இடுகைகள்

சென்னை புத்தக கண்காட்சி வரலாறு!

படம்
  pixabay 1976ஆம் ஆண்டு சென்னையில் முதல்முறையாக புத்தக திருவிழா நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள முகல் இ ஆசாம் என்ற பள்ளியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.  2022ஆம் ஆண்டு நடைபெறும் புத்தக காட்சி 45 ஆவது ஆண்டாக நடைபெறும் புத்தக காட்சி ஆகும்.  பை பதிப்பகத்தில் கே வி மேத்யூ என்பவரே புத்தக காட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்தக காட் சி இயக்கத்தை சென்னையில் உருவாக்கியவர்.  தொடக்க காலத்தில் தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் இடம்பெறவில்லை. காரணம். இதற்கான கட்டணம்தான். பின்னாளில் தொகை குறைக்கப்பட்டது. பல தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் பங்கேற்றனர்.  இப்போது சென்னையில் நடைபெறும் புத்தக காட்சியில் அறுநூறு கடைகள் தமிழ் பதிப்பகங்களுக்கும் மீதியுள்ளவரை பிற மொழிநூல்களுக்கும் பதிப்பகங்களும் வழங்கப்படுகிறது.  பதிப்பகங்கள் அல்லாத எழுத்தாளர்களும் கூட இங்கே தனி ஸ்டால் போட்டு புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.  2021ஆம்ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. அப்போது கூட புத்தக காட்சியில் 700 ஸ்டால்கள் இருந்தன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தலைப்பில் நூல்கள் விற்பனையில் இருந்த

பேரிடரின்போது வெளியே வரும் நமது பொறுப்புணர்வு - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி vinodh balusamy மழை பெய்தால் வெளியே வரும் நம் பொறுப்புணர்வு!  புகைப்படம் - வினோத் பாலுச்சாமி  26.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு வணக்கம்.  நலமா?  இந்த கடிதம் எழுதும்போது மயிலாப்பூர் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் எளிதாக வடியமாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு கி.மீ. சென்றால் கடல் வந்துவிடும். நிலைமையைப் புரிந்துகொண்ட பணியாளர்கள் பாதாளச்சாக்கடை அடைப்புகளை குச்சி வைத்து எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேலையை முடித்தவர்கள் வேறு இடங்களுக்கு போகும்போது நீரை காலால் கையால் வீசியபடியும், செல்ஃபி எடுத்து வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்தபடியும் சென்றனர்.  ராதாகிருஷ்ணன் சாலை வழியாகவே நான் ராயப்பேட்டை அஜந்தா அருகிலுள்ள நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். இதை விட தினசரி சட்டமன்றத்திற்கு விடியல் முதல்வர் செல்லும் சாலையும் இதுதான். இங்கேயே இப்படிப்பட்ட நிலைமை. நான் நடந்துசெல்லும்போது தேங்கிய நீரில் தனது வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து எறிந்தார். துப்புறவு பணியாளர்

பலவந்தப்படுத்தினால் பாசம் வருமா? - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி/Vinodh Balusamy லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது!  29.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று லேப்டாப் திடீரென பிரச்னை செய்தது. இதுவரை எழுதித் தொகுத்து வைத்த நூல்கள் எதையும் திருத்த முடியவில்லை. லிப்ரே ஆபீஸ் ரைட்டர் கோப்பில், கர்சர் தானாகவே எழுதிய வரிகளை அழித்துக்கொண்டே சென்றது. இதை தடுத்து நிறுத்த அடிக்கடி எஸ்கேப் பட்டனை அழுத்திக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் முடியல சாமி என்று ஆகிவிட்டது. லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்து, கணினியை அணைத்துவிட்டேன்.  ஜோம்பிலேண்ட் - டபுள்டேப் என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வணிகரீதியான படம். எப்போதும் போல ஜோம்பிகளின் மண்டையை சிதறடித்துக் கொல்லும் படம்தான். உங்களுக்கும் கோபத்தில் யாரையாவது அடித்துக் கொல்லும் உக்கிரம் இருந்தால், படத்தைப் பார்க்கலாம். தமிழ் டப்தான். உறுதியாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.  ஷோபாடே எழுதிய கட்டுரைகளில் பணம், அதன் மதிப்பு, கடன் வாங்குவது பற்றி படித்தேன். அதற்கு மேல் அதில் மனம் செல்லவில்லை. படம் பார்க்கத் தொடங்கி விட்டேன். இன்று வானில் சூரியனே வரவில்லை. இணையம் தான் எனத

புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில்   புனைவு ஏற்படுத்திய வலி!  25.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.  ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்

நான்சென்ஸ் இலக்கிய எழுத்தாளர் லூயிஸ் கரோல்- 190qsa

படம்
  ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் நாவல் எழுதிய எழுத்தாளர்தான் லூயிஸ் கரோல். இவர் தன்னுடைய இலக்கியப் படைப்பை நான்சென்ஸ் இலக்கியம் என்றுதான் கூறினார். 1832ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று சேஷையர் நகரில் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்.  படிப்பு, வகுப்பில் முதலிடம் என்ற விஷயங்கள் எல்லாம் லூயிஸ் கரோலுக்கு இயல்பாகவே கைவந்த திறன். இவரின் இயற்பெயர், சார்லஸ் லுட்விட்ஜ் டாட்ஜ்சன். இலக்கியப் படைப்புகளை எழுத தேர்ந்தெடுத்த புனைப்பெயர்தான் லூயிஸ் கரோல்.  1852ஆம் ஆண்டு கணிதப் படிப்பில் பட்டம் பெற்றார். அதிலும் கல்லூரியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்காரர், கண்டுபிடிப்பாளர் என பல்வேறு விஷயங்கள் சார்லஸிடம் உண்டு.  1862ஆம் ஆண்டு ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் கதைகளை தனது நண்பர்களிடமும், குழந்தைகளிடமும் சொல்லி சந்தோஷப்படுத்தினார் சார்லஸ். பலருக்கும் அக்கதைகள் பிடித்திருக்க அக்கதைகளை தொகுத்து நூலாக எழுதினார். எழுதிய ஆண்டு 1865. உடனே இக்கதைகள் மக்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டன. எழுத்தாளர் லூயிசும் பிரபலமானார். இக்கதைகளை இங்கிலாந்து ராணி விக்டோரியாவும் படித்து பரவசப்பட்டார்.  வெற்றி பெற்றாலும் கூட

ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

படம்
  ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம் தெருக்களே பள்ளிக்கூடம் ராகுல் அல்வரிஸ் தமிழில் - சுஷில்குமார்  தன்னறம் நூல்வெளி ரூ.200 பக்கங்கள் 203 பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே.  இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும்.  கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது.  ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில்

இருமல் கூடுகிறது! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pixabay அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்வது பற்றி கணினி வல்லுநர் ஜாரோன் லேனியர் சில நூல்களை எழுதியிருக்கிறார். இதனை எனது சீட்டுக்கு அருகில் உட்கார்ந்து என்னை கிண்டல் செய்துகொண்டிருக்கும்  ஓவியர் குழந்தை முருகன் கூறினார். தரவிறக்கிய இந்த நூல்களை விரைவில் படிக்க வேண்டும்.  சளி வந்தால் மூச்சுக்குழலில் உராயும்படி ஆக்ரோஷமாக மாறிவிடுகிறது. வேறுவழியின்றி அதனை வேகமாக வெளியேற்ற டாபர் ஹனிடஸ் வாங்கி குடித்தேன். நூறுமில்லி மருந்து ரூ.99க்கு விற்கிறார்கள். அலுவலகத்தில் வேலை பெரிதாக இல்லை. திங்கட்கிழமை இதழுக்கான வேலையை மட்டும் செய்தால் போதும். எழுத்தாளர் ஷோபா டே எழுதிய கட்டுரை நூலை படித்து வருகிறேன். தினசரி பத்து பக்கம் என்ற கணக்கில்தான் படிக்க முடிகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான்.  நன்றி சந்திப்போம் அன்பரசு  2.11.2021