இடுகைகள்

கதிரவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணர்வுகளால் ஆனது சமையல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பெண்ணுடலை அறிய கோட்டை பயணம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நான் கடந்து வந்த செவ்வாய் திருவண்ணாமலை சென்றுவிட்டேன் . இன்று காலை பதினொரு மணிக்கு மயிலாப்பூர் அறைக்கு வந்தேன் . குடும்பஸ்தர்களின் வீட்டுக்குப் போவது எனக்கு சங்கடம் அளிக்கிற விஷயமாக உள்ளது . வினோத் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை . இது அவருக்கும் சற்று நிம்மதி கொடுத்திருக்கும் . திருவண்ணாமலையில் ஆலிவர் என்பவரின் அறையில் தங்கினேன் . தஞ்சையைச் சேர்ந்தவர் . வினோத் அண்ணாவைப் போல புகைப்படக்காரர்தான் அவரும் . முதலில் என்னைப் பார்த்து லெஜண்டுடா என பதற்றமானவர் , பிறகு சமாதானமாகிவிட்டார் . ஓவியம் , புகைப்படம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் . அதுதான் பிழைப்பும் கூட . இந்த முறை பயணத்தில் செஞ்சி கோட்டைக்குச் சென்றோம் . அங்கு வரலாற்றை அறிய விரும்புபவர்களை விட பெண்ணின் உடலை அறிய விரும்புபவர்கள்தான் அதிகம் இருந்தார்கள் . சுவர்கள் எங்கும் காதலர்களின் பெயர்கள்தான் . அதைக்கடந்துதான் வரலாறு , வெங்காயம் எல்லாம் . டிக்கெட் வாங்குவது எல்லாமே டிஜிட்டலாக க்யூஆர் கோட் மூலம்தான் . தரையில் கற்பாளங்கள் , சுவர்களில் கருங்கற்கள் இருப்பதுதான் இ

குழம்பித்தவிக்கும் மனிதர்களின் மனக்கேணி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஒடிஷாவில் தமிழ் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது . இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார் . ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர் . இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன் . அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு . தனிநபர்களுக்கு கிடையாது . அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என ஓவியர் விரிவாகப் பேசினார் . உண்மையில் ரேடார் , சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை . அதை அரசு பழுதுபார்க்க முனையவில்லை . ஆ . வியில் ஆர் . பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது . தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன் . ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம் . தொடர் சிறப்பாக இருந்தது . தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார் . இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்த ஆண்டு உருப்படியாக ஏதேன

தொய்வாகும் உடலால் ஆற்றல் இழக்கும் மனம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  தொய்வடையும் உடலால் பலவீனமாகும் மனம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன . ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது . குரல் அப்படித்தான் . சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார் . இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை . எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது . 2022 ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் . உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் . தாரகை - ரா . கி . ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன் . 624 பக்கம் . சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது . வேலைச்சுமை தான் காரணம் . செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது . பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் . உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது . புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன் . போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை . இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை . உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள் . நன்றி ! அன்பரசு 29

மனநலம் பாதித்தவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார் . புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன . அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன் . பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது . ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது . பெண்களின் மேம்பாடும் , கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது . இடதுசாரிகள் , வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர் . பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து , அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது . பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது . அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன் . நன்றி ! அன்பரசு 22.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------

கணியம் சீனிவாசன் செய்த உதவி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பரஸ்பர உதவி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன் . புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும் . கணியம் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது . முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன் . இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது . பரஸ்பர சகாயம் என நினைக்கிறேன் . மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது . 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது . ஆட்களின் வரத்து கூடியதால் , நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது . வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன் . அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ ? அன்பரசு 23.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------------------------------------------------------------------- பிறரை விற்றுப்பிழைக்கும் சுயநலம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வேலைகள் இப்போது அதிகரித்துள்ளன . நாளிதழ் பொறுப்பாசிரியர் கட்டுரைகளை முன்கூட்டியே மென்பொருளில் பத