இடுகைகள்

மேக் இன் இந்தியா- கூடுதல் வரி சாதிக்குமா?

படம்
இந்தியத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வரிவிதிப்பு! நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் (2019-20) தங்கம், வெள்ளி, பெட்ரோலியம் நீங்கலாக பல்வேறு தொழில்துறையினருக்கு 10.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரிவிதிப்புகள் கூடியுள்ளன. என்ன காரணம்? மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தத்தான். இந்த வரிவிதிப்புகளால் உள்நாட்டில் உற்பத்தித்துறை ஊட்டம் பெறும் என நம்புகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் இந்திய அரசுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர் (33%), காகிதம் (11%), வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் (10%) இரும்பு மற்றும் உலோகப் பொருட்கள் (7%), எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் (34%) மற்றும் பிற பொருட்களுக்கு 4 சதவீத வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா (5.21%), ஐரோப்பா (15.17%), சீனா (25.38) ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அரசின் வரி உயர்வுகளால் அதிகம் பாதிக்கப்படுவது சீனா நாடுதான். வரிவிதிப்பை, இந்திய உற்பத்தித்துறையை காப்பாற்றும் வாய்ப்பாக அரசு நினைக்கி

பிட்ஸ் - பை என்பதன் மதிப்பு!

படம்
பை எனும் எண்ணின் மதிப்பை வேலூரைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா, 70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்திச் சொல்லி கின்னஸ் சாதனை செய்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச்  21 அன்று இச்சாதனையை இவர் செய்தார். இவருக்கு முன்பாக, சாவோ லூ என்ற சீனர் 67,780 எண்களை மனப்பாடாக கூறியதே சாதனையாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு அகிரா ஹராகுசி என்பவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 1,17,000 பை எண்களை மனப்பாடம் செய்து கூறினார் என்கிறது தி கார்டியன் பத்திரிகை.  இப்படி எண்களை நினைவுபடுத்தி கூறுவதை கணிதத்தில் பைபிலாலஜி (piphilology) என்று குறிப்பிடுகின்றனர். பை என்ற எண்ணுக்கான மொழியை கணிதவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பிலிஸ் (Pilish ) என்று பெயர். 2010 ஆம் ஆண்டு மைக் கீத் என்பவர் இது பற்றி நாட் எ வேக் என்ற நூலை இம்மொழியில் எழுதினார். நன்றி: லிவ் சயின்ஸ்

ராமானுஜன் இயந்திரம் - இஸ்ரேல் ஆய்வாளர்கள் சாதனை!

படம்
கணிதமேதை ராமானுஜனின் கணிதம், இன்று கணினித் துறைகளிலும் பயன்பட்டு வருகிறது. 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து தானாகவே கணிதத்தை பரிசோதனை செய்து அதில் சாதனைகளைச் செய்தவரை இந்தியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இங்கிலாந்து அரவணைத்துக்கொண்டது. தற்போது அவரின் கணிதம் மூலமாக பை மற்றும் இ என்ற நிலை எண்களுக்கான விளக்கங்கள் கிடைத்துள்ளன. 1914 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்வி கற்க சென்றார் ராமானுஜன். அங்கு அவருக்கு பேராசிரியர் ஹார்டி என்பவர் அறிமுகமானார். இவர் மூலமே ராமானுஜனின் பல்வேறு தியரங்கள் மக்களுக்கு அறிமுகமானது. ராமானுஜன் தானாகவே கற்று போட்ட பல்வேறு கணக்குகள் சரியானவை என்று பின்னர் உறுதியாயின. ஆனால் அவர் பிறரை ஒப்புக்கொள்ள வைக்கும் முறையை கடைபிடிக்கவில்லை என்கிறார் வார்விக் பல்கலையைச்சேர்ந்த ஆசிரியரான செலிமர். இதுபற்றி இஸ்ரேல் விஞ்ஞானிகள் ராமானுஜன் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவர்கள் செய்துள்ளது சோதனை கணிதம் என்ற முறையில் நல்ல முயற்சிதான். ஆனால் இது புதிதான யோசிக்கும் முறை அல்ல என்கிறார்  செலிமர். நன்றி: நியூ சயின்டிஸ்ட்

