இடுகைகள்

2022 இல் எதிர்பார்க்கப்படும் முக்கியமான திரைப்படங்கள்!

படம்
  மூன்ஃபால் விண்வெளி சார்ந்த படம். ஹாலே பெர்ரி நடிக்கிறார். இயக்குநர் ரோலாண்ட் எம்மிரிச். நிலவு பூமியை மோதுகிறது என சிலர் பயமுறுத்துகிறார்கள். அதை தடுக்க ஹாலே பெர்ரியும், குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவரும் சேர்ந்து விண்வெளிக்கு போகிறார்கள்.  மேரி மீ பாப் ஸ்டாராக இருக்கும் ஜெனிஃபர் லோபஸ் தனது திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர் மூலம் அவமானப்படுத்தப்பட, கல்யாணத்தை நிறுத்திவிட்டு இன்னொருவரை மணம் செய்கிறார்.  தி பேட்மேன் ராபர்ட் பட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ள படம். இதில் கேட் வுமன் பாத்திரமும் வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் இது.  தி லாஸ்ட் சிட்டி  சாண்ட்ரா புல்லக் எழுத்தாளராக நடித்துள்ள படம். இதில் அவர் ஒரு நகரம் பற்றி புனைவாக நாவல் எழுதுகிறார். அதிலுள்ள விஷயங்களை உண்மை என நம்பி அவரையும் அவரது அட்டையில் மாடலாக இருக்கும் நபரையும் கடத்துகிறார்கள். டேனியல் ரெட்கிளிப்தான் சாண்ட்ரா புல்லக்கின் பணக்கார வாசகர். டிரெய்லர் பார்ப்பவர்களை வசீகரிக்கிறது.  புல்லட் டிரெயின் கொட்டாரோ இசாகா என்பவரின் அங்கத நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் இது. இதில் பிராட்பிட் கூலிக் கொலைகார ராக நடிக்கிறார்.

2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!

படம்
  டிரேஸி ஃபிளிக் கேனாட் வின் டாம் பெரட்டா டிரேஸி ஃபிளிக்  என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.  தி கிரேன் வைஃப் சிஜே ஹாசர் ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.  ரெயின்போ ரெயின்போ லிடியா கான்கிளின் நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.  எய்தர் ஆர்

ஆணவக்கொலையால் மீளமுடியாத கற்பனையில் சிக்கும் மனைவியை மீட்கும் கணவன்! அட்ரங்கி ரே - ஆனந்த் எல் ராய்

படம்
  அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் ஆனந்த் எல் ராய் ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்னி  கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த விசு, தனது மனைவியை மெல்ல விரும்பத் தொடங்குகிறான். ஆனால் அவள் வேறு ஒருவரை விரும்புகிறாள். அதுயார், அந்த காதலை நிறைவேற்ற விசு உதவினானா என்பதுதான் படத்தின் கதை.  பீகார் பையன் வேண்டாம் வேறு யாராவது ஒரு பையனை பிடித்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம் என குடும்பமே முடிவு செய்து ரிங்குவை தயார் செய்கிறார்கள். உணவில் மயக்க மருந்து கொடுத்து அவளை கல்யாணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையாக மருத்துவ மாணவர் மதுசூதனை பார்க்கிறார்கள். ஆனால் இருட்டில் தவறுதலாக விசு(தனுஷ்) பிடித்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்விக்கிறார்கள். மணப்பெண்ணுக்கு மயக்க மருந்து என்றால் மாப்பிள்ளைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். இதனால அவர் சிரித்துக்கொண்டே வேறுவழியின்றி கல்யாணம் செய்கிறார்.  இன்னொரு விஷயம், மருத்துவ மாணவராக விசு தனது துறைத் தலைவரின் மகளை கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கிறார். இதற்கான நிச்சயம் ஒருவாரத்தில் நடக்கவிருக்கும்போ

ஐஏஎஸ் கனவுக்காக தட்டுவடை விற்கும் மாணவர்கள்!

