இடுகைகள்

டிவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களுக்கும், சமூகநலத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா?

படம்
            இலவசங்களும் மாநிலத்தின் பொருளாதாரமும் ! பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுப்பது தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையாக நடக்கிறது . யார் பதவிக்கு அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களே தலைவர்களாகிவிடுவார்கள் . இந்த வகையில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பகிரங்கமாக விற்கப்படுகிறது என்பதை நான் தனியாக சொல்லித் தெரியவேண்டியதில்லை . தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தவிப்பு சூரியக்கட்சிக்கும் , அதைவிட அதிகமாக இலைக்கட்சிக்கும் உள்ளது . இதன் விளைவாகவே தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது . இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நலத்திட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி அன்பளிப்புகளாகவே மாறிவிட்டன . பெண்களையும் மாணவிகளையும் குறிவைத்து வழங்கும் பல்வேறு இலவச பொருட்களை இப்படி கூறலாம் . நடப்பு ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி தமிழ்நாட்டின் கடன்தொகை 4.85 லட்சம் கோடியாக உள்ளது . அடிப்படைத் திட்டங்களுக்கும் , சுகாதாரங்களுக்கும் நிதியுதவி ஒதுக்ககி செலவிடவேண்டிய நேரத்தில் வீட்டு பயன்பாட்டு பொருட்களை தருகிறோம் . கேஸ் சிலிண்டர்களை கூடுதலாக விலையின்றி

72 மணிநேரத்தில் கொலைக்குற்றவாளியைக் கூண்டிலேற்ற காலப்பயணம்! மிரேஜ் 2018

படம்
    மிரேஜ் 2018 ஸ்பானிய திரைப்படம்  Spanish Durante la tormenta Directed by Oriol Paulo Produced by Mercedes Gamero Mikel Lejarza Eneko Lizarraga Jesus Ulled Nadal Written by Oriol Paulo Lara Sendim Starring Adriana Ugarte Chino Darín Javier Gutiérrez Álvarez Álvaro Morte Nora Navas Music by Fernando Velázquez Cinematography Xavi Giménez 1989 ஆம் ஆண்டு டிவியில் கிடாரை வாசித்த பதிவு செய்துகொண்டிருக்கிறான் சிறுவன் ஒருவன். அப்போது எதிர்வீட்டில் ஏதோ சண்டை போடுவது போல சத்தம் கேட்க, அங்கு சென்று பார்க்கிறான். மனைவி கத்தியால் குத்துபட்டு கிடக்க, மேலிருந்து கீழே வரும் கணவரின் கையில் கத்தி. பயந்துபோய் சிறுவன் ஒடுகிறான். அவனை துரத்தியபடி கொலைகார கணவர் வருகிறார். சாலையில் வேகமாக வரும் காரை எதிர்பார்க்காமல் சிறுவன் செல்ல, அவன் அடிபட்டு கீழே விழுந்து உயிரை விடுகிறான்.  2014இல் அதேசிறுவன் வாழ்ந்த வீட்டுக்கு வெரா ராய் என்ற பெண்மணி கணவனுடன் தங்குவதற்கு வருகிறாள். அங்கு நிகோ என்ற இறந்துபோன சிறுவனின் டிவி, வீடியோ கேமரா கிடைக்கிறது. அந்த நேரம் பார்த்து வானில் புயல் ஒன்று ஏற்படுகிறது. இடி, மின்னல், காற்

நாடக மேடையிலிருந்து உருவாகி வந்தவன் நான். அதுதான் என்னை திரைப்படத்திற்காக உந்தியது! - அனுராக் பாசு

படம்
        anurag basu         அனுராக் பாசு இந்தி திரைப்பட இயக்குநர் உங்கள் திரைப்படம் பொதுவாகவே பெரிய கேன்வாஸ் கொண்டதாகவே இருக்கிறதே? லூடோ அந்த வகையைச் சேர்ந்ததுதானா? பெரிய படங்களாக எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுப்பதில்லை. நான் கதையை எழுதும்போது அதனை காட்சிரீதியாக யோசித்து பார்ப்பேன். அப்படி பார்த்து பிட்டு கதாபாத்திரத்திற்கு அபிஷேக் பச்சனையும், சட்டு பாத்திரத்திற்கு பங்கஜ் திரிபாதியையும் நடிக்க கேட்டு அணுகினேன். அவர்களும் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒகே சொல்லிவிட்டனர். சான்யா மல்கோத்ராவும், அபிஷேக் பச்சனும் நீங்கள் படத்தை இயக்கு வதால்தான் உள்ளே வந்தார்கள் என்று கூறப்படுகிறதே? நான் இதற்கு ஏதும் சொல்லமுடியாது. அப்படியும் இருக்கலாம். செட்டில் நான் உருவாக்கும் சூழல் அப்படி அவர்களை யோசிக்க வைத்திருக்கலாம். நீங்கள் தொடக்கத்தில் டிவி தொடர்களை இயக்கியது திரைப்படங்களை இயக்குவதற்கு உதவி செய்கிறது என்று கூறலாமா? டிவி என்று இல்லை. நான் நாடகத்திலிருந்து காட்சியை எப்படி ஒருங்கிணைக்கிறேன் என்று கற்று வந்திருப்பதாக நினைக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. நாடகமேடைதான் எனது ஒரே பள்ளி.