பிட்ஸ் - ரிசர்வ் வங்கி

படம்
பிட்ஸ்! இந்தியாவிற்கான ரிசர்வ் வங்கி, 1947 ஆம் ஆண்டு வரை மியான்மருக்கும், 1948 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கும் வங்கிச்சேவையை வழங்கி வந்தது. பிரிட்டிஷார் ஆட்சியில் ரிசர்வ் வங்கிச்சட்டம் 1934 படி, மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி செயல்படும் விதம், அதற்கான விதிமுறைகள் ஆகியவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய “The Problem of the Rupee – Its origin and its solution” என்ற நூலையொட்டி உருவானது. இந்த நூலை அம்பேத்கர், ஹில்டன் கமிஷனிடம் சமர்ப்பித்தார். இதனைப் பின்பற்றி 1926 ஆம்ஆண்டு ராயல் கமிஷன், ரிசர்வ் வங்கியை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியது. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டபோது, கோல்கட்டாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வந்தது. பின்னர், 1937 ஆம் ஆண்டு முதல் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் நாக்பூர் கிளையில் இந்தியாவிலேயே அதிக அளவாக தங்கம் இருப்பில் சேமிக்கப்பட்டு வருகிறது.  நன்றி: பாலகிருஷ்ணன்

பள்ளிகளுக்கு இடையே சண்டை - பாடம் எடுக்கும் பதினெட்டாம் படி!

படம்
பதினெட்டாம் படி - மலையாளம் இயக்குநர் - சங்கர் ராமகிருஷ்ணன் அரசு மாதிரிப்பள்ளி, காசு கொடுத்து படிக்கும் கிறிஸ்தவப் பள்ளி என வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட இரு தரப்புக்கும் இடையே நடக்கும் சண்டை, காதல், மோதல் அனைத்தும்தான் படம். மம்மூக்கா படிப்பை தினசரி வாழ்க்கையில் செய்யும் விஷயங்களாக சொல்லித் தந்து அரசுப்பள்ளி மாணவர்களை கரையேற்றுகிறார். படம் சுபம். இதை எதுக்குங்க நான் 2.30 மணிநேரம் பார்க்கணும்னு கேட்டா, அவங்களை ஞான் கொன்னு களையும். பின்ன நாங்க பாத்தோமுல்ல நீங்களும் பார்க்கணும் தம்பி. கதையை அஷ்வின் என்ற பாதிரியார் - யெஸ் பிரிதிவி ராஜ் சொல்லத் தொடங்குகிறார். அவருக்கு ஊக்கமூட்டிய ஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருக்கிறார். ஆனால் அங்கு பணக்கார மாணவர்கள் செய்யும் பிரச்னையில் பெண் மாணவி சிக்க, அதன் மூலம் மாணவர் தலைவரான அஷ்வின் நல்ல பெயரும் நாசமாகப்போகிறது. அதோடு ஜாய் என்ற ஆசிரியரின் உயிரும் விபத்தில் பலியாகிறது. இதன் விளைவாக அரசுப்பள்ளியில் அஷ்வின் சேர, முன்னமே பழிவாங்கும் வெறியில் உள்ள அம்மாணவர்கள் அவரை அடி பின்னி எடுக்கின்றனர். பின் ஒழுங்காக படித்து முன்னேறி சாதிப்பதுதான் கதை.

வித்தியாசமான ஆனால் டல்லான திரில்லர் படம் - சந்தீப் கிஷன் சூப்பர்!

