இடுகைகள்

கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  கேன் உணவுகள் நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது.  குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்?  மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செல்வதில்லை. புத

இந்திய விவசாயமுறையில் செய்யவேண்டிய மாற்றம்! - புதிய விவசாய முறைகள்

படம்
  ரிலே பிளான்டிங் அமெரிக்காவிலுள்ள சிய அறிவியல் அகாடமி விவசாயம் மற்றும் அதில் குறைந்த கார்பன் வெளியீடு பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரிலே பிளான்டிங், ஸ்டிரிப் கிராப்பிங் என இரண்டு முறைகளைப் பற்றி பேசியுள்ளனர். இதன்படி விவசாயம் செய்தால் உணவு உற்பத்தி அதிகரிப்பதோடு, கார்பன் வெளியீடும் குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறார்கள்.  அறிக்கை அமெரிக்காவில் வெளியாகி இருந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் இந்தமுறை பயனளிக்க கூடியதே. எப்படி? பெரும் விவசாயிகளை விட இங்கு சிறு, குறு விவசாயிகளே அதிகம். சிறு குறு விவசாயிகள் என்று கூறுவது இரண்டு ஹெக்டேர்களுக்கும் குறைவான நிலங்களை வைத்துள்ளவர்களைத்தான்.  நகரங்களில் வேறு தொழில்வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் எழுபது சதவீதம் பேர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இப்படி விவசாயத்தை நம்பி வாழ்வாதாரமாக சிறு குறு விவசாயிகள் 82 சதவீதம் பேர் உள்ளனர். 2017-18ஆம் ஆண்டு உணவுதானியங்களின் உற்பத்தி 275 கோடி டன்களாக இருந்தது. இப்படி விவசாயம் பெற கடன் பெறுபவர்கள் 30 சதவீதம் பேர் முறையான நிதி நிர்வாக அமைப்புகளை அணுகுகின்றனர். அதாவது அரசு. ஆன

மெய்நிகர்உலகத்திற்கு வரவேற்பு கொடுக்கும் மெட்டா! - பேஸ்புக்கின் எதிர்கால ஐடியா

படம்
  மெட்டா மெட்டாவெர்ஸ் கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட். அதைப்போலவே பேஸ்புக்கின் கைவசம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்த நிறுவனத்திற்கு மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை இப்போது மார்க் ஸூக்கர்பெர்க் ரீபிராண்டிங் செய்து வருகிறார். எதிர்காலத்திற்கான புது விஷயங்களை நம்பிக்கையுடன் செய்கிறோம் என்று மார்க் கூறியிருக்கிறார்.  மெட்டாவெர்ஸ் என்பது புதுமையான விர்ச்சுவல் உலகம். முதலில் கணினி, பிறகு இணையம் அதிலிருந்து ஸ்மார்ட்போன் என சென்றுகொண்டிருக்கும் பயணம் இதோடு நிற்காது புதுமையாக செல்லும் என்பதை தனது டெமோ வீடியோ மூலம் கூறியிருக்கிறார். மார்க் அவரது நண்பர்களை விர்ச்சுவல் ஸ்பேஸ் ஒன்றுக்கு அழைத்து விளையாடும் காட்சியை இணையத்தில் பார்த்திருக்கலாம். இதில் எப்படி தோன்றலாம் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். மக்கள் ஒருவரையொருவர் எப்படி சந்திக்கிறார்கள், இணைகிறார்கள் என்பதுதான் மெட்டாவெர்ஸ் என மார்க் நினைக்கிறார்.  இதில் ஒருவரின் முகத்தைப் பார்ப்பது மட்டுமன்றி, அவருடனான உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்ள முடியும். இதனை மார்க் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என

காதலிக்கும் பெண் சொல்லும் தத்துவங்களை காதலன் கண்டடையும் பயணம்! - மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் 2021

