இடுகைகள்

மலேரியாவுக்கு புதிய மருந்து!

படம்
மலேரியாவுக்கு சிந்தடிக் ஊசி ! வேதிப்பொருட்களால் செயற்கைமுறையில் தயாரான சிந்தடிக் தடுப்பூசி இவ்வாண்டின் இறுதியில் மனிதர்களின் மீது சோதிக்கப்படவிருக்கிறது . Plasmodium falciparum எனும் ஒட்டுண்ணி ஏற்படுத்தும் மலேரியாவை இந்த ஊசிமருந்து தடுக்கிறது . தற்போது கொலம்பியா மற்றும் ஆப்பிரிக்காவின் கானாவில் இச்சோதனையை ஆராய்ச்சியாளர் மானுவேல் எல்கின் படாரோயோ முரில்லோ , அவரது மகன் அல்ஃபோன்ஸோ ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் . வேதிப்பொருட்கள் மூலம் ரெடியாகும் இந்த செயற்கை ஊசி மருந்து வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதம் . குளிர்சாதன முறையில் மருந்தை பாதுகாக்க அவசியமில்லை . Plasmodium vivax எனும் ஒட்டுண்ணி இந்தியாவில் மலேரியாவுக்கு பரவக் காரணம் . 1987 ஆம் ஆண்டு FIDIC   அமைப்பைச் சேர்ந்த மானுவேல் , தயாரித்த சிந்தடிக் மருந்தை உலகசுகாதார நிறுவனம் ஏற்கவில்லை . கடந்தாண்டு மட்டும் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த 216 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 2016 ஆம் ஆண்டு மலேரியாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரம் . மருந்தோடு சுகாதாரத்தையும் பராமரிப்பது அவசிய

டைம் பத்திரிகையின் நம்பிக்கைக்குரிய நாளைய இளைஞர்கள்!

படம்
நம்பிக்கை மனிதர்கள் ! Kerstin Forsberg(33) பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது தன் ஒன்பது வயதில் இயற்கை சங்கம் தொடங்கியவர் . பெரு நாட்டில் பிளானட்டோ ஓசானோ என்ற என்ஜிஓ மூலம் கடல் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் . " கணவாய் மீன்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்யும் நிலையில் அதனை வேட்டையாடி உண்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை " என்பவர் அதிகாரிகளிடம் 2 ஆண்டுகளாக போராடியதன் பலனாக தற்போது நடவடிக்கை தொடங்கியுள்ளது . Sonita Alizadeh(21) சுதந்திரத்திற்கான குரல் . முதல்முறை திருமண உடையை இராக்கைச் சேர்ந்த சோனிடா அணிந்தது மங்கல நாணை   அணிவதற்காக அல்ல ; இசை வீடியோவுக்காக . பெண்களின் மௌனத்தை உடைக்க நான் அலறுகிறேன் எனும் சோனிடா , தன்னை 9 ஆயிரம் டாலர்களுக்கு பெற்றோர் விற்க முயன்றபோது Daughters for Sale என்ற ராப் பாடலை எழுதி பாடினார் . குழந்தை திருமணத்திற்கு எதிரான தேசியகீதமாக ஒலிக்கிறது அப்பாடல் . அப்பாடல் மூலம் அமெரிக்க இசைப்பள்ளியில் இலவசமாக கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது ." குழந்தை திருமணத்தை ஒப்புக

எவர்ரா வாடு வேசெய்ன்றா ரே!

படம்
சூயிங்கம்மில் ஷூ ரெடி ! பிளாஸ்டிக் கழிவுகளில் முக்கியமானது சூயிங்கம் . பொழுதுபோகாமல் இருக்கும் சமயங்களில் மக்கள் சூயிங்கம்மை சுவைத்து சுவர்களின் ஒட்டிவைப்பது , குப்பைகளில் எறிவது என்பதே இன்று பல லட்சம் டன்களாக எகிறியுள்ளது . இதனை தீர்க்க லண்டன் மற்றும் நெதர்லாந்து நிறுவனம் கூட்டுசேர்ந்து சூயிங்கம்மை ரீசைக்கிள் செய்து ஷூக்களை தயாரித்துள்ளன .   Gumshoe எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்களில் மறுசுழற்சி செய்த சூயிங்கம்களின் அளவு 20%. ஒரு கிலோ சூயிங்கம்மில் நான்கு ஜோடி ஷூக்கள் தயாரிக்கலாம் . சூயிங்கம்மின் ஃப்ளேவரில் ரெடியாகும் ஷூவில் ரப்பர் , தோல் கலப்பு உண்டு . இவை மட்டுமில்லாமல் சூயிங்கம் மூலம் பென்சில் , ஸ்கேல் , ரப்பர்பந்து தயாரிக்கும் ஐடியாவும் இக்கம்பெனிகளுக்கு உண்டாம் . அப்போ மக்கள் நிறைய சூயிங்கம் மெல்லணுமே ? பாம்பின் வயிற்றில் ஆன்ட்டி !  இந்தோனேஷியாவைச் சேர்ந்த முனா தீவில் ஆன்ட்டி ஒருவர் தோட்டத்திற்கு சென்றார் . வெகுநேரமாகியும் ஆளைக்காணோமே என குடும்பமே தேடியதில் கிடைத்தது 23 அடி மலைப்பாம்புதான் . ஊரே திரண்டு பாம்பின் வயிற்றை கிழித்து ஐம்பத்தி

