இடுகைகள்

கார்பன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையா பூனை, நாய்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூழலைக் கெடுக்கும் வளர்ப்பு பிராணிகள்! ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஏனெனில் மத்திம சைசில் உள்ள நாய், எஸ்யூவி கார் வெளியிடும் அளவுக்கு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது.இது பூமிக்கு ஏற்புடையதல்ல. பூனைகள், நாய்கள் மனிதர்களுக்கு அடங்கி நடப்பது போல தெரிந்தாலும். அது உண்மையல்ல. அவைகளுக்குத் தான் நாம் சேவை செய்கிறோம். அவை, பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடுவதையும் பெடிகிரி சாப்பிட்டுக்கொண்டே செய்கின்றன. இப்பாதிப்பு இங்கிலாந்தில் அதிகம். இதன் பொருள் நீங்கள் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது என்பதல்ல. அதன் உணவுக்கான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் சரியாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிக்கல்தான். நன்றி - பிபிசி 

கூல்ட்ரிங்க்ஸிலுள்ள கார்பன் டை ஆக்சைடு சூழலைப் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி குளிர்பானங்களில் கார்பனைப் பயன்படுத்துகிறார்கள். இதன்விளைவாக, சூழலில் கார்பன் அளவு அதிகரிக்குமா? இதற்கான பதிலை நான் நாமக்கல்லில் தயாரித்த டெய்லி - ஆரஞ்சு சோடாவை ஒரு சிப் அடித்தபடிதான் எழுதுகிறேன். நண்பர்களே, குளிர்பானத் தயாரிப்பு காரணமாக வெளியிடப்படும் கார்பன் வெளியீடு வேறு. அதனைக் குடித்துவிட்டு ஏப்பம் விடும்போது வரும் கார்பன் அளவீடு வேறு. மனிதர்கள் சராசரியாக பயன்படுத்தும் பொருட்களின் அளவுப்படி கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது. நீங்கள் கூறும் கார்பன் அளவு என்பது தொழில்துறையில் அளவிடுவார்கள். மற்றபடி குறிப்பிட்ட பயன்பாட்டால் எவ்வளவு என அளவிடுவதுதான் சரியான அளவு. கார்பன் டை ஆக்சைடு குளிர்பானத்தில் மிக குறைவான அளவே இருக்கும். அதனால் கார்பன் அதிகரிப்பு என்பது மேலோட்டமாக பிரச்னையை புரிந்துகொள்வது என்றே எனக்கு படுகிறது. குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு தீவைத்து எரிக்காமல் அதனை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கார்பனின் அளவையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். நன்றி - பிபிசி

முட்டைக்குள் உள்ள குஞ்சுகள் எப்படி சுவாசிக்கின்றன?

படம்
மிஸ்டர் ரோனி எப்படி பறவைகளின் குஞ்சுகள் முட்டைக்குள் மூச்சு விடுகின்றன? அதற்கு காரணம் முட்டைக்குள் இருக்கும் திசுப்பை அமைப்புதான். மேல்திறப்பு, கீழ் திறப்பு என இரண்டு விதமாக முட்டைக்குள் மெல்லிய இழை அமைப்புகளாக இந்த அமைப்பு அமைந்து குஞ்சுகளைப் பாதுகாக்கிறது. அத்தனை விஷயங்களையும் நான் மொழிபெயர்த்து எழுத முடியாது. மேலேயுள்ள படங்களை அவ்வப்போது பார்த்து புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.... இரண்டாம் அடுக்கு இழை அமைப்பு முக்கியமானது. இதன் உதவியால் ஆக்சிஜனை மெல்லிய நுண்துளைகள் வழியா குஞ்சுகள் சுவாசிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடை இவை வெளியிடுவது மற்றொரு வழியாக... எனவே குஞ்சுகள் பாதிப்பின்றி உயிரோடு இருக்கின்றன. நன்றி - பிபிசி

மரம் நடுவது கார்பனைக் குறைக்காது - புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

படம்
மரம் நடுவது மட்டுமே தீர்வல்ல! செய்தி: வெப்பமயமாதல் விளைவால் 2050 ஆம் ஆண்டு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மரக்கன்றுகள் நடுவதைக் கடந்து கார்பன் அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.  நீராதாரம் பெருகவும், வெப்பநிலை பாதிப்பைக் குறைக்கவும் சூழலியலாளர்கள் சொல்லும் ஒரே தீர்வு, மரக்கன்றுகளை நடுவதுதான். ஆனால் உலகில் வெளியாகும் டன் கணக்கிலான கார்பன் வெளியீட்டுக்கு மரக்கன்றுகள் நடுவது தீர்வாகுமா என ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம், வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்புகள் தொடங்கிவிட்டன. விவசாயம், விமானத்துறை, இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மூலமாக வெளியேறும் கார்பன் வெளியீடு அதிகம். இதனைக் குறைந்த விலையில் சமாளிக்க மரங்கள் உதவலாம். இதற்கு மாற்றாக சூழலியலாளர்கள் சொல்லும் யோசனை, மரங்களை வளர்த்து, வெட்டி மின்சாரத்திற்கு பயன்படுத்தலாம். பின்னர், அதிலிருந்து வரும் கார்பனை சேகரித்துவைக்கும் இம்முறைக்கு பயோஎனர்ஜி கார்பன் கேப்சர் அண்ட் ஸ்டோரேஜ் (BECCS) என்று