இடுகைகள்

சமையல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சரை கொலைசெய்த பழியில் மாட்டிக்கொள்ளும் காமெடி குண்டர்கள்! - ஜாதி ரத்னாலு - அனுதீப்

படம்
              ஜாதி ரத்னாலு  Director: Anudeep KV Produced by: Nag Ashwin Writer(s): Anudeep KV     ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாசா படத்திற்கு பிறகு நவீன் பொலிசெட்டி தெலுங்கில் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுத்துள்ள படம்தான் ஜாதி ரத்னாலு.  ஜோகிபேட்டில் மது, சூது என அனைத்து போங்குத்தனங்களிலும் ஈடுபடும் மூன்று நண்பர்கள் திடீரென வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என நினைத்து ஹைதராபாத் கிளம்புகிறார்கள். அங்கு நேரும் காமெடி களேபரங்களே கதை.    ஶ்ரீகாந்த் லேடீஸ் எம்போரியத்தில் இளம் முதலாளியாக ஶ்ரீகாந்த், ஊரில் யாரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை. பெண்களுக்கு எந்த சேலைக்கு எந்த வளையல் மேட்சிங் என்று சொல்வதில் புகழ்பெற்றவன். ஆனால் இந்த புகழ் பெண்கள் வேடத்தில் நடிப்பதற்கும், அவர்களுக்கு கல்யாணத்திற்கும் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்தான் உதவுகிறது. ஆனால் அவருக்கென காதல் மனைவி கிடைக்க  ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் பயனில்லை. அடுத்து சேகர், பிறக்கும்போது வீட்டில் அரிசி குக்கர் விசிலடிக்கும்போது பிறந்தவன். அவன் நினைப்பு எப்போதுமே சோறு, அதற்கு குழம்பு, கூட்டு, பொரியல் என்ன வ

பாம்பே சட்னி மூலம் வாழ்க்கையில் முன்னுக்கு வரும் இளைஞன்! - மிடில் கிளாஸ் மெலடிஸ் -தெலுங்கு 2020

படம்
                மிடில்கிளாஸ் மெலடிஸ் அமேசான் பிரைம் கிராமத்தில் சின்ன சாப்பாட்டுக்கடை நடத்தி வருகிறார் கொண்டல ராவ் . இவரின் மகன் ராகவன் . ராகவனுக்கு கிராமத்தை விட குண்டூர் நகரத்திற்கு என்று ஹோட்டல் திறப்பதுதான் லட்சியம் . எப்படி இதனை சாதிக்கிறார் என்பதான் மையக் கதை . படத்தின் ஆத்மாவே , இதில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்புதான் . அனைவருமே நாம் தினசரி சாலையில் நடந்துசெல்லும்போது பார்க்கும் மனிதர்களாகவே இருக்கிறார்கள் . கிராமத்தில் வாழும் மனிதர்கள் , பிரச்னை என்று வரும்போது ஒருவருக்கொருவர் எப்படி உதவிக்கொள்கிறார்கள் , அப்பா , மகன் இருவருக்குமான பாசம் , உறவினர்களின் சுயநலம் , ஹோட்டலில் சந்திக்கும் சவால்கள் என படம் அவ்வளவு யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது . துரைசானி படத்தை விட ஆனந்த் தேவர்கொண்டா இந்த படத்தில் நிறையவே நடிப்பில் முன்னேறியிருக்கிறார் . வர்ஷா பொல்லம்மாவின் உடலை விட கண்களே அதிகம் நடிக்கின்றன . இதில் பாவா என்று சொல்லும்போது அவரின் முக உணர்ச்சிகள் அசரடிக்கின்றன .      படத்தில் பெரும்பாலும் நமது கவனத்தை தன்னிடமே வைத்துக்கொண்டிருப்பவர் , ராகவனின்