படம்
நின்னு வீடானி நீடானு நேனே - தெலுங்கு இயக்கம்- கார்த்திக் ராஜூ ஒளிப்பதிவு பிகே வர்மா இசை தமன் எஸ்எஸ் தேறுவது சந்தீப் கிஷன் - அன்யா சிங்கின் காதல், சண்டை எல்லாமே குஷி மூடுக்கு மனசை மாத்துது. ஆனால் கண்ணாடி குறுக்கே வர எல்லாமே மாறுது. இசையும் ஒளிப்பதிவும் அசத்தலாக இருக்கு. ஆனா எங்கே பிரச்னை? கார்த்திக் ராஜூவோட கதையிலதான். எரிச்சல் கதையில் ஹீரோ செய்யறக்கு ஏதாவது காரியம் இருக்கும். இதில் அவர் தான் ஏன் இறந்தோம் எப்படி இறந்தோம்னு கண்டுபிடிக்கிறார். அது குத்தம் இல்ல. ஆனால் பார்க்கிறவங்க பொறுமைய சோதிச்சா எப்படி? பாசம் இருந்தாலும் இன்னொருத்தரோட உடம்பில் தன் மகன், மகள் இருக்கிறார் கிறாள்ங்கிறதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஒருத்தரோட பேருங்கிறது வெறும் சவுண்டு மட்டும் கிடையாது.அவரோட உருவமும் உடனே உங்களுக்கு ஞாபகத்துக்கு வரும் இல்லியா. அந்த இடம் அவுட்டு. இன்னொன்னு, ஹீரோ தன் காதலியோட பிறந்த நாளைக்கூட கொஞ்சம் அட்வென்சரஸ்ஸா அவரைக் கடத்தி கட்டிப்போட்டு நீச்சல் குளத்தில் தூக்கி வீசி கேக்கு வெட்டி கொண்டாடுறார். இந்த மனநிலையில் உள்ளவரால ஏற்படுற விபத்துதான் கார் விபத்து. இதை நின

ஸ்கின்னி ஜீன்ஸ் டேட்டா!

படம்
ஸ இன்று டெனிம் ஜீன்ஸ்களில் நிறைய வகைகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ஸ்கின்னி ஜீன்ஸ்கள். அவை பற்றிய டேட்டா இதோ.. 2006 ஆம் ஆண்டு டைம் இதழ், ஸ்கின்னி ஜீன்ஸ் விரைவில் உலகெங்கும் புகழ்பெறும் என்று கூறியது. அமெரிக்காவில் பெண்கள் ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் அளவு 6 சதவீதம். 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் விற்கும் பெண்களுக்கான ஸ்கின்னி ஜீன்ஸ்களுக்கான அளவு 40 சதவீதம். ஆண்டுதோறும் விற்கும் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் அளவு 1.24 பில்லியன்கள் ஆகும் ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. நன்றி: க்வார்ட்ஸ் 

இந்தியாவின் ராக்கெட்டுகள் முன்னேறுவது அவசியம்!

படம்
எலன் மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட், 28 டன்கள் பேலோடுகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம்தான் நாசா, விண்வெளி வீரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பவிருக்கிறது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் மிக மெதுவாக செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ பாகுபலி என அழைக்கும் ஜிஎஸ்எல்வி எட்டு டன்களை மட்டுமே விண்ணுக்கு கொண்டு செல்லும் திறன் உடையது. இதனை வைத்துக்கொண்டு எப்படி 2022 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்புவீர்கள். இதே கேள்வியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், நடுப்பக்க கட்டுரையில் எழுப்பியிருந்தார். நிலவு கடந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் இன்னும் திறன் வாய்ந்த ராக்கெட்டுகளை கோருகிறது. ஆனால் இந்தியாவிடம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி தாண்டி வேறெதுவும் சாத்தியமான ராக்கெட்டுகள் இல்லை. 2008 ஆம் ஆண்டு இலகுவான பிஎஸ்எல்வி ராக்கெட்டில் சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1380 கி.கிதான். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரயான் 2, 3,850 கி.கி எடையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி எனும் ராக்கெட்டுகளை இஸ்ரோ ஆட்களே

இந்திய தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் பெண்மணி!

