இடுகைகள்

எனது முயற்சிகள் அனைத்துமே டிரையல் அண்ட் எரர் தான்! - ஃபேஷன் டிசைனர் அஸ்ரா சையத்

படம்
  அஸ்ரா சையத் சிறுவயதில் படிக்கும்போது நான் வக்கீலாக கனவு கண்டேன், பனிரெண்டு வயதில் டாக்டராக நினைத்தேன் என்று பேசுவார்கள். ஆனால் அப்படி எந்த விஷயமும் அஸ்ராவுக்கு இல்லை. சினிமாவுக்குள் நான் விபத்தாக வந்தேன் என மைதா மாவு அழகிகள் கொஞ்சு தமிழில் பேட்டி கொடுப்பதை படித்திருப்பீர்கள். ஃபேஷன் துறைக்குள் அஸ்ரா வந்ததும் அப்படித்தான். ஃபேஷன் டிசைன் டிகிரி படித்து முடித்து தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். சொகுசு திருமண உடைகளுக்கான பிராண்ட் ஒன்றைத் தொடங்குவதுதான் அஸ்ராவின் கனவு.  2018ஆம் ஆண்டு அஸ்ரா என்ற பிராண்டை அஸ்ரா சையத் தொடங்கினார். வடிவமைப்பும், அதில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் தான் அஸ்ராவின் தனித்துவ பலம்.  உங்களுக்கு ஊக்கம் தந்தவர் யார்? எனக்கு பாட்டி தான் இத்துறை சார்ந்த ஊக்கம் தந்த முதல் நபர். நான் ஃபேஷன் துறையில் வேலை செய்துவிட்டு காலதாமதமாக வீட்டுக்கு போகும்போதெல்லாம் எனக்காக அவர் காத்திருப்பார். அவரது பொறுமை மற்றும் அன்பும், தாராள மனப்பான்மையும்தான் என்னை இந்தளவு ஃபேஷன் துறையில் வளர்த்திருக்கிறது.  நீங்கள் தொழில்சார்ந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன? வேகமாக ஒன்றைத் தொடங்குவதை விட அத

அமெரிக்கா மென்தால் சிகரெட்டுக்கு விதித்த தடை!

படம்
  அமெரிக்காவின் எஃப்டிஏ அமைப்பு, மென்தால் சிகரெட்டுகளையும், பல்வேறு வித ஃபிளேவர்களில் வரும் சிகார்களை தடுக்க திட்டமிட்டுள்ளது. இது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் இளவயதினரை பெரிதும் பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது.  எஃப்டிஏ செய்துள்ள ஆய்வில் 85 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மென்தால் சிகரெட்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.  இதனை வெள்ளையர்கள் 30 சதவீதம்தான் பயன்படுத்துகிறார்கள். நாற்பது வயதிற்கு மேல் இந்த சிகரெட்டுகளை புகைக்கும் அளவு குறைகிறதா என்று உறுதியாக தெரியவில்லை.  இந்தியாவின் நிலை இந்தியாவில் அமெரிக்காவில் விதித்த தடை போல எதுவுமே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. இங்கு புகையிலை, பீடி என்பதற்கு பெரிய மார்க்கெட் உள்ளது. எனவே, பல்வேறு ஃபிளேவர்களில் வரும் சிகரெட்டுகள், சிகார்கள் என்பது மேல்தட்டினர் பயன்படுத்துவதாகவே உள்ளது. எனவே தடை விதித்தாலும்  எப்போதும் போலத்தான். எதுவுமே பயன் அளிக்காது.   இந்தியாவில் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 26.7 கோடி. இவர்களில் பதினைந்து அதற்கு மேல் உள்ளவர்களும் அடங்குவார்கள். இந்த தகவலை குளோபல் அடல்ட் டோபாகோ சர்வே அமைப்பு தெரிவித்துள்ளது.

சுனாமி பாதிப்பால் உருவான நன்செய் அமைப்பின் சூழல் பணி!