செமாரூ நிறுவனத்தின் வருமானத்தை அதிகரித்த தலைவர் இவர்தான்! கிராந்தி கடா

படம்
      கிராந்தி கடா   கிராந்தி கடா சீப் ஆபரேஷன் ஆபீசர், செமாரூ என்டர்டெய்ன்மெண்ட் கிராந்தி,  200 வல்லுநர்கள் கொண்ட படையை வைத்துள்ளார். செமாரூ நிறுவனத்திற்கு போன்கள் டிஜிட்டல், டிடிஹெச், கேபிள் என பல்வேறு வணிகங்கள் உண்டு. 2018ஆம் ஆண்டு கிராந்தியின் திறமையால் நிறுவனத்தின் வருமானம் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் டிடிஹெச்களில் பல்வேறு சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர். எவர்க்ரீன் கிளாசிக், டாடா ஸ்கை மராத்தி சினிமா, காமெடி கல்லி, ஹமார் சினிமா ஆகியவைதான் அவை. இவை மட்டுமன்றி மினிபிளெக்ஸ், டாடா ஸ்கை காமெடி, டாடா ஸ்கை டிவோஷன், சதபாபர் ஹிட்ஸ் ஆகியவை சிறப்பான வெற்றி பெற்றிருக்கின்றன. அடுத்து பக்தி ஸ்டூடியோ என்பதை உருவாக்கியுள்ளார்.ஆன்மிக துறையில் பாடல்களை பாடுபவர்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி இது என சொல்கிறார் கிராந்தி. Impact magazine  

பொழுதுபோக்குத்துறையில் சாதித்த ஓரினச்சேர்க்கையாளர்! - எலன்

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள்! எலன் டிஜெனரெஸ் அறிமுகம் எலன், பொழுதுபோக்குத் துறையில் நாடறிந்த பிரபலம். 1994 ஆம் ஆண்டு, தி டுநைட் ஷோ வித் ஜானி கார்சன்  என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டிவியில் முக்கியமான நேரத்தில் வரும் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். இச்சமயத்தில் இவரின் பாலினம் பற்றி அறிந்த மரபான கிறிஸ்தவர்கள், எலனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தி எலன் டிஜெனரெஸ் ஷோ நிகழ்ச்சியிலிருந்து இவர் இந்த ஆண்டு விடைபெறுகிறார் என்று கிசுகிசுக்கிறார்கள்.  அமெரிக்காவில் 1958 ஆம் ஆண்டு பிறந்த எலனுக்கு இன்று 61 வயதாகிறது. பல்வேறு டிவி, நிகழ்ச்சிகள், அனிமேஷன் படங்களுக்கு டப்பிங், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என இவர் வெகு பிரபலமான ஆள். அமெரிக்காவின் லூசியானாவிலுள்ள மெடாய்ரே நகரில் பிறந்தவர். தாய், பேச்சுக்கலை பயிற்சியாளர். தந்தை, காப்பீட்டு முகவர். 1973 ஆம் ஆண்டு இவரது தாய், தந்தையை விவகாரத்து செய்துவிட்டு மறுமணம் செய்தார். புதிய தந்தையுடன் சென்ற எலன், அவரால் சில ஆண்டுகளுக்குப் பிறகு வல்லுறவு செய்யப்பட்டார். பள்ளிப்படிப்பையும் கல்லூரி பட