படம்
  மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் தெலுங்கு பொம்மரில்லு பாஸ்கர் கோபி சுந்தர் திருமணத்திற்கான தேவை, அதை செய்துகொள்பவர்களின் தகுதி பற்றி பேசியிருக்கும் படம்.  நவீன காலத்தில் திருமணம் பற்றி நமக்கிருக்கும் கருத்துகள் எல்லாம் பிறர் உருவாக்கியவை. அக்கருத்துகளை நாமே யோசித்து உருவாக்கினால்தான் கல்யாண வாழ்க்கை உருப்படியாகும் என பாஸ்கர் தனது படத்தில் பேசியிருக்கிறார்.  ஹர்ஷா, அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐடி கம்பெனியேதான். அங்கிருந்து இந்தியா வர ஏற்பாடாகிறது. எதற்கு? இருபதே நாட்களில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவுக்கு செல்வதுதான் திட்டம். மொத்தம் இருபது பெண்களை சந்தித்து பேசுவது பிளான். இதில் எந்த பெண் ஓகே என்றாலும் உடனே கல்யாணத்தை செய்து கூட்டிபோக அத்தனை ஏற்பாடுகளும் ரெடியாக வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் ஹர்ஷாவின் வாழ்க்கையில் தனிக்குரல கலைஞராக விபா வருகிறாள். திருமணம் பற்றி ஹர்ஷா நினைக்கும் அத்தனை விஷயங்களையும் உடைக்கிறாள். இதனால் ஹர்ஷாவுக்கு அவளை பிடித்துப்போகிறது.  அவள் தன்னிடம் கேட்கும் அத்தனை கேள்விகளையும் தான் பெண் பார்க்கப் போகும்

இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

படம்
  அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம் தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.  தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது.  இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது.  1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெ

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பால் தட்டுப்பாடு! - இந்தியா 75

படம்
  பால் பொருட்களில் மிட்டாய் செய்யத் தடை! இந்தியா 75 மற்றும் அமுல் 75 1970ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தது. காவல்துறை அதிகாரி அங்குள்ள எந்த வீட்டிலும் சென்று சோதனையிட அந்த சட்டம் அதிகாரம் வழங்கியது. அப்படி என்ன அங்கு ஊழல் நடந்துவிட்டது? திடீரென இப்படியொரு சட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என அனைவருக்குமே தோன்றும். அந்த காலகட்டத்தில் பாலின் தேவை அதிகமாக இருந்தது. அதனை பிற மாநிலங்களுக்கு விற்க அல்லது மிட்டாய்களை, இனிப்புகளை செய்ய தடுப்பதே அரசின் நோக்கம்.  சட்டம் அதற்கெனவே உருவாக்கப்பட்டது. கோடைக்காலத்தில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட பனீர் அல்லது வேறு வகை இனிப்பு பலகாரங்கள் செய்வதைக் கூட அரசு தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு மேற்கு வங்க சன்னா சட்டம் என்பதன் பேரில் பாலில் பலகாரங்களை தயாரிப்பதை தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு பஞ்சாப் அரசு, ஜூன் மாதம் பால் பொருட்களில் ஏதேனும் இனிப்புகளை தயாரிக்கிறார்களா என்பதைக் கண்காணித்து தடுத்த தொடங்கியது.  1969ஆம் ஆண்டு மத்திய அரசு டெல்லி, மீரட், புலந்த்சார் ஆகிய பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களில் பால் பொருட்களில

மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்! - கடிதங்கள்

படம்
  வெற்றிகரமான முதல்வர் நவீன் பட்நாயக் அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? பிரன்ட்லைன் இதழுக்கு சந்தாகட்டி வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வங்க எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரியின் நேர்காணலை சிறப்பாக எடுத்து எழுதியியுள்ளனர். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தவர் இப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஆகிவிட்டார். வாழ வழியில்லாத நிலையில் மாநில அரசின் விருது எதற்கு என துணிச்சலாக சொல்லியிருக்கிறார் மனிதர்.  நவீன் பட்நாயக் பற்றிய கட்டுரையும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒடிஷாவில் மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுவிட்டு மாநில அரசின் திட்டங்களை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களின் அபிமானத்தை சம்பாதித்துள்ளார் என்பதை கட்டுரையில் ஏராளமான தகவல்களை கொண்டு பேசியிருந்தார்கள். இப்போது ஞாயிறு மட்டும் தி இந்து ஆங்கில நாளிதழை வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  நிறைய முக்கியமான விஷயங்களை நடுப்பக்க கட்டுரைகளில் எழுதுகிறார்கள். மொழிபெயர்த்து எழுதுவதை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரைகளை வாசிப்பதும், தமிழில் மொழிபெயர்ப்பதும் உதவும் என நம்புகிறேன்.  அண்மையில் வடபழனிக்கு சென்று

நவீன இந்தியாவின் சிற்பி நேரு! - கடிதங்கள்

படம்
இந்தியாவின் நவீன சிற்பி நேரு  அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? பேஸ்புக்கில் நேரு 171 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பக்ராநங்கல்  அணையைக் கட்டியதைப் பகிர்ந்திருந்தீர்கள். படிக்கவே ஆச்சரியமாக இருந்தது. நவீனத்துவ இந்தியாவின் அடிப்படை தேவையை நேரு அன்றே உணர்ந்திருந்தார். அதனால்தான் முக்கியமான கல்வி மற்றும் அறிவியல் அமைப்புகளை கட்டியமைக்க முடிந்தது. நேருவின் சொற்பொழிவுகளை படிக்கும்போது இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளின் மீது எப்படி கவனம் செலுத்தினார் என்பதை உணர முடிகிறது.  நேருவின் போராட்டக்கால சிந்தனைகள் நூலை சென்னையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். பிரச்னையில் தனது பார்வைக் கோணத்தை தவறு என்றால் மாற்றிக்கொள்ளக்கூடிய நெகிழ்வுத்தன்மை நேருவுக்கு இருந்தது. இந்த அம்சம் இன்று, ஆட்சித்தலைவர்களுக்கு இல்லை. டொமினிக் ஜீவாவின் அனுபவப் பயணம் என்ற நூலை படித்தேன். மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளாக நடத்தி வந்த எழுத்தாளரின் சுயசரிதை இது. மதுரை புராஜெக்ட் வலைத்தளத்தில் தரவிறக்கினேன். நூலகம் என்ற வலைத்தளத்தில் சில நூல்களை படிக்க தரவிறக்கியுள்ளேன். படித்துவிட்டு பகிர்வேன்.  நன்

எழுதுவதில் சுணக்கம்! - கடிதங்கள்

படம்
  எழுதுவதில் சுணக்கம் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இப்போது ஊருக்கு வந்துவிட்டேன். சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அறையில் பயங்கரமான புழுக்கம். அலுவலகம் சென்றால் கூட எட்டு மணிநேரம் சமாளித்து விடலாம். வடக்குப்புதுப்பாளையம் நூலகத்திற்கு அன்பளிப்பாக தர எட்டு நூல்களை ரெடி செய்துள்ளேன்.  மந்திர சந்திப்பு - பாலபாரதி அவர்கள் எழுதிய நூலை படித்து வருகிறேன். இந்த நூல் தினசரி ஒரு அத்தியாயம் என அவரது பேஸ்புக் பக்கத்திலும், வலைத்தளத்திலும் வெளியானது. இப்போது நேரம் கிடைத்துள்ளதால் அதனை நூலாக தொகுத்துவிட்டார்.  அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை கணியம் சீனிவாசன் சாரிடமிருந்து பெற்றேன். அதனை இனிமேல்தான் படிக்கத் தொடங்கவேண்டும். அடுத்து வரும் ஜூனில்தான் எங்களுக்கு வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். எனக்கென தனியாக எழுதும் வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னமோ தெரியவில்லை. எழுதுவதில் சுணக்கமாக சோம்பலாக இருக்கிறது. வேகமாக வேலைகளைத் தொடங்கவேண்டும். வாசிப்பதிலும் வேகம் கூட்டவேண்டும்.  நன்றி ச.அன்பரசு 5.4. 2021