செஃப்பின் உயிரைக்காப்பாற்றிய முஸ்லீம்!

படம்
பிரபல செஃப்பை காப்பாற்றிய முஸ்லீம்! கருணைக்கு மதமில்லை என்பதை பிரபல செஃப் விகாஸ் கண்ணா தன் செயலின் மூலம் நிரூபித்துள்ளார் . மும்பை கலவரத்தில் தன்னைக் காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்தை சந்தித்து இஃப்தான் உணவருந்தி ஃபிளாஷ்பேக்கை அசைபோட்டுள்ளார் செலிபிரிட்டி சமையல்கலைஞர் . 1992 ஆம் ஆண்டு மும்பையில் கலவரம் வெடித்தபோது ஷெரட்டன் ஹோட்டலில் பயிற்சியாளராக இருந்தார் விகாஸ் . கட்கோபார் ஏரியாவிலிருந்த சகோதரர் என்னவானார் என்ற பயத்தில் அவரைத் தேடிப்போனபோது , கலவரக்காரர்கள் துரத்த , முஸ்லீம் குடும்பத்தினர் இரு நாட்கள் அடைக்கலம் கொடுத்து உயிர்காத்து உதவியுள்ளனர் . அதோடு விகாஸின் சகோதரரையும் தேடி அழைத்து வந்து விகாஸை ஒப்படைத்துள்ளனர் . " கண்ணீரும் நெகிழ்ச்சியும் நிறைந்த அச்சம்பவத்தில் உதவிய முஸ்லீம் குடும்பத்தை நினைவுகூரவே ரம்ஜான் நோன்பை அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்துவருகிறேன் " என சமூகவலைதளத்தில் உணர்வெழுச்சியுடன் எழுதியுள்ளார் விகாஸ் .

ஆசிய அமெரிக்கர்களை ஒதுக்கும் ஹார்வர்டு!

படம்
ஹார்வர்டில் தலைதூக்கும் இனவெறி ! ஆசிய அமெரிக்க மாணவர்களை இனவெறியுடன் நடத்துவதாக 388 ஆண்டுகள் தொன்மையான அமெரிக்க கல்விநிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . கடந்த 2000-2015 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்ளை செய்து தேர்வுகள் எழுதினாலும் தனிப்பட்டரீதியில் அட்மிஷன் ரேட்டிங்குகளை ஆசிய மாணவர்கள் குறைவாகவே பெற்றுள்ளனர் . இது ஒரு விதியாக உருவாக்கப்படாவிட்டாலும் ஆசிய - அமெரிக்க மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாகுபாடுடன் அணுகுவது 2013 ஆம் ஆண்டே விமர்சிக்கப்பட்டது ." ஆசிய அமெரிக்க மாணவர்களின் அட்மிஷன் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 29% உயர்ந்துள்ளது .  இதிலிருந்தே மாணவர்களை பாகுபாடுடன் நாங்கள் நடத்தவில்லை என்பது நிரூபணமாகிறது " என்கிறார் ஹார்வர்டு அதிகாரிகளில் ஒருவர் .      2 இந்துப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம்கள் ! கர்நாடகாவின் வித்யாபுரத்திலுள்ள ஜானவஸதி காலனியைச் சேர்ந்த பவானி , திடீர் மாரடைப்பால் இறந்துபோனார் . திர

அச்சுறுத்தும் தொற்றுநோய் ஸ்கேபிஸ்!