படம்
வீரா, ராணி, பொங்கி ஆகிய நாய்கள் இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த வருகின்றன. இத்தனைக்கும் அவை மதிப்பான உயர்ந்த ரக நாய்கள் கிடையாது. தெருவில் பிறந்து வளர்ந்தவைதான். அமெரிக்காவின் சியாட்டிலில் வாழ்ந்து வந்த ஜெசிகா ஹால்ட்ஸன், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களை பயணம் தீர்க்கும் என நம்பினார். அதற்காக இந்தியாவுக்கு வந்து டில்லியில் அறை எடுத்து தங்கினார். சொந்த சோகத்தை மறைக்க முயன்று தோற்ற நேரத்தில் தெருவில் அடிபட்டு அலறும் நாயின் குரலைக் கேட்டார். அந்த நாயை உடனே தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவரைப் பார்த்தபோது, அந்நாய்க்கு இடும்பெலும்பு உடைந்திருப்பதோடு, தொற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது என்று கூறி மருந்து எழுதினார். இந்தியாவில் 30 இலட்சத்திற்கு மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதை பின்னர் அறிந்துகொண்டார். தான் காப்பாற்றிய டெல்லி என்ற நாயை தன்னுடனே சிகிச்சை செய்து வைத்துக்கொண்டார். அதன் பெயரிலேயே காப்பகம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவில் செயல்படும் பிற விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து த

ரான்சம்வேரின் எதிர்காலம்! - கிரிம் ஸ்பைடரின் கையில் உலகம்!

படம்
கணினிகளைத் தாக்கும் ரான்சம் வேர் தற்போது பல்வேறு நாடுகளிலுள்ள கணினிகளைத் தாக்கி தகவல்களை சிறைப்பிடித்து காசு கேட்டு மிரட்டி தகவல்களை மீளத் தருவது நடைமுறையாகி வருகிறது. ரையுக் எனும் ரான்சம்வேர் வகை புரோகிராம் இங்கிலாந்திலுள்ள தடயவியல் நிறுவனமான யூரோஃபின்ஸ் மீது நடத்தப்பட்டுள்ளது. இதன்விளைவாக, அங்குள்ள பிற நிறுவனங்களும் மிரண்டு போயுள்ளன. அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள நிறுவனம் 5,30,000 அமெரிக்க டாலர்களைத் தருமாறு மிரட்டப்பட்டுள்ளது. பணத்தையும் பிட்காயின்களாக அக்கவுண்டில் போடுமாறு சட்டவிரோத கும்பல் மிரட்டியுள்ளது. ரஷ்யாவில் செயல்பட்டு வரும் கிரிம் ஸ்பைடர் என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ரையுக் என்ற ரான்சம்வேரை உருவாக்கியது. இதன் மூலம் இந்நிறுவனம் 3.7 மில்லியன் டாலர்களை இதுவரை சம்பாதித்துள்ளது. இமெயில அட்டாச்மென்ட் மூலம் கணினிகளை தாக்கும் ரான்சம்வேர் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளையும் என்கிரிப்ட் செய்துவிடும். பின் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே கணினியிலுள்ள கோப்புகளை மீட்க முடியும் என செய்தி மட்டுமே வரும். இப்போது பணம் என்றாலும் இதன் எதிர்காலம் வேறுமாதிரியான அச்சுறுத்தலாகவே இருக்க

கிரிஸ்பிஆர் குழந்தைகளை உருவாக்குவேன் - ரஷ்ய ஆராய்ச்சியாளரின் தில்!

படம்
கிரிஸ்பிஆர் குழந்தைகள் ரெடி! ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத தம்பதிகள் ஐவர்,  தங்களின் குழந்தைகளின் டிஎன்ஏவை செம்மை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர் என்று உயிரியலாளர் டெனிஸ் டெப்ரிகோவ் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசிடம் இதுபற்றிய அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார். அரசின் அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை அவரை விட பிற நாடுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனமுடன் பார்த்து வருகின்றனர். காது கேளாத இத்தம்பதிகளுக்கு மரபணு வரிசைப்படி பிறக்கும் குழந்தைக்கும் காது கேட்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கவே கிரிஸ்பிஆர் சிகிச்சையை நாடுகின்றனர். இதன்மூலம் ஹெச்ஐவி முதல் காது கேளாமை வரை தீர்க்க முடியும் என்று நம்புகின்றனர். சீனாவில் அரசு அனுமதியின்றி குழந்தைகளை கிரிஸ்பிஆர் செம்மையாக்கல் செய்த சம்பவம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? BJ2 எனும் மரபணுவை மாற்றினால் பிறக்கும் குழந்தைகளின் காது கேளாமையைத் தீர்க்க முடியும் என டெனிஸ் நம்புகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கான வாய்ப்புகள் உள