இடுகைகள்

பிட்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ப்ரெஞ்ச் ஃபிரை புகழ்பெற்றது எப்போது?

படம்
பிட்ஸ் ! ஆஸ்திரியாவிலுள்ள பூங்கா ஒன்று ,   பிற மாதங்களில் சாதாரணமாக இருக்கும் ஆனால் ., வெயில் காலத்தில் மட்டும் நீர் சூழ்ந்து ஏரியாக (Green lake) மாறிவிடுகிறது . முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் , இங்கிலாந்து சார்பாக பெல்ஜியத்தில் தங்கி போராடிய அமெரிக்கர்களிடையே ப்ரெஞ்ச் ஃபிரை எனும் உருளைக்கிழங்கு சிப்ஸ்   பிரபலமானது . அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள லிவர்மோர் ஸ்டேஷனில் மின்விளக்கு 1901 ஆம் ஆண்டிலிருந்து இடைவெளியின்றி வெளிச்சம் தந்து   வருகிறது . 1976 ஆம் ஆண்டில் 22 நிமிடங்கள் அணைக்கப்பட்டதை தவிர இவ்விளக்கு இன்றுவரையும் வெளிச்சம் தந்து வருகிறது . நிறைய நூல்களை வேட்கையுடன் வாங்கி அலமாரியில் அடுக்கும் பழக்கத்திற்கு ஜப்பானிய மொழியில் Tsundoku என்று பெயர் . ஸ்பெயின் சர்வாதிகாரியான ஃபிரான்சிஸ்கோ ஃபிரான்கோவுக்கு விசுவாசமாக இருந்த மருத்துவர்களின் குழு , ஃபிரான்கோவுக்கு எதிரான ஏழையான பெற்றோர்களின் 3 லட்சம் குழந்தைகளை திருடி ஃபிரான்கோவுக்கு நெருக்கமான குடும்பங்களுக்கு கொடுத்துவிட்டார்கள் .

இமோஜி பிட்ஸ்!

இமோஜி பிட்ஸ் ! என்டிடி டொகோமோ நிறுவன டிசைனர் ஷிகெட்டாகா குரிடா , இமோஜியின் தந்தை . இமெயிலை விட சிறியதாக பிறருக்கு தகவல் கூற பயன்படும் இமோஜியை குரிடா தனது டொகோமோ நிறுவனத்திற்காக உருவாக்கினார் . பெப்சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இமோஜியை வியாபாரத்திற்கென பயன்படுத்த தொடங்கிவிட்டன . உருவாக்கிய நிறுவனம் தட்பவெப்பநிலை பற்றிக்கூறவும் இமோஜியைப் பயன்படுத்தியது . ஹாம்பர்கர் உள்ளிட்ட நிறுவனங்களும் இமோஜியை பயன்படுத்தி வெற்றிகண்டன . 2016 ஆம் ஆண்டு ஜூலைப்படி அழும் இமோஜி அமெரிக்கா , கனடா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் புகழ்பெற்றதாக ஆய்வில் கண்டறியப்பட்டது . புகழ்பெற்ற இமோஜி என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும் . 1999 ஆம் ஆண்டு இமோஜியை குரிடா கண்டுபிடித்தபிறகு MoMA அருங்காட்சியகத்தில் அவை இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன . இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால கல்வெட்டு எழுத்துக்களோடு இமோஜியும் நவீனகால கண்டுபிடிப்பாக இடம்பெற்றுள்ளது . 

ஆஸ்கர் விருதின் உண்மையான மதிப்பு!

படம்
பிட்ஸ் ! ஜமைக்காவின் கவர்னராக பதவி வகித்த கேப்டன் மோர்கன் முதலில் திருடராக இருந்து பின் மக்கள் சேவைக்கு மாறினார் . 1800 ஆம் ஆண்டு ராக்ஸ்டாராக இசையுலகில் மதிக்கப்பட்டவர் ஃபிரான்ஸ் லிஸ்ட் . ரசிகர்கள் பலரும் அவரின் முடியை ஞாபகார்த்தமாக கேட்க , புசுபுசு முடிகொண்ட நாயை வாங்கி உதிரும் முடியை சேகரித்து ரசிகர்களுக்கு அனுப்பினார் . திரைப்பட கலைஞர்களின் கனவான ஆஸ்கர் விருதின் மதிப்பு 600 டாலர்கள் ! பெப்பர்மின்ட்டை குறிக்கும் PfeffErminZ என்ற வார்த்தையிலிருந்து PEZ என்ற சொல் பிறந்தது . கார் நிறுவனமான வால்வோ , 1962 ஆம் ஆண்டு தன் ஸ்பெஷலான சீட்பெல்ட் தயாரிக்கும் காப்புரிமையை மக்களின் உயிரை விபத்திலிருந்து காப்பாற்ற விலையின்றி வழங்கியது .

கேரிகேச்சர் கலைஞர்கள்!

