இடுகைகள்

கற்பனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகில் ஜோம்பிகள் உருவாக வாய்ப்புள்ளதா? உண்மையும் உடான்ஸூம்

படம்
      உலகில் ஜோம்பிகள் உருவாவது சாத்தியம்தான் ! ரியல் : 1968 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில திரைப்படங்கள் வழியாக ஜோம்பிகள் பற்றி சிந்தனைகள் பேசப்படத் தொடங்கின . சாபம் அல்லது நுண்ணுயிரிகளின் தாக்குதல் காரணமாக ஜோம்பிகள் எனும் சதை தின்னும் கொடூர மனிதர்கள் உருவானதாக காமிக்ஸ்கள் , சாகச நாவல்கள் கூறின . பூமியில் நிலவும் கடும் குளிர் , அனல் வெயில் , மழை , புயலுக்கு இவர்கள் தாக்குப்பிடித்து வாழ முடியாது . மூளை செயல்படாதபோது , உடல் உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படாது . ஜோம்பிகள் பெரும்பாலும் தலையில் அதிகம் காயங்களோடு இருப்பதால் , அவர்கள் நடந்துவருவது , ஒருவரைத் தாக்குவது சாத்தியமில்லை . நுண்ணுயிரிகள் தாங்கள் தாக்கும் உயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை இருக்கும் . ஜோம்பிகள் நுண்ணுயிரி தாக்குதலால் இறப்பதற்கே வாய்ப்பு அதிகம் . ஐம்புலன்கள் வேலை செய்யாது , செரிமானத் திறன்கள் இல்லை என்பதால் ஜோம்பிகள் பூமியில் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை . நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது ரியல் : உண்மை . இங்கு நம்மை சுமந்து பல்வேறு நகரங்களுக்கு இடையில் பறக்கும் விமானங்களின் எந

சிறுமியின் கற்பனையில் உருவாகும் அழகிய தீம்பார்க்கின் வில்லன் யார்? வொண்டர் பார்க்

படம்
    வொண்டர் பார்க் Director: Dylan Brown   Screenplay by: Josh Appelbaum, André Nemec   ஜூன் என்ற சிறுமி கற்பனையாக ஒரு தீம் பார்க்கை உருவாக்குகிறாள். அவளும் அவளது அம்மாவும் சேர்ந்து லீகோ வகை பொம்மைகளை சேர்ந்து உருவாக்குகிறார்கள். அவள் வைத்துள்ள பீநட் என்ற குரங்கு பொம்மையின் காதில் தான் செய்யும் அனைத்தையும் சொல்லுவது ஜூனுக்கு பிடிக்கும். ஜூனுக்கு தெரியாமல் அவள் தன் ஐடியாவைச் சொல்ல சொல்ல அவள் நினைத்தபடியே தீம்பார்க் உருவாகி இயங்கி வருகிறது. இது ஜூனுக்கு தெரியாது. இந்த நிலையில் ஜூனின் அம்மாவுக்கு உடல் நிலை சீர்கெட, தீம்பார்க் வேலையை விளையாட்டாக கூட செய்யாமல் தூக்கி எறிகிறாள். அதனை செயலிழக்கச்செய்யும் வில்லனை  உருவாக்குகிறாள். இதனால் ஏற்படும் பிரச்னைகளை அவளே பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த பிரச்னைகளை எப்படி தீர்க்கிறாள் என்பதுதான் கதை. ஃபேன்டசிதான். ஆனால் அதை வைத்துக்கொண்டு நாம் சமநிலையான சூழலில் மனநிலையை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கும்போது செய்யும் அனைத்து விஷயங்களையும் மோசமான நிலையில் இருக்கும் போது செய்யும் ஒரு விஷயம் கலைத்துப்போட்டுவிடுவது பற்றி

கற்பனையால்தான் மனிதகுலம் வளர்ச்சி பெற்றதா?