படம்
  2004ஆம் ஆண்டு. டிசம்பர் 26 அன்று நாகப்பட்டினம் கடற்புரத்தில் சுனாமி பேரழி ஏற்பட்டது. அதை இன்றுவரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை. அந்தளவு இயற்கை தன் ஆற்றலை மனிதர்களின் கட்டுமானங்கள் மீது பதிவு செய்தது.  அப்போது ஜே செந்தில்குமாருக்கு வயது 18. வரலாறு படிப்பில் இளங்கலைப் பட்டதாரியாக இருந்தார். சுனாமி பாதிப்பை ஈடுகட்டும் செயல்களில் ஈடுபட்ட மனிதர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.  பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் பாதிப்பை இன்னும் செந்தில்குமார் மறக்கவில்லை. சூழலியல் பாதிப்பை சரிசெய்ய 2019ஆம் ஆண்டு நன்செய் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு தேனி பகுதியில் பசுமையான சூழல் பரப்பை உருவாக்க உழைத்து வருகிறது.  2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இயற்கை பேரழிவுதான் எனக்கு சூழல் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் காலநிலை மாற்றம், வெள்ளம் இப்படி பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேடினேன் என்றார் செந்தில்.  நன்செய் அமைப்பின் முக்கியமான பணி, ஆணிகளைப் பிடுங்குவதுதான். அதாவது, மரத்தில் சுடர்மணி ஜட்டி, ஜான்சன் சூப்பர் மார்க்கெட், ஜியோ தள்ளுபடி ஆஃபர் என ஒட்டிவிட்டு செல்கிறார்கள் அல்லவா? இவற்றைப் பிடுங

இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

படம்
  இந்தியாவின் இருண்டகாலம் சசிதரூர் தமிழில் ஜே கே ராஜசேகரன் கிழக்கு பதிப்பகம் நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன.  இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார்.  ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்டு விற்கிறார்க

ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

படம்
  நிரிபேந்திர மிஸ்ரா நிரிபேந்திர மிஸ்ரா தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம் புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா? நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது.  ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும

கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி!

படம்
  கொத்தடிமையாக வேலை செய்தவர்களை மீட்கும் செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. அதுதான் ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றிவிட்டாரல்லவா அப்புறம் என்ன என நினைத்து விடுகிறோம். அதற்குப் பிறகுதான் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதி தொடங்குகிறது. இனி பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் என்பது.  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், எஸ்ஆர்எல்எம் எனும் திட்டத்தின்படி, கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சில பயிற்சிகளை கற்றுத் தந்து அவர்களது பொருட்களை சிறகுகள் என்ற பிராண்டில் அமேசானில் சந்தைப்படுத்தி வருகின்றது.  மூங்கில் பொருட்களை கொத்தடிமை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இதில் மொபைல் போன் ஸ்டாண்ட், பிரஷ்களை வைக்கும் ஸ்டாண்ட் என பல்வேறு பொருட்களை உருவாக்கி வருகிறார்கள்.  வேலூர் காட்பாடியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தவர் சண்முகம். 2013ஆம் ஆண்டு இவர் அங்கிருந்து மீட்கப்பட்டார். பிறகு ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வேலைகளை செய்து வந்தாலும் குடும்பத்தை வைத்து காப்பாற்றும் அளவுக்கு சம்பாத்தியம் கிடைக்கவில்லை. பிறகுதான் அரசின் எஸ

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

படம்
  மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி ஆஹா 68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.  2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது.  பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு பால் விலையைக் குறைத்தது அடச்சே!  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது.  சொத்து வரி உயர்வு அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது... மின்வெட்டு அதிகரித்து வருவது.. திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளிக்கு கீழே இருந்ததால் நிழலில் ஸ்டாலினின்

உலகளவில் சிறந்த முக்கியமான நகைச்சுவை நடிகர்கள்!

