இடுகைகள்

நேர்காணல்: பேரி W. ஃபிட்ஸ்ஜெரால்டு, டெல்ஃப்ட் யுனிவர்சிட்டி.

படம்
நீங்களும் சூப்பர் ஹீரோ ஆகலாம் ! நேர்காணல் : பேரி W. ஃபிட்ஸ்ஜெரால்டு , டெல்ஃப்ட் யுனிவர்சிட்டி . தமிழில் : ச . அன்பரசு டெல்ஃப் பல்கலையின் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரான பேரி ஃபிட்ஸ்ஜெரால்டு சூப்பர் ஹீரோக்கள் பற்றிய புத்தகம் எழுதியதோடு , அவர்களின் சூப்பர் பவர் குறித்த பத்திரிகை ஒன்றையும் தொடங்கவிருக்கிறார் . அதில் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் , பொறியியல் ஆகியவை மக்களுக்கும் சூப்பர்ஹீரோ சக்தியை கொண்டுவந்து சேர்க்கும் என என நம்புகிற வித்தியாசமான ஆராய்ச்சியாளர் இவர் . தகவல் தெரிந்ததும் உடனே மிஸ்டுகால் கொடுத்து எடுத்த பேட்டி இது . சூப்பர்ஹீரோ பற்றிய ஆராய்ச்சியில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது ? நான் தீவிர காமிக்ஸ் விசிறியெல்லாம் கிடையாது . 1985 ஆம் ஆண்டு சூப்பர்மேன் படம் பார்த்தேன் . பறப்பது , சுவர்களை லேசரால் துளைப்பது என அந்த வயதில் எனக்கும் சூப்பர்பவர் தேவை என நினைக்க வைத்த படம் அது . அதன்பின் பேட்மேன் (1980), எக்ஸ்மேன் (2000) ஆகிய படங்கள் மனிதர்களுக்கு இந்த அபூர்வ சக்தி இருந்தால் நன்றாயிருக்குமே என பேராசைப்பட வைத்தன . அப்போது லீமெரிக் பல்கலையில் அப்ளைடு

பசுமை பேச்சாளர்கள் 13 வில்லியம் மெக்டோனஹ் ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 13 வில்லியம் மெக்டோனஹ் ச . அன்பரசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் மெக்டோனஹ் முக்கியமான சூழலியல் கட்டுமான கலைஞர் , ஆலோசகர் , எழுத்தாளர் . ஜப்பானின் டோக்கியோவில் 1951, பிப் .20 அன்று பிறந்த வில்லியம் , டர்த்மவுத் கல்லூரியிலும் பின்னர் யேல் பல்கலையிலும் தன் படிப்பை நிறைவு செய்தார் . 1981 ஆம் ஆண்டு தான் கற்ற கட்டுமான கலையில் பயிற்சியைத் தொடங்கினார் .   பசுமை கட்டிடங்களை உருவாக்குவதே வில்லியமின் லட்சியம் . இதனை அவர் நைக் , கேப் , ஹெர்மன் மில்லர் ஆகிய நிறுவனங்களுக்கு வடிவமைத்த அலுவலகங்களின் அமைப்பிலிருந்தே அறியலாம் .  William Mcdonough + Partners எனும் வில்லியமின் நிறுவனம் பசுமை கட்டுமானங்களில் முதலிடம் வகிக்கிறது . வர்ஜீனியா , சான் ஃபிரான்சிஸ்கோ , சார்லாடெஸ்வில்லே ஆகிய இடங்களில் இவரது நிறுவனம் செயல்படுகிறது . வர்ஜீனியா பல்கலையின் கட்டுமானத்து தலைவராக செயல்பட்ட இவர் , தன் செயல்பாட்டிற்காக , அதிபர் விருது (1996), டைம் இதழில் பிளானெட் ஹீரோ (1999) அங்கீகாரத்தையும் பெற்றார் . மிச்சிகனிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலையை பசுமை கட்டிடமாக மாற்றியது தனித்து

ஏன்?எதற்கு?எப்படி? - ரோனி ப்ரௌன்

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? - Mr. ரோனி மழைக்காடுகளை திரும்ப வளர்க்க முடியுமா ? உலகம் முழுவதும் மழைக்காடுகளை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை பல்வேறு நாட்டு அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன . பிரேசில் அரசு , 2030 ஆம் ஆண்டுக்குள் 12 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வனத்தை உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளது . இயற்கையாக உருவாகும் காடுகளின் தன்மையை , மரக்கன்றுகளை ஊன்றி உருவாக்கும் காடுகள் பெறாது . விலங்குகளின் பல்லுயிர்த்தன்மையையும் இதில் ஏற்படுத்துவது கடினம் . எனவே இருக்கும் காடுகளை அதன் தன்மை மாறாமல் காப்பதே சிறந்தது . நிலவில் நட்டுவைக்கப்பட்ட கொடிகள் இன்றும் உள்ளதா ? நிலவில் இன்றுவரை ஆறு கொடிகள் ஊன்றப்பட்டுள்ளன . அதில் ஒன்றுதான் அப்போலோ விண்கலம் ஊன்றிவைத்தது அதில் ஒன்று . ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையால் நீல் ஆம்ஸ்‌ட்ராங் , அட்ரியன் ஆகியோர் ஆகியோர் இருவரும் அக்கொடியை எடுத்துவிட்டனர் . லூனார் மூலம் எடுத்த படங்களில் மீதியுள்ள 5 நைலான் கொடிகளும் நின்றாலும் , அவை சூரிய ஒளியால் நிறமிழந்து வெள்ளையாகி விட்டன . ஒருவர் இறந்ததும் அவரது உடலின் அனைத்து உறுப்புகளும் உ

இளைஞர்களின் எமன் Bluwhale கேம்!