படம்
அகதிகளைத் தாக்கும் நோய் ! முகாமில் நெருங்கி வாழும் அகதிகளுக்கு ஸ்கேபிஸ் எனும் நோய் பரவத்தொடங்கியுள்ளது . இந்தியா , சீனா , மத்தியக்கிழக்கு நாடுகளில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கேபிஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது . சின்னம்மை , தட்டம்மைக்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் பாதிக்கும் நோய் ஸ்கேபிஸ் . சுகாதாரமற்ற அகதிகள் முகாமில் எளிதாக பரவும் நோயில் முதலிடம் வகிப்பது இதுவே . பிரான்சின் சப்பல்லே அகதிகள் முகாமில் தற்போது வேகமாக பரவிவரும் ஸ்கேபிஸ் , கடந்த பத்தாண்டுகளிலும் தொற்றுநோய்களில் முன்னணி வகிக்கிறது . permethrin, benzyl benzoate and oral ivermectin   ஆகிய மருந்துகள் ஸ்கேபிஸ் நோயைத் தீர்க்க உதவுகின்றன . உலக மக்கள் தொகையில் 4 சதவிகித மக்கள் ஸ்கேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் . வளரும் நாடுகளில் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளின் விகிதம் 5-10%. மத்திய அமெரிக்கா , பசிபிக் தீவுகள் , வடக்கு ஆஸ்திரேலியா ஆகியவை (30% மக்கள் ) ஸ்கேபிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன .  ஒட்டுண்ணியால் தோலில் அரிப்பு ஏற்பட்டு Streptococcus pyogenes (S. pyogenes)   or  

டைப் ஏ ஆளா நீங்கள்?

படம்
டைப் ஏ ஆளா நீங்கள் ? பொறுமையின்மை , கோபம் , ஆக்ரோஷம் , நேரந்தவறாமை , வேகம் ஆகியவை கொண்டவர்கள் டைப் ஏ ஆட்கள் எனவும் , நிதானமாக ரிலாக்ஸாக வேலை செய்பவர்களை டைப் பி எனவும் குறிப்பிடுகிறார்கள் . எப்படி வந்தது இந்த டைப் ஏ சொற்கள் ? 1959 ஆம் ஆண்டு மேயர் ஃப்ரீட்மன் மற்றும் ரே ரோஸ்மன் ஆகியோரின் ஆராய்ச்சி விளைவாக கடுமையான போட்டியாளர் , நிதானமற்ற , செயல்திறமை கொண்டவர்களுக்கு ஏழு மடங்கு பிறரைவிட இதயநோய் தாக்கும் என கண்டறிந்து அத்தகையோரை டைப் ஏ என மருத்துவ வட்டாரம் குறிப்பிடத்தொடங்கியது . மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த குணநலன்களைப் பற்றி Type A Behavior and Your Heart (1974)   என்ற நூலை எழுதினர் . பின்னரே மக்கள் மத்தியில் குணநலன்களைப் பற்றிய டைப் ஏ , பி சொற்கள் புழங்கத் தொடங்கின . இந்த ஆராய்ச்சியின் தொடக்கம் இருவரின் கிளினிக்கில் இருக்கைகளை பழுதுபார்க்கும்போது தொடங்கியது . சேர்களின் விளிம்பு மட்டும் அதிகம் சேதமுற்றிருந்தன . டாக்டர் தன்னை விரைவில் கூப்பிடுவார் என சீட்டின் நுனியில்  பதட்டமாக  க

மரபணு மாட்டின் இறைச்சி நல்லது!

படம்
மரபணு உணவுகள் ! ஆஸ்திரேலியா பண்ணைகளில் கொம்புள்ள மாடுகளை உரிமையாளர்கள் விரும்புவதில்லை . அதனை அறுத்து எடுப்பது சிரமமாக பசுக்களின் மரபணுக்களில் மாற்றம் செய்து கொம்புகளற்ற பசுக்களை உருவாக்கி வருகிறார் மரபணு வல்லுநர் அலிசன் வான் எனன்னாம் . ஆறு பசுக்கன்றுகளை CRISPR முறையைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார் . தற்போது தொடக்கநிலையிலுள்ள இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பல்வேறு பருவசூழலில் வளருமாறு பயிர்களை திருத்த உதவக்கூடும் . கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான அலிசன் உயிரித்தொழில்நுட்பம் மூலம் விலங்குகளை விவசாயத்திற்கேற்ப மேம்படுத்தி வருகிறார் . The Dr. Oz Show  நிகழ்ச்சியில் மரபணு மாற்றப்படுவது குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக பதிலளித்தது இவரின் அறிவியல் நேர்மைக்கு சான்று ." அறிவியலின் தொழில்நுட்பத்தை அனுகூலமாக பார்க்கும் பார்வை முக்கியம் " என்பவரின் மரபணு ஆராய்ச்சிக்கு அமெரிக்க விவசாயத்துறை நிதியுதவி அளிக்கிறது . மரபணுவை திருத்தி பசு இறைச்சியையும் அதிகரிக்க முடியும் . SRY எனும் மரபணுவை பசுக்களின் உடலில் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்

குடிநீரில் கலக்கும் கதிரியக்க யுரேனியம்!

