இடுகைகள்

புத்தக அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகள் மனதில் கருத்துகள் உண்டு!

முத்தாரம் லைப்ரரி ! YOUR KID'S GONNA BE OKAY Building the Executive Function Skills Your Child Needs in the Age of Attention by Michael Delman உங்கள் குழந்தைகள் சலிப்புக்குள்ளானவர்களாக ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டு போனில் சோஷியல்தளங்களை மேய்ந்துகொண்டு திரிகிறார்களா ? அவர்களுக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் திடமான கருத்துகள் உண்டு என அழுத்தமாக பேசுகிறார் ஆசிரியர் மைக்கேல் டெல்மன் . சிறுவர்களின் உளவியலை வருத்தாமல் அவர்களுக்கு பொறுப்பை புரியவைக்கும் சிறுதிட்டங்கள் , முயற்சிகள் அனைத்தும் சுவாரசியமாகவும் புதிதாகவும் இருப்பது சிறப்பு . DOING CAPITALISM IN THE INNOVATION ECONOMY by William H. Janeway 458pp Cambridge University Press முதலீட்டாளரான வில்லியம் ஹெச் ஜேன்வே தொழில்துறை கண்டுபிடிப்புகளுக்கு அரசு தரும் நிதி முயற்சிகளின் சாதக , பாதகங்களை இந்நூலில் அலசுகிறார் . பொருளாதாரத்தின் மூலமான கொள்கைகள் , அரசின் பங்கு , முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு என பல்வேறு விஷயங்களை புதுமையான கோணத்தில் விறுவிறுவென வாசிக்கும் வேகத்தில் ஆராய்ந்துள்ளார் ஆசிரிய

உளவியல் மருந்துகள் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள்!

புத்தகம் புதுசு ! How to Change Your Mind: The New Science of Psychedelics by Michael Pollan 480 pages Allen Lane உளவியல் மருந்துகள் உலகில் என்னமாதிரியான விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆராயும் நூல் இது . எல்எஸ்டி 1940 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவு ஆறுதல் கிடைத்தது . மனதின் உளவியலை மாற்றும் எல்எஸ்டி , சிலோசைபின் , டிஎம்டி ஆகிய மருந்துகள் நோயாளிகளின் மனநிலையில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆய்வு நோக்கில் ஆராய்ந்துள்ளார் ஆசிரியர் . Tesla: Inventor of the Modern by Richard Munson Hardcover, 320 pages W. W. Norton Company நிக்கோலா டெஸ்லா ரேடியோ , ரோபாட் , ரிமோட் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றின் பிரம்மா . கண்டுபிடிப்புகள் அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யத் தெரியாததால் உலகம் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை அவர் இறந்த பின்னரே அறிந்தது . செல்போன் , லேசர்ஒளி , இணையம் உள்ளிட்டவற்றின் ஐடியாக்களை முன்னமே உருவாக்கிவிட்டார் டெஸ்லா . மழைநாளில் பிறந்தது முதல் நியூயார்க் ஹோட்டலில் இறக்கும்வரை டெஸ்லாவின் வாழ்வை பதிவுசெய்யும் சுயசரித நூல் இது .

புத்தகக்கடை!

படம்
புத்தகக்கடை ! Geophysics: A Very Short Introduction by William Lowrie 144 pages Oxford University Press பூமியிலுள்ள எரிமலை , நிலதட்டுகள் , புவியீர்ப்புவிசை , நிலநடுக்கம் , மின்காந்தபுலம் என பல்வேறு அடிப்படை விஷயங்களை சிறியவடிவில் அறிமுகம் செய்கிறது இந்நூல் . புவி இயற்பியல் கனிமங்களை தேடி அகழ்ந்து எடுக்க உதவுவது எப்படி என விரிவாக விளக்கியுள்ளார் வில்லியம் லோரி . Be Prepared by Vera Brosgol 256 pages First Second கதை சிறுமியான வேரா , சம்மர் கேம்ப் செல்ல முயற்சிக்கிறாள் . தடுப்பது வறுமை . விதவையான தாய் அளிக்கும் காசில் ரஷ்யன் கோடை முகாமுக்கு செல்ல தயாராகிறாள் . இந்நூலில் கலாசாரம் , உண்மையான நட்பு பற்றி நகைச்சுவையோடு திருத்தமாக பேசப்பட்டிருக்கிறது . 

