இடுகைகள்

தெலுங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சரின் பெண்ணை மீட்கச்செல்லும் கம்யூனிச லட்சியத் திருடன்!

படம்
            ரெச்சிப்போ நிதின் , இலியானா கம்யூனிச கருத்து கொண்ட திருடனைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சரின் ஐநூறு கோடி கள்ளப்பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரியின் கதை . அ ந்த அதிகாரியின் கதையை சொல்லியிருந்தால் கூட பார்க்க நன்றாக இருந்திருக்கும் . அதையும் ஊறுகாய் போல பயன்படுத்தி இலியானாவின் தசை மேல் பயணிக்கிறது கதை . நிதின் படத்தில் திருடனாக நடித்திருக்கிறார் . திருடன்தான் . ஆனால் நல்ல திருடன் . பிளாட்பாரம் , கோவில் வாசல் என தூங்கி எழுபவர் , தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிடுகிறார் . ஆனால் , மாது , நிலம் என செலவிடாமல் ஏழைகளுக்கு , படிக்க வேண்டிய வயதில் பிச்சை எடுக்கும் பிள்ளைகள் , வேலை செய்யும் சிறுவர்களுக்கு செலவிடுகிறார் . இப்படிப்பட்ட லட்சிய திருடனை போலீஸ் ஏறத்தாழ கைது செய்யும் அளவுக்கு அருகில் வந்துவிடுகிறது . அப்போதுதான் காவல்துறை அதிகாரி , திருடனின் கம்யூனிச லட்சியத்தை அறிந்து வியக்கிறார் . நான்கு கி . மீ . ஓடிவந்து அவனுக்கு கை கொடுத்து அமைச்சரின் கள்ளப்பணத்தை திருடிச்செல்லுமாறு கூறுகிறார் . திருடனுக்கு அது போல ஐடியா ரொம்ப புதுசு . இருந்தா

நக்சலைட் காதலியைக் காப்பாற்றும் போலீஸ் காதலன்!

படம்
  ஹீரோ 2008 - நிதின், பாவனா ஹீரோ நிதின் , பாவனா எலன் மஸ்க் செவ்வாயை காலனியாக்க துடிக்கிறார் அல்லவா ? அங்கு திரையிடப்பட வேண்டிய படம் . படத்தில் அனைத்துமே மிகையாக நம்ப முடியாமல் உள்ளது . இ து வேறு உலகம் ப்ரோ . நிதினின் அப்பா போலீஸ் கமிஷனர் . அவருக்கு தனது மகனை தனது துறையில் வேலையில் சேர்த்துவிடவேண்டுமென நினைக்கிறார் . ஆனால் அதற்கு அவரது மனைவி சரளா எதிராக நிற்கிறார் . மகன் சினிமா ஹீரோ ஆகவேண்டும் என்பது அவரின் ஆசை . மகனுக்கும் அதுதான் லட்சியம் . இந்த நேரத்தில் நியாய உணர்வு கொண்டவர்கள் போலீஸ்காரர்களாக மாறலாம் என மாநில அரசு சட்டம் கொண்டு வருகிறது . நிதினை பயிற்சிக்கு அப்பா அனுப்புகிறார் . மகனும் வேண்டாவெறுப்பாக மூன்று மாதத்தை கடத்த அங்கு வருகிறார் . மூன்று மாத காலத்தில் போலீஸ் அகாடமியில் நடக்கும் காதல் , நட்பு , தேசப்பற்று இதர சமாச்சாரங்கள்தான் கதை . '' என்னை எதுக்காக காதலிக்கிற ? என்னோட கண்ணு , மூக்கு , வாய் , உதடு , கழுத்து பிடிக்குமா ?'’ என காதலி கிருஷ்ணவேணி கேட்க , சட்டென நாயகன் ராதாகிருஷ்ணன் அவளின் நீலநிற இடுப்

சாலை விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்!

படம்
      எலா செப்பனு - தருண், ஷிரியா       எலா செப்பனு தருண் , ஷிரியா சரண் ஜெர்மனி , இந்தியாவில் ஆந்திரம் என இரு நாடுகளில் பயணிக்கிற கதை . தற்செயலாக நடைபெறும் விபத்தால் நாயகி மணம் செய்துகொள்ளப்போகும் அவளது காதலன் இறந்துபோக , நாயகன் காதலனின் இழப்பை எப்படி ஈடுகட்டுகிறான் என்பதே கதை . இறந்துபோனவர் நடத்தும் தொழில் , குடும்பம் , சமூகம் என அனைத்து இடங்களிலும் தன்னை நாயகன் பொருத்திக்கொண்டு சாப விமோசனம் தேடுகிறார் . இந்த நேரத்தில் தன்னால் வாழ்க்கை இழந்த நாயகியையும் சந்தித்து , அடையாளம் மறைத்து அவரைத் தேற்றுகிறார் . தொழிலை மேலே மீட்டு கொண்டுவருகிறார் . இந்த நேரத்தில் அவர் மெல்ல நாயகியை காதலிக்கத் தொடங்குகிறார் . நாயகியும் அப்படித்தான் . இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா , நாயகன் பற்றிய உண்மை நாயகிக்கு தெரிந்ததா , காவல்துறை அதிகாரி நாயகனின் தற்செயல் விபத்துக்காக அவரை கைது செய்தாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி . படத்தில் ஷிரியா சரணுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது . ஆனால் அவரோ எங்கோ பராக்கு பார்ப்பது போல நிற்கிறார் . ஒரு நிறுவனத்தை தனது காதலனோடு சேர்ந்து நடத்தியவர

ரவுடிகளை அசாத்திய துணிச்சலோடு பந்தாடும் கல்லூரி மாணவன்!

படம்
  அசாத்யுடு - கல்யாண் ராம், தியா அசாத்யுடு தெலுங்கு கல்யாணம் ராம், தியா   கல்லூரியில் படிக்கும் பார்த்துவுக்கு ஒரு செயலை செய்தால் அதன் முன்பின் என்ன நடக்கும் என்பது தெரியும். இதனால் அடுத்தவர்களின் பிரச்னையில தானாக சென்று தலையிட்டு அதை முடித்து வைக்க தயங்குவதில்லை. இவனது குணத்தால் பெத்த ரவுடியின் தம்பியை தன்னியல்பாக அடித்து கொல்கிறான். இதனால் ஏற்படும் பிரச்னைகளை காவல்துறை உதவியுடன் எப்பபடி கையாள்கிறான். ரவுடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியொருவனாக அசாத்திய துணிச்சல் கொண்ட மனிதனாக எப்படி உதவுகிறான் என்பதே கதை. கல்யாண் ராமின் படங்களில் கொஞ்சமேனும் கதைக்காக மெனக்கெடுகிறார்கள். அந்த வகையில் படத்தை பார்ப்பதில் அந்தளவு சலிப்பு ஏற்படுவதில்லை. இதற்காக அவரது அத்தனை படங்களும் சிறப்பானவை என்று கூற முடியாது. இந்த படத்தில் பார்த்து என்ற பாத்திரத்தின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஒரு கல்லூரியில் ஒரு இளம்பெண்ணை ராக்கிங் செய்து அவளை பாலியல் வல்லுறவு செய்ய துரத்துகிறார்கள். கல்லூரி தலைவரின் மகன் என்று தெரிந்தும் அவனை அடித்து உதைத்து பெண்ணைக் காப்பாற்றுகிறான் பார்த்து. இதன் விளைவாக அவனுக்க