சவால்களை சந்தித்தால்தான் தொழிலில் ஜெயிக்க முடியும்! - இம்பாக்ட் குரு - குஷ்பு ஜெயின்

 
















குஷ்பு ஜெயின், (இம்பேக்ட் குரு)

துணை நிறுவனர், செயல்பாட்டு அதிகாரி 




இதனை எங்கு பார்த்திருக்கிறீர்கள் என நினைவு இருக்கிறதா? யூட்யூப் வீடியோ பார்க்கும்போது நோய், விபத்து சார்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் கேட்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற நோய், விபத்து சார்ந்த பிரச்னைகளுக்கு க்ரௌட் ஃபண்டிங் முறையில் பணம் வாங்கிக் கொடுப்பதுதான் இம்பேக்ட் குருவின் வேலை. இதனை நடத்தி வருபவர் குஷ்பு ஜெயின். 

உடை, ஆரோக்கியம், உணவு ஆகிய மூன்று விஷயங்களே தனக்கு முக்கியம் என வாழ்ந்து வருகிறார் குஷ்பு. பல ஆண்டுகளாக மார்க்கெட்டிங், வடிவமைப்பு சார்ந்து பல்வேறு பணிகளை குஷ்பு செய்து வருகிறார். மேலும் 2019ஆம் ஆண்டு ஐ.நா பெண் சாதனையாளர்கள் இந்தியா விருதைப் பெற்றிருக்கிறார். நிதி ஆயோக் அமைப்பின் டாப் 15 பெண் தொழில்முனைவோர் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார். பார்ச்சூன் இதழின் 40 அண்டர் 40 பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது. அவரிடம் பேசினோம். 

தொழிலில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன ?

நீங்கள் வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக பொறுமை, அர்ப்பணிப்பு முக்கியம். பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தொழிலில் வாடிக்கையாளரின் திருப்தி முக்கியமானது. அவர்கள்தான் எதிர்காலத்தில் நிறுவனம் செல்லவேண்டிய திசையை அடையாளம் காட்டுவார்கள். 

பெண் தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உங்களுக்கு வழிகாட்டியாக யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொண்டு பயணியுங்கள். வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதில் உங்கள் நிறுவனம்  முதன்மையானதாக ஏன் இருக்கவேண்டும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை தேவை. இந்த முறையில் செயல்பட்டால் நிறைய பெண் தொழில்முனைவோர் உருவாக வாய்ப்புள்ளது. 

உங்களுக்கு வழிகாட்டி, ஊக்கம் யார்?

என்னுடைய பெற்றோர்தான் எனக்கு ஊக்கமளிப்பவர்கள்.  என்னுடைய அப்பா கடினமான உழைப்பாளி. என்னுடைய அம்மா தன்னார்வ நிறுவனங்களை தொடங்கி மனிதநேய உதவிகளை செய்து வருகிறார். இவர்களது செயல்பாடுகள்தான் என்னை ஊக்கப்படுத்தி வருகின்றன. 

இம்பேக்ட் குருவைப் பற்றி சொல்லுங்கள்

1,500 கோடி ரூபாயை இணையத்தில் க்ரௌவுட் ஃபண்டிங் முறையில் பெற்றோம். அதை 15 ஆயிரம் நோயாளிகளுக்கு வழங்கியுள்ளோம்.  எங்களது நிதி திரட்டும் சேவை 165க்கும் மேற்பட்ட நாடுகளில் பெறலாம். எதிர்காலத்தில் பத்து லட்சம் மக்களுக்கு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள உதவ முடிவு செய்துள்ளோம். 


 ஃபெமினா 2021






கருத்துகள்