இடுகைகள்

அணுஆயுதப்போர் 3.0!-

படம்
அணுஆயுதப்போர் 3.0!- ச . அன்பரசு போர் வரட்டும் என ரஜினி எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியாது . உண்மையிலே மூன்றாம் உலகப்போர் ஏற்படப்போவதற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளன . 1992 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ் , நெவடாவில் பனிப்போர்காலத்தில் ஆயிரக்கணக்கில் நடைபெற்று வந்த அணு ஆயுத சோதனைகளுக்கு தற்காலிக தடைவிதித்தார் . அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும் அங்கிருந்து வெளியேறினார்கள் . நிலவின் குழிகளாக நிறைந்து பாலைவனமாக நீளும் தெற்கு நெவடா , இனியும் ஆளரவமற்று கிடக்காது . காரணம் , அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள்தான் . கடந்தாண்டு ட்ரம்ப் அரசு , அணுவாற்றல் துறையை தயார்படுத்த சிக்னல் தந்துவிட்டார் .   அரசியல் காரணங்கள் என்றாலும் ஆயுதங்களுக்கான பட்ஜெட் போர் பற்றிய பதட்டத்தை அரசின் பல இடங்களிலும் ஏற்படுத்தியுள்ளது .   அமெரிக்காவும் அதிரடி எதிரிகளும் ! அமெரிக்கா ஏவுகணைகளை தயாரித்தால் அதன் பிறவி எதிரியான ரஷ்யாவின் புதின் , வடகொரியாவின் கிம் ஜாங் உன் , இரானின் அயதுல்லா அலி கமினேனி ஆகியோர் தேமேயென்று வேடிக்கை பார்ப்பார்களா ? பனிப்போரின்போது , ரஷ்யாவின் மீது பல்வேறு குற்ற

விக்டரி வரி!

படம்
வெற்றிக்கும் வரி உண்டு ! அத்லெட்டின் வாழ்க்கையில் ஒரே லட்சியம் , ஒலிம்பிக்கில் உலக போட்டியாளர்களை முட்டிச்சாய்த்து வெற்றிவாகை சூடி பதக்கத்தோடு பரவசம் வழிய ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பதுதானே ! போட்டோ எடுத்தபின் வரி கட்டச்சொன்னால் எப்படியிருக்கும் ? ஒலிம்பிக் வீரர்களுக்கு அமெரிக்காவில் வரவேற்பு உண்டுதான் . வரவேற்பு முடிந்ததும் உடனே வாங்கிய மெடலுக்கும் பரிசுத்தொகைக்கும் வருமானவரி ( விக்டரி டாக்ஸ் ) கட்ட அழைப்பு வரும் . 2016 ஆம் ஆண்டு ஒபாமா அரசு , விக்டரி டாக்ஸை நீக்கியது . ஆனாலும் பல்வேறு மாநிலங்களில் பரிசுத்தொகை பிளஸ் மெடலுக்கு வரி கட்டும் முறை அமுலில் உள்ளது . நல்ல ஆடிட்டர் உங்களுக்கு கிடைத்தால் வரியை கம்மி பண்ணி நிம்மதி தர வாய்ப்புள்ளது . பென்சில்வேனியாவில் ஒலிம்பிக் , பாராலிம்பிக் வீரர்களுக்கு வரிவிலக்கு உண்டு .  மற்றபடி பிற மாநிலங்களில் கோல்டு மெடல் ஜெயித்தாலும் அதற்கு வரியாக 1100 டாலர்களை எடுத்துவைத்தே ஆகவேண்டும் . தொகுப்பு: கா.சி.வின்சென்ட் நன்றி: முத்தாரம்

மனோஜ் பார்க்கவா ஜெயித்தது எப்படி?

படம்
களவு போகும் ஆயில் ! டொனால்ட் ட்ரம்ப் டவீட்டிலேயை இதுதான் உண்மை . இரான் பற்றி " தங்கள் நாட்டின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து மக்கள் கவனமாக இருக்கவேண்டும் " என்று ட்ரம்ப் கூறியதை அடியொற்றி துணை அதிபர் மைக் பென்ஸ் , இதை வழிமொழிந்துள்ளார் . எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதக்குழுக்கள் எண்ணெய்யை விற்று உயிர்வாழ்கின்றன . மக்களின் சொத்தான இந்த எண்ணெய் விற்ற பணம் ஊழல் , தீவிரவாதம் , அடக்குமுறை என அனைத்துக்கும் ஆயுதமாகிறது . சிரியா , ஏமன் , லிபியா , ரஷ்யா ஆகிய நாடுகளின் பொருளாதாரமே எண்ணெய் வளத்தில்தான் நடைபெறுகிறது . எண்ணெய் திருட்டும் இங்கு அதிகம் . ஒரு அமெரிக்க குடும்பம் ஓராண்டுக்கு 250 டாலர்களுக்கு மேல் எரிபொருளுக்காக செலவழிக்கின்றனர் . ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதிகளிடமிருந்து நாடுகள் கச்சா எண்ணெய் பெற்றுவருகின்றன . அண்மையில் பிரேசில் இதுபோன்ற விதிமீறலாக எரிபொருளை வாங்குவதை தடை செய்து சட்டமியற்றி உள்ளது . பிறநாடுகளும் பின்பற்றவேண்டிய சட்டம் இது . 2 சூப்பர் கேம் ! Harry Potter: Wizards Unite ஆக்மெண்ட் ரியாலிட்டி

