இடுகைகள்

ஒரு துளி மணலில் ஓர் உலகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்திக்கும், அம்பேத்கருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு! ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay அன்பிற்கினிய தோழர் ராமுவுக்கு , வணக்கம் . நீங்கள் பேசும்போதெல்லாம் போனின் பின்னணியில் தீவிரமான டிவி விவாத நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன . நீங்கள் இன்னும் அரட்டை அரங்க கொதிநிலை மனநிலையை விட்டு வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன் . நாம் அம்பேத்கர்கரின் நூல்களில் சாதி ஒழிப்பு மட்டுமே படித்துள்ளேன் . நீங்கள் நிறைய நூல்களைப் படித்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது . காந்தி , சாதி வேண்டும் , தீண்டாமை கூடாது என பாலீஷாக பேசினார் என்று சொன்னீர்கள் . இடதுசாரிகள் கோட்சேயின் வன்முறையைப் பேசும்போது , பகத்சிங்கின் வன்முறையான பாதையைப் போற்றுகிறார்கள் . திரும்பத் திரும்ப அவரை காந்தி காப்பாற்றி இருக்கலாம் என்கிறார்கள் . இப்படி பேசுவது வலதுசாரிகளுக்கு பலமேற்றும் என்பதையும் , அகிம்சை பாதையை மக்கள் பலவீனமாக அறிய வழிவகுக்கும் என்பதை அறிவதில்லை . மயிலாப்பூரில் உள்ள ஹாஸ்டலை லீசுகு எடுத்து மாணவர்கள் விடுதியாக நடத்தி வந்தனர் போல . இப்போது அந்த செட்டப்புகளை உடைத்து எடுத்து வருகின்றனர் . எங்கள் அறையில் கதவு மட்டுமே பிரிக்கப்படாமல் இருக்கிறது . விரைவில் அதனையும் பிரித்து எடுப்ப

சிலை உடைப்புகளை மக்கள்தான் தடுக்க வேண்டும்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay அன்புள்ள தோழர் ராமமுர்த்திக்கு , வணக்கம் . எப்படி இருக்கிறீர்கள் ? ராமராஜ்ய யாத்திரைக்கு நிதி வசூலித்து வருகிறார்கள் . உங்களுக்கு நிதி தரும் எண்ணம் இருக்கிறதா ? புதிய இந்தியாவை இந்த நிதியில்தான் எழுப்ப போகிறார்கள் போல . இந்து தமிழ் நாளிதழின் காமதேனு வார இதழ் திங்கள்தோறும் வெளியாகிறது . படித்துப்பார்த்தேன் . அதன் எழுத்துரு படிக்க இணக்கமாக இல்லை . அதன் பகுதிகளும் , செய்திகளும் இலக்கிய காலாண்டிதழ் போன்று இருக்கிறது . மிகவும் கடினமான மொழியைக் கையாள்கிறார்கள் . இதழில் மாநில சுய உரிமைக்குரல் எழுப்பும் சித்தராமையா கட்டுரை நன்றாக இருக்கிறது . அதை அட்டைப்படமாக போடாமால் அனுஷ்காவை அட்டைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் . பிரியாணிதான் செய்கிறார்கள் . ஆனால் நிறைய செஃப்கள் செய்வார்கள் போல . அகோரமாக இருக்கிறது . எங்கள் வார இதழின் பொறுப்பாசிரியர் நா . கதிர்வேலனிடம் , எடிட்டர் . இதழ் எப்படி என்று கேட்டார் . அதற்கு , ஒரே வரியில் இறந்தே பிறந்த குழந்தை என்று சொன்னது என்னை அதிர வைத்துவிட்டது . இலக்கிய வாதிகள் மட்டுமே இப்படி நறுக்கென்ற லொள்ளு பேச முடியும் . இந்துவின் வார இதழ் பொங்கல்

டிஜிட்டல் உலகம்தான் எதிர்காலமாக இருக்கும்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay அன்புத் தோழர் ராமுவுக்கு வணக்கம் . நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் . இந்த ஆண்டு முழுவதும் எனது கண்ணில் பரிசுத்த ஆவி இயேசுவின் சுவரொட்டிகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன . அதில் உள்ள தமிழ் வார்த்தைகள் என்னை வசீகரப்படுத்தி வருகின்றன . தமிழில் இயேசு பற்றி எழுதும் எழுத்துகள் படிக்க நன்றாக இருக்கின்றன . தினசரி எனது காலை என்பது ஐந்து மணிக்கு தொடங்குகிறது . காலை எழுந்து குளித்துவிட்டு 5.50 க்கு டீ குடிப்பேன் . சேட்டா ஜெகன் கன் போல நான்கு மணிக்கே கடையை திறந்துவிடுவார் . அவர் போடும் டீ நன்றாக இருக்கும் . பிறகு ஆறுமணிக்கு நடை திறந்தால் மாதவ பெருமாள் கோவிலுக்கு போய்விடுவேன் . அங்கே உட்கார்ந்து அன்றைக்கு எழுத வேண்டிய விஷயங்களை திட்டமிட்டுக் கொள்வேன் . பிறகு எழுந்து இட்லி வாங்கிக்கொண்டு ஆபீஸ் சென்றால் அடுத்து அறை திரும்ப இரவு எட்டுமணி ஆகும் . அறை நண்பர்களில் மூத்தவர்கள் நானும் விவேக்கும்தான் . இயல்பாகவே ஏனோ கதிர்வீச்சுக்கு கட்டப்பட்ட சுவர் போல எங்களுக்கு இடையில் தடை இருக்கிறது . கடக்கவே முடியவில்லை . அதுவும் தவிர வெவ்வேறு வட்டார வழக்கு ஆட்கள் வேறு . குழப்பத்திற்கு கேட்கவா வ