படம்
  தட்டுவடை செட் பொதுவாக சினிமாக்கார ர்கள்தான் பாலத்தின் அடியில் தூங்கினேன். அக்கா கடையில் கடன் வைத்து இட்லி வாங்கினேன். இப்படி சுதந்திரப் போராட்டமே செய்துதான் படத்தை இயக்கினேன். ஜெயித்தேன் என டிவி பேட்டிகள் முதல் யூடியூப் பேட்டிகள் வரை சொல்லுவார்கள். படிப்பிற்காகவே போராடும் நிலை இன்னும் சமூகத்தில் இருக்கிறது. அதைப்பற்றியதுதான் இந்தக் கட்டுரை.  சேலத்தில் உள்ளது கோரிமேடு. இங்குள்ள சிறிய உணவுக்கடையைச் சுற்றி இளைஞர்களாக நிற்கிறார்கள். அனைவரும் வந்தது தட்டுவடை விற்கும் கடைக்காகத்தான். இதுதான் அந்த கடையின் சிக்னேச்சர் டிஷ். தட்டு வடையை சாண்ட்விட்ச் போல வைத்துக் கொடுக்கிறார்கள். அதில், கேரட், பீட்ரூட், வெங்காயம், புதினா நிரம்பியுள்ளது. இதை தொட்டுச்சாப்பிட மிளகாய் சட்னி கொடுக்கிறார்கள்.  இதை வி கிஷோர், எம் தனகோடி என்ற இரு 12ஆம் வகுப்பு மாணவர்கள்தான் நடத்துகிறார்கள். இருவருக்குமே ஐஏஎஸ் தேர்வில் வெல்வதுதான் கனவு. எனவே தங்களுடைய குடும்பத்தை இதற்காக குறை சொல்லாமல் தங்கள் கல்விச்செலவை தாங்களே பார்த்துக்கொள்ள கடையைத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிஷோர், திருவேனி கார்டனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டு ஆகிறது!- ஜனவரி 11

படம்
  சார்லஸ்,பிரடெரிக் படம்: இந்து தமிழ் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டானதை எப்போதும் போல முந்திக்கொண்டு ஆனந்த விகடனின் அகஸ்டஸ் எழுதிவிட்டார். இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி மீண்டும் ஒருமுறை அதனை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.  நூறாண்டுகளுக்கு முன்னர், ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அவரை புற்றுநோய் வந்தவர்கள் போலவே பார்ப்பார்கள். என்ன பாவம் பண்ணினியோ போச்சு உசுரு போச்சு என பாவப்பார்வை பார்த்து நொட்டுப் பேச்சு பேசுவார்கள். அவர்கள் பொய்யாக வருந்திய விஷயம் உண்மைதான்.  குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சில மாதங்களில் நோயாளி இறந்துபோய் கல்லறை வாசகங்களை தேடி பொறித்து விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நோயாளி உணவுக்கட்டுப்பாடுடன் இருந்தால் நிறைய ஆண்டுகள் வாழலாம்.  கணையத்தில் சுரக்கும் இன்சுலின்தான் இப்படி இறப்புக்கு காரணம் என்பதை எட்வர்ட் ஆல்பெர்ட் ஷார்ப்பி ஹாபர் என்பவர் கண்டுபிடித்தார். இன்சுலின் என்ற வார்த்தையே இவரது உபயம்தான். 1921ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரடெரிக் பாண்டிங் என்பவர், கணையத்திலிருந்து

குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம், கொலை செஞ்சிருக்க கூடாது! - முப்பிடாதி

படம்
எனக்கு முதன்முதலில் கிணத்துல இருந்து எடுத்த பிணம் பத்தி ஞாபகம் இல்லை. ஆனால் மறக்கமுடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. திருமணமாகாத பொண்ணு தனக்கு பொறந்த குழந்தை கிணத்துக்குள்ள வீசிட்டு போயிருச்சி. அந்த குழந்தை பொறந்து ஒரு நாள்தான் ஆயிருக்கும். கிணத்தில் நாற்பது அடிக்கு கீழே இருந்து. அதை கையில் எடுத்துட்டு வந்தேன். துணியில வெச்சு வெளியே கொண்டு வந்தாங்க. அந்த குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம். கிணத்தில் வீசிக் கொன்னது சங்கடமாக இருந்தது என்றார் முப்பிடாதி. தென்காசி வட்டாரத்தில் யாராவது நீர்நிலையில் இறந்துபோனால் கூப்பிடு முப்பிடாதியை என்றுதான் சொல்லுவார்கள். அந்தளவு பிரபலம். பிணங்களை மூச்சு தம் கட்டி கீழேயிருந்தே மேலே கொண்டு வந்து விடுகிறார். இப்போது 83 வயதாகும் மனிதர். பிணங்களை மீட்பதை 20 வயதிலிருந்து செய்து வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண், ஒரு பெண். இவர்கள் யாருக்குமே அப்பா பிணத்தை தூக்குவது பிடிக்கவில்லை. ஆனால் முப்பிடாதி காவல்துறையினர் கூப்பிட்டால் உடனே அந்த குரலுக்கு செவிசாய்த்து தனது பணியை செய்து தருகிறார். போலீசாரும் இவருக்கு இப்போதுதான் முதியோர் பெ

