நியூஸ்ரூம்: மலமள்ளும் தொழிலாளர்கள் நான்கு பேர் பலி!
tnm |
அடச்சே!
இளைஞர்கள் பலி!
தூத்துக்குடி மாவட்டத்தில், கழிவகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர், விஷவாயுவால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். பாண்டி, இசக்கிராஜா, பாலா, தினேஷ், ஆகிய நால்வரில் முதல் மூவரும் மலமள்ளும் தொழிலாளர்கள் ஆவர். தினேஷ், தினசரி வேலை இல்லாததால் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்துள்ளார். சுத்தம் செய்தபோது, ஒருவர் விஷவாயு தாக்கி மயங்கி விழ, மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்று அனைவருமே பலியாகியுள்ளனர். காவல்துறை வீட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
அப்படியா?
அப்படியே அதிபராக..
ரஷ்யாவில் தற்போதை அதிபர் புதின், 2036ஆம் ஆண்டு வரை அதிபராக பதவியில் இருப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ரஷ்ய அரசியலமைப்புச் சட்டப்படி, அதிபராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும். தற்போதைய வாக்குப்பதிவில் புதின் வென்றால் இன்னும் இருமுறை அதிபர் பதவியில் அமர்ந்திருக்க முடியும். வாக்குகளில் 77 சதவீத மக்கள் அதிபர் புதினை ஆதரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸ் நவால்னி, இவை பொய்யான வாக்குகள் என்று இக்கூற்றை மறுத்துள்ளார்.
அட!
கின்னஸ் சாதனை!
சௌதி அரேபியாவைச்சேர்ந்த பள்ளிக்குழந்தைகள் 3,23,103 பாட்டில் மூடிகளை அடுக்கி வைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர். இதற்கு முன்னர் நெதர்லாந்தில், 2,66,866 பாட்டில் மூடிகளை அடுக்கி வைத்ததே சாதனையாக இருந்தது. பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏற்படுத்தும் சூழல் மாசுபாடு, மாணவர்களுக்கு தேவையான பொருட்களுக்கு நிதி திரட்டவும் சாதனை முயற்சி நடத்தப்பட்டது.
ஆஹா
இந்திய ரயில்வே துறை, 251 வேகன்களைக் கொண்ட ஷேஸ்நாக் என்ற ரயிலை இயக்கி சாதனை செய்துள்ளது. இந்த ரயிலின் நீளம் 2.8 கி.மீ. ஆகும். தென்கிழக்கு ரயில்வே கோட்டம் மின்சாரம் மூலம் இயங்கும் ரயிலை இயக்கியுள்ளது. இந்திய ரயில்வே இயக்கிய ரயில்களிலே மிக நீளமானது ஷேஸ்நாக்தான். இதற்கு முன்னர் ஒடிஷாவில் சூப்பர் அனகோண்டா என்ற ரயில் 177 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.
Twitter drops 'master', 'slave' and 'blacklist'
Social media platform Twitter is dropping the terms "master", "slave" and "blacklist" in favour of more inclusive language.The terms are frequently used in programming codes which originated decades ago. "master" refers to the main version of code that controls the "slaves," or replicas. "Blacklist" is used to describe items that are automatically denied, typically forbidden websites.On Thursday, Twitter's engineering division tweeted out a set of words that it wants "to move away from using in favour of more inclusive language". The list includes replacing "whitelist" with "allowlist" and "master/slave" with "leader/follower"
படச்செய்தி
சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச்சட்டத்திற்கு ஹாங்காங் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைத் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்துள்ள காட்சி.
கருத்துகள்
கருத்துரையிடுக