இடுகைகள்

திலீப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நண்பனைக் கண்டுபிடித்து குடும்பத்தின் திருட்டு பழி நீக்கும் வளர்ப்புமகன் - கல்யாண

படம்
  கல்யாண சௌகாந்திகம் மலையாளம்  திலீப், திவ்யா உண்ணி, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார் முதல் காட்சியில் ஜெயதேவ் சர்மா(திலீப்), சகோதரர்கள் இருவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். வைத்தியர் ஒருவரிடம் வேலை செய்யும் நண்பரிடம் அடைக்கலம் தேடுகிறார். ஆனால் அவரிடம் சகோதரர்கள் வந்து ஜெயதேவைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவர் அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர், ஜெயதேவை தப்பிக்க வைக்க வேறு மார்க்கம் தேடுகிறார். அப்போதுதான் வைத்தியர், அடிக்கடி வணங்கும் வைத்திய குரு ஒருவரின் சீடராக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கிறார். இதன்மூலம், வைத்தியரிடம் கணக்கு வழக்கில் மோசடி செய்த பிரேமதாஸ் என்பவரும் ஜெயதேவிற்கு நட்பாகிறார். அவர், வைத்தியச் சாலையில் உள்ள வசுமதி என்ற பெண்ணை விரும்புகிறார். ஜெயதேவ், வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் பேத்தியான ஆதிரையின் பல்வேறு பிரச்னைகளை சொல்லி தன்னை நம்ப வைக்கிறார். ஆதிரைக்கும், ஜெயதேவ் தனது பிரச்னை தொடர்பாக தேடி வரும் ஆளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதுதான் மீதிக்கதை. படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்கவேண்டாம். அப்படி பார்த்தால் திலீப்பின

அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

படம்
  ரன் வே திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன் தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி   என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை. முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள். படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில் கற்பனை

சுலைமான், உதயபுரம் மாளிகையின் தம்புராட்டியை காதலித்தால்... - உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா

படம்
  உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா உதயபுரம் சுல்தான் -மலையாளம் உதயபுரம் சுல்தான் மலையாளம் திலீப், ப்ரீத்தா, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார், அம்பிகா அவிட்டம் நாராயண வர்மா உதயபுரம் மாளிகையைச் சேர்ந்தவர். அரச வம்சம். இவரது குடும்பத்தில் இருந்து மாளவிகா என்ற பெண், அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீம் காதலனை நம்பி வீட்டை விட்டு சென்றுவிடுகிறார்.   இந்த திருமணத்தால் மாளவிகாவின் அண்ணன்மார்கள் அப்துல் ரஹ்மானின் கால்களை அடித்து சிதைக்கிறார்கள். இதனால் உருவான பகை, தீர்வதாக இல்லை. மாளவிகாவின் சொத்து தொடர்பாக, வழக்கு போடப்பட்டு   நீதிமன்ற படியேறுகிறது. அதில் மருமகன் ரஹ்மான் வெல்கிறார். மாமனார் வர்மா தரப்பு தோற்கிறது. அதேசமயம், ரஹ்மான் - மாளவிகாவின் மகன் சுலைமான், வாய்ப்பாட்டு கலைஞன். சந்தர்ப்ப சூழல் காரணமாக தனது தாத்தாவின் வீட்டுக்கு உதயபுரம் மாளிகைக்கு வருகிறான். அங்கு, ஒரே பெண் வாரிசான கோபிகாவுடன் காதலாகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதே கதை. திலீப், ஜெகதி ஶ்ரீகுமார், இன்னொசன்ட் இருக்கும்போது காமெடிக்கு என்ன குறை…. கொச்சி ஹனீபாவும் முரட்டுத்தனமாக புத்திசாலியாக நகைச்சுவையை சலீம்

திமிர் பிடித்த பெண் அதிகாரி, வேலைக்காக பயந்து பம்மும் செகரட்டரி! மை பாஸ்

படம்
              மை பாஸ் இயக்கம் ஜீது ஜோசப் மும்பை, கேரளா என இரண்டு இடங்களில் நடைபெறும் கதை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனத்தின் அதிகாரியாக உள்ள பெண்மணி, விரைவில் பதவி உயர்வு பெற உள்ளார். ஆனால் அதனை அலுவலகத்தில் உள்ளவரே தடுக்க நினைக்கிறார். இதற்கிடையில் இந்த அலுவலக அரசியலில் வந்து சிக்கிக்கொள்ளூம் பெண்மணியின் எக்சிகியூட்டிவ் அசிஸ்டெண்ட்  என்ன பாடுபடுகிறார் என்பதே கதை. ஜனப்ரியன் திலீப்பின் படம். படத்தில் காமெடி குறைவு. அலுவலக அரசியலைப் பற்றியே மும்பைப் பகுதி முழுக்க பேசுகிறார்கள். இதனால் அங்கு பெரியளவு காமெடி சமாச்சாரங்கள் ஏதும் இல்லை. கேரளத்திற்கு இளம்பெண் அதிகாரி வரும்போதுதான் காமெடி களைகட்டுகிறது. முதல் பகுதியில் அலுவலக அரசியல் என்பதைப் பார்க்கிறோம் என்றால், அதற்குப்பிறகு பெண் அதிகாரியான மம்தா மோகன்தாஸூக்கு குடும்பம் மீதுள்ள ஆர்வம், அன்பிற்காக ஏக்கம் ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அடுத்து, இதேபோல திலீப்பிற்கு அவரது அப்பா அவரை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. இருவரும் அதைப் பேசிக்கொள்ளும் இடம் நெகிழ்ச்சியானது. இறுதிக்காட்சியும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. திலீப்பி