மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை அவசர சிகிச்சையில் சேர்க்கலாம். காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ் என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும். ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை, வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், ப