இடுகைகள்

நிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

9. வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலமாக நடந்த நிதி முறைகேடு - மோசடி மன்னன் அதானி

படம்
  வினோத் அதானி, தான் உருவாக்கிய போலி நிறுவனங்களைப் பற்றிய கவனம் கொள்ளாமல் இல்லை. வரி விலக்கு கொண்ட நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கியவர், அதன் மீது பிறருக்கு சந்தேகம் வராமல் இருக்கவே அவற்றுக்கென தனியாக வலைத்தளங்களை உருவாக்கி வைத்தார். அந்த வலைத்தளங்களில் காணப்படும் சில அம்சங்களைப் பார்ப்போம்.   பெரும்பாலான வலைத்தள பெயர்கள் அனைத்தும் ஒரே நாளில் தனித்தனி வணிக நிறுவனங்கள் போல உருவாக்கப்பட்டவை. எ.டு. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆராய்ச்சியில் ஐந்து நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கப்பட்டவை என தெரிய வந்தது. மீதி ஐந்து நிறுவனங்கள் 2016 ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்டவை. அனைத்து வலைத்தளங்களின் பக்கங்களின் தலைப்புகளும் ஒன்று போலவே அமைந்திருந்தன. முகப்பு, நிறுவனம் பற்றி, சேவைகள், கேலரி (விலை கொடுத்து வாங்கிய புகைப்படங்கள்), தொடர்புகொள்ள என தலைப்புகள் அப்படியே மாறாமல் இருந்தன. தொடர்பு முகவரியில் உள்ள முகவரி, வணிக முகவர் ஒருவரின் முகவரியைக் கொண்டிருந்தது. உண்மையான வணிக நிறுவனத்தின் பெயரில் முகவரி இல்லை. நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், குழுக்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை

ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

படம்
  முதலீட்டின் தேவை 1 ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்? நாம் இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக, ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தோராயமாக நீங்கள் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.30 ஆயிரத்தை வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சை   மேலும் பல செலவுகள் என்ற வழியில் செலவழிக்கிறீர்கள். சம்பளத் தொகையில் மீதமிருப்பது ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுதான் உங்களின் மாதச் சம்பளத்தில் மீதமாகும் உபரித்தொகை.   எளிமையாக விளக்குவதற்காக, தற்போதைக்கு உங்களின் வருமான வரியை விட்டுவிடுவோம். 1.        இப்போது நாம் சில அம்சங்களை யூகித்துப் பார்ப்போம். 2.        உங்கள் நிறுவனத் தலைவர் கருணையோடு ஆண்டுக்கு பத்து சதவீத அளவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறார். 3.        விலைவாசி ஆண்டுக்கு எட்டு சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 4.        உங்களுடைய தற்போதைய வயது 30. ஐம்பது வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்கள். உங்களிடம் ஓய்வுக்குத் தேவையான ப

சூரிய வெளிச்சத்தை தடுக்க தடுப்பரணாக அமையும் கண்ணாடி தாள்!

  பூமியைக் காக்க விண்வெளியில் தடுப்பு அரண் உலகை காக்க நிலப்பரப்பில், நீர்ப்பரப்பில் செய்யும் பல்வேறு திட்டங்களுக்கு ஜியோ எஞ்சினியரிங் என்று பெயர். ஆனால் இந்த திட்டங்கள் அங்கேயே நின்றுவிடக் கூடியவை அல்ல. விண்வெளியிலும் இந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என சில அறிவியலாளர்கள் முயன்றுள்ளனர். இவை கோட்பாடு அளவில் வியப்பு ஏற்படுத்துவனதான். ஆனால் சாத்தியமா என்பதுதான் யோசிக்க வேண்டியதாக உள்ளது. இன்று பூமியைக் காக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அதில் முக்கியமானது, சூரியனின் வெப்பத்தை எப்படியாவது பிரதிபலித்து வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுப்பது. இந்த வகையில் ஒரு முயற்சியை ஜேம்ஸ்   என்பவர் 1989ஆம் ஆண்டு செய்தார். அதாவது பூமியின் புவி வட்டப்பாதையில் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உருவாக்கி பொருத்திவிடுவது…. இதன் மூலம் அந்த சூரிய வெளிச்சம் அப்படியே விண்வெளிக்கு சென்றுவிடும். கதிர்வீச்சும்தான். இதனால் பூமி எளிதாக வெப்பமயமாதல் பாதிப்புக்கு உட்படாது. மக்களும் பாதிப்படைய மாட்டார்கள். கதையின் மையம் என தந்தி அளவுக்கு சுருக்கமாக சொல்லும் விவகாரம்தான். ஆனால் செய

பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்

படம்
    மரத்தின் கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது, பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன். அந்த கேள்விக்கு பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக 400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில் டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது. மரத்தடியில் பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள் இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது.   முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்கொண்டிருந்த மா

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை விளையாட்டு மூலம் ஊக்குவிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் - ஷானாஸ் பர்வீன்

படம்
        விளையாட்டு மூலம் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும் விளையாட்டு ஆசிரியர்! காவல்துறையில் பணியாற்றிய அப்பா மறைந்துவிட, குடும்பம் பொருளாதாரத்திற்கு தடுமாறியது. அந்த நிலையிலும் ஷானாஸ் பர்வீனின் விளையாட்டு ஆர்வத்திற்கு அவரின் அம்மா தடை விதிக்கவில்லை. இதனால் தான் இன்று ஷானாஸ் கால்பந்து, ரக்பி, ஐஸ் ஸ்டாக், பென்கேக் சிலாட் என பல்வேறு விளையாட்டு அமைப்புகளை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் இளைஞர், பெண்களை விளையாட்டு வழியாக ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தனி மனிதராக பெரும்பாடு பட்டிருக்கிறார் ஷானாஸ். அரசு ஆதரவு இல்லாத நிலையில் அப்பாவின் ஓய்வூதியம் மட்டுமே அம்மா, தாய் இருவரின் வயிறு காயாமல் காப்பாற்றியது. எந்த நிலையிலும் தனது விளையாட்டு கனவை கருகவிட்டதில்லை. அதற்கு, அவரைப் புரிந்துகொண்ட தாய் கிடைத்தது முக்கியமானது. இதனால் விளையாட்டு பயிற்சிக்கு போய்விட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போது, வீட்டுக்கு தாமதமாக வருகிறாள் பாருங்கள், பையன்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாள், விளையாடி காயம்பட்டால் இவளுக்கு எப்படி திருமணமாகும் என பல்வேறு சாடைகள் பேசப்பட்ட சூழலி

சவால்களை சந்தித்தால்தான் தொழிலில் ஜெயிக்க முடியும்! - இம்பாக்ட் குரு - குஷ்பு ஜெயின்

படம்
  குஷ்பு ஜெயின், (இம்பேக்ட் குரு) துணை நிறுவனர், செயல்பாட்டு அதிகாரி  இதனை எங்கு பார்த்திருக்கிறீர்கள் என நினைவு இருக்கிறதா? யூட்யூப் வீடியோ பார்க்கும்போது நோய், விபத்து சார்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் கேட்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற நோய், விபத்து சார்ந்த பிரச்னைகளுக்கு க்ரௌட் ஃபண்டிங் முறையில் பணம் வாங்கிக் கொடுப்பதுதான் இம்பேக்ட் குருவின் வேலை. இதனை நடத்தி வருபவர் குஷ்பு ஜெயின்.  உடை, ஆரோக்கியம், உணவு ஆகிய மூன்று விஷயங்களே தனக்கு முக்கியம் என வாழ்ந்து வருகிறார் குஷ்பு. பல ஆண்டுகளாக மார்க்கெட்டிங், வடிவமைப்பு சார்ந்து பல்வேறு பணிகளை குஷ்பு செய்து வருகிறார். மேலும் 2019ஆம் ஆண்டு ஐ.நா பெண் சாதனையாளர்கள் இந்தியா விருதைப் பெற்றிருக்கிறார். நிதி ஆயோக் அமைப்பின் டாப் 15 பெண் தொழில்முனைவோர் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார். பார்ச்சூன் இதழின் 40 அண்டர் 40 பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது. அவரிடம் பேசினோம்.  தொழிலில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன ? நீங்கள் வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக பொறுமை, அர்ப்பணிப்பு முக்கியம். பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தொழிலில் வாடிக்கை

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

படம்
  மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி ஆஹா 68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.  2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது.  பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு பால் விலையைக் குறைத்தது அடச்சே!  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது.  சொத்து வரி உயர்வு அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது... மின்வெட்டு அதிகரித்து வருவது.. திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளிக்கு கீழே இருந்ததால் நிழலில் ஸ்டாலினின்