இடுகைகள்

சைக்கோபாத்களுக்கான மருத்துவ திட்டம்

படம்
  வருமுன் காப்போம் என்ற கதையை படித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த வாசகத்தை மனதால் உணர்ந்தால் போதும். சிறுவயதில் ஒருவரின் குற்ற அறிகுறிகளை ஆராய்ந்தால் அவரை எளிதாக சிகிச்சை பெறச் செய்து எதிர்காலத்தில் வளர்ந்து இளைஞராகி செய்யும் குற்றங்களையேனும் தடுக்கலாம். குறைந்தபட்சம் குற்ற சதவீதத்தையேனும்   குறைக்கலாம் அல்லவா? உளவியல் சிகிச்சை என்பது குழந்தையின், சிறுவர்களின் மனநிலைக்கானது மட்டுமல்ல. அவர்களது குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தவும்தான். மனநல சிகிச்சை அளிக்கும்போது அதன் பாதியில் கூட சிலர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவர் சிறப்பாக குணமடைகிறார் என மகிழ்ச்சியாக கூறுவதுண்டு. உண்மையில் அப்படி கூறுபவர், பிரச்னையை சரியாக கையாளும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். அல்லது நண்பர், கணவர் திருந்திவிட்டார் முன்னேற்றம் தெரிகிறது என்பவர் தனது தேவையைக் குறைத்துக்கொண்டவராக இருக்கவேண்டும். ஏறத்தாழ தன்னையே தியாகம் செய்துவிட்டார் எனலாம். சைக்கோபதி நபர்களை சரியான பாதையில் திருப்ப நிறைய திட்டங்கள், சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. சிகிச்சைகள் பற்

சைக்கோபாத்களுடன் உறவு, பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி?

படம்
  சைக்கோபாத்களை திருமணம் செய்வது ஆபத்தானது. அப்படி செய்துவிட்டால் கூட முடிந்தளவு அவர்களை திருத்தலாம் என கருப்பு வெள்ளைப்பட காலகட்ட சிந்தனையை தள்ளிவைத்துவிட்டு அதில் இருந்து வெளியே வர முனையுங்கள். அதுதான் நல்லது. இன்னும் கொஞ்சம் சகித்துக்கொண்டால் எல்லாம் மாறிவிடும் என நினைத்து தாக்குதல்களை, துரோகங்களை, பிரச்னைகளை எதிர்கொள்வது மேலும் உங்களை சிதைத்துக்கொள்வதாகவே அமையும். உங்களை இப்படிபட்ட சைக்கோபாத்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். கொள்ளையடிக்கப்படும் வீடு என்ற அபாயம் இருக்கிறது என்றால் வீட்டில், வேட்டை நாயை காவலுக்கு வைத்திருப்பது சற்று பாதுகாப்பை அளிக்கிறது அல்லவா? அதுபோலத்தான் கூறப்படும் ஆலோசனைகளை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் யாருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சைக்கோபாத்கள் எளிதாக பிறரை ஏமாற்றுவார்கள். உளவியலாளர்களைக் கூட… எனவே, கவனமாக இருப்பது அவசியம். சைக்கோபாத்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, அவர்களின் இயல்பைப் புரிந்துகொள்வதுதான். அதன்மூலம்தான் அவர்களை எதிர்கொள்வது சாத்தியம். ஒருவரின் வெளித்தெரியும் அடையாளங்களை வைத