படம்
கேலிச்சித்திர கலைஞர்கள் ! 17 ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர்   Pier Leone Ghezzi   பிரபல ரோமன் ஆளுமைகளையும் சுற்றுலா பயணிகளையும் வேடிக்கையாக வரைந்தார் . பிறகு கேரிகேச்சர் பிரிட்டனுக்கு சென்று உலகம் முழுக்க பரவலாயின .  தெருவில் மனிதர்களை வரைந்து தருபவர் , கேரிகேச்சர் வகை படங்களை நேர்த்தியாக வரையமுடியும் . பல்வேறு போஸ்களை வரைந்து பழகிய அனுபவமே இதற்கு காரணம் . பத்திரிகைகளில் எடிட்டோரில் கார்ட்டூனிஸ்ட்கள் காணாமல் போனதால் பத்திரிகை , டிவி , இணையம் அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் திறமையான ஓவியர்களுக்கு பெரும் கிராக்கி உருவாகி வருகிறது . சிறந்த சிரிக்க வைக்கும் கேரிகேச்சர் படங்களுக்கு கோல்டன் நோஸி (Golden Nosey) என்ற விருது வழங்கப்படுகிறது . நியூயார்க் டைம்ஸில் கேலிச்சித்திரங்கள் வரைந்த late   Al Hirschfeld , விதன் மகளின் பெயரான நினா என்பதையே தன் பெயராக பயன்படுத்தினார் . எப்போது ஆபீஸ் முடியும் என்ற விரக்தி பிளஸ் எரிச்சலில் ஓவியரிடம் போஸ் கொடுப்பவர்கள் அதிகம் . அப்போ

பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! முந்தைய நூற்றாண்டுகளில் ஒருவரின் உடலில் நங்கூரத்தின் படம் குத்தப்பட்டிருந்தால் , அவர் அட்லாண்டிக் கடலை கடந்தவர் என்று அர்த்தம் . ஸ்வீடனில் எந்த இடத்திலும் கூடாரமடித்து தங்கி ஜாலியாக இருக்கலாம் என்பது குடியுரிமைகளில் ஒன்று . பிறரின் வீட்டை அல்லது தோட்டத்தை சிதைக்க கூடாது என்பது மட்டுமே நிபந்தனை . உலகில் டிஎன்ஏ சோதனைகள் மூலம் தீர்க்கப்பட்ட குற்றவழக்குகளின் அளவு 1%. சரியான ஜோடி கிடைக்கும்வரை தனிமையில் திரிபவரை குறிக்க quirkyalone என்ற வார்த்தை பயன்படுகிறது . 1967 ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது . அப்போது லாகோஸ் நகரில் பீலே பங்கேற்ற கால்பந்து போட்டிக்காக 48 மணிநேரம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது .

பார்ட்டியில் குட்பை சொல்லாதவர்கள் பிரெஞ்ச் இடியட்!

படம்
பிட்ஸ் ! இங்கிலாந்தில் பார்ட்டியில் கலந்துகொண்ட ஒருவர் குட்பை சொல்லாமல் கிளம்பினால் அதற்கு French leave என்று பெயர் . ஆபிரகாம் லிங்கன் தன் வெள்ளை மாளிகையில் பிரியமுடன் வளர்த்து வந்த இரு பூனைகளின் பெயர் டாபி , டிக்ஸி . நாஜிக்களின் காலத்தில் பெண்கள் தினத்திற்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது . அதிக குழந்தைகளைப் பெற்ற தாய்களுக்கு தங்கம் , வெள்ளி , வெண்கல மெடல்கள் வழங்கப்பட்டன . விக்டோரியா அரசி காலத்தில் தயாரிக்கப்பட்ட பாத்டப்புகள் , அரைவட்ட நிலா வடிவில் நிரப்பிய நீர் முன்னும் பின்னும் செல்லும்படி அமைத்தனர் . இதன்மூலம் கடலில் குளித்த அனுபவம் கிடைக்குமாம் . அரசியல் மற்றும் பொதுமக்களோடு ஒன்று கலக்காதவர்களைக் குறிப்பிட க்ரீக் நாட்டில் இடியட் (Idiot) என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர் . நவீன சேர்களின் தந்தை சார்லஸ் டார்வின் . இவரே சேர்களை நகர்த்த உருளைகளை கீழ்ப்பகுதியில் உருவாக்கி பொருத்தினார் .

பார்பி பிட்ஸ்!

படம்
பார்பி பெண்ணே ! 2019 ஆம் ஆண்டு அழகுப்பெண் பார்பிக்கு வயது 60. அமெரிக்காவில் 1959 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று நடைபெற்ற உலக பொம்மைகள் கண்காட்சியில் பார்பி அறிமுகமானாள் . அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் ஜேக் ரியான் என்பவர் பார்பியை செதுக்கிய சிற்பி . மேட்டல் நிறுவனத்தின் தலைவரான ரூத் ஹேண்ட்லர் மகள் பார்பராவின் பெயரைத் தழுவி இப்பொம்மைக்கு பார்பி என பெயர் வைக்கப்பட்டது . பார்பிக்கு இரு உறவினர்கள் டுட்டி (1971), ஸ்டேசி (1992) உருவானாலும் பின்னாளில் பார்பியுடன் இவர்கள் தொடரவில்லை . முதன்முதலில் வெளியான பார்பி மாடல் அழகியாக வெளியானது .    பார்பியின் உடல் சைஸ் பெருமளவு சர்ச்சையாவது வழக்கம் . 38-18-28 என்பதுதான் பார்பியின் தோராயமான வசீகர உடலமைப்பு அளவு . முதலில் விற்பனைக்கு வந்த பார்பியின் விலை 3 டாலர்கள் . இன்று அதன் மதிப்பு 27,450 டாலர்கள் . பார்பியின் ஆஸ்தான நிறம் பிங்க்தான் . மேலும் லிண்ட்சே லோகன் , எலிசபெத் டெய்லர் போன்றோரின் வடிவிலும் பார்பி வெளியாகியுள்ளது .