சிறந்த அறிவியல் புத்தகங்கள் 2017!

படம்
சிறந்த அறிவியல் புத்தகங்கள் 2017! Swearing Is Good For You: The Amazing Science of Bad Language Emma Byrne Rs.1,111, Profile Books கெட்டவார்த்தை இல்லாமல் மொழி உண்டா ? மொழியில் உள்ள கெட்டவார்த்தைகளின் வரலாற்றை சிம்பன்சி காலம் முதல் நம் காலம் வரை விளக்குகிறார் எம்மா பைர்ன் . Mysteries Of The Quantum Universe Thibault Damour & Mathieu Burniat Rs.1,539, Particular Books ஜாய்ன் பாப் , தன் செல்ல நாய் ரிக்குடன் பால்வெளி பற்றிய மர்மங்களை அறிய செல்லும் பயணமே இந்நூல் . ஐன்ஸ்டீன் , மேக்ஸ் பிளான்க் ஆகியோர் இப்பயணத்தில் பாப்புக்கு உதவி மர்மங்களை அறிய உதவுகிறார்கள் . கிராபிக் நாவலாக இதனை படிப்பது சூப்பர் விறுவிறுப்பு . Only Connect: The Official Quiz Book Jack Waley-Cohen Rs.1,282 BBC Books சிக்கலான க்ளூக்களின் விடை தேடும் சுவாரசிய கேள்விகளைக் கொண்ட நூல் இது . பிபிசி டிவியின் பிரபல ஷோவாக நூலின் பெயரில் வெளியானாலும் பல கேள்விகள் புதிது . உங்களின் ஐக்யூவை சூப்பராக வார்ம் அப் கொடுக்க உதவும் பொது அறிவு நூல் . Graphic Science Darryl Cunningham

புத்தக அறிமுகம்: கறுப்பு அடிமைகளின் கதை!

படம்
கறுப்பு அடிமைகளின் கதை ஹேரியட் பீச்சர் ஸ்டவ் தமிழில் வான்முகிலன் அலைகள் வெளியீட்டகம் முதலாளி ஷெல்பி வீட்டிலுள்ள எலிசா, மகன் ஜார்ஜ், ஹாரிஸ் ஆகியோர் திடீரென விற்கப்படும் நிலைமை உருவாகிறது. காரணம், வட்டிக்கு வாங்கிய கடன்தான் காரணம். ஓரே குடும்பமாக வாழ்ந்த ஹாரிஸ், எலிசா, மகன் ஜார்ஜ் பிரிய மனமில்லை. எனவே அ்ங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். ஹாரிஸ் வெள்ளையர் கலப்பில் பிறந்ததால் அங்கிருந்து கனடா தப்பிக்க நினைக்கிறார். எலிசா கடைசிவரை முதலாளியை நம்பினாலும் , மகனை பிரித்து விற்கப்போகிறார்கள் என்று அறிந்து டாம் மாமாவிடம் மட்டு்ம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு ஓடுகிறாள். அவளை பிடிக்க எதிர்கால முதலாளி முயன்றாலும் அதனை டாம் மாமா டீம் சமர்த்தாய் ஏமாற்றி சமாளிக்க எலிசா பாதுகாப்பான செனட்டரிடம் சென்று சேர்ந்து கணவனையும் சந்திக்க  கதை சுபமாய் முடிகிறது. இன்னொரு பக்கம் டாம், இரண்டு முறை விற்கப்பட்டு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தில் இரண்டாம் முதலாளி இறக்க, லெஹ்ரி எனும் அசுரனிடம் சிக்கி சித்திரவதைப்பட்டு பிறரின் துன்பங்களை சிலுவையாய் சுமந்து இறந்து போகிறார்.  நாவலில் ஏசுவாய் பலரின் துன்பங

புத்தக அறிமுகம் !

