நியூஸ்: பானிபூரிக்கு ஏடிஎம் - இந்தியர்களின் புதிய கண்டுபிடிப்பு

 




Industry, Sunrise, Fog, Germany, Factory, Ruhr Area


ஐயையோ

திறன் குறைவு

காற்றிலுள்ள கார்பன் வாயுக்களை உறிஞ்சும் திறன் தமிழ்நாட்டிலுள்ள மாங்குரோவ் காடுகளுக்கு குறைந்து வருவதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். பிச்சாவரத்திலுள்ள மாங்குரோவ் காடுகள் ஆண்டுதோறும் 1.83 மெட்ரிக் டன் கார்பனை உறிஞ்சுவதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், இந்திய பருவச்சூழல் கழகம் ஆகிய அமைப்புகள் கண்டறிந்து கூறின. நிர்வாகத்தினர் முறைப்படி இக்காடுகளை பராமரிக்காவிட்டால் மாசுபாட்டை காடுகள் குறைக்கும் திறன் குறைந்துவிடும் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆர்.ராமசுப்பிரமணியன்.

அப்படியா?

 மனித உரிமைக்கு எதிர்ப்பு!

பிலிப்பைன்ஸில் தீவிரவாதத்திற்கு எதிரான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரை நெடுங்காலம் சிறையில் வைக்கமுடியும். நீதிபதியிடம் கூட கைதிகளை காவல்துறையினர் காட்டும் அவசியமில்லை. இச்சட்டத்தை நாட்டிலுள்ள மாநில அரசுகள், இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. தீவிரவாதத்தை ஒடுக்க இத்தகையை சட்டங்கள் தேவை என கூறியுள்ளார் ரோட்ரிகோ டுடெர்டே அரசைச் சேர்ந்தவரான ஹேரி ரோக்.

ஆஹா!

திறக்கலாமா, வேண்டாமா?

பெருந்தொற்று காரணமாக மிசோரம் மாநிலத்தில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது. தற்போது, மாநில கல்வி அமைச்சகம் ஜூலை 15 இல் பிளஸ் 2 தேர்வுமுடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. பெருந்தொற்று காரணமாக பாதியில் நின்ற பிளஸ் 2 தேர்வுகளை கச்சிதமாக நடத்தி முடித்தது கல்வி அமைச்சகத்தின் சாதனை. இம்மாத இறுதிவரை பள்ளிகளைத் திறக்கவேண்டாம் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதற்குப் பிறகு சூழலைப் பொறுத்து முடிவு செய்வோம் என்று கூறியிருக்கார் மாநில கல்வித்துறை அமைச்சர் லஷ்மணசந்தா ரால்தே.

 

அப்படியா?

பானிபூரி ஏடிஎம்!

அசாம் கூடுதல் காவல்துறை தலைவர் ஹர்திங் சிங் பகிர்ந்த வீடியோ, இணையமெங்கும் வைரலாகி வருகிறது. அதில் பானிபூரியை காசு கொடுத்து எப்படி வாங்குவது என்று கூறப்படுகிறது. கோவிட் -19 காரணமாக இனி தெருக்களில் பானிபூரி வாங்கிச் சாப்பிடுவது கடினமான ஒன்று. எனவே, இதுபோல பானிபூரி ஏடிஎம்கள் பலரின் ஸ்நாக்ஸ் வேட்கையைத் தீர்க்கலாம்.

வெறுப்பு வேண்டாம்!

Canada's biggest banks join boycott of Facebook platforms

Canada’s biggest lenders confirmed on Friday they had joined a widespread boycott of Facebook Inc (FB.O) begun by U.S. civil rights groups seeking to pressure the world’s largest social media platform to take concrete steps to block hate speech. More than 400 brands have pulled advertising on Facebook in response to the “Stop Hate for Profit” campaign, begun after the death of George Floyd, a Black man who died in police custody in Minneapolis on May 25. Canadian lenders Royal Bank of Canada (RY.TO), Toronto-Dominion Bank (TD.TO), Bank of Nova Scotia (BNS.TO), Bank of Montreal (BMO.TO), National Bank of Canada (NA.TO) and Canadian Imperial Bank of Commerce (CM.TO) all said they will pause advertising on Facebook platforms in July.



படச்செய்தி

அர்ஜென்டினாவிலுள்ள கால்பந்து விளையாட்டு கிளப்புகள், சமூக இடைவெளி, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து மைதானங்களில் விளையாடத் தொடங்கியுள்ளனர். கோல்கீப்பர், கால்பந்தை தடுக்கும் காட்சி. இடம்: பெர்காமினோ

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்