இடுகைகள்

தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாஜி படைகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றியவர்!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி தி ஹன்ட் மனைவியைப் பிரிந்து வாழும் நர்சரி ஆசிரியரான லூகாஸூக்கு ஒரு மகன் உண்டு . லூகாஸின் நெருங்கிய நண்பரான தியோவின் மகள் கிளாரா படிப்பதும் லூகாஸின் பள்ளியில்தான் . ஆசிரியர் , மாணவி என்பதைக் கடந்த நட்பு கிளாராவுக்கும் லூயிஸூக்கும் உருவாகிறது . ஒரு நாள் கிளாரா வீட்டில் இருக்கும்போது அவளுடைய அண்ணனும் , அவனின் நண்பனும் விளையாட்டாக ஐபேடிலுள்ள ஆபாசப் படத்தை கிளாராவுக்கு காட்டுகிறார்கள் . அடுத்த நாள் கிளாரா , பள்ளி முடிந்தும் வீட்டுக்குப் போகாமல் வகுப்பிலேயே அமர்ந்திருக்கிறாள் . ஆசிரியர் லூகாஸ் தன்னிடம் தவறாக நடந்துவிட்டதாக பள்ளி முதல்வரிடம் பொய்க்குற்றம் சாட்டுகிறாள் . கிளாராவைத் துருவி விசாரிக்கும் பள்ளி நிர்வாகம் , அவள் சொல்வது உண்மை என நம்பி , லூகாஸை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள் . லூகாஸ் தன் மீது விழுந்த பழிச்சொல்லை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ‘ தி ஹன்ட் .’ திரைப்படம் . சர் நிக்கோலஸ் வின்டன் சில முன் டி . வி சேனலில் சிறப்பு விருந்தினராக முதியவர் அழைக்கப்பட்டிருந்தார் . அவர் மேடைக்கு வந்ததும் , பார்வையாளர்களின் எழுந்து நின்று

கிறிஸ்டோபர் நோலனும், மஜித் மஜீதியும்!

படம்
லோகோ: கார்டூன் கதிர் ஒருபடம் ஒரு ஆளுமை !- லிஜி தி பிரஸ்டீஜ் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்ட படம் ‘ தி பிரஸ்டீஜ் ’. பிரபு வர்க்க மேஜிக் மேனுக்கும் , எளிய குடும்பத்தைச் சேர்ந்த மேஜிக் மேனுக்கும் இடையிலான பகைமையும் , இழப்புகளும்தான் படத்தின் கதை .   ஒரு கூண்டுக்குள் அழகான பறவை ஒன்று இருக்கும் . மேஜிக் மேன் அந்தக் கூண்டை துணியைக் கொண்டு மூடுவார் . சிறிது நேரத்தில் அந்த துணியை மேலே எடுப்பார் . அப்போது அந்த கூண்டும் , பறவையும் காணாமல் போயிருக்கும் . உடனே பார்வையாளர்கள் மேஜிக்மேன் தான் தன்னுடைய மாய சக்தியால் கூண்டையும் பறவையையும் மறைய வைத்துவிட்டான் என்று ஆச்சர்யத்தில் கை தட்டுவார்கள் . ஆனால் , அச்சிறுவனோ ‘‘ அவன் பறவையைக் கொன்று விட்டான் ...’’ என்று அழுதுகொண்டே மேஜிக் மேனை திட்டுவான் . மேஜிக் செய்பவர் புதிய பறவையைக் கொண்டுவந்தாலும் முதலில் மக்களுக்கு காட்டிய பறவை கொல்லப்பட்டிருக்கும் . நல்லவர் , கெட்டவர் என அனுமானிக்க முடியாத கதாபாத்திரங்கள் படத்தில் பெரும்பலம் . ஹ்யூஜாக்மேன் , கிறிஸ்டியன் பேல் , ஸ்கார்ல

மன்னருக்கு போலி!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 3 மன்னருக்கு போலி! ரா . வேங்கடசாமி பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு  எவ்வித கொள்கையும் கோட்பாடும் இல்லை. தாங்கள் பிழைக்க வேண்டும் ; சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சிய தாகம் கொண்டவர்களான இவர்களுக்கு , மேல்தட்டு மனிதர்களை ஏமாற்றுவதில் இவர்களுக்கு அன்லிமிடெட் திருப்தி. அப்படிப்பட்ட அசகாய எத்தர்களில் ஒருவர் ஹாரிடோமிலா . மறைந்த மன்னர் கெய்சரின் பேரன் என்று சொல்லி உலா வந்தவர் . ஜெர்மனியில் கெய்சரின் பேரன் வில்ஹெம் வான் ஓகன் ஜோலரின் இருக்கும்போதே அப்படி சொல்லி ஏமாற்ற முயற்சித்தது ஹாரிடோமிலாவின் சமர்த்து .   ஹாரிடோமிலா , 1904-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார் . நடுத்தரக்குடும்பம் . இவரது தந்தை ஹாரி , சிறு குழந்தையாக இருக்கும்போது இறந்துவிட்டார். 1915- ஆம் ஆண்டு ஜெர்மனியில் லேட்வியாவை ஆக்கிரமித்தபோது ஹாரிக்கு 11 வயது. சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார் ஹாரிடோமிலா . 1