இடுகைகள்

பிரிவினையைத் தூண்டும் தாக்குதல்கள்

படம்
globalvoices.org காஷ்மீரில் நாற்பது ராணுவ வீர ர்கள் வெடிகுண்டு தாக்குதலில் இறந்தனர். நிச்சயம் இது வருத்தப்படவேண்டிய  நிகழ்ச்சிதான். அதற்காக காஷ்மீர் இளைஞர்கள் முழுவதும் இந்த சம்பவத்துக்கு காரணம் என அடித்து விரட்டினால் மக்கள் எங்கே போவார்கள்? பாஜக தனது கரசேவகர்களை சரியாகப் பயன்படுத்தி இந்த சம்பவத்தின் மூலமே ஆட்சியைப் பிடிக்க தயாராகி வருகிறது. எப்போதுமே தேர்தலுக்கு முன் ஓரிடத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவது ஆரஞ்சுக் கட்சியின் வழக்கம். தற்போது டேராடூன், பஞ்சாப், ஜம்மு ஆகிய இடங்களில் மாணவர்கள் அரசின் இரும்பு பிடியில் மாட்டியுள்ளனர். இதுதான் வாய்ப்பு ஆர்எஸ்எஸ் குண்டர்கள் படை முஸ்லீம்களை தாக்க தொடங்கியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த ஜாவித் அகமது கான் என்பவரை வந்தே மாதரம் சொல்லச்சொல்லி மூக்கில் குத்தி தாக்குதலை நடத்தியுள்ளது வலதுசாரி குண்டர்கள் படை. இதேபோல நாடெங்கும் காஷ்மீரிகள் உள்ள இடத்தில் அவர்களை குறிவைத்து தாக்கத்தொடங்கியுள்ளது இந்து குண்டர்கள் படை. ஏறத்தாழ இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றிதான். முஸ்லீம்களைக் கொண்ட பாகிஸ்தானாக அவர்கள் இருக்கையில், நாம் இந

சிலோன் டீ குடித்தால் பயன் உண்டா?

படம்
Monterey Bay Spice Company சிலோன் டீ பருகலாமா? சிலோன் டீ என்பது இலங்கையில் தயாராகும் ஆன்டி ஆக்சிடன்ஸ் நிறைந்த தேநீர். காமெலியா சினென்சிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த தேயிலையில் மைரிசெடின், க்யூவர் செடின் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு. காஃபீன், மாங்கனீஸ், கோபால்ட், குரோமியம் ஆகிய வேதிப்பொருட்கள் இத்தேயிலையில் உண்டு. காஃபீன் உள்ள பொருட்களில் கொஞ்சம் பிரச்னைகள் உண்டு. தூக்க குறைவு, செரிமானப் பிரச்னை, பதற்றம் ஆகியவற்றை சிலோன் டீயும் ஏற்படுத்துகிறது. 237 மி.லி நீருக்கு ஒரு டீஸ்பூன் 2.35 கிராம் தேயிலை எடுத்து போட்டால் போதும். நன்றி: ஹெல்த்லைன்

மேஜிக் பஸ் சாதித்தது எப்படி?

படம்
மேஜிக் பஸ் சாதித்தது எப்படி? 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேஜிக் பஸ் என்ஜிஓ அமைப்பு, குழந்தைகளுக்கு ஆளுமை தொடர்பான வகுப்புகளை எடுப்போடு அவர்களுக்கு கல்வி மூலம் வறுமையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ இருபது ஆண்டுகால பணியில் 3,75,000 குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சாதித்துள்ளது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்தியா, மியான்மர், நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிற அமைப்பு இது. அதன் இயக்குநர் ஜெயந்த் ரஸ்தோகியிடம் பேசினோம். கல்வியை அளித்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் எப்போது வந்தது? முதலில் எங்கள் பணியை மும்பையின் குடிசைப்பகுதிகளில்தான் தொடங்கினோம். குறிப்பாக, இந்தியாவில் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக பயனளித்துள்ளது. அதனால்தான் எங்கள் கல்வித்திட்டத்தை விளையாட்டுடன் இணைந்ததாக உருவாக்கினோம். நீங்கள் இந்தியாவிலுள்ள எந்த கிராமத்துக்கும் கால்பந்தை எடுத்துக்கொண்டு செல்லலாம். பாடநூலை விட கால்பந்து நிறைய மக்களை, குழந்தைகளை நம்முடன் ஒன்றாக இணைக்கிறது. சிறுவர்கள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது வரை படி

கார்பன் வரி கட்டுவது மக்களின் கடமை

படம்
கார்பன் வரி கட்டவேண்டிய நேரம் இதுவே. பிரான்சில் கார்பன் வரி காரணமாக நாடு திரண்டு போராடிய போராட்டங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் அது அவசியமா இல்லையா என்பது அவரவருக்கு கருத்து மாறுபடலாம். ஆனால் அந்த வரி தவிர்க்க முடியாது என்கிறார் கில்பெர்ட் மெல்காஃப். பசுமை பொருளாதாரம் என்பது பேச்சளவில் நன்றாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என உறுதிப்பட பேசுகிறார் பொருளாதார வல்லுநர் கில்பர்ட் மெல்காஃப். பேயிங் ஃபார் பொல்யூசன்: வொய் எ கார்பன் டாக்ஸ் இஸ் குட் ஃபார் அமெரிக்கா என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார். நீங்கள் இப்போது கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வரியை விதிக்காவிட்டால் பின்னாளில் பெரும் விலையை தரவேண்டி வரும் என எச்சரிக்கிறார் இவர். கார்பன் வரி கட்டுவதை எப்படி உங்கள் நூலில் நியாயப்படுத்துகிறீர்கள்? கரிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கார்பன் டை ஆக்சைடு பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாறுபாடு ஏற்படும்போது, பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். மக்கள் தாங்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப ஏற்படும் ப

லவ் இன்ஃபினிட்டி: இது காதலா? நட்பா?