அரசுத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுப்பாலினத்தவர்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை அறிவு இருந்தாலும் கூட அவர் என்ன பாலினம், என்ன சாதி என்பதைப் பொறுத்தே அவர் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது. இந்த தடைகளை தாண்டி சாதிக்க உங்களுக்கு முதுகெலும்பு எஃகால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் கேலி, கிண்டல், வசைகளை கடந்து வெல்ல முடியும். குறைந்தபட்சம் தற்கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியும். சமூக அழுத்தம் அந்தளவு மோசமாக மாறியிருக்கிறது. அதிலும் மாற்றுப்பாலினத்தவர் என்றால் நிலைமையை சொல்லவே முடியாது. அந்தளவு சிக்கலாக இருக்கும். அமிர்தாவுக்கு வயது 38. தற்போது திருவண்ணாமலையில் தட்டச்சராக இருக்கிறார். தனியார் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் வேலை பார்த்தவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். அரசு தேர்வெழுதி இப்போது தட்டச்சராக தேர்வு பெற்று வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பம் தினக்கூலிதான். குடும்பத்தில் மொத்தம் ஏழுபேர். அத்தனை பேரும் வறுமையால் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டார்கள். இதில் அமிர்தா மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பு படித்தவர். இதற்கும் அவர் வேலை செய்துதான் கல்வி கட்டணங்களை கட்டியிருக்கிறார். முக்கியமான

இஸ்ரோவின் வரலாற்றில் ஜனவரி 10!

படம்
1962ஆம் ஆண்டு தி இந்தியன் நேஷனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் நிறுவனம், ஜவகர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. பின்னாளில், இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் இதன் பெயர் இஸ்ரோ என மாற்றப்பட்டது. இப்படி மாற்றப்பட்ட ஆண்டு 1969. முதலில் இஸ்ரோவின் நோக்கம், செயற்கைக்கோள்களை ஏவி தகவல் தொடர்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. பின்னாளில்தான் பல்வேறு ஆய்வுகளுக்காக விண்வெளியில் விண்கலன்களை ஏவத் தொடங்கியது. சந்திரயான், மங்கல்யான், ககன்யான் வரை இப்போது முன்னேறி வந்துள்ளது. ஜனவரி 10, 2017 அன்றுதான் விண்வெளியில் கேப்சூல் ஒன்றை அனுப்பி அதனை அங்கு பனிரெண்டு நாட்கள் வைத்திருந்துவிட்டு பின் பூமிக்கு திரும்ப வரச்செய்தனர். எஸ்ஆர்ஈ -1 என்ற விண்கல கேப்சூல் சோதனை மூலமே, விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் பெற்ற வெற்றிதான். இனி எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கப்போகிறது. ஆனால் இஸ்ரோ இப்போது சீனாவின் ஆப்போ நிறுவனத்தோடு சேர்ந்து செய்யும் ஆய்வுகள், திகைப்பை ஏற்படுத்தியுள்ளன. நாவிக் என