ஃபேஷன் உலகில் சாதித்த திறமைசாலி - மிஸ் ஜே

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள் ஜே.அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் ஜென்கின்ஸ், ஃபேஷன் உலகில் வெகு பிரபலமான ஆள். மிஸ் ஜே என்று அழைக்கப்படுவர், 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவின் டிவி உலகில் பல்வேறு மாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸில் பிறந்தவருக்கு, ஃபேஷன் வழிகாட்டுதலை வழங்கியது யாரோ அல்ல; அவரது அம்மாதான். பின்னர் எலைட் மேனேஜ்மெண்ட நிறுவனத்தைச் சேர்ந்த மோனிக் பில்லார்டு ஜேவைப் பார்த்தார். அவரின் தோற்றத்தைப் பார்த்ததும் மாடலுக்கு சரியான ஆள் என முடிவு செய்தார். உடனே அக்ரிமெண்டை ரெடி செய்து கையில் கொடுத்துவிட்டார். அதன்பின் படிப்பை தூக்கிப்போட்டு மாடலிங்கில் குதித்தார் ஜே. வெற்றியும் பெற்றார். பின்னர்தான் டைரா பேங்க்ஸ் என்ற நடிகையின் நிகழ்ச்சியில் ஆலோசகரானார். அவருக்கு நிகழ்ச்சி பற்றிய பல்வேறு ஆலோசனைகளை கட்டண சேவையில் வழங்கினார். மேலும் டைரா ஷோ என்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். வெறும் ஆலோசனைகள் மட்டுமன்றி அமெரிக்கா நெக்ஸ்ட் மாடல் எனும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆடைகளையும்  உருவாக்கினார். இவர் இ

கருத்து சொல்றோம் ப்ரோ! - ஆங்கில இந்தியர்கள் அட்டூழியம்- சேட்டன் பகத்!

படம்
பெட்ரோல், டீசல் விலை, மாணவி வல்லுறவு, கள்ள உறவு, அந்நிய செலாவணி கையிருப்பு, புதிய மசோதா, பட்ஜெட் ஆகிய விவகாரங்கள் சூடுபிடிப்பது எங்கு தெரியுமா? மாநில மொழி ஊடகங்களில் அல்ல; முழுக்க ஆங்கில மீடியத்தில் படித்து ஆங்கிலேய நாவல்களை படித்து அதிலேயே கனவுகண்டு இந்தியாவில் வாழும் ஆட்களின் உலகம்தான் மேற்சொன்ன விவகாரங்களைப் பேசுகிறது. மக்களிடையே கொண்டு செல்கிறது. திரும்பத்திரும்ப அதனைப்பேசி, மக்களின் மனங்களில் பயத்தை புயலை உருவாக்கி வருகிறது. பிற மக்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதையே இவர்கள் மறக்க வைத்துவிடுகிறார்கள். ஆங்கிலமொழியில் இயல்பான வசதி என்னவென்றால், எளிதாக உலகோடு தொடர்புகொள்ளமுடியும் என்பதுதான். இதன் விளைவாக, ஆங்கில ஊடகங்கள் எந்த டாபிக்கை எடுத்துப் பேசுகிறார்களோ அதைத்தான் உலகம் கவனிக்கிறது. இந்தியாவில் இப்படி நடக்கிறது என சிஎன்என், பிபிசி முதற்கொண்டு புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லுவது கந்தசாமி, பழனிச்சாமி கிடையாது . குறிப்பாக தந்தி போன்ற மாநில சார்பு கொண்ட அரசு சார்பு கொண்ட பத்திரிகைகளில் இதனைப் பார்க்க முடியாது. ஆனால்

1984 ஜார்ஜ்வெல் நூலுக்கு எழுபது வயது!

படம்
1984 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல். எரிக் பிளேர் என்பவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற பெயரில் இந்த நூலினை எழுதினார். இதில் வரும் ஸ்மித் என்பவர் அரசு அதிகாரி. நாளிதழ்களில் வரும் செய்திகளை கவனமான தணிக்கை செய்து அரசுக்கு ஆதரவாக மாற்றி எழுதி மக்களுக்கு பிரசாரம் செய்வதே பணி. இதில் டெலிஸ்க்ரீன் என்ற கருவி வரும். ஏறத்தாழ டிவி போல. ஆனால் இதனை நீங்கள் அணைக்க முடியாது. அதன் வழியாக நீங்கள் கவனிக்கப்பட்டு வருவீர்கள். இரண்டாம் உலகப்போரின் போது டிவி இருந்தாலும், அதனை அறிவியல் புனைவில் பயன்படுத்திய ஆர்வெல்,  முன்னதாகவே இதனை எழுதிவிட்டார். அப்போது ஜெர்மனியில் வீடியோ போன் சிஸ்டம்தான் உருவாக்கப்பட்டிருந்தது. நூல் எழுதிய காலகட்டத்தில் டிவி பார்க்கும் மோகம் அபரிமிதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு கூட அதிகம்தான். 2017 வாக்கில் மெல்ல டிவி செல்வாக்கிழந்து வருகிறது. இப்போது, டிவியின் இடத்தை இணையம், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவை பிடித்து விட்டன. ஆனால் நூலில் வரும் அரசின் கண்காணிப்பு வேறுவகையாக மாறிவிட்டது. அமெரிக்கா, விசா கொடுப்பதற்கு முன்னே பயணிகளின் சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்த பின்னரே நாட்டில் அனுமதிக்கும்