இடுகைகள்

கூகுளின் பிடியில் உலகம் 2030!

படம்
கூகுளின் பிடியில் உலகம் 2030! காலையில் கம்ப்யூட்டரை திறந்ததும் அன்றைக்கு உலகில் முக்கியச்செய்தியை  டூடுலாகக் கொண்ட கூகுள் சர்ச் எஞ்சின் உங்களுக்கு ஹாய் சொல்லுகிறது . கூகுள் இன்று வெறும் சர்ச் எஞ்சின் சொல்பவர்கள் உண்மையில் அம்மாஞ்சிதான் . தானியங்கி கார் , பர்சனல் அசிஸ்டண்ட் , செயற்கை அறிவு கொண்ட எந்திரங்கள் என கூகுள் ரொம்பவே பிஸியாக பிசினஸை அப்டேட் செய்வதில் மற்ற நிறுவனங்களை விட கூகுள் செம கில்லி .  இப்படியே போனால் 2030 இல் என்னவாகும் ? 2030 ஆண்டின் ஜனவரி முதல்நாள் . அறையின் கதகதப்பு அவ்வளவு சுகம் . ஆனால் வெளியே ரத்தம் உறையும் பனி . கூகுளின் நெஸ்ட் எனும் செயற்கை அறிவு கொண்ட ஏசியினால் இது சாத்தியம்தான் . எழுந்து காஃபி குடித்துவிட்டு , குளித்து பிள்ளையாரை வேண்டி தலையில் குட்டிக்கொண்டு ஆபீஸ் கிளம்புகிறீர்கள் . வாகனம் ? கூகுளின் தானியங்கி கார்தான் . வழிகாட்ட கூகுளின் Waze ஆப் இருக்கையில் கவலை என்ன ? ஆபீஸ் வேலையில் லஞ்ச் பிரேக்கில் ஜாலியாக ஆபீஸ் பில்டிங்களை சுற்றி வருகிறீர்கள் . அப்போது உங்களின் கண்களில் கம்பீரமாக பொருந்தியிருக்கும் கூகுள் கிளாஸ் 2.0, அன்றைய நாளின் வானிலை

புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை விட இழந்ததுதான் அதிகம்! நேர்காணல்: சி.கே. சஜி நாராயணன், பாரதிய மஸ்தூர் சங்கம்.

படம்
புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை விட இழந்ததுதான் அதிகம் ! நேர்காணல் : சி . கே . சஜி நாராயணன் , பாரதிய மஸ்தூர் சங்கம் . ஆர்எஸ்எஸ்ஸின் சகோதர அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம் (BMS) இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமாகும் . மோடி அரசின் மூன்றாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நிதி ஆயோக்கின் செயல்பாடுகளை பிஎம்எஸ் கடுமையாக விமர்சித்ததோடு , உச்சநீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு அமல்படுத்த கூறிய சம்பள உயர்வை தற்காலிக நிரந்தர தொழிலாளர்களுக்கு தரவும் வலியுறுத்த போராட்டங்களை அகில இந்தியளவில் நடத்தவிருக்கிறது . நிதிஆயோக்கை எதற்கு மீண்டும் கலைத்து மறுஉருவாக்கம் செய்யக் கூறுகிறீர்கள் ? நிதிஆயோக் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை . வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் , தொழிலாளர்கள் , விவசாயிகள் , பிற்படுத்தப்பட்டவர்கள் , சிறுதொழிலதிபர்கள் என அனைவருமே புறக்கணிக்கப்பட்டுள்ளனர் . எனவேதான் நிதி ஆயோக்கை உறுதியாக எதிர்க்கிறோம் . உங்களது பார்வையில் உண்மையான இந்தியாவை அரசு எப்படி பார்க்கவேண்டும் ? நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமையின் பிடியிலிருப்பதை உணர