ஜனவரி 10 - திரைப்பட விரும்பிகளுக்கான தினம்

படம்
சில படங்கள் வெளியாகும் போது அதன் தனித்துவம் தெரியும். அவை அப்போது வணிகரீதியாக வெற்றி பெறலாம். அல்லது தோற்றுப்போகலாம். ஆனால் அதனை காண்பவர்கள் மனதில் தனித்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனைப் பற்றி நண்பர் ஒருவர் சொன்னார். படத்தை நிறைய விஷயங்களை வைத்து அடர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். எனவே அதனை பலமுறை பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்போதுதான் அதிலுள்ள விஷயங்களை உள்வாங்க முடிகிறது என்றார். அப்படி ஜெர்மன் மொழியில் வந்த படம்தான் மெட்ரோபோலிஸ். அறிவியல் படங்களில் கிளாசிக் என திரைப்பட காதலர்களால் கொண்டாடப்படும் படம் இது. அமைதிப்பட காலத்தில் 2026இல் நடக்கும் படமாக உருவாக்கப்பட்டது. இதனை திரைக்கதை எழுதி உருவாக்கியவர்கள் ஃபிரிட்ஸ் லாங், அவரது மனைவி தியா வான் ஹார்பியூ. படம் நிறைய விஷயங்களால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. இது அனைவருக்கும் பிடித்த படமாக இல்லை. படத்தைப் பார்த்தவர்கள் பலரும் பீதியடைந்தவர்களாக திரையரங்கை விட்டு வெளியேறினார்கள். படத்தைப் பார்த்து வியந்து வசீகரிக்கப்பட்டவர்களின் ஹிட்லரின் சகாவான கோயபல்சும் ஒருவர். படத்தில் காட்டப்பட்ட இடங்களைப் பார்த்தவர். திரைப்பட இயக்குநர்

ஸ்டீபன் ஹாக்கிங் தினம்! - ஜனவரி 8

படம்
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை யாரும் அறியாமல் இருக்க முடியாது. இயற்பியல், வானியல் சார்ந்த துறைகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை தனது ஆய்வின் வழியாக சொன்னவர். முழு உடலும் செயலிழந்துபோனாலும் வீல்சேரில் உட்கார்ந்து பல்வேறு அறிவியல் சாதனைகளை உருவாக்கியவர். ஜனவரி 8, 1942ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தவர் ஸ்டீபன். இவரது பெற்றோர் மருத்துவர்கள். குடும்பமே படிப்பாளிகளைக் கொண்டது. படிப்பை முக்கியமானதாக எடுத்துக்கொண்டவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர். 1962 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர்ந்தும் படித்தார். 1963ஆம் ஆண்டு ஸ்டீபனின் உடலில் மோட்டார் நியூரான் தொடர்பான நோய் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதற்குப்பிறகு, அவரது முழு உடலும் செயலிழந்துபோனது. பின்னர்தான், அவரது முக தசைகளின் இயக்கத்திற்கு ஏற்ப அதனை பேச்சாக மாற்றும் கருவியை உருவாக்கினர். இதன் வழியாக அவர் பிறருடன் தொடர்புகொள்ள முடிந்தது. உடல் இத்தனை பிரச்னைகளைக் கொண்டிருந்தாலும் கூட இயற்பியலில் பல்வேறு அறிவியல் கருத்துகளைக் கண்டுபிடிக்கவும், அதனை உலகிற்கு சொல்லவும் உழைத்தார். கருந்துளை பற்றிய கருத்

உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஒருங்கே தரும் நூல்! - சிறகுக்குள் வானம் - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
சிறகுக்குள் வானம் ஆர். பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம். இந்த நூல் முழுக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கானது என்று தனது இரண்டாம் சுற்று நூலில் கூறியுள்ளார் நூல் ஆசிரியரான ஆர். பாலகிருஷ்ணன். இவர் ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேர்தல் ஆணைய பணிகளில் இவர் ஆற்றிய சாதனைகள் அதிகம். சிறகுக்குள் வானம் என்பது, முழுக்க ஆர். பாலகிருஷ்ணன் எப்படி அரசு அதிகாரி ஆனார். அவருக்கு உதவிய மனிதர்கள், ஏற்பட்ட சோதனைகள், அதனை அவர் எப்படி வென்றார் என்ற கதைகளை ஊக்கத்துடன் நமக்கு சொல்கிறது. கூடவே அவர் எழுதிய கவிதைகளும் அனைத்து பக்கங்களிலும் நமக்கு உற்சாகம் தருகின்றன. நூலில் தனக்கு பள்ளி கல்லூரிகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர்களை பின்னாளிலும் மறக்காமல் மரியாதை செய்வதை வாசிக்கும்போது ஆசிரியரின் எழுத்து மீது மரியாதை கூடுகிறது. பணியில் செய்யும் விஷயங்களைப் பொறுத்தவரை எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை தனிநபர்தான் தீர்மானிக்க வேண்டும். நூல் ஆசிரியர் கூடுதலாக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். தி எக்ஸ்ட்ரா மைல் என்பது முக்கியமான அத்தியாயம். ஒடிஷ