இடுகைகள்

ஆர்எஸ்எஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? - மாட்டிக்கொண்ட விக்கிப்பீடியா

படம்
இன்று எந்த தகவல்கள் தேவை என்றாலும் பலரும் சொடுக்குவது விக்கிப்பீடியாவைத்தான். சிலர் இதனை பல்வேறு எடிட்டர்கள் திருத்துவதால் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்று பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை நாடுவார்கள். ஆனால் அதிலும் கூட தொன்மையாக தகவல்கள்தான் இருக்கும். நடப்பு சம்பவம், விருதுவாங்கிய நபர் என்றால் விக்கிப்பீடியாவில் எளிமையாக அவர் பற்றி தகவல்களை பதிவிட்டு பக்கங்களை உருவாக்க முடியும். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்துத்துவா குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். சிலர் உத்தரப்பிரதேசத்திலிருந்து துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராட்டக்காரர்கள்  மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். டில்லியில் அண்மையில் தேர்தல் வெற்றியை ருசித்த அரவிந்த் கெஜ்ரிவால் நமக்கு எதற்கு வம்பு என்று போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல், முஸ்லீம் வீடுகளை எரித்த சம்பவ இடத்திற்கு கூட வராமல் நடுநிலை காத்தார். நிச்சயம் வரலாறு இதற்காகவே அவரை நினைவுகூரும். இந்த வெறுப்புவாத கலவரத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவர்கள

லஜபதிராய் இந்து, முஸ்லீம் பிரச்னையை முன்னதாகவே அடையாளம் கண்டார்!

படம்
மாதவ் கோஸ்லா படம்- இந்தியன் எக்ஸ்பிரஸ் மக்கள்தான் அவர்களுக்கான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் மாதவ் கோஸ்லா , அசோகா பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா சட்டப்பள்ளி ஆகிய அமைப்புகளில் பேராசிரியராக பணிபுரிகிறார் . ஆங்கிலம் மூலம் : நளின் மேத்தா இந்திய அரசியலமைப்பு சிஏஏ போன்ற சட்டங்களை ஏற்பது சரியானதா ? இல்லை . அது தவறானது . மக்கள் உருவாக்கும் சட்டங்களில் இதுபோன்ற விஷயங்கள் இருக்கக்கூடாது . நான் இவற்றை அரசியலமைப்புச்சட்டத்தில் இணைக்க விரும்பவில்லை . லாலா லஜபதி ராய் தன் அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் இந்துத்தவ பார்வையைக் கொண்டிருந்தாரா ? லாலா லஜபதி ராய் முக்கியமான அரசியல் ஆளுமை . அவர் வாழும் காலத்தில் மதத்தைப் பின்பற்றினால் அது பெரிய சிக்கலாக மாறும் என்பதை மனப்பூர்வமாக அறிந்திருந்தார் . இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மதம் ஆகியவற்றுக்கு இடையில் எழும் வேறுபாடுகளையும் அவர் அடையாளம் கண்டார் . அன்றைய காலத்தில் அம்பேத்கருக்கும் , லாலா லஜபதிராய்க்குமான மதரீதியான வேறுபாடுகள் தீவிரமாக இருந்தன . இந்து மகாசபையைச் சேர்ந்த சாவர்க்கர் , கோல

இந்தியர்கள் பெருமைப்படுவதற்கான ஓர் நூல்!- இந்துத்துவா நேசர்களுக்கான நூல்

படம்
நம்பக்கூடாத கடவுள் - ஹிந்துத்துவா சிந்தனைகள் அரவிந்த் நீலகண்டன் கிழக்கு பதிப்பகம் வரலாற்றில் மொகலாயர்கள் படையெடுப்பு இந்துக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? அசோகர் மரம் நட்டார், பிற மதங்களை போஷித்தார் என்பவர்கள் இந்து மன்னர்களைப் பற்றி(வீர சிவாஜி) ஏன் எதுவும் பேசமாட்டேன்கிறார்கள், இந்தியா எனும் பன்மைச் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொக்கிஷங்களை அழித்தவர்கள், திருடியவர்கள் யார், மொகலாயர்களின் வரி, பிற மத மன்னர்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் இன்றும் இந்தியர்களின் மனதில் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலில் பதில் எழுதியுள்ளார். இந்நூலில் 60 பக்கங்கள் வரை மேற்சொன்ன விஷயங்கள் பேசப்படுகிறது. பின்னர் அப்படியே தடம் மாறி மேற்கத்திய அரசுகள் இந்திய கலாசாரப் பொக்கிஷங்களை மூலிகைகளை எப்படி திருடுகிறார்கள், அதைத் தடுக்கும் அவசியம் என தடம் மாறுகிறது. இந்த இடம் நூலில் பொருந்தாமல் இருக்கிறது. முழுக்க இந்துத்துவ கருத்துகள் என்று படிப்பவர்களுக்கும், இந்த இடம் பார்த்திபன் படம் போல புரியாமல் போக அதிக வாய்ப்பு உண்டு.  அயோத்தி ராமர் கோவில் தீர்ப

தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்

படம்
யா ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர். அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி. ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள். 2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டத

பிரிவினையைத் தூண்டும் தாக்குதல்கள்

படம்
globalvoices.org காஷ்மீரில் நாற்பது ராணுவ வீர ர்கள் வெடிகுண்டு தாக்குதலில் இறந்தனர். நிச்சயம் இது வருத்தப்படவேண்டிய  நிகழ்ச்சிதான். அதற்காக காஷ்மீர் இளைஞர்கள் முழுவதும் இந்த சம்பவத்துக்கு காரணம் என அடித்து விரட்டினால் மக்கள் எங்கே போவார்கள்? பாஜக தனது கரசேவகர்களை சரியாகப் பயன்படுத்தி இந்த சம்பவத்தின் மூலமே ஆட்சியைப் பிடிக்க தயாராகி வருகிறது. எப்போதுமே தேர்தலுக்கு முன் ஓரிடத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவது ஆரஞ்சுக் கட்சியின் வழக்கம். தற்போது டேராடூன், பஞ்சாப், ஜம்மு ஆகிய இடங்களில் மாணவர்கள் அரசின் இரும்பு பிடியில் மாட்டியுள்ளனர். இதுதான் வாய்ப்பு ஆர்எஸ்எஸ் குண்டர்கள் படை முஸ்லீம்களை தாக்க தொடங்கியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த ஜாவித் அகமது கான் என்பவரை வந்தே மாதரம் சொல்லச்சொல்லி மூக்கில் குத்தி தாக்குதலை நடத்தியுள்ளது வலதுசாரி குண்டர்கள் படை. இதேபோல நாடெங்கும் காஷ்மீரிகள் உள்ள இடத்தில் அவர்களை குறிவைத்து தாக்கத்தொடங்கியுள்ளது இந்து குண்டர்கள் படை. ஏறத்தாழ இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றிதான். முஸ்லீம்களைக் கொண்ட பாகிஸ்தானாக அவர்கள் இருக்கையில், நாம் இந