதற்குத்தான் இந்த கொரிய வார்த்தை. சாரங்கே என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம். கே டிராமா என்றால் இந்த வார்த்தைகள் இல்லாமல் வசனங்களை அந்த நாட்டு இயக்குநர்கள் எழுதுவதே இல்லை.  முக்பாங் லைவாக தட்டு நிறைய உணவு வைத்துக்கொண்டு பார்வையாளர்களிடம் ஒருவர் பேசுவார். இப்படி லைவாக பேசும் வீடியோவை முக்பாங் என்கிறார்கள்.  ஐகூ அடக்க