இடுகைகள்

இஸ்‌ரோவின் துணைநிறுவனமான ஆன்ட்ரிக்ஸின் லட்சியம்!

படம்
முத்தாரம் Mini விண்வெளி சந்தையில் ஆன்ட்ரிக்ஸின் பங்கு என்ன? உலகளவில் ராக்கெட்டுகளை ஏவும்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். இதில் ஆன்ட்ரிக்ஸின் பங்கு 7%. சிறியரக செயற்கைக்கோள் சந்தையில் எங்களது பங்கு விரைவில் பத்து சதவிகிதமாக உயர்த்து முயற்சித்து வருகிறோம். ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஆகிய திட்டங்கள் இதற்கு கைகொடுக்கும். ஆன்ட்ரிக்ஸின் எதிர்கால திட்டம் என்ன? ராக்கெட்டுகளை குறைவான கட்டணத்தில் ஏவுவதற்கு உலகெங்கும் பெரும் கிராக்கி நிலவுகிறது. இதனை நிறைவு செய்வதே ஆன்ட்ரிக்ஸின் திட்டம். இஸ்‌ரோ தனது பிஎஸ்எல்வி தொழில்நுட்பம் மற்றும் சிறிய ராக்கெட்டுகளை தொழில்துறைக்கு அளித்துள்ளது. வணிகரீதியான ஏவுதல்களிலும் ஆன்ட்ரிக்ஸ் பங்கு குறைவாக உள்ளதே? அடுத்த பத்து ஆண்டுகளில் சிறிய ராக்கெட்டுகளை ஏவும் சந்தையில் 18 பில்லியன் டாலர்களை பெறுவது எங்களது லட்சியம். எங்களது வருவாயையும் சந்தையையும் விரிவாக்க முயற்சித்து வருகிறோம். -டி.இ.நரசிம்மன், ஆன்ட்ரிக்ஸ்(இஸ்‌ரோ)

எமிரேட்ஸின் ஜன்னலற்ற விமானம்!

படம்
ஜன்னலற்ற விமானம்! இனி தயாரிக்கப்படும் விமானங்களில் செலவையும் எடையையும் குறைக்க கண்ணாடிகளை தவிர்க்கும் ட்ரெண்ட் புதிதாக தொடங்கியுள்ளது. எமிரேட்ஸ் விமானநிறுவனம் தொடங்கியுள்ள இம்முறையில், விமானங்களில் நேரடியாக கண்ணாடி ஜன்னல்கள் இருக்காது. அதற்கு பதிலாக, கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட படங்களை உள்ளேயிருந்து காணலாம். எமிரேட்ஸின் போயிங் 777-300ER விமானங்களில் முதல்வகுப்பில் இம்முறை சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. “ஜன்னல்களை அகற்றுவதால் விமானங்கள் எடை குறைந்து அதனை எரிபொருள் சிக்கனமாகவும் வேகமாகவும்   செலுத்தமுடியும்’’ என்கிறார் எமிரேட்ஸின் தலைவர் டிம் கிளார்க். “விமானசேவையின் அப்டேட் என்றாலும் ஜன்னலில் வேடிக்கை பார்ப்பதும், அதே காட்சிகளை டிவி திரையில் காண்பதும் ஒன்றல்ல. அவசரநிலையின்போது ஜன்னல் இல்லையென்றால் வெளியேயுள்ள நிலையை அறிவது சிரமம்” என எதிர்ப்புக்குரலை பதிவு செய்கிறார் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கிரஹாம் பிரெய்த்வெய்ட். எரிபொருள் சிக்கனத்தை முக்கியமாக வலியுறுத்துவதால் விரைவில் ஜன்னலற்ற விமானங்கள் வானில் பறக்கத்தொடங்கும் என நம்பலாம்.

எவரெஸ்ட் உயரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள்?