படம்
இளைஞர்களின் எமன் Bluwhale கேம் ! -ச.அன்பரசு உலக நாடுகளுக்கு டெரரிஸ்ட் , மானியம் , வேலை என்பதை விட இன்று முக்கியமான பிரச்னை ப்ளூவேல் . ஏதோ புதிய வைரஸ் காய்ச்சல் என நினைத்துவிடாதீர்கள் . இது அதைவிட பயங்கரம் .  ரஷ்யா , ஐரோப்பிய நாடுகளை 50 நாட்களில் பெரும் பீதிக்குள்ளாக்கிய அதிகொடூர தற்கொலை கேம்தான் இது . தற்போது இந்தியாவிலும் என்ட்ரியாகி , சிறுவன் ஒருவனையும் காவு வாங்கிவிட்டது . மும்பையின் அந்தேரியைச் சேர்ந்த  ஒன்பதாவது படிக்கும் சிறுவன் , அன்று ஸ்கூலுக்கு வரவில்லை . நண்பன் போன் செய்து கேட்டதற்கு , நான் கேம் விளையாடிக்கொண்டிருக்கிறேன் . நாளைக்குத்தான் ஸ்கூலுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறான் . நண்பர்கள் அதனை ஜாலியாக எடுத்துகொண்டுவிட்டனர் . ஆனால் மேட்டர் செம சீரியஸானது அன்று மாலைதான் .  மாலை 5 மணிக்கு வீட்டின் 5 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டபோதுதான் அவன் சோஷியல் மீடியாவில் விளையாடியது ப்ளூவேல் எனும் ஆன்லைன் தற்கொலை விளையாட்டு என்பது அவன் பெற்றோர் தெரியவந்திருக்கிறது . இந்தியாவில் ப்ளூகேமால் உயிரிழந்திருக்கும் முதல் சிறுவன் இவன்தான் . 20

பெண்ணுடலைக் கொண்டாடும் விழிப்புணர்வு காமிக்ஸ்! -ச.அன்பரசு

படம்
பெண்ணுடலைக் கொண்டாடும் விழிப்புணர்வு காமிக்ஸ் ! - ச . அன்பரசு அரசுக்கு ஆதரவான டெக்ஸ் வில்லர் மற்றும் அவரது சகாக்கள் பழங்குடிகளை பொசுக்கும் ரத்தவேட்டையும் , இரும்புக்கை மாயாவியின் உலகைக் காப்பாற்றும் ஆக் ‌ ஷன் அத்தியாயங்களும்தான் காமிக்ஸில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்று மாறிவருகிறது சமகால நிகழ்வுகளைப் பேசும் ஏராள காமிக்ஸ் எழுத்தாளர்களும் , ஓவியர்களும் உருவாகி வருவதற்கு ஒரு சின்ன சாம்பிள்தான் Spreading Your Wings காமிக்ஸ் . " நான் முதன்முதலில் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்திற்கு வந்து கிராமப்புற பெண்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியபின்தான் மாதவிடாயின் சவால்களை அனுபவப்பூர்வமாக உணரத்தொடங்கினேன் . அமெரிக்காவில் பள்ளியின் வகுப்பில் எனது முதல் மாதவிடாய் வந்தபோது , என் பெற்றோர் பூக்களோடும் , மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் என்னை அரவணைத்துக்கொண்டனர் . ஆனால் அது இந்தியாவில் பதட்டமும் வலியும் கொண்டதாக இருப்பது எனக்கு புதிய அனுபவம் " என புத்துணர்ச்சியோடு பேசத்தொடங்கினார் அமெரிக்காவின் போஸ்டன் நகரைச்சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான அரீனா அபாடியன் ஹெ

பசுமை பேச்சாளர்கள் -11 பில் மெக்கிப்பன் ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் -11 பில் மெக்கிப்பன் ச . அன்பரசு அமெரிக்காவில் 1960 ஆம் ஆண்டு டிச .8 அன்று கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் பிறந்து பின்னாளில் முக்கிய சூழலியலாளரான பரிணமித்த பெருமை உடையவர் பில் மெக்கிப்பன் . மசாசூசெட்ஸில் கல்வி கற்று , போஸ்டன் நகரில் வளர்ந்த பில் மெக்கிப்பன் எழுத்தாளர் , கல்வியாளர் , ஏன் வழக்குரைஞரும் கூடத்தான் . புவி வெப்பமயமாதலை எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி செயல்பட்ட எழுத்தாளர்களில் முக்கியமானவர் இவர் . அரசின் சூழலுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக போராடுவது இவர் குடும்ப வழக்கம் . பிஸினஸ் வீக் பத்திரிகையில் வியட்நாம் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக எழுதி போராட்டத்தில் ஈடுபட்டதால் 1971 ஆம் ஆண்டு பில்லின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார் . பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பில் உள்ளூர் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி குவித்ததோடு . பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் அழைப்பிதழ் இல்லாமலே ஆஜராகி வாதம் செய்து ஜெயிப்பது இவர் ஸ்டைல் . பசுமை எழுத்தும் சூழல் வாழ்வும் ! பட்டப்படிப்பு முடிந்ததும் , 1982 ஆம் ஆண்டு நியூயார்க்கர் ப