ஆதி திராவிடர்களை எப்படிபார்ப்பனியம் அடிமைப்படுத்தியது? - ஜாதியத்தின் தோற்றம் - கொளத்தூர் மணி

படம்
  கொளத்தூர் மணி ஜாதியத்தின் தோற்றம் கொளத்தூர் மணி திராவிடப் பள்ளி கோடம்பாக்கம் ஜாதி என்பது எப்படி வந்தது, அதனை நாம் சாதி என மாற்றி எழுதுவது சரியா, பார்ப்பனர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்குமான வேறுபாடு, வர்க்க, ஜாதி வேறுபாடுகள் எப்படி உருவாயின, மனு தர்மம் ஜாதி உருவாக்கத்திற்கு என்ன ஊக்கத்தை கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள இந்த நூலை வாசிக்கலாம்.  கொளத்தூர் மணி எளிமையாக ஜாதியத்தின் தோற்றம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை பல்வேறு ஆதாரங்களின் மூலம் விளக்கியுள்ளார்.  மனு தர்மம் முழுக்க ஆணாதிக்கத்தின் உச்சத்தில் அன்று நிலவிய தன்மையில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. பார்ப்பன பெண்கள் பற்றிய ஒழுக்கத்தை மனுதர்ம விதிகள் குறிப்பிடுகின்றன. பார்ப்பன ஆண், சூத்திரப் பெண் இணைந்து பெறும் பிள்ளைகள், பார்ப்பன பெண் சூத்திர ஆண் இணைந்து பெறும் பிள்ளைகள் என இரண்டுக்கும் ஏராளமான வேறுபாட்டை மனு வகுத்து வைத்திருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவான மனு, அன்றைய நிலையில் இருந்த ஜாதி விவகாரங்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்தி குறிப்பிட்ட கட்டுமானத்தில் கொண்டு வந்திருக்கிறார்.  ஆரியர்கள் பல்வேற

கல்வி என்பது மாணவர்களை சுதந்திரமாக்கவேண்டும்! - கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா பாவே

படம்
  வினோபா பாவே கல்வியில் வேண்டும் புரட்சி! வினோபா தன்னறம் திருவண்ணாமலை பொதுவாக கல்வி என்பது எப்படி இருக்கவேண்டும்? அது ஒருவர் வாழும் நாடு சார்ந்தா, அவரின் தாய்மொழி சார்ந்தா, அவருக்கு கற்பிக்கப்படும் பிற நாட்டு வரலாறு சார்ந்தா என ஏராளமான கேள்விகளுக்கு வினோபா தன்னுடைய அனுபவம் சார்ந்து காந்திய வழியில் பதில் கூறுகிறார்.  குழந்தைகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கான கல்வியை அவர்களே சுதந்திரமாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அனைத்து விஷயங்களையும் மேற்கு நாடுகள் பகுத்து பார்க்கின்றன. அந்தவகையில் சில அம்சங்களை நாம் கற்றாலும் சிறந்த நூல்களை இந்திய இலக்கியங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.  காந்திய முறை என்பதால் நூல்களை வாசிப்பது என்பது ஒரு பகுதிதான். அதைத்தாண்டி, உடல் உழைப்பு சார்ந்தும் ஒருவர் வாழக் கற்பது அவசியம் என்கிறார். நூலை படிப்பதை விட உடல் உழைப்பு சார்ந்தும் ஒருவர் பல்வேறு திறன்களை கற்பது வாழ்க்கைக்கு உதவும் என ஒரு இளைஞனின் கதை மூலம் விளக்குகிறார்.  அதாவது கல்வி என்பது கற்பனையில் ஒருவன் திளைப்பதற்கானது அல்லது அதிக சம்பளத்திற்கு வேலை