சிம்பொனி, ஆர்க்கெஸ்ட்ரா என்ன வித்தியாசம்!

படம்
சிம்பொனி Vs ஆர்க்கெஸ்ட்ரா ! ஒவ்வொரு சதுரமும் செவ்வகம் , ஆனால்  செவ்வகம் அனைத்தும் சதுரமல்ல என்று கணக்கு டீச்சர் சொல்லி தந்திருப்பார்கள் . அதே கான்செப்ட்தான் இங்கும் . சிம்பொனி ஒவ்வொன்றும் ஆர்க்கெஸ்ட்ரா , ஆனால் ஆர்க்கெஸ்ட்ரா அனைத்தும் சிம்பொனியல்ல . ஆர்க்கெஸ்ட்ராக்களில் இருவகை உண்டு . ஒன்று சேம்பர் ஆர்க்கெஸ்ட்ராக்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசை மீட்டுவார்கள் . தனியார் ஹால்களில் தேன் கிண்ணம் வகையறா பாடல்களை இசைத்து நிகழ்ச்சியை நடத்துவதால் சேம்பர் ஆர்க்கெஸ்ட்ரா என்று பெயர் . ஹெய்டன் , மொஸார்ட் , விவால்டி ஆகியோர் இந்த இசைக்கு உதாரணம் . சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா என்பது நூறுக்கும் மேல் கலைஞர்கள் நரம்பிசை , தாளக்கருவிகள் என 25 க்கும் மேற்பட்ட கருவிகளை உருட்டி இசை சுனாமியை உருவாக்குவார்கள் . எ . கா : பீத்தோவன் , வாக்னர்   பிட்ஸ் ! பாடகர் டேவிட் போவி இசை சுற்றுலாவுக்கு இத்தாலியிலிருந்து கிளம்பும்போது ,  விமானத்தில் குண்டு  என புரளி . டேவிட்டின் ஆட்டோகிராஃப்புக்காக போலீஸ் சீஃப் ஆடிய டிராமா அது என பின்னர் தெரிய வந்தது . பிரேசில் திராட்சை மரத்தில் (Ja

கணினிக்கு ஆயிரம் கண்கள்!

படம்
கணினிக்கு ஆயிரம் கண்கள் ! எம்ஐடி மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று கணினி புரோகிராம்களை ( முக அடையாளத்தை அறியும் ) ஆராய்ந்து அதிலுள்ள தவறுகளை கண்டறிந்துள்ளனர் . பெரும்பாலும் வெள்ளையின ஆண்களை மட்டுமே கண்டறிந்த இந்த புரோகிராம்கள் , பெண்களையோ பிற கருப்பின ஆண்களை கண்டறிவதில் தடுமாற்றம் கொண்டவையாக இருந்தன . சில ஆண்டுகளுக்கு முன்பு எம்ஐடி மீடியா லேபைச்சேர்ந்த ஜாய் புவோலாம்வினி என்ற மாணவர் செய்த ஆய்வில் ஃபேஸ் அனாலிசிஸ் புரோகிராம்கள் கறுப்பு நிறம் கொண்டவர்களை கண்டறிய தடுமாறியது . இதில் மொத்தம் 1200 க்கும் மேற்பட்ட முகங்கள் பல்வேறு நிறங்களில் ஆண் , பெண் என புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன .  கருப்பு நிற பெண்களை கண்டறிவதில் கணினியின் தவறு 20-35 சதவிகிதமாகவும் , வெள்ளையர்களை கண்டறிவதில் தவறு 1 சதவிகிதமாக இருந்தது . அதிலும் பாலினத்தைக் கண்டறிவதில் 46% தடுமாற்றம் இருந்தது . " தவறுகளின் சதவிகிதம் இவ்வளவு அதிகம் இருக்கும்போது எப்படி இந்த கணினி புரோகிராம்கள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தன என்பது ஆச்சரியமாக இருக்கிறது " என்கிறார்

பைடு சீனாவில் வென்றது இப்படித்தான்!