படம்
  மே மாதத்தின் முதல் ஞாயிறு, உலக சிரிப்பு தினம். இந்த தினத்தில் சமூக கருத்தோ, வார்த்தை நகைச்சுவையோ நம்மை சிரிக்க வைக்கும் கலைஞர்களில் சிலரை நினைத்துப் பார்க்கலாம். இங்கே சிலரைப் பார்ப்போம்.  சார்லி சாப்ளின் ஆங்கில நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர். 75 ஆண்டு கால வாழ்க்கையில் சாப்ளின் சந்திக்காத சிக்கல்களே கிடையாது. மௌனமொழி படங்களில் ஆட்சி செலுத்தியவர். இவர் உருவாக்கிய வேலையில்லாத ட்ராம்ப் என்ற பாத்திரம் இன்றைக்கும் இவரது பெயரைச் சொல்லுவது. சிறுவயதில் அம்மாவை மனநல காப்பகத்தில் சேர்க்கும் நிலை. அப்பா, பிரிந்துசென்றுவிட குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு சென்று வந்தார். படங்களின் வழியே பல்வேறு சமூக கருத்துகளை திறம்பட விவரித்த கலைஞன்.  ரோவன் அட்கின்சன் தொண்ணூறுகளில் வந்த மிஸ்டர் பீன் டிவி தொடர் மறக்கமுடியாதது. அதுதான் ரோவனை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியது. பிறகு ஜானி இங்கிலீஷ், நெவர் சே நெவர் அகெய்ன், ஃபோர் வெட்டிங்க்ஸ் அண்ட் எ ஃபியூனரல், லவ் ஆக்சுவலி என சில படங்களில் நடித்தார்.  மிஸ்டர் பீன் தொடரை இணைந்து எழுதி, நடித்து உலகப் புகழ்பெற்றார். தொடரில் இவரது உடல்மொழி அபாரமான சிரிப்பை யாருக்கும் வ

இந்தியாவில் முஸ்லீம்களின் இடம் என்ன? - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம்! லீவிங் இஸ் நாட் தி ஹார்டஸ்ட் திங் லாரன் ஹியூ ஹாசெட் ரூ.699 லாரனின் வாழ்க்கையைப் பேசும் கட்டுரைகள் இவை. அமெரிக்க விமான சேவையில் வேலை செய்தவர், ஓரினச்சேர்க்கையாளர் கிளப்பில் பௌன்சராக இருந்திருக்கிறார். கேபிள் இணைப்பு கொடுப்பவராக வேலை செய்திருக்கிறார். பால்புதுமையினராக ஒருவர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை பதிவு செய்திருக்கிறார் லாரன். மிட்நைட் டோர்வேய்ஸ் உஸ்மான் டி மாலிக் ஹாசெட் ரூ.499 இந்த நூலில் மொத்தம் ஏழு சிறுகதைகள் உள்ளன. இவை அனைத்திலும் நட்பு, காதல், நெகிழ்ச்சி, துரோகம், அநீதி என ஏராளமான உணர்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன.  தி ரெசிலியன்ட் சொசைட்டி மார்க்கஸ் பிருன்னர்மெய்யர் ஹார்பர்கோலின்ஸ் ரூ.699 பெருந்தொற்றுக்கு பிறகு உலகம் பொருளாதார பிரச்னையிலிருந்து இப்போதுதான் மீள்கிறது. உலகமயமாக்கலை எப்படி சவால்களை எதிர்கொண்டு நடைமுறைப்படுத்துவது என்பதை ஆசிரியர் சொல்லுகிறார்.  அன்மாஸ்கிங் இண்டியன் செக்குலரிசம் ஹாசன் சரூர் ரூ.295 இந்தியாவில் இந்துகள் பெரும்பான்மையான உள்ள நிலையில் முஸ்லீம்களின் இடம் என்ன, மதச்சார்பற்ற தன்மை சாத்தியமா என்பதை நூலில் ஆசிரியர் விளக்கியிருக்க

பார்லே ஜியும் இந்தியாவின் உணவு பாதுகாப்பு தடுமாற்றமும்!