படம்
யுரேனியம் கலப்படம் ! இந்தியாவிலுள்ள பதினாறு மாநிலங்களின் நிலத்தடி நீரில் யுரேனியம் உள்ளதாக அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . குடிநீரில் யுரேனியத்தின் அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த அளவைவிட அதிகம் என்பது நம் கவலைப்படவேண்டிய விஷயம் . ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலுள்ள 324 கிணறுகள் மற்றும் பதினாறு மாநிலங்களிலுள்ள குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரித்துள்ளது . 30 மைக்ரோகிராம் என்பதே உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க சூழல் அமைப்பு ஆகியவை அங்கீகரித்த யுரேனியத்தின் அளவு . நீரில் கலப்படமாகும் பொருட்களின் பட்டியலில் இந்தியா யுரேனியத்தை இன்னும் சேர்க்கவேயில்லை . மனிதர்கள் நைட்ரேட் பயன்பாட்டினால் பூமியின் பாறைகளிலுள்ள யுரேனியம் மெல்ல நீரில் கரைந்து அதனை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது . மூளை , இதயம் , சிறுநீரகம் , தைராய்டு ஆகிய பகுதிகளை பாதிக்கும் யுரேனியம் , ஈறுகளில் ரத்தம் வடிதல் , சிறுநீரக நோய்கள் , மலட்டுத்தன்மை , ஆஸ்டியோபோரோசிஸ் , நோய்எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது .    

வெள்ளியில் ஓரு போராட்டம்!

படம்
வெள்ளியில் ஓரு போராட்டம் ! வெள்ளி , பூமிக்கு மாற்றாக வாழக்கூடிய கோள் அல்ல . இக்கோளில் முழுக்க சல்ப்யூரிக் அமிலத்தைக் கொண்ட மேகங்களும் ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் உண்டு . இதனை சமாளித்தால் , ஆராய்ச்சியாளர்கள் இங்குள்ள நூறுமடங்கு அழுத்தத்திற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் . இக்கோளைப்பற்றி நிறைய கேள்விகள் இருக்கும்போது சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி ? உடனே நாசா ரெடி செய்த பிளான்தான் HAVOC( High Altitude Venus Operational Concept ) இக்கோளில் ஆராய்ச்சி செய்துவிட்டு உயிர்பிழைத்து வரும் தொழில்நுட்பத்தை இன்னும் நாசா கண்டறியவில்லை . அமில மேகங்களுக்கு ஐம்பது கி . மீ தள்ளி அமையும் விதத்தில் ஆராய்ச்சி நிலையத்தை வானில் அமைக்கவிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . முப்பது நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்யும் திட்டம் முடிவாகியுள்ளது . பூமிக்கு அருகில் இருப்பதால் செவ்வாய்க்கு செல்வது போன்ற காலதாமதம் இதில் ஏற்படாது . மிதக்கும் விண்கலத்தில் இருந்து ஆராய்ச்சி செல்வதற்கு மட்டும் ராக்கெட் பயன்படுத்த உள்ளனர் . பின்னர் இந்த ராக்கெட் விண்கலத்தில் இணைக்கப்பட்டு பூமிக்கு திரும்ப முடியும் .

செவ்வாயில் தாவரங்கள்!

படம்
செவ்வாயில் தாவரங்கள் உண்மையா ? பூமிக்கு மாற்றான உலகம் தேடும் முயற்சியில் செவ்வாயை நாசா இன்றும் விட்டுக்கொடுப்பதாக இல்லை . அண்மையில் செய்த ஆராய்ச்சியில் பருவச்சூழல்களுக்கேற்ப மாறும் மீத்தேன் அளவையும் , பாறைகளிலுள்ள தாவர இனங்களைக் குறித்த தகவல்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . 2012 ஆகஸ்டில் செவ்வாயை ஆய்வு செய்த க்யூரியோசிட்டி ரோவர் மூலம் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் . உயிரியல் பொருட்களில் நீக்கமற நிறைந்துள்ள மீத்தேன் (2015 கண்டுபிடிப்பு ) செவ்வாயின் உயிர்கள் உள்ளன என்கிற நம்பிக்கையை தருகிறது . ஆண்டுதோறும் உயர்வதும் தாழ்வதுமான மீத்தேன் அளவும் எங்கிருந்து உருவாகிறது என்பதற்கான பதிலை ஆய்வாளர்கள் தேடினர் . உறைந்த பனிக்கட்டிகள் உருகும்போது மீத்தேன் பெருமளவு உருவாவது கண்டறியப்பட்டுள்ளது . செவ்வாய் குறித்த ஆராய்ச்சியாளர்களின் சிறுசிறு கேள்விகளுக்கு மெல்ல விடைகிடைத்து வருவது நம்பிக்கை தரும் செயல்பாடு . >