படம்
மிஸ்டர் ரோனி  நீரின் கொதிநிலை மாறுமா? நீரின் கொதிநிலை என்பது அங்குள்ள அழுத்தத்தைப் பொறுத்தது. கடல்மட்டத்தில் நீங்கள் இருந்தால் அங்கு அழுத்தம் தோராயமாக 1013 ஹெக்டாபாஸ்கலாக இருக்கும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதுவே நீங்கள் இமயமலையில் உட்கார்ந்து இருந்தால் அங்கு நீரின் கொதிநிலை 71 டிகிரி செல்சியஸாக இருக்கும். வேகமாக நீரைக் கொதிக்க வைத்துவிடலாம்.  நீரை கொதிக்கவைக்கும்போது, நீர் மூலக்கூறுகள் அலைவுற்று நீராவியாகின்றன. அந்த நீராவி மூலக்கூறுகளின் அழுத்தம், அச்சூழலின் அழுத்தத்திற்கு  சமமாகுவதே நீரின் கொதிநிலை எனலாம். வெயிலில் காய வைக்கப்படும் துணி வெளுத்துப்போவது ஏன்? ஒரு பொருளின் துணியிலுள்ள நிறத்தை தேக்கி வைக்கும் மூலக்கூறு அமைப்புக்கு குரோமோபோர் என்று பெயர். இதன்மீது ஒளியிலிருந்து வரும் போட்டான்கள் பட்டு உட்கவரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு பொருளின் வண்ணம் தீர்மானிக்கப்படுகிறது. சிவப்பு வண்ண உடைகளை வேகமாக வெளுத்துப்போகின்றன. காரணம், அவை அதிகளவு ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கின்றன. இதனால் அதன் குரோமோபோர் அமைப்பு சிதைகிறது. இதனால் அதன் நிறம் மங்குகிறத

கற்பனையான நண்பர் ஆபத்தை ஏற்படுத்துவாரா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி என் மகன் கற்பனையாக ஓர் நண்பனை உருவாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறான். இது ஆபத்தானதா? அவன் சிறுவனாக இருக்கும்வரையில் அப்படி விளையாடுவது எந்த ஆபத்தையும் தராது. தனக்கான நண்பராக ஒருவரை கற்பனை செய்து விளையாடுவது சிறுவயதில் அவனின் மொழிவளர்ச்சிக்கு உதவும். அதனால் இம்முயற்சிகளை தடுக்காதீர்கள். அதேசமயம் இதே தன்மை வளர்ந்து வரும்போது குறையும். குறைய வேண்டும். அப்படி இல்லாதபோது நீங்கள் கவனிப்பது அவசியம். மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுமளவு இது முக்கியமான விஷயம் அல்ல. நன்றி - பிபிசி 

பனிமனிதன் நிஜமா?

படம்
பனிமனிதன் செய்தி நிஜமா? செய்தி: யெட்டி எனும் பனிமனிதன் பற்றி இந்திய ராணுவம் கூறிய செய்தி ஆய்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தியை ஆய்வாளர்களே நம்ப முடியாமல் திணறினர். மகாலு ராணுவ கூடாரம் அருகே யெட்டி பனிமனிதனின் பாதச்சுவடுகளைப் பார்த்தோம் என ட்விட் சேதி சொன்னது. மனிதர்களை விட நான்கு மடங்கு பெரிதான பனிமனிதனை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது என்பதை உலகில் பலரும் நம்பவில்லை. இதற்கான ஆதாரங்களை தொல்லியல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அரசு செய்தி கூறுகிறது. பனிமனிதன் குறித்த ஆராய்ச்சி செய்துள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டேனியல் டெய்லர், "35 அங்குல பாதச்சுவடு என்பது டைனோசர்களுக்கு ஒப்பானது. நான் நேபாளத்திற்கு பனிமனிதர் பற்றி ஆராய்ச்சி செய்யபோனபோது, அங்குள்ளவர் காலடித்தடம் பற்றி மரக்கரடி அல்லது இமாலயத்தின் கருங்கரடி குறித்து தகவல் பகிர்ந்தார். அதற்கான காரணங்களையும் கூறியபோது என்னால் அதனை மறுக்க முடியவில்லை"" என்று கூறுகிறார்.  அரசு அமைப்பு சரியான ஆதாரங்கள், ஆராய்ச்சிகளின்ற