கத்தார்: கைவிடப்பட்ட தேசம்! - விக்டர் காமெஸி

படம்
கத்தார் : கைவிடப்பட்ட தேசம் ! - விக்டர் காமெஸி கத்தாரின் மனித உரிமைகள் அலுவலகத்தின் ஹாலில் கூட்டம் அலைமோதுகிறது . அனைவரின் கைகளிலும் உதவி கோரி அரசின் கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் ஆவணங்கள் இருந்தன . சவுதி அரேபியா , பஹ்ரைன் , எகிப்பு மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அனைத்தும் கத்தாரை கைவிட்டுவிட்டதன் நிலைமை இன்று இதுதான் . எதற்காக இந்த தண்டனை ? கத்தார் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவியும் , ஆதரவும் தந்ததுதான் காரணம் என ஆதரவை விலக்கிக்கொண்ட நாடுகள் கூறிவருகின்றன . பல்வேறு அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கத்தாரில் பணிபுரிந்து வருவதால் , அரபு நாடுகளின் இந்த திடீர் தடை அவர்களை பதற்றத்துக்குள்ளாக்கியதில் வியப்பென்ன ? " தடை அறிவிக்கப்பட்ட இந்த ஒருவாரத்தில் மட்டும் 700 நபர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றிருக்கிறோம் . இப்போது இரவுகளிலும் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர் " என்கிறார் அலுவலக அதிகாரியொருவர் . பஹ்ரைன் , ஐக்கிய அரபு நாடுகள் அனைத்தும் கத்தாரில் பணிபுரியும் தங்கள் நாட்டு குடிமகன்களை திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளது பிரச்னையின் தீவிரத்துக்கு சாட்சி

பசுமை பேச்சாளர்கள் -9 ஸ்டீபன் ரிட்ஸ் ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் -9 ஸ்டீபன் ரிட்ஸ் ச . அன்பரசு அமெரிக்காவின் நியூ சவுத் ப்ராங்க்ஸ் பகுதியிலுள்ள பள்ளி . மாஃபியா குழுக்களின் அடிதடி தகராறுகள் அங்கு காலையில் சுப்ரபாதம் போல டெய்லி நிகழ்வு . பள்ளிக்கு மாணவர்களின் சராசரி வருகை 40% இந்த லட்சணத்தில் பள்ளி நொண்டிக்கொண்டிருக்க அங்கு வேலைக்கு வரும் ஆசிரியர் என்ன செய்வார் ? ட்ரான்ஸ்பர் பண்ணிவிட்டுடுங்க சார் என்று தானே மேலதிகாரியிடம் கதறுவார் ? ஆனால் ஸ்டீபன் ரிட்ஸ் இவன் வேறமாதிரி என உலகுக்கு காட்டிய இடம் அதுதான் . " நான் இங்குதான் பணி செய்யப்போகிறேன் " என்று அவர் கூறியதைக் கேட்ட அந்த ஊர்வாசிகள் ஆதித்யா டிவி காமெடி பார்த்தது போல வயிறுவலிக்க சிரித்தனர் . ஆனால் ஸ்டீபன் அமைதியாக உட்கார்ந்து யோசித்தார் . தனக்கு பிடித்த , தொட்டியில் வளர்க்கும் செடிகளை ஏதோ யோசனையாக பார்த்தவர் , உடனே முகம் மலர்ந்தார் . அடுத்தநாள் பள்ளியில் செடிகளை சுவர்களில் தொட்டிகளில் வளர்க்கத்தொடங்கினார் . முதலில் வன்முறையாக நடந்துகொண்டு செடிகளை பிய்த்தெறிந்த   மாணவர்க

"நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல" நேர்காணல்: நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர்

படம்
" நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல " நேர்காணல் : நாஸ்காம் தலைவர் ஆர் . சந்திரசேகர் தமிழில் : அன்பரசு ஐ . டி துறையில் வெளியேற்றப்படவிருக்கும் ஊழியர்களின் வேலையிழப்பை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் ? நான் அதனை ஐ . டியின் வீழ்ச்சி என்றோ , வேலையிழப்பு என்றோ கூற மாட்டேன் . இது ஒரு மறுநிர்மாணம் நிகழ்வு அவ்வளவே . குறைவோ , அதிகமோ தொழில்நுட்பத்துறையில் இது மெதுவாகவேனும் நடப்பதை தவிர்க்க முடியாது . கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறையில் 6 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் . 2017 ஆம் ஆண்டின் காலாண்டில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் . அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பேர் தம் வேலையை இழக்கவிருக்கின்றனர் . இது தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்வுதான் . அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வேலையிழப்பு உண்டு . தற்போது இதில் அரசியல் நுழைவதுதான் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது .   வேலையிழப்பை சந்திக்கும் ஊழியர்களை பதிவு செய்யும் டேட்டா பதிவேடு ஒன்றை நாஸ்காம் வைத்திருக்கிறதா ? உண்மையில் அது வெளிப்படையாக தன்மை கொண்டதா ? வெளியுலகில் எப்படி நாஸ

