இடுகைகள்

ஒரு துளி மணலில் ஓர் உலகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கிகளையும் கூட அரசு தனியாருக்கு விற்றுவிட வாய்ப்பிருக்கிறது - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay ஆருயிர் தோழர் ராமமூர்த்திக்கு வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? ஒருமணிநேரமாக பின்னி பெடலெடுத்த மழை இப்போதுதான் நின்றிருக்கிறது . மழை விட்டும் தூவானம் விடவில்லை . பணிச்சுமை காரணமாக கடிதம் எழுதவில்லை . மன்னியுங்கள் . ஆ ., வியில் மையம் கொண்ட சைக்ளோன் தொடர் வாசித்தீர்களா ? அதில் குளோபல் ஆக்டர் பேசுகிறார் . அவரின் பேச்சு முழுவதும் ஊழல் ஒழிப்போம் என்று ஞாயிற்றுக்கிழமை வேலையின்றி தேநீர் சட்டை அணிந்து காமராஜர் சாலையில் பேரணி செல்பவர்களுக்கானது . அன்றைய பொழுது இனிதாக கழிய வேண்டுமல்லவா ? இடியாப்பத்தில் இட்லியை நுழைத்து பேசும் அவரது பேச்சு அறிவுநுட்பமானவர்களுக்குப் புரியலாம் . அனைவருக்கும் புரியும்படி யாரேனும் செய்தியாளர்கள் அவர் சொன்னதை திரும்ப எழுதினால்தான் உண்டு . இவருக்கு ஏதாவது வாயப்பு உண்டா ? இருக்கிறது . ஒட்டுமொத்த இந்தியாவில் 30 சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்று மத்தியில் காவிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால் இந்த தேசத்தில் எதுதான் நடக்காது ? மக்கள் ஜனநாயகப்பூர்வமாக வாக்குகளை போடுகிறார்கள் . ஆனால் ஜெயித்தவர்கள் அதற்குப்பிறகு , தங்களுக்கு பிடித்த கட்சியுடன் சேர்ந்து ஆட

அரசு பணி என்பது சமூக பாகுபாடுகளை போக்கும் செயல்பாடு! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
பிக்ஸாபே அன்புள்ள இனமானத் தோழர் ராமமூர்த்திக்கு , வணக்கம் . எழுபதாவது சுதந்திர தின கொண்டாட்டத்தை இந்தியா கொண்டாடி வருகிறது . நமக்கு திரைப்படம்தானே விடுமுறையின் அடையாளம் . இப்போது போகன் படம் வந்திருக்கிறது . மோடியின் உரை படிக்க நன்றாக இருக்கிறது . நல்ல எழுத்தாளர் எழுதியிருக்கிறார் . ஆனால் நடைமுறையில் பல விஷயங்கள் சாத்தியமில்லாதது போல படுகிறது . டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சுதந்திர தின சிறப்பிதழ் அழகாக நிறைய தகவல்களோடு வந்துள்ளது . முல்லை பெரியாறு - ஊரோடி செல்வக்குமார் எழுதிய நூலை படித்து வருகிறேன் . பென்னிகுக் அணை கட்ட பட்ட கஷ்டங்கள் , ஜனவரி 15 இல் அவருக்கு பொங்கல் வைப்பது , பென்னிகுக் என பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவது என புகழ்மாலை விஷயங்களை வெட்டி வீசிவிட்டு நடந்த விஷயங்களைப் பற்றி நேர்த்தியாக பதிவு செய்கிற நூல் இது . பாதி படித்துவிட்டேன் . நான் சிலமுறை உங்களைத் தொடர்பு கொள்ள நினைக்கும்போது நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுகிறீர்கள் . விடுமுறை தினங்களில் காதலுக்கு ஓவர்டைம் வேலை செய்கிறீர்களா ? ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தகம் ஏதாவது வாங்கினீர்களா ? நான் வே

பணியில் தனிப்பட்ட அரசில் கருத்துகள் அவசியமில்லை! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay இனிய நண்பர் ராமமூர்த்திக்கு , வணக்கம் . முன்பு என்னை இடதுசாரி என்று கூறினீர்கள் . இன்று உங்கள் சம்பளம் உயரவேண்டும் என்பதற்காக சிவப்புக்கொடியை ஏந்தியுள்ளீர்கள் . காலத்தின் கோலம் இது . நான்சி பிரைடே படித்து நெகிழ்ந்து இன்பம் சுகித்த ஆள் நீங்கள் . இன்று செஞ்சதுக்கம் , உரிமை , தியாகம் பற்றி பேசும் நிலை . தினசரி எங்களது அறைக்கு நீர் போட்டுவிட மன்னரைப் பார்த்து பரிசில் பெற காத்திருக்கும் புலவர் போல காத்திருந்து நின்று நீரை வாங்கி வருகிறோம் , புலவரிடம் ஏடுகள் இருக்கும் . எங்களிடம் குடங்களும் பக்கெட்டுகளும் இருக்கின்றன . நான் அடுத்தமுறை ஊருக்கு வந்தால் உங்கள் வீட்டுக்கு வர முயல்கிறேன் . உங்கள் ஊர் மிகவும் தள்ளி அமைந்துள்ளது . சேலத்தில் இறங்கி நாமக்கல் பஸ் பிடித்து வருவது என்பது எனக்கு கனவு போலவே படுகிறது . வாய்ப்பிருந்தால் கொடுமுடி வந்தால் அருகே வந்துவிட்டு போகலாம் அல்லவா ? உங்களது புத்தகங்களை வீட்டில் கொடுத்துள்ளேன் . வாங்கிக்கொள்ளுங்கள் . எனது கையால் நூல்களைப் பெற விரும்பினால் அதற்குள் நூல்மீது சிலந்திகள் வலைகட்டிவிடும் வாய்ப்புகள் இருக்கிறது . மகாபாரத காவியத்த