மனநல சிகிச்சையைப் பயன்படுத்திக்கொள்ளும் சைக்கோபாத்கள்

படம்
  பதற்றம், மன அழுத்தம், தன்னம்பிக்கை இன்மை, கூச்சம் , எதிர்மறையான எண்ணங்கள் ஆகியவை சைக்கோபதி பாதிப்புள்ளவர்களுக்கு உண்டு. இதை பிறர்தான் கண்டுபிடித்து சிகிச்சை தரும்படி இருக்கும். இதை தொடர்புடைய நபர்களுக்கு சொன்னாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவர்களின் மனநிலை அமைப்பு அப்படி. உலகை அவர்கள் தங்களது போக்கில் அணுகுவார்கள். பிறரை ஏமாற்றுவார்கள். எதற்கும் கிஞ்சித்தும் இரக்கம், கருணை காட்டமாட்டார்கள். தவறு என்றாலும் வருத்தம் இருக்காது. இந்த மனநிலையில் உள்ளவர்களுக்கு மனநல சிகிச்சையும் பெரிதாக பயன் தராது. அதைப் பெறும்போது சிகிச்சையை ஏற்கும் இயல்பில் இருக்க மாட்டார்கள். கரும்பாறை போன்ற மன இயல்பு கொண்டவர்கள். இதனால் அவர்களை யாரும் பெரிதாக செல்வாக்கு செலுத்தி மனதை மாற்றிவிட முடியாது. மனநல சிகிச்சை மையங்களிலும் கூட அவர்களின் உண்மையான இயல்பை அறிவது கடினம். சைக்கோபாத்களை அவர்களின் குடும்பம், நண்பர்கள் என காப்பதற்கு இருப்பார்கள். இதனால் அவர்களின் குற்றங்கள் உலகிற்கு உடனே தெரிய வராது. பிடிபட்டாலும் கூட சமூக அமைப்பு, உறவினர்கள், நட்பு, விதி என பழிபோட்டு சென்றுகொண்டே இருப்பார்கள். சைக்போபாத்களுக

பிணை கொடுப்பதற்காக உளவியலாளர்கள் கொடுக்கும் அறிக்கை!

படம்
  பிணை கொடுப்பதற்கான அமைப்பு வெளிநாட்டில் உண்டு. இந்த அமைப்பு குற்றவாளி யார், எப்படிப்பட்டவர், செய்த குற்றத்தின் இயல்பு ஆகியவற்றை அறிந்துதான் மனுவை பரிசீலிக்கிறது.. இந்தவகையில் உளவியலாளர் என்ன அறிக்கை கொடுக்கிறாரோ அதுவும் முக்கியம். இதில் குற்றவாளி பிரச்னையானவர் இல்லை என கொடுத்து வெளியில் சென்று குற்றம் செய்தால் உளவியலாளர் மட்டுமல்ல பிணை கொடுத்த அமைப்பும் மாட்டிக்கொள்ளும். கார்ல் வெய்ன் பன்டிசன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்த காரணத்தால் பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளானார். ஆனால் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு கார்லுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆறே வாரம், போக்குவரத்து சிக்னல் ஒன்றில் காவலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மோசமான குற்றச்செயல் செய்த நபருக்கு எதற்கு முன்கூட்டியே பிணை கொடுக்கிறார்கள்? கார்ல் என்ற நபருக்கு இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல. 1961ஆம் ஆண்டு தொடங்கி 1984ஆம் ஆண்டு வரையில் பண்ட்சன் நிறைய பிணை விதிகளை மீறித்தான் சென்றுகொண்டிருந்தார். பத்தாண்டுகள் தண்டனை கொடுத்த வழக்கில் கூட பத்து மாதங்களில் பிணை வழங்கப்பட்டு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். கார்லின் க

வெறுப்பை, குரோதத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சித்திரங்கள்! கொமோரா - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கொமோரா நாவல் கொமோரா - லஷ்மி சரவணக்குமார் கொமோரா லஷ்மி சரவணக்குமார் கிழக்கு பதிப்பகம்   வாழ்க்கையில் துயரம், அவமானம், துரோகம் ஆகியவற்றை மட்டுமே சந்தித்து வளர்ந்த கதிர் என்ற இளைஞனின் வாழ்க்கைப்பாடே கதையின் முக்கியமான மையம். கம்போடியாவில் நடைபெற்ற கம்யூனிச படுகொலைகளை பின்னணியாக வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்துவரும் கோவிந்தசாமி, உணவகம் ஒன்றை நடத்துகிறார். ஆனால் கம்போடிய உள்நாட்டு புரட்சிப்படை போரில் வெற்றிபெற, வெளிநாட்டு மக்கள் அனைவரும் விசாரணை என்ற பெயரில் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதில் இருந்து தப்பி மீண்டு வரும் அழகர்சாமி என்ற சிறுவன் என்னவானான், அவனது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது கிளைக்கதை. நாவலில் கதை நடைபெறும் இடம், நிகழ்ச்சி எல்லாமே முன் பின்னாக அமைந்துள்ளது. ஆனால் படித்து முடித்தபிறகு அனைத்துமே மனதில் கோவையாக கோத்துக்கொள்ளலாம். நாவலில் வரும் பல்வேறு விஷயங்கள் வாசிப்பவர்களை தீவிரமாக அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கதிர், கிறிஸ்துவ விடுதியில் வல்லுறவு செய்யப்படுவது, பசியால் கோழி திருடி கடுமையாக அடிக்கப்படுவது, அப்பாவால் வல்லுறவு செய்யப்பட