படம்
  1929 ஆம் ஆண்டு பார்லே பிஸ்கெட் நிறுவனத்தை மோகன்லால் தயாள் சௌகான் தொடங்கினார். அவர் வைல் பார்லே எனுமிடத்தில் வாழ்ந்தார். அந்த இடத்தின் பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். அன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள்தான் பிஸ்கெட் துறையில் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு போட்டியாக தொடங்கிய சுதேசி நிறுவனம்தான் பார்லே. முதல் பிஸ்கெட் பிராண்ட் பார்லே ஜி.   இன்று பார்லே  நிறுவனம் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறது. இதிலும் அவர்களது முத்திரை பதித்த ஒரு பொருள் என்றால் அது குளுக்கோஸ் பிஸ்கெட்டான பார்லே ஜி தான். விலை குறைவு. இன்றுவரையுமே கையில் காசு இல்லாத பலரும் பார்லே ஜியை வாங்கி டீயில் தொட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வது பார்க்க கூடிய ஒன்று. பார்லே ஜி மகத்தான ருசி கொண்ட பிஸ்கெட் கிடையாது. ஆனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பிஸ்கெட் அதுதான்.  இன்றைய காலத்தில் பார்லே கூட ப்ரீமியம் வகையில் தனது பிஸ்கெட் வரிசைகளை உருவாக்கிவிட்டது. ஆனாலும் பார்லே ஜி பிஸ்கெட் உற்பத்தியை நிறுத்தவில்லை. இன்றும் அதனை தொடர்ச்சியாக விற்றுவருகிறது. பெருந்தொற்று காலத்தில் பார்லே நிறுவனம், பார்லே ஜி பிஸ்கெட்டுகளை இலவசமாக கொ

தலைவிதியை மாற்றி எழுத முடியுமா? - காதலைக் காப்பாற்ற போராடும் கைரேகை நிபுணன்- ராதேஷ்யாம்

படம்
  ராதே ஷ்யாம்  ராதாகிருஷ்ண குமார் மனோஜ் பரம ஹம்சா இசை - ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி - தமன் எஸ்  புகழ்பெற்ற கைரேகை வல்லுநரான விக்ரம் ஆதித்யாவிற்கு, சொந்த வாழ்க்கையில் நடக்கும் காதலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதும்தான் கதை.  படம் எழுபது, எண்பதுகளில் நடக்கும் கதை. ராதே ஸ்யாம் என்பதற்கு கிருஷ்ணன் அல்லது ராதா கிருஷ்ணன் என பொருள் கொள்ளலாம். ஏன் இயக்குநர் தனது பெயரைக் கூட முதல் படத்திற்கு வைத்துக்கொண்டார் என நினைக்கலாம். வேத பாடசாலையில் உள்ள குருவான சத்யராஜ், பார்வையற்றவர். கைரேகையை தொட்டுணர்ந்து சொல்லும் தீர்க்கமான ஆற்றலுடையவர். இவரது சீடர் தான் விக்ரம் ஆதித்யா. இவருக்கும் இஸ்ரோ விஞ்ஞானியான தலைவாசல் விஜய்க்கும் நடக்கும் விவாதமே படத்தின் போக்கை சொல்லிவிடுகிறது. இதில் சத்யராஜ் ஜோதிட சாஸ்திரத்தை நம்பினாலும், மனிதனின் சிந்திக்கும் அறிவு செய்யும் மாயத்தை உணர்ந்தே இருக்கிறார். இதில் இவரது கிரேட் சிஷ்யரான விக்ரம் ஆதித்யா, சற்று மாறுபட்டு விதியை கணித்தால் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  இதனால் நிறைய பிரபலங்களிடம் அப்படியே உண்மையை சொல்லி வம்பு தும்புகளை சம்பாதித்துக்கொள்கிறார்