இடுகைகள்

சிஎஸ்ஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிஎஸ்ஆர்: சமூக பிரச்னைகளுக்கான பிரசாரம்

படம்
optimy wiki 5 சமூகப் பிரச்னைகளுக்கான பிரசாரம் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவையை அல்லதுத பொருட்களை தயாரித்து வழங்கும் பணியை செய்துவருகின்றன . சமூகப் பிரச்னைக்கு அந்நிறுவனம் முன்னின்று பிரசாரத்தை முன்னெடுக்கும்போது அது நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவதாக இருக்கவேண்டும் . ஆனால் நிறுவனத்தின் பொருட்களை அங்கே விளம்பரம் செய்யக்கூடாது . அது தவறான அணுகுமுறை . உதாரணத்திற்கு நகரங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள இளம் வயதினர் , இரவு உணவின்றி உறங்கச்செல்லுகின்றனர் என்பது சமூகப் பிரச்னை . இப்பிரச்னை சார்ந்து பிரசாரம் , விளம்பரங்கள் அமையவேண்டும் . இதில் இணைந்துகொள்ளும் நிறுவனங்களை விளம்பர பதாகையில் குறிப்பிடலாம் . நேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதியை ஏற்கலாம் . மக்களிடம் இதற்கான விழிப்புணர்வுக்காக அவர்களிடம் மனுக்களை சமூக வலைத்தளங்களில் , மின்னஞ்சலில் அனுப்பச் செய்யலாம் . அவ்வளவே இதில் செய்யமுடியும் . இதிலுள்ள அம்சங்களை பார்ப்போம் . விழிப்புணர்வு முக்கியம் குறிப்பிட்ட வழித்தடத்தில் அதிக விபத்துகள் நடக்கின்றன . அதற்கு காரணம் , அங்கு வே

வணிகத்தில் சமூகப் பொறுப்பு - சமூக பொறுப்புணர்வு திட்டம்!

படம்
பிக்சாபே 2 சமூக பொறுப்புணர்வின் தொடக்கம் அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு பங்களிக்கும் விதமாக விதிகளை மாற்ற உத்தரவிட்டது . அக்காலம் தொடங்கி அங்கு சமூகப்பிரச்னைகளுக்கு நிறுவனங்கள் நிதி மட்டும் அளிக்காமல் , அப்பிரச்னையைத் தீர்க்க பாடுபடும் செயல்பாடுகளைத் தொடங்கின . இதனைப் பற்றிய கட்டுரை ஒன்றை செய்தியாளர் கிரெய்க் ஸ்மித் 1994 ஆம் ஆண்டு ஹார்வர்ட் ரிவ்யூ இதழில் எழுதியுள்ளார் . அதில் மற்றொரு முக்கியக்காரணமாக அவர் சுட்டிக்காட்டுவது எக்ஸான் வால்டெஸ் என்ற நிறுவனம் எண்ணெய்யை கசிய விட்ட செய்தி . இதன் விளைவாக சூழல் மாசுபட்டது . இதையொட்டியே சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை பல்வேறு நிறுவனங்களும் முன்னெடுத்தன . இதற்கான சட்டங்களை அரசு உருவாக்கியது . இதற்கு பத்தாண்டுகள் முன்பே 1960-70 காலகட்டத்திலேயே அமெரிக்க நிறுவனங்கள் சமூகத்திற்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்ற குரல்கள் மக்களிடையே எழத் தொடங்கிவிட்டன . இதன் காரணமாக , 1980 களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவில் குறைவான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பல்வேறு சமூக

சமூக பொறுப்புணர்வு திட்டம் - தொடக்கம்

படம்
1 சமூக பொறுப்புணர்வுத்திட்டம் உங்கள் பகுதியில் நிறைய வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன . அவை மக்களுக்கு குறிப்பிட்ட சேவையை வழங்குகின்றன . அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன . இவற்றை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை . இந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்பது அதன் உரிமையாளர் , அதில் வேலை செய்யும் பணியாளர்கள் தொடர்பானதுதான் . இவர்கள் சமூகத்திற்கு என்ன பங்களிப்பு செய்கிறார்கள் ? ஆண்டிற்கு ஒருமுறை வரும் அறுபத்து மூவர் விழாவிற்கு தயிர் சோற்றை பொட்டலமிட்டு வழங்குவதை நான் கூறவில்லை . நிறுவனங்கள் தாமாக முன்வந்து அவர்கள் தொழில் செய்யும் பகுதிக்கு என்ன விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதை சமூக பொறுப்புணர்வு திட்டம் எனலாம் . இன்று இதனை அரசு கட்டாயமாக்கிவிட்டது . இந்திய அரசு இதனை சட்டமாக்கும் முன்பே டாடா , பிர்லா போன்ற நிறுவனங்கள் அவர்களின் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் கல்வி , வேலைவாய்ப்பு , தொழில்திறன் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கிவந்தனர் . இப்படி இவர்கள் செய்யவேண்டும் என்பது அன்று கட்டாயமில்லை . ஏன் செய்கிறார்கள் ? இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைக

சமூக பொறுப்புக்குழு எப்படி அமைக்கப்படுகிறது? - சிஎஸ்ஆர் 6

படம்
அத்தியாயம் 6 பெருநிறுவன சமூக பொறுப்பு  குழுவின் வடிவமும், செயல்பாடும்  1987 ஆம் ஆண்டு சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் பற்றி வேர்ல்டு கமிஷன் அமைப்பு, சில வரையறைகளை உருவாக்கி வெளியிட்டது. அதில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் என்பது எதிர்கால தலைமுறையினருக்கான தேவைகளை சமரசமின்றி தீர்ப்பதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியது.  இதுதொடர்பாக இந்திய அரசு, 2011 ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் ஒன்பது விதிகளை உருவாக்கியது. இவை வணிக நிறுவனங்களுக்கும், அவை செய்யும் சமூக பொறுப்பு சார்ந்த திட்டங்களுக்கும் பொருந்துபவை. மேலும் ஐ.நா அமைப்பு இது பற்றிய பத்து கொள்கைகளை வெளியிட்டுள்ளது.  சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கூட இன்று சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களுக்குள் வந்துவிட்டன. இவை இதனைச் செலவாகப்பார்க்காமல் முதலீடாகப் பார்ப்பது அவசியம். தொழில்நிறுவனங்கள் சரியான முறையில் இயங்கி லாபம் பார்க்க, அரசு உரிமம மட்டும் போதாது. அப்பகுதியில் வாழும் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. இதற்கு சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் உதவும். நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதி