இடுகைகள்

மதவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பு பேச்சுகளை ஊக்கப்படுத்தும் சமூக வலைத்தளங்கள்! - வணிகத்திற்காக எல்லைமீறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் வழக்குகள்!

படம்
            சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் வெறுப்புவாதம் ! வெறுப்பு பேச்சுகளை ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களின் பேரில் ஃபேஸ்புக் , ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகின்றன . கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்க செனட் கமிட்டி முன் ஃபேஸ்புக் நிறுவனர் மா்ர்க் , டிவிட்டர் இயக்குநர் ஜேக் டோர்ஸி ஆகியோர் ஆஜராயினர் . அவர்களது நிறுவனத்தில் பகிரப்படும் வெறுப்புவாத செய்திகள் பற்றிய விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர் . பேச்சு சுதந்திரம் அல்லது வெறுப்பு வாதங்கள் என்று பகிரப்படும் செய்திகளால் நாட்டில் நடைபெறும் பதற்றமான நிகழ்ச்சிகள் காரணமாகவே மேற்கண்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்றது . அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் அரசியல் நிலை சீரற்றதாகி வருகின்றன . இந்தியாவில் நவம்பர் 21 அன்று கேரள அரசு , 118 ஏ என்ற சமூகவலைத்தள பதிவுகளுக்கா ன தடுப்புச்சட்டத்தை அமல்படுத்தியது . பெண்கள் , குழந்தைகள் இணையத்தில் கேலி , கிண்டல் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டம் என மாநில அரசு கூறியது . ஆனால்