ஏன்? எதற்கு? எப்படி? -ரோனி ப்ரௌன்

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? அமில மழையைப் போல அமில பனி என்பது சாத்தியமா ? - Mr. ரோனி அமில மழையைப் போலவேதான் அச்சு அசலாக அமில பனியும் உருவாகிறது . சல்பர் டயாக்ஸைடும் , நைட்ரஜன் ஆக்ஸைடும் கரிம எரிபொருட்களிலிருந்து உருவாகி மேகங்களில் படிகின்றன . நீரோடு வினைபுரிந்து , சல்ப்யூரிக் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறி நிலம் நோக்கி பாய்ந்தால் அமிலமழை . அதுவே கிறிஸ்டல்களாக மாறி விழுந்தால் அமில பனி . பாதிப்பில் அமில பனியே முன்னிலை வகிக்கிறது . உறைந்த நிலையிலிருந்து உருகும்போது பேரளவிலான அமிலத்தை நிலத்தின் படியச்செய்கிறது . வயதாகும்போது உடல் சுருங்கிப்போவது ஏன் ? யூத் காலத்தில் ஸ்பைடர்மேனாய் துள்ளித் தாண்டியவர்கள் , வயதானபின் பேட்மேன் போல தொட்டதற்கெல்லாம் வண்டிதேடி இளைப்பு வாங்குவதற்கு காரணம் கால்கள் மற்றும் கைகளிலுள்ள குருத்தெலும்பு பட்டைகள் தேய்மானம் அடைவதால்தான் . ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பின் அடர்த்தி குறைவும் ஏற்படுவதால் 30-70 என்ற காலகட்டத்தில் ஆண்கள் 3 செ . மீ ., பெண்கள் 5 செ . மீ . உயரத்தையும் இழப்பார்கள் . இது 80 வயதில் ஆண்களுக்கு 5 செ . மீ . ஆகவும் , பெண்களுக்கு 8 செ .

"பிஜேபி ஒரு பாசிஸ்ட் கட்சி" நேர்காணல்: பினராயி விஜயன், முதல்வர், கேரளா. தமிழில்: ச.அன்பரசு

படம்
"பிஜேபி ஒரு பாசிஸ்ட் கட்சி" நேர்காணல் : பினராயி விஜயன் , முதல்வர் , கேரளா . தமிழில் : ச . அன்பரசு அண்மையில் முறையற்ற மாட்டிறைச்சி வணிக்கத்தை முறைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது . வங்கம் , கேரளா , தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் தடைக்கு எதிராக மாட்டிறைச்சி விருந்து நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம் . பொதுவாகவே இடதுசாரிகளின் அரசு நிலச்சீர்திருத்தம் , கல்விஅறிவு குறித்த புதுமை திட்டங்களுக்கு பெயர் பெற்றவர்கள் . உங்களது அரசின் நோக்கம் என்ன ? ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் அரசின் நோக்கம் . இடதுசாரி அரசுகளின் திட்டங்களை மேம்படுத்தினாலே இதற்கு போதுமானது . அரசு பள்ளியில் பல்வேறு அட்வான்ஸ் தொழில்நுட்பங்களின் மூலம் கற்றல் திறனை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம் . Aardram, LIFE ஆகிய ஆகிய திட்டங்களின் மூலம் விலை குறைவான மருந்துகளை மக்களுக்கு வழங்கவும் , வீடற்றவர்களே இல்லாதவாறு கேரளாவை மாற்ற உழைத்து வருகிறோம் . கல்வி , மருத்துவம் கடந்து விவசாயத்திற்கு என