இடுகைகள்

கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளுக்கான தகவல்தளம் உருவாகிறது!

படம்
pixabay விவசாயிகளுக்கான தகவல்தளம்! இந்திய அரசு, விவசாயத்துறையை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. தற்போது தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தகவல்களை, தமிழக  அரசு சேகரித்து வருகிறது. இத்தகவல்களை பெறும் மத்திய அரசு,  தேசிய  விவசாயிகள் தகவல்தளம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆய்வு, இது பரிசோதனை முயற்சிதான். இந்த ஆய்வுகளை மத்திய அரசு தனது மானிய உதவிகள் சரியானபடி விவசாயிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை அறியவே செய்கிறது.   இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் என்று மத்திய அரசு தேர்ந்தெடுத்து தகவல்தளத்திற்கான தகவல்களை திரட்டி வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின்படி, இந்திய விவசாயிகளுக்கு, ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மானியம் விவசாயக் காப்பீடு,  மண்ணின் தரம், உரங்கள், மின்சாரம் ஆகியவற்றுக்காக வழங்கப்படுகிறது. ஆனால் இவை முறையானபடி விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என அரசுக்கு புகார்கள் வந்தன. இதற்காக, விவசாயிகள் பற்றி

கறுப்பின எழுத்தாளர்களுக்கு கௌரவம் தேடித்தந்த பெண்மணி!

படம்
ozy தாளின் வெற்றுப்பக்கத்தை ஜெர்கின்ஸ் பார்த்து டெட்லைன் ஆச்சே என்று பதற்றம் கொண்டதில்லை. இருபத்தாறு வயது என்றாலும் வார்த்தைகள் தாளில் கொட்டுகின்றன. அத்தனையும் எளிய மனிதர்களுக்கான சொற்கள். அப்படியிருக்க கவலை என்ன? படைப்பு என்பது கதையோ, கட்டுரையோ, நாவலோ உழைப்பு ஒன்றுதான். ஜெர்கின்ஸூம் கட்டுரை சரியாக வரவேண்டுமென பசியோடு உணவை மறுத்து கணினியோடு போராடியவர்தான்.  திஸ் வில் பி மை அன்டூயிங்: லிவிங் அட் தி இன்டர்செக்ஷன் ஆஃப் பிளாக், ஃபீமேல் அண்ட் ஃபெமினிஸ்ட் இன் (வொய்ட் ) அமெரிக்கா என்ற இவரின் நூல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஏழாவது இடம் பிடித்து சாதித்த நூல். நான் என் எழுத்தின் வழியே விவாதங்களை உருவாக்க விரும்புகிறேன்.  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரஷ்யன், ஜப்பானிய மொழி இலக்கியங்களைக் கற்றவர் ஜெர்கின்ஸ். கிரியேட்டிவ் எழுத்துபற்றிய படிப்பை பெனிங்டன் கல்லூரியில் படித்தவருக்கு ஆறு மொழிகளை பேசத்தெரியும். வகுப்பில் ஒரே கறுப்பினப் பெண் மாணவி இவர்தான்.  தன் பதினான்கு வயதிலிருந்து நாவல்களை எழுதி வருகிறார் ஜெர்கின்ஸ். தெற்கு நியூ ஜெர்சியில் வாழ்ந்து வந்தவர், பிலடெல்பியாவுக

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. கார்ல் மார்க்சும் அவருடைய சகாவான ஏங்கெல்சும் ஒன்றிணைந்தும் தனியா