இடுகைகள்

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீட்டா

ஆறுதலின் பேராறு - ரூஹ் - நாவல் - ல.ச.கு

படம்
  லஷ்மி சரவணக்குமார் ல.ச.கு - ரூஹ் நாவல் ரூஹ் லஷ்மி சரவணக்குமார் முஸ்லீம்களின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் ஆன்மிக தரிசனம், அதை நோக்கிய பயணம் என பல்வேறு விஷயங்களை மனமுருகும் மொழியில் பேசுகிற நாவல் ரூஹ். கொமோரா என்ற நாவல் முழுக்க உள்ள கோபம், வன்மம், வன்முறை குதப்புணர்ச்சி என ஒரு வித வெறுப்பின் சூடு குறையாமல் இருக்கும். அதன் ஒருபகுதியாக இருக்கவேண்டிய நூல் இது. ஆனால், ஆசிரியரின் முடிவால் தனி நாவலாக மாறியிருக்கிறது.   ரூஹ் நாவலில் ஒப்பீட்டளவில் வன்முறை சற்று குறைவு. ஆனால்   இதிலும் பால்ய கால கேலி கிண்டல், அவமானத்திற்கு பழகுதல், காயப்படுதல், பலவந்த ஓரினப் புணர்ச்சி, தடவுவதல், கைவேலை ஆகியவை உண்டு. ஆனால் இதெல்லாம் நாவலின் சிறுபகுதிதான். இதையெல்லாம் கடந்த தன்மை,விருப்புவெறுப்பற்ற இயல்பை நோக்கி நாவல்   செல்கிறது. நீதி, அநீதி, நியாயம், அநியாயம், நல்லது , கெட்டது என்ற நிலையைக் கடந்து உடல், மனம் என அனைத்தையும் ஒருவன் ஒடுக்கி அதன் வழியாக இறைவனைச் சென்றடைவது, அந்த நிலையிலிருந்து பிறரின் வாழ்வுக்காக இறைவனிடம் யாசிப்பது, பிரார்த்திப்பது என மாறும் வாழ்க்கை பற்றிய விவரணைகள் மனதை பித்தாக்குகி