படம்
THE DANGER WITHIN US America's Untested, Unregulated Medical Device Industry and One Man's Battle to Survive It by Jeanne Lenzer 336pp, Little, Brown Rs.1793 அமெரிக்காவின் முறைப்படுத்தப்படாத மருத்துவக்கருவிகள் பற்றி கருப்பு உண்மைகளை பத்திரிகையாளர் ஜீன்னேலென்சர் துல்லிய தரவுகளுடன் எழுதியுள்ள நூல் இது . அநியாய லாபம் , ஊழல் என இவரின் எழுத்தில் மருத்துவத்துறையில் இதுவரை நாம் காணாத உலகம் பயமுறுத்துகிறது . மருத்துவத்துறையில் தீர்க்கமான சீர்திருத்தங்கள் , கட்டுப்பாடுகளை வலியுறுத்துகிறார் ஆசிரியர் லென்சர் . CHARLES DARWIN Victorian Mythmaker by A.N. Wilson 448pp, HarperCollins Rs.448 பரிணாம வளர்ச்சியின் தந்தை , கடவுளைக் கொன்றவர் என அழைக்கப்படும் டார்வினின் சுயசரிதை . விக்டோரியன் காலத்து அறிவியலாளரின் வாழ்வை குளோசப்பில் காட்டும் நூல் இது . 1859 ஆம்ஆண்டு இவர் கண்டறிந்த பரிணாம வளர்ச்சி என்பது கற்பனையா என்ற சர்ச்சைக்கும் இதில் பதில் உள்ளது .  2 புத்தக அறிமுகம் ! WHAT'S MAKING OUR CHILDREN SICK? How Industrial Food Is Causing an Epidemic o

புத்தக அறிமுகம்! அவன் அவள் அன்லிமிடெட் -நவநீதன்

படம்
அவன் அவள் அன்லிமிடெட் கோகுலவாச நவநீதன் சூரியன் பதிப்பகம் ரூ.200 பெண்களின் லவ்வை பெற ஆண்களும், ஆண்களின் செக்யூரிட்டியைப் பெற பெண்களும் காலமெல்லாம் இன்க்ரிமெண்ட் கிடைக்காமல் அலைபாய்வது தினசரி காட்சி. பெண்கள் ஏன் நேரடியாக பேச மாட்டேன்கிறார்கள்? என ஆண்களும், நான் சொல்லாவிட்டால் அவனுக்கு புரியாதா? என பெண்களும் அங்கலாய்ப்பது இன்று உறவுகளில் விரிசல்களையும் உருவாக்கத்தொடங்கிவிட்டது. இங்குதான் கோகுலவாச நவநீதன் தனது ட்ரெண்டிங் வார்த்தைகளோடு புத்தம் புதிய சயின்ஸ் சோதனைகளோடும் களமிறங்கி ஆண்,பெண் வேறுபாடுகளை அன்பாக எழுத்துக்களில் வெண்ணெய் தடவி சுகம் தருகிறார்.  மேல்நாட்டு ஆய்வுகள் அடிப்படையில் கிடுகிடுவென புத்தகங்களை எழுதியிருக்கலாம்தான். ஆனால் மருத்துவர்களின் கருத்துக்களை கேட்டு, அதோடு ஸ்பெஷல் ட்ரெண்டிங் சோதனைகளையும் இணைத்து மூளையின் ஐக்யூ சோதனைகளையும் எளிதாக செய்து படிக்க வைப்பது நவநீதனின் சிம்பிள் ஸ்டைல். படிக்க படிக்க அடுத்தடுத்த சேப்டர்களை நோக்கி பாயவைப்பது அழகழகான அம்சமான டைட்டில்கள். மேலும் இதில் கூறப்பட்டிருப்பவை ஆய்வு முடிவுகள் என்பதால், இதுதான், இதைத்தாண்டி இல்லை என கோ