இடுகைகள்

தான் பார்த்த பெண்ணா, பெற்றோர் பார்த்த பெண்ணா- தெல்லவாரித்தே குருவாரம் - ஸ்ரீ சிம்கா, சித்ரா சுக்லா, மிஷா நரங்

படம்
  Director: Manikanth Gelli Music by: Kaala Bhairava Written by: Nagendra Pilla தமிழில் - விடிஞ்சா வியாழக்கிழமை தமிழ்ப்படம்  யூட்யூப் சேனல் வீரு, தனது வாழ்க்கைத்துணையை தானே தேடிய காதலில்  கண்டுபிடிக்கிறாரா அல்லது அவரது அப்பா தேடி வைக்கும் வரன் மூலம் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை.  வீரு, கட்டுமானத்தொழிலில் வேலை செய்து வருகிறார். நன்றாகத்தான் வாழ்க்கை  போகிறது. அவர் சிங்கிள் இல்லையா, அதனால் காதல் தேடி மது, நண்பர்கள் என  அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார். ஒருநாள் பப்பில் குடித்துவிட்டு ஒரு  க்ரூப் மீது வாந்தி எடுக்க அவர்கள் வீருவோடு  சேர்த்து அவர்களின் நண்பர்களையும் புரட்டி எடுக்கிறார்கள். காயங்களுக்கு டிங்க்சர் வைக்க மருத்துவமனைக்கு சென்றால், அங்கு  மருத்துவர் கிருஷ்ணவேணி என்கிற கிருஷ்ணாவை பார்க்கிறார்கள். மூன்றுபேரும்தான். ஆனால் வீரு காதலித்தால் அது டாக்டர் கிருஷ்ணாதான் என உறுதியாக இருக்கிறார்.  கிருஷ்ணாவும் கல்யாணம் செஞ்சுப்பியா என தந்திரமாக கேட்டு பதில் வந்தபிறகுதான், இருவரும்  காசை கரைக்க பல்வேறு உணவகங்கள், பப், சினிமா என திரிகிறார்கள். இந்த நேரத்தில் வீருவின் அப்பா அவனுக்கு கல்யாண

பெருந்தொற்று காலம் எனக்கு ஆராய்ச்சி செய்ய நேரத்தைக் கொடுத்தது! - அதிதி கார்வாரே, ஸ்வீட் பொட்டிக்

படம்
  அதிதி கார்வாரே, கேக் கலைஞர் அதிதி கார்வாரே, கேக் தயாரிப்பு கலைஞர் அதிதி கார்வாரே பேக்கர், கேக் தயாரிப்பு கலைஞர் சோசியோ லீகல் சயின்ஸ் படித்தவர். எல்எல்பி டிகிரியும் வைத்துள்ளார். ஆனால் வழக்குரைஞராக மாற வேண்டியவர், அந்த வழியை தேர்ந்தெடுக்கவில்லை.அதிதிக்கு வயது 31 தான் ஆகிறது. உலகளவில் சிறந்த சமையல் கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவத்தில் ஸ்வீட் பொட்டிக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் ஆறு ஆண்டுகளாக பல்வேறு கேக் வகைகளை தயாரித்து அலங்கரித்து தனது கடை வழியாக விற்று வருகிறார். கேக் மாஸ்டர் யுகே 2020 என்ற அமைப்பு மூலம் இந்தியாவின் டாப் 10 கேக் மாஸ்டர் என்ற பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் அதிதி கார்வாரே.  அல்டிமேக்ஸ் இந்தியா, மேஜிக் கலர்ஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருக்கிறார் அதிதி கார்வாரே.  பெருந்தொற்று காலத்தில் நீங்கள் அடையாளம் கண்ட நேர்மறையான விஷயங்களை சொல்லுங்களேன்.  இந்த காலகட்டத்தில் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அப்போது, நான் இனிப்புகளை, கேக்குகளை பற்றி ஆராய்ச்சி செய்தேன். முதலில் பரபரப்பாக வேலை செய்யும்போது ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. பெரு

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

இயற்கை, சூழல் சார்ந்த நூல்கள்- வாசிப்போம் வாங்க!