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், விஜயாசௌந்தரம் Pexels.com நட்பதிகாரம் 1 16.7.2002 செல்வா எங்க வீட்டுக்கு வந்தான். சந்தோஷமாக இருந்தது. நீ Yuvaraj கிட்ட எதுக்கு பேசின! எனக்கு சரியான கோபம். Tension ஆயிட்டேன். என்னால நீ யார்கிட்ட பேசினாலும் பிடிக்காம போயிடுது ஏன்னு தெரியல. நீ என்கிட்ட மட்டும் பேசணும்னு நினைக்கிறது தப்புதானே? யதார்த்தம் தெரிந்தபோதும் I Can't Control Myself. நீ யாரையுமே Love  பண்ணலைன்னு தெரிஞ்சப்பவே ஏதோ வானத்துல பறக்கிற மாதிரி இருந்தது. நீ Phone பண்ண நினைத்தாய் என்றால் சுதாகர் வீட்டுக்கு பண்ணு. நம்பர் 24853 -914204. leave  நாளில் மத்தியானத்துக்கு மேல அங்கதான் இருப்பேன். ஏதாவது முக்கியம்னா பண்ணு. சுதாகரின் அக்கா பேரும் உன்னுடைய பேரும் ஒண்ணுதான். அவங்க அக்கா பேரு கவிதா எப்படி? நீ இப்போ ஒரு Gold Chain போட்டிருக்கிறாய். அது ரொம்ப ரொம்ப அழகா இருக்குது. நீ மூக்கும் முழியுமா அழகா இருக்கே. சுருக்கமாக நீ ரொம்ப அழகா இருக்கே! எனக்குப் புடிச்ச Songs ”தொட்டுத்தொட்டு செல்லும் ஐஸ்காற்றே” (ஏய் நீ.ரொ.அ.இ) “வத்தல குண

லவ் இன்ஃபினிட்டி: நீ கேட்டதை நான் தரல. சாரிடா

படம்
freepik.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், விக்கி ஸ்டார் கடிதம் இரண்டு கவிக்கு Phone பண்ணவே முடியலை. Line ஏ கிடைக்கல. கவிதாக்கா வீட்டுக்கு பண்ணினேன். நீ அவங்க வீட்டுக்குப் போய் 2 வாரம் ஆச்சாம். உன்னை Evening (monday) வரச்சொன்னாங்க. அப்புறம் Future ல் IAS ஆயிட்டா எனக்கு ஒரு நல்ல Post வாங்கித் தருவியா? அப்படி IAS ஆனால் யார் யாருக்கு என்னென்ன செய்வ. குறிப்பாக Family, Society etc. அப்புறம் கவிக்கு கூட நல்ல Future இருக்கில்ல. அவங்க Aim அடையற வரைக்கும் அவங்க அப்பாம்மா பொறுமையாக இருப்பாங்களா? சரி என்னுடைய Aim or எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்க. நான் சொந்த தகுதில நல்ல Post டுக்கு வரணும். என் செலவில் யாராவது இரண்டு அனாதை குழந்தைகளை atleast பிளஸ் டூ வரையாவது படிக்க வைக்கணும். அப்புறம் social work பண்ண எனக்கு ரொம்ப ஆசை. யாராவது பொது இடத்தில் பெரியவங்க , குழந்தைங்க கஷ்டப்பட்டா அழுகையா வருது. (நமக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன செய்யறது? Or இரக்க குணமோ?)  அவங்களுக்கெல்லாம் Help பண்ண ஆசைப்படுவேன். ஆனா ஏதோ ஒண்ணு தடுக்கும். அப்புறம் என் Marriage க்குப் பின்

மூளையில் மின்னல் வெட்டுதா?

படம்
Pexels.com பொதுவாக மூளை தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் உண்மைத்தன்மையும் மிகச்சிக்கலான தன்மை கொண்டவை. விளக்கப்புகுந்தால் அதை கூறுபவருக்கு மட்டுமல்ல; புரிந்துகொள்ள நினைப்பவருக்கும் பூமி வலமிருந்து இடமாக சுற்றி பொறி கலங்கும். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நியூரான்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன. மின் துடிப்புகளாக செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகளை அறிய முற்படுவதற்கு முக்கியக் காரணம், பார்கின்சன் மற்றும் அல்சீமர் தொடர்பான நோய்களுக்கு இவை உதவுமே என்பதுதான். மனித மூளையின் எடை 1.4 கி.கி மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை - 100 பில்லியன் உடலின் இருபது சதவீத ஆற்றல் மூளையின் பயன்பாட்டிற்கு செல்கிறது. இதுவே மின்தூண்டுதலுக்கு ஆதாரம். ஒரு நியூரானிலிருந்து 70 மில்லிவோல்ட் மின்சாரம் உருவாகிறது. இசிடி சிகிச்சையில் 450 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கடல் உயிரினமான ஈல், இரண்டு மில்லி செகண்டுகளில் 860 வோல்ட் மின்சாரத்தை உருவாக்குகிறது. நன்றி: க்வார்ட்ஸ்