மக்களின் பிரச்னைகளுக்கு அவர்கள்தான் போராடவேண்டும்!- ஒரு துளி மணலில் ஓர் உலகு

படம்
இனிய தோழர் ராமமூர்த்திக்கு , வணக்கம் . தொழிற்சங்கம் , போராட்டம் பற்றிய உங்களது பேச்சுகள் காலத்தின் கட்டாயம் . ஆனால் இதற்கு என்ன பயன் இருக்கப் போகிறது என்று தெரியவில்லை . காவிக்கட்சி ஆட்சியில் சங்கம் , கருத்துக்கூறுவது , உரிமைகளைப் பேசுவது என அனைத்துமே தேச துரோகம் . நீங்கள் அரசு பதவியில் இருந்தாலும் தொழிறசங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி வருகிறீர்கள் . வைப்ரேஷன் மோடில் அனைவரையும் இயக்கி கொண்டு வருவது பெரிய விஷயம்தான் . இங்கு அனைவருமே காத்திருப்பது தொண்டர்களாக அணிதிரள்வதற்குத்தான் . தலைவராக முன்னே அவர்களை நடத்திச்செல்ல யாராவது வேறு மாநிலங்களில் அல்லது நாட்டில்தான் ஆட்களைப் பிடிக்கவேண்டும் . சித்தாந்தரீதியில் நீங்கள் தயாராவது போராட்டங்களுக்கு முக்கியமானது . உங்கள் துறைசார்ந்த ஊழியர்களைப் பார்த்தால் எதையும் முனைப்புடன் போராடிப் பெறுபவர்கள் போல தோன்றவில்லை . உங்கள் போராட்டம் வெற்றிபெற்று நின்றுபோன சம்பளத்தொகைகளைப் பெற வாழ்த்துகிறேன் . மக்களிடம் நெருக்கமாக இருக்கச் செய்யும் கள அனுபவங்களே உங்களை சரியான இடத்தில் இருத்தும் . இனி வரும் காலம் முழுவதும் சூழலுக்கு எதிரான அரச

பெண் செய்தியாளர்களை கொச்சைப்படுத்தக் கூடாது! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay இனிய தோழர் ராமமூர்த்திக்கு , வணக்கம் . நலம்தானே ? ஊதியம் சார்ந்த பஞ்சாயத்து இருப்பதாக சொன்னீர்கள் . இப்போது சென்னைக்கு வருவதாக அலைபேசியில் சொன்னது போராட்டத்திற்காகத்தானா ? புரட்சிகரமான செல்ஃபீகளை நீங்களும் உங்களது சக நண்பர்களும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வரலாற்று பேறு கிடைத்திருக்கிறது . பயன்படுத்திக்கொள்ளுங்கள் . ஆழ்வார்பேட்டை ஆண்டவரே போராட்டங்களுக்கு நான் ரசிகன் என்று சொல்லியிருக்கிறார் . அவரின் தாசரான நீங்கள் ஏதாவது கருத்துச்சொல்லி பேசுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா ? பேசு தெய்வமே பேசு . மக்கள் கருத்து என்ன , மகேஸ்வரி ஒப்பீனியன் என்ன என்று நிறையபேரிடம் நாம் கேட்கலாம் . நம்மிடம் பிறர் கேட்டால் எப்படி ? நடிகர் பார்த்திபனை மனதில் செபித்தபடியே பேசினேன் . நண்பர்கள் மிரண்டு ஓடிவிட்டனர் . என்னமோ இப்போது ஆபாச படங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன . உலக சினிமா பார்க்கும் நண்பர்களின் தொடர்பு ஏற்படுத்திய பாதிப்பா ? என்று தெரியவில்லை . நிறைய விஷயங்கள் அப்படி இருக்கலாமோ என்று தோன்றுகிறது . எடுத்த படத்தை ரசிக்க முடியாமல் இப்படியாகிவிட்டது நிலைமை . பஸ்டே கொண்டாட