இடுகைகள்

நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியூஸ் ரூம்: பிறநாட்டு மாணவர்களே வெளியேறுங்கள்- அமெரிக்கா

படம்
படம்: அல்ஜசீரா. கீழே படச்செய்தி பார்க்க... அப்படியா? அமெரிக்க அரசின் குடியேற்றத்துறை, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாடுகளுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது. M1,F1 விசாக்களைப் பெற்று அமெரிக்காவில் படிப்பவர்கள் பாடங்களை குறைத்துக்கொண்டு அல்லது மருத்துவ விடுப்பில் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பவேண்டும் என குடியேற்றத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை அமெரிக்க அரசின் உத்தரவு பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. நியூஸ்மினிட். ஆஹா! ஆன்லைன் கல்வி! சென்னை உயர்நீதிமன்றத்தில் பெருந்தொற்று பிரச்னை தீரும்வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது. இவ்வகுப்புகள் மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறியது. மேலும், மத்திய அரசு ஆன்லைன் கல்விக்கான விதிமுறைகள் வரும் ஜூலை பதினைந்தாம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன என்பதையும் உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. நியூஸ்மினிட் ஐயையோ! பாது

நியூஸ் ரூம்: வளைகுடா நாடுகளை இணைக்கும் ரயில் திட்டம்!

படம்
அப்படியா? சோதனை நிறுத்தம் உலக சுகாதார நிறுவனம், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மருந்தாக கருதப்பட்ட குளோரோக்ஸிக்வின் சோதனைகளை நிறுத்தியுள்ளது. சோதனைக்கமிட்டி மலேரியாவுக்கான குளோரோக்ஸிக்வின், எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்படும் லோபினாவிர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகளின் சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இம்மருந்துகள் நோயாளிகளின் இறப்பைத் தடுக்கவில்லை என்பதால், இம்முடிவை சுகாதார நிறுவனம் எடுத்துள்ளது. பிற மருந்துகள் மீதான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. யுபிஐ அட! புதிய விதிகள்! ஐரோப்பிய யூனியன், சுற்றுச்சூழலுக்கான புதிய விதியை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. இதில், 2050க்குள் பசுமை இல்ல வாயுக்களை பூஜ்ஜியமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ”இந்த ஆண்டுக்குள் இந்த சட்டத்தை யூனியன் நாடுகள் ஏற்றால், கார்பன் வாயுவை பெருமளவு குறைப்பதற்கான வாய்ப்புள்ளது” என்கிறார் ஆற்றல் துறை கமிஷனரான கத்ரி சிம்சன். இந்தியாடைம்ஸ் ஐயையோ! டிஜிட்டல் பீதி! அரசு, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த தொடங்கியுள்ளதால், மாணவர்கள் 65 சதவீதம் பேர் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

நியூஸ்: பானிபூரிக்கு ஏடிஎம் - இந்தியர்களின் புதிய கண்டுபிடிப்பு

படம்
  ஐயையோ திறன் குறைவு காற்றிலுள்ள கார்பன் வாயுக்களை உறிஞ்சும் திறன் தமிழ்நாட்டிலுள்ள மாங்குரோவ் காடுகளுக்கு குறைந்து வருவதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். பிச்சாவரத்திலுள்ள மாங்குரோவ் காடுகள் ஆண்டுதோறும் 1.83 மெட்ரிக் டன் கார்பனை உறிஞ்சுவதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், இந்திய பருவச்சூழல் கழகம் ஆகிய அமைப்புகள் கண்டறிந்து கூறின. நிர்வாகத்தினர் முறைப்படி இக்காடுகளை பராமரிக்காவிட்டால் மாசுபாட்டை காடுகள் குறைக்கும் திறன் குறைந்துவிடும் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆர்.ராமசுப்பிரமணியன். அப்படியா?  மனித உரிமைக்கு எதிர்ப்பு! பிலிப்பைன்ஸில் தீவிரவாதத்திற்கு எதிரான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரை நெடுங்காலம் சிறையில் வைக்கமுடியும். நீதிபதியிடம் கூட கைதிகளை காவல்துறையினர் காட்டும் அவசியமில்லை. இச்சட்டத்தை நாட்டிலுள்ள மாநில அரசுகள், இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. தீவிரவாதத்தை ஒடுக்க இத்தகையை சட்டங்கள் தேவை என கூறியுள்ளார் ரோட்ரிகோ டுடெர்டே அரசைச் சேர்ந்

நியூஸ்ரூம்: மலமள்ளும் தொழிலாளர்கள் நான்கு பேர் பலி!

படம்
tnm அடச்சே! இளைஞர்கள் பலி! தூத்துக்குடி மாவட்டத்தில், கழிவகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர், விஷவாயுவால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். பாண்டி, இசக்கிராஜா, பாலா, தினேஷ், ஆகிய நால்வரில் முதல் மூவரும் மலமள்ளும் தொழிலாளர்கள் ஆவர். தினேஷ், தினசரி வேலை இல்லாததால் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்துள்ளார். சுத்தம் செய்தபோது, ஒருவர் விஷவாயு தாக்கி மயங்கி விழ, மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்று அனைவருமே பலியாகியுள்ளனர். காவல்துறை வீட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அப்படியா? அப்படியே அதிபராக.. ரஷ்யாவில் தற்போதை அதிபர் புதின், 2036ஆம் ஆண்டு வரை அதிபராக பதவியில் இருப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ரஷ்ய அரசியலமைப்புச் சட்டப்படி, அதிபராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும். தற்போதைய வாக்குப்பதிவில் புதின் வென்றால் இன்னும் இருமுறை அதிபர் பதவியில் அமர்ந்திருக்க முடியும். வாக்குகளில் 77 சதவீத மக்கள் அதிபர் புதினை ஆதரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸ் நவால்னி, இவை பொய்யான வாக்குகள் என்று இக்கூற்றை மறுத்து