இனவெறி காரணமாக வெளிநாட்டு செஃப்கள் எனது காபி குவளையில் எச்சிலைத் துப்பினர்! - விகாஸ் கண்ணா, பிரபல செஃப்

படம்
விகாஸ் கண்ணா சமையற்கலைஞர் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் வசிக்கும் விகாஸ், பசியில் வாடும் மக்களுக்கு ஃபுட்டிரைவ் இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் உணவுகளை வழங்கி உதவி வருகிறார். பெருந்தொற்று பாதிப்பு பெரும்பாலும் தனிநபர்களை கடினமாக பாதித்துள்ளது. இந்த நிலையில் மற்றவர்களுக்கு பசிக்கு உதவும் எண்ணம் எப்படி தோன்றியது? என்னுடை அம்மாதான் இந்த திட்டத்திற்கு காரணம். இந்த நேரத்தில் பசியில் இருக்கும் மக்களுக்கு நீ உதவ வேண்டும் என்று அவர் கோரினார். நான் நியூயார்க்கில் இருக்கிறேன். எப்படி உதவுவது என்று கேட்டேன். உணவு சம்பந்தமாக படித்துக்கூட மற்றவர்களுக்கு உன்னால் உதவ முடியாதா? செல்ஃபி எடுத்து பதிவிட்டால் போதுமா? என்று கேட்டார். அவரின் கேள்வி என்னை கடுமையாக பாதித்தது. இந்தியாவில் உள்ள 125 நகரங்களில் நாங்கள் இப்போது உணவு வழங்கி வருகிறோம். உங்கள் செயல்பாடுகள் போதுமானதாக தோன்றுகிறதா? நிச்சயம் இல்லை. நாங்கள் தினசரி செயல்பாடுகளில் மக்களுக்கு உதவி செய்வதில் தோற்றுத்தான் போகிறோம். நான் திரும்ப எங்களை மேம்பாடு செய்துகொண்டே உழைத்து வருகிறோம். உணவகங்களும் தொழிற்சாலைகளும் ஒன்றுபோன்றவை அல்ல. அ

முதல் மனிதர்களை சந்திப்போம்!

படம்
இந்தியாவில் அனைத்து விஷயங்களும் சாதி, மதம், நிறம், மொழி சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. காரணம், நிலப்பிரபுத்துவ மனநிலை, பாரம்பரியம். இதையெல்லாம் தாண்டி சமத்துவம், சகோதரத்துவம், சாதனைகளை நிறைய இந்தியர்கள் இந்தியாவிலும் , இந்தியா கடந்தும் செய்கிறார்கள். அப்படி முதன்முதலாக சாதித்த மனிதர்களை சந்திப்போம் வாருங்கள். கரிமா அரோரா -33 மிச்சலின் ஸ்டார் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியப்பெண். இந்தியாவில் மருத்துவர், பொறியாளர் ஆக காட்டும் ஆர்வத்தை பிற துறைகளில் காட்டுவதில்லை. அதிலும் சமையலை அவர்கள் அவமானகரமான ஒன்றாக கருதுகிறார்கள். நான் இத்துறையில் சாதித்துள்ளேன். ஆனால் இத்துறையில் நானே முதலாகவும் கடைசியாகவும் இருக்கமாட்டேன் என்பது உறுதி என தெம்பாக பேசுகிறார் கரிமா. பாங்காங்கில் கா எனும் இந்திய உணவகத்தைத் தொடங்கினார். தொடங்கி பதினெட்டு மாதங்களில் மிச்சலின் ஸ்டார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.  தற்போது வணிகநோக்கமின்றி, பழங்குடிகளின் உணவு வகைகளை சமைத்து மக்களுக்கு பரிமாற உள்ளார். இந்திய உணவுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதே இவரின் இலக்கு. அருணிமா சின்கா -30 எவரெஸ்ட் ஏறிய மாற்றுத்