சிறுவயது குற்றங்களுக்கான காரணம்- பிறப்பா?, வளர்ப்பா?, சமூக அழுத்தங்களா?

படம்
    அசுர குலம் 5 ஆங்கில நாளிதழ்களில் கூட சைக்கோபதி குற்றவாளிகளைப் பற்றி போகிற போக்கில் பொதுவான சில கருத்துகளை கூறிச்செல்வார்கள். அதாவது அதில் வரும் துண்டு துண்டான காமிக்ஸ் பகுதிகளில் இதைக் காணலாம். இப்படி தவறாக கூறுவது, பதிவாக மாறிவிடுகிறது. சைக்கோபதி நபர்களை இந்த முறையில் கீழ்மையாக வகைப்படுத்துவது தவறு. சிறுவயதில் ஏற்படும் வறுமை, பாலியல் இன்பத்திற்காக வல்லுறவு செய்யப்படுவது ஆகியவை அவர்களை மடை மாற்றுகிறது. மனதை உடைக்கிறது. இப்படி உடைபடும் மனம் வழிகெட்டு போகிறது. பின்னர் அது சரியான போக்கிற்கு திரும்புவது கடினம். மூளையின் திறன் குறைந்துபோகிறது. தங்கள் மேல் எழுப்பும் கேள்விகளுக்கு வன்முறையாலே பதில் தர முயல்கிறார்கள். மன அழுத்தம், போதை மருந்து பயன்படுத்துவது, தற்கொலை முயற்சி ஆகியவையும் அதிகரிக்கிறது. பிறகு கொள்ளை முயற்சி, வன்முறைத் தாக்குதல் என சீர்திருத்தப் பள்ளி, காப்பகம் செல்லச் செல்ல குற்றங்களை செய்வதில் நுட்பமான தேர்ச்சியை பெறுகிறார்கள். பிறகு அவர்கள் சமூகத்தின் விதி என்பதற்குள் வரவே மாட்டார்கள். அவர்களின் உலகம் தனியாக மாறிவிடுகிறது. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஆறரை வயது சிறும

சிறுவயது குற்றவாளிகளை அடையாளம் கண்டு தடுப்பது எளியது அல்ல!

படம்
  அசுர குலம் 5 மனமென்னும் இருட்குகை 1.0   குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்கு எல்லாம் இப்படி பெயர் வைப்பது நல்லதா என சிலர் நினைக்கலாம். ஆனால் இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. அவர்கள் குழந்தைகளை எந்த மாதிரியான சூழலில் வளர்க்கிறார்கள். அதன் மூலம்   அவர்களின் மனம் எப்படி விளைகிறது என்பதன் அடிப்படையில்தான் அறிகுறிகளைப் பார்க்கவேண்டும். உளவியலாளர்கள் சிறுவர்களை ஆராய்ந்தபோது பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயது வரை சோதித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பலரும் வயது வந்தவர்களைப் போன்ற தன்மையில் இருந்தனர்.   சைக்கோபதி செக்லிஸ்டில் சிறுவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர். இளைஞர், வாலிபர் ஆகியோரிடம் அவர்களின் மனநிலை பற்றி பேசும்போது தங்களை தற்காத்துக்கொள்ள முனைவார்கள். அந்த இயல்பு சிறுவர்களிடம் இல்லை என்பதுதான் மகிழ்ச்சியான ஒரே விஷயம். தன்னிடமுள்ள வன்முறையான குணத்தை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு சிறுவன், எனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. நான் ஏதேனும் பிரச்னையில் சிக்கிக் கொள்ளும்போது பெற்றோர் அதிகம் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு நல்ல நேரம் இருக்கும் வர