பார்பி பிட்ஸ்!
பார்பி பெண்ணே!
2019 ஆம்
ஆண்டு அழகுப்பெண் பார்பிக்கு வயது 60. அமெரிக்காவில்
1959 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று நடைபெற்ற உலக பொம்மைகள்
கண்காட்சியில் பார்பி அறிமுகமானாள்.
அமெரிக்காவைச்
சேர்ந்த பொறியாளர் ஜேக் ரியான் என்பவர் பார்பியை செதுக்கிய சிற்பி. மேட்டல்
நிறுவனத்தின் தலைவரான ரூத் ஹேண்ட்லர் மகள் பார்பராவின் பெயரைத் தழுவி இப்பொம்மைக்கு
பார்பி என பெயர் வைக்கப்பட்டது.
பார்பிக்கு இரு
உறவினர்கள் டுட்டி(1971),
ஸ்டேசி(1992) உருவானாலும் பின்னாளில் பார்பியுடன்
இவர்கள் தொடரவில்லை. முதன்முதலில் வெளியான பார்பி மாடல் அழகியாக
வெளியானது.
பார்பியின் உடல்
சைஸ் பெருமளவு சர்ச்சையாவது வழக்கம். 38-18-28 என்பதுதான் பார்பியின்
தோராயமான வசீகர உடலமைப்பு அளவு. முதலில் விற்பனைக்கு வந்த பார்பியின்
விலை 3 டாலர்கள். இன்று அதன் மதிப்பு
27,450 டாலர்கள்.
பார்பியின் ஆஸ்தான
நிறம் பிங்க்தான்.
மேலும் லிண்ட்சே லோகன், எலிசபெத் டெய்லர் போன்றோரின்
வடிவிலும் பார்பி வெளியாகியுள்ளது.