படம்
எவரெஸ்ட் உயரம்! நம்முடைய உயரத்தை எளிதாக சுவற்றில் ஸ்கேல் வரைந்து கண்டுபிடித்துவிடுகிறோம். ஆனால் பனிமலை முகடுகளை எப்படி அளவிடுகிறார்கள்? உதாரணத்திற்கு எவரெஸ்ட்டின் உயரம் சில ஆண்டுகளில் உயருகிறது என துல்லியமாக எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? இயற்கணித முறைகளிலிருந்து ஜிபிஎஸ் முறையில் மலைகளின் உயரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. பொதுவாக எவரெஸ்ட்டின் உயரம் 29 ஆயிரத்து 029 அடி(8,848 மீ) என ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சீனா, டென்மார்க், இத்தாலி, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கணக்கீடு பெருமளவு மாறுபட்டு இருப்பதே உண்மை. 1992 ஆம் ஆண்டு இத்தாலி அளவுப்படி ஏழு அடி வித்தியாசத்தில் 29,022 அடி, 1999 ஆம் ஆண்டு அமெரிக்கா அளவீடுப்படி 29,035 அடி என அளவிட்டனர். “1934 ஆம் ஆண்டு நிகழ்ந்த தெற்கு திபெத் மற்றும் இந்தியப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட்டின் உயரம் 63 செ.மீ குறைந்துவிட்டது.” என்கிறார் கொலராடோ பௌல்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் ரோஜர் பில்ஹாம். ஜிபிஎஸ் முறையில் செயற்கைக்கோள் உதவியுடன் கடல்நீர் மட்ட அளவு மற்றும் புவியீர்ப்பு விசை ஆகியவற்றின் மூலம் எவர

விண்வெளியில் லிஃப்ட் சாத்தியமா?

படம்
விண்வெளியில் ஏணி! பூமிக்கும் விண்வெளிக்கும் லிஃப்ட் அமைப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின நூற்றாண்டு கனவு. ஆனால் இதற்கான வடிவமைப்பு குறித்த குழப்பங்கள் நிலவிவந்தன. தற்போது ஷிசுவோகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி லிஃப்டிற்கான வடிவமைப்பை விரைவில் நிஜமாக்க போகிறார்கள். விண்வெளியில் 6 செ.மீ நீளம், 3 செ.மீ அகலம் கொண்ட லிஃப்ட்டை ஜப்பானியக்குழு அமைக்க மெனக்கெட்டு வருகிறது. ஜப்பான் விண்வெளி அமைப்பின் H-2B ராக்கெட் இரண்டு மினி செயற்கைக்கோள்களுடன் லிஃப்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.   ராக்கெட்டுகள் பத்து மீட்டர் தொலைவு இடைவெளியில் நிலைநிறுத்தப்பட்டு லிஃப்ட் மோட்டார்கள் மூலம் இயங்கும். அதனை செயல்பாட்டை செயற்கைக்கோள்களிலுள்ள கேமராக்கள் லிஃப்டின் செயல்பாடுகளை கண்காணிக்கும். திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி லிஃப்ட் உருவாகினால் கிலோகிராமுகு 220 டாலர்கள் மட்டுமே செலவாகும். ரீயூஸபிள் ராக்கெட்டுகள் நடைமுறைக்கு வந்துவிட்ட காரணத்தால் விண்வெளிக்கு பொருட்களை எடுத்துசெல்வது ஈஸி என்பதோடு அதற்கான செலவுகளும் கணிசமாக குறையும்.

ஒற்றுமையை அழித்த படுகொலை! - மு.ராவின் வஞ்சகம்!