படம்
இன்டர்நெட் காட்ஃபாதர் ராபின்லீ ! - ச . அன்பரசு 1992 ஆம் ஆண்டு . அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படிக்க இன்டர்வியூவில் பதட்டமாக உட்கார்ந்திருந்தார் அந்த இளைஞர் . பேராசிரியர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் . " சீனாவில் கம்ப்யூட்டர்கள் உள்ளதா ?" பதில் பேச முடியாமல் திகைத்துப்போன அந்த இளைஞர் தன் பெயரை சீனாவின் மூலை முடுக்கெங்கும் பேச வைத்துவிட்டார் . பைடு சர்ச் எஞ்சின் நிறுவனர் ராபின் லீதான் அந்த இளைஞர் . " கம்ப்யூட்டர் துறையில் சீனா வலிமையான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தவேண்டும் என நினைத்தேன் " என எளிமையாக புன்னகைப்பவருக்கு வயது 49. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பைடு சர்ச் எஞ்சினைத் தொடங்கி சீனாவில் 80% பங்குகளோடு உலகில் மிகபிரபலமான நான்காவது வெப்சைட்டாக உயர்த்தியுள்ளார் ராபின் லீ .  சர்ச் எஞ்சினின் பெயர் , 13 ஆம் நூற்றாண்டு கவிதையிலிருந்து பெறப்பட்டது . சீனாவில் இன்று 262 டெக் நிறுவனங்கள் ( அ ) ஒரு பில்லியன் மதிப்புள்ள ஸ்டார்ட் அப்கள் உள்ளன என்கிறது மெக்கின்சி நிறுவன அறிக்கை . பீகிங் பல்கலையில் தகவல் மேலாண்மை படித்தவர் , அமெரிக்கா

காஃபிக்கு வார்னிங்!

படம்
காஃபிக்கு வார்னிங் ! அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விரைவில் காஃபி விற்கும் கடைகளில் புற்றுநோய் எச்சரிக்கை லேபிள்கள் ஒட்டப்படவிருக்கின்றன . நச்சுக்கள் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் முயற்சியால் நீதிமன்றம் மேற்சொன்ன உத்தரவை பிறப்பித்துள்ளது . காஃபியிலுள்ள அக்ரைலாமைடு என்ற வேதிப்பொருளை கலிஃபோர்னியா நகரம் , புற்றுநோய்க்கான காரணியாக வகைப்படுத்தி உள்ளது . தாவரங்களிலும் , தானியங்களிலும் உள்ள அக்ரிலாமைடு , அதிக வெப்பநிலையில் பொருட்களின் வழி உருவாகும் . உருளைக்கிழங்கு , பிரெட் , பிஸ்கட் , காஃபி ஆகிய பொருட்களை அதிக வெப்பத்தில் சூடுபடுத்தும்போது அக்ரிலாமைடு உருவாகிறது . இந்த வேதிப்பொருள் இன்றி , காஃபியை உருவாக்கும் வழியும் பலரும் அறியாதவை . 2002 ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்தனர் . " வறுப்பது , பொரிப்பது , பதப்படுத்துவது என அனைத்தும் அக்ரிலாமைடு மேதிப்பொருளை ஏற்படுத்துகிறது " என்கிறது ஐரோப்பிய உணவு ஆணையம் .  2 சுனாமியை அறிவிக்கும் நீர் ! கடலில் ஏற்படும் சுனாமியின்போது நீரில் acoustic gravity waves

நேர்காணல்:"மூன்று தலைமுறையாக ஒரே பொய்யை நம்பி வாழ்கிறார்கள்"