அறையில் சுயாதீனச்சமையல் செய்தபோது - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! சுயாதீன சமையல் மயிலாப்பூரில் நீங்கள் கரண்டி பிடிக்காமலிருக்க நிறைய இதயங்கள் உதவும். ஜன்னல் கடை, பாரதி மெஸ், தேரடி பஜ்ஜிக்கடை, காளத்தி ரோஸ்மில்க், செந்தில்நாதன் மெஸ் என நிறைய உணவுக்கடைகளும், தின்பண்டக் கடைகளும் நிறைந்துள்ளன. எல்லாம் எதற்கு வாங்கித் தின்று இந்தியாவை வளர்த்தத்தான். டீ என்ற வார்த்தையை இங்கு கேட்க முடியாது. எங்கெங்கு காணினும் காபிதான். மகாத்மா காந்தி சிலையை ஒட்டி இப்போது கோத்தாஸ் காபிக்கடை வேறு தொடங்கியிருக்கிறார்கள். அம்பிகா சிறப்பங்காடியை ஒட்டி இயங்குவது லியோ காபி, முதலில் மோசமாக இருந்த காபி நேற்று குடித்தபோது இனித்தது. உபயம் யார் நமது தினகரன் குழும முன்னாள் தாயாதிகள்தான். வந்த நண்பர்களுக்கு  மயிலாப்பூரை கிரிவலம் கூட்டிச்சென்றேன். ஒருகட்டத்தில் நண்பர்,  தம்பி எங்களை எங்கே கூட்டிட்டிப்போற என்றார். ரைட் அதுதான் நான் விடைபெற்றுக்கொள்ளும் இடம் கூட. கபாலி காலில் விழுந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்ணே என்று சொல்லி கைகுலுக்கு ஜப்பானிய முறையில் இடுப்பு வளைத்து வணங்கி விடைப்பெற்றேன். ஜப்பானிய முறை வணக்கம் சிறப்பானதுதான். ஆனால் என்னவோ இம்முறையி

பாஸ்தா செம சூடு!

படம்
பாஸ்தா மற்றும் பிரட் வகைகளை 350 டிகிரி பாரன்ஹீட் சூடுபடுத்துவது ஏன் ? அனைத்து உணவுகளையும் 350 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கொண்டு செல்வது சிறந்ததல்ல . உணவகங்களில் பாஸ்தா மற்றும் பிரட் வகைகளை உயர்வெப்பநிலையில் சமைத்து பக்குவப்படுத்துகிறார்கள் . இதனை மெய்லார்ட் ரியாக்‌ஷன் என்கிறார்கள் .   வேதியியலாளர் லூயிஸ் கேமில் மெய்லார்ட் என்பவர் சிலவகை உணவுகளை 300-350 பாரன்ஹீட்டுக்கு மேல் சமைத்தால் அதிலுள்ள புரதம் மற்றும் சர்க்கரை வேறுவடிவத்திற்கு மாறி நிறம் , சுவை , நறுமணம் , கூடுவதை திட்டவட்டமாக நிரூபித்தார் . சமையல்துறையும் அதற்கு ஓகே சொல்ல வெரைட்டி ரெசிப்பிகள் சுவை , மணம் , திடம் என மைக்ரோவேவ் ஓவனில் தூள் கிளப்ப ஆரம்பித்தன . முதலில் ஓவனை ஆன் செய்து , அதில் கைபொறுக்கும் சூடு இருக்கிறதா என பொருளை டெஸ்ட் செய்வார்கள் . 30 செகண்டில் சூடு பொறுக்கமுடியாமல் கைஎடுத்துவிட்டால் போதுமான சூடில்லை என்று அர்த்தம் . இன்று சில பாஸ்தா வகைகளுக்கு 400 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் சமைக்கப்படுகின்றன . 350 டிகிரி பாரன்ஹீட் என்பது ஒரு கோல்டன் ரூல் அவ்வளவுதான் . அதற்காக பருப்புக்குழம்பு , ரசம் என ஓவனி