படம்
முதுகுளத்தூர் படுகொலை கா.அ.மணிக்குமார் பாரதி புத்தகாலயம் ரூ.150 4வது சென்னை புத்தகத்திருவிழா, YMCA இம்மானுவேல் சேகரன் 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த தேவர், பள்ளர் படுகொலைகளின் பின்னணியை இந்நூல்  அதற்கு முன்னும் பின்னுமான ஆதாரங்களுடன் விளக்குகிறது. எகனாமிக் பொலிட்டிக்கல் வீக்லி இதழில் மணிக்குமார் பங்களித்திருப்பது அவரின் எழுத்துக்களில் தெரிகிறது. அந்நாளைய தினசரிகளில் வெளிவந்த பல்வேறு செய்திகளை கதம்பமாக கோர்த்து தேவர்கள் எப்படி கலவரங்களை திட்டமிட்டு நிகழ்த்தி பள்ளர்களின் வீடுகளை கொள்ளையடித்தார்கள், தாழ்த்தப்பட்டவர்களை கொன்றார்கள், விவசாய நிலங்களை அழித்தார்கள் என விரிவான சித்திரத்தை எழுப்புகிறார். அதோடு குருபூஜை என்ற பெயரில் சமூக இனக்குழுக்களிடை பதட்டம் ஏற்படுத்தும் தேவர்(கள்ளர், மறவர், அகமுடையோர்) உள்ளிட்டோரின் செயல்களை சீர்தூக்கி பார்க்கும் இவரின் பார்வை முக்கியமானது. தேவர்களை எதிர்கொள்ள பள்ளர்களும் தயாராக இருந்ததையும், காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக செய்த பாகுபாட்டு விளையாட்டையும் இந்நூல் வெட்ட வெளிச்சமாக்குகிறது. முத்துராமலிங்கர் அமைதிப்பேச்சுவார்த்தையில் இம்ம

எத்தனால் மூலம் பிரச்னை தீருமா?

படம்
பெட்ரோல், டீசலுக்கு எத்தனால் தீர்வாகுமா?  பெட்ரோல், டீசல் ரேட்(82.51/75.48(4.9.18 படி)) ரூபாயில் உயர்ந்து பைசாவில் குறைந்துவரும் காலத்தில் அதன் அரசியல் பிரச்னைகளை யோசிப்பதை விட நம் கண்முன் உள்ள எதார்த்த தீர்வுகளை தேடுவது புத்திசாலித்தனம்.  உயிரி எரிபொருளான எத்தனாலை பெட்ரோல், டீசலில் கலப்பது குறித்து பிரதமர் மோடி, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி மேடைதோறும் பேசினாலும் இந்திய அரசு அதில் ஆழமாக கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை. அமெரிக்காவில் சோளம், பிரேசிலில் கரும்பு, இந்தியாவில் மொலாசஸ் ஆகியவற்றிலிருந்து உயிரிஎரிபொருளான   எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் எரிபொருட்களில் எத்தனால் கலப்பு 45-50% என இருந்தாலும் இந்தியாவில் 2-3% சதவிகிதம் தாண்டி ஒரு இன்ச் கூட அதிகரிக்கவில்லை. இந்நிலையில் 2030 ஆம் ஆண்டில் 20% என்ற அரசின் லட்சியம் எப்படி நிறைவேறும்? உயிரி எரிபொருளான எத்தனாலுக்கு முக்கியப் பிரச்னை இதற்கான பயிரிடும் பரப்பும்,   நீராதாரங்களும்தான். பெட்ரோலுக்காக விவசாயமா? உணவுக்கு என்ன செய்வது என இயற்கை ஆர்வலர்கள் உடனே ஆட்சேபம் கிளப்புவார்கள்.

காதை கடித்த போதை!

படம்
திறமை இல்லாததால் வேலை இல்லை! அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் துறையிலுள்ள டெலிகாம் மெசஞ்சர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடக்க கல்வி தகுதி மட்டுமே தேவையான இப்பணிக்கு, 3,700 ஆராய்ச்சி மாணவர்கள், 28 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 58 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இது உ.பியின் எதார்த்த நிலை. நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறினீர்களே? என லக்னோ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசு துறைகளிலுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைப்பதில்லை” என்று தில்லாக   கூறினார். “உ.பியில் அரசின் செயலற்ற தன்மையை முதல்வர் மறைக்க பார்க்கிறார். படித்த இளைஞர்கள் பலரும் அரசின் எதிர்மறை போக்கினால் அவமானப்படுத்தப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர்” என்கிறார் காங்கிரஸ் தலைவரான எஸ்.ஜே.எஸ். மாக்கர். அரசு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடான கேள்வித்தாள் வெளியீடுகள் உ.பி அரசின் திறனற்ற செயல்பாடுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. 2 ‘அந்த’ இடத்தில் ஆபத்து! சீனாவின் ஹைனன் பகுதியைச் சேர்ந