படம்
முத்தாரம் நேர்காணல் "மூன்று தலைமுறையாக ஒரே பொய்யை நம்பி வாழ்கிறார்கள்" சுகி கிம் , கொரிய - அமெரிக்க பத்திரிகையாளர் . தமிழில் : ச . அன்பரசு கொரிய - அமெரிக்க பத்திரிகையாளரான சுகி கிம் தென்கொரியாவில் பிறந்தவர் . பதிமூன்று வயதில் அமெரிக்காவுக்கு சென்றவர் , 2002 ஆம் ஆண்டு கிம் ஜாங்கின் அறுபதாவது பிறந்தநாளுக்கு வடகொரியா வந்தார் . ஆசிரியர்களின் உடமைகள் , வகுப்பறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் அங்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் சுகி கிம் . 2 லட்சம் அரசியல் கைதிகள் உள்ளதாக ஹியூமன் வாட்ச் அமைப்பு செய்தி தெரிவிக்கிறது . உங்களது நூலில் தவிர்க்கமுடியாத சோகம் உள்ளாடுகிறதே ? விஷயங்கள் என்றென்றைக்குமாக மாறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா ? அங்குள்ள மாணவர்கள் அன்பானவர்கள் . ஆனால் அவர்கள் மோசமான நிலையில் வளர்க்கப்படுகிறார்கள் . உங்களது சகோதரராக , சகோதரியாக நினைக்கும்போதுதான் அவர்களின் கனவுகள் படுகொலை செய்யப்படுவதை உங்களால் உணர முடியும் . சர்வாதிகார நாடுகளான சீனா , கியூபா ஆகிய நாடுகளைப் போலே வடகொரியா உள்ளது என கூறலாமா ? சீனா

ஆன்டிபயாடிக் எறும்புகள்!

படம்
அபாயதேசம் மெக்சிகோ ! 2006 ஆம் ஆண்டிலிருந்து மெக்சிகோ அரசு போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் 2 லட்சம் மக்களை படுகொலை செய்துள்ளதோடு , 30 ஆயிரம் மக்களை காணவில்லை விளம்பரத்தில் தேட வைத்துள்ளது . கடந்தாண்டில் மட்டும் 29 ஆயிரம் கொலைகள் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளன . ஆனால் போதை பிஸினஸ் எந்த பிரச்னையும் இன்றி ஜரூராக நடைபெற்று வருகிறது . " மெக்சிகோ மலிவான விலையில் உற்பத்தியை வழங்க அமெரிக்கா அதனை கடத்தலுக்கு பயன்படுத்திக்கொள்கிறது . மெக்சிகோ மக்களுக்கு மரணத்தை பரிசளிக்கிறது . அமெரிக்கா , போதைப் பொருட்களுக்கான படையை உருவாக்குகிறது . பண வலிமையற்ற மெக்சிகோ மெல்ல கடவுளிடமிருந்து விலகி அமெரிக்காவிடம் சென்றுவிட்டது " என்கிறார் மெக்சிகோவைச் சேர்ந்த லா ஜோர்னாடா தினசரியைச் சேர்ந்த நிருபரான ஆர்ட்யூரோ கானோ . தாராள வணிகம் என்பதும் அமெரிக்காவுக்கு மட்டுமே பயனளிக்க கூடியது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள் . A Narco History: How the United States and Mexico Jointly Created the 'Mexican Drug War என்று நூலில் அமெரிக்காவின் போதை ஒழிப்பு அமைப்பான DEA, மெக்சிகோவின் போதை ஒழிப்பு

முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர் ஸ்டீபன்!

படம்
மகாநடிகன் ஸ்டீபன் ! சிட்னி பாய்ட்டர் , டென்ஷில் வாஷிங்டன் ஆகிய ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர்களுக்கு முன்பே மக்களிடம் தன் நடிப்புக்கு லட்சோபலட்சம் லைக்ஸ் வாங்கியவர் லிங்கன் பெரி (1902-1985). ப்ளோரிடாவின் கீவெஸ்ட் பகுதியில் பிறந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர் லிங்கன் பெரி . திரைப்படங்களுக்காக தனது பெயரை ஸ்டீபன் ஃபெட்சிட் என மாற்றிய இவர் கறுப்பின மில்லியனரும்கூட . பால்யத்திலிருந்தே தந்தையிடமிருந்து கற்ற பாட்டும் நடனமும் அவரை டென்ட் ஷோக்களில் கதாநாயகனாக்கியது . 1920 ஆம் ஆண்டில் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸின் நிகழ்ச்சிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தார் ஸ்டீபன் . ஸ்க்ரீன் டெஸ்டில் பாஸாக , நடிப்பு வேட்டை ஆரம்பம் . ஃபாக்ஸ் ஸ்டூடியோவின் அக்ரிமெண்ட்டோடு நாற்பது படங்களுக்கு மேல் நடித்தார் . “The Laziest Man In The World” என்ற படத்தின் கேரக்டர் இவரை செலிபிரிட்டியாக்கியது . பணம் குவிய காஸ்ட்லி கெடிலாக் கார் ( பிங்க் நிறம் ) வாங்கி அதில் தன் பெயரை நியான் விளக்குகளில் ஒளிரவிட்டார் . வீட்டில் பதினாறு வேலைக்காரர்களையும் வைத்திருந்தார் என கிசுகிசு எழுதினார்கள் . 1930 க்குப் பிறகு கறுப்பர் - வெள்ளையர