படம்
  ஐ பாட் எ மௌண்டைன் தாமஸ் ஃபிர்பேங்க் ஷார்ட் புக்ஸ்  1940ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. கிளாஸிக்கான நூலை, இயற்கை காதலர்களுக்காக புதிய தலைமுறைக்காக பதிப்பித்து இருக்கிறார்கள். ஸ்னோடோனியா என்ற மலைமீது உள்ள பண்ணை ஒன்றை தாமஸ் வாங்குகிறார். இதனால் அவரும், அவர் மனைவியும் சந்திக்கும் நிறைய சிக்கல்களை கூறியிருக்கிறார்.  தி ஸ்லாத் லெமூர்ஸ் சாங்க்ஸ்  அலிசன் ரிச்சர்ட் ஹார்ப்பர் கோலின்ஸ்  லெமூர் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் அலிசன் ரிச்சர்ட். நூலில் காட்டுயிர் வாழ்க்கை, புவியியல், சூழல் இவற்றை உள்ளடக்கிய சமூகம் என நிறைய விஷயங்களைப் பேசுகிறார். மடகாஸ்கர்தான் நூலில் பேசப்படும் முக்கியமான இடம். அதன் ரகசியங்களை அறிய நூலை வாங்கி வாசியுங்கள்.  டீர் மேன் ஜியோப்ராய் டெலோர்ம் லிட்டில் ப்ரௌன் புக் க்ரூப் புகைப்படக்காரர் டெலோர்ம் நார்மண்டியில் உள்ள லூவியர் காட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று தங்கி மான்களுடன் பழகுகிறார். அதன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அதைப்பற்றிய குறிப்புகள், அனுபவங்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.  வைல்ட் சிட்டி ஃப்ளோரன்ஸ் வில்கின்சன் ஓரியன் பப்ளிசிங் மனிதர

உறவுச்சிக்கல்களை, ஆழ்மனதை, வினோதமான மனிதர்களை அறிமுகப்படுத்தும் கதைகள் - கச்சேரி - தி.ஜானகிராமன்

படம்
  கச்சேரி - இதுவரை தொகுக்கப்படாத சிறுகதைகள் தி.ஜானகிராமன் காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலில் மொத்தம் 26 கதைகள் உள்ளன.  இவை அனைத்துமே வாசிப்பை ஊக்குவிக்க கூடியவை. ரசித்தபடியே வாசிக்கலாம். அதில் எந்த பாதகமுமில்லை. இதில் வரும் ஸீடிஎன் =ரபெ 5 ஆர் , கச்சேரி என்ற இரு கதைகளையும் முன்னமே வாசித்திருக்கிறேன்.  ஸிடிஎன் என்பது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று பேசுபவர்களுக்கானது. இந்த கதை இன்று பசுமாட்டை வைத்து அரசியல் செய்யும் அனைவரையும் கடுமையாக பகடி செய்கிறது. இதில் வரும் கோஸ்வாமி, பசு சாணத்தில் ரயில் வண்டி தயாரிக்க முனைகிறார். எரிபொருளே இல்லாமல் தன்னைத்தானே ஓட்டிக்கொள்ளும் திறன் பெற்றது. இதைப்பற்றி நிருபர் ஒருவருக்கு பேட்டி கொடுப்பது போல அமைந்த கதை, வாசிப்பவர் யாரையும் சிரிக்க வைத்துவிடும்.  கச்சேரி சிறுகதை சிறுவன் ரங்குவுக்கும் கச்சேரி செய்யும் வித்வான் ஒருவருக்குமான அந்நியோன்ய உறவு பற்றியது. எவ்வளவு பெரிய கலைஞர் என்றாலுமே அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்குபவர்கள்தானே? அப்படி வித்வானுக்கு கிடைப்பவன்தான் ரங்கு. நட்பு, அதில் பூக்கும் அன்பை பேசுகிற கதை.  நிலவு - கருமேகம் என்ற கதையை ம

இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பங்களித்த ஐந்து விஞ்ஞானிகள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நவீன இந்தியாவை உருவாக்கிய சாதனையாளர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பிரிவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஞ்ஞானிகளின் பட்டியலை ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ளது.  பெடங்காதாஸ் மொகன்டி, புவனேஸ்வர் நகரில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் டீன் மற்றும் பேராசிரியராக உள்ளார். இவர், இயற்பியலாளராக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது, கரும்பொருள் பற்றிய ஆராய்ச்சியாகும்.  ஜோதிர்ரஞ்சன் எஸ் ரே, நாகர்கன்டா என்று பகுதியில் பிறந்தவர். புவி அறிவியல் படிப்புகள் தொடர்பான தேசிய மையத்தில் இயக்குநராக உள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறார். இவர், பாறைகளின் வயதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை செய்து வருகிறார்.  விந்திய மலைத்தொடரின் வயதைக் கண்டுபிடிக்கும் புவியியல் ஆராய்ச்சியை செய்தவர் இவரே.  ஜோதிர்மயி தாஸ், ஐஏசிஎஸ் என்ற நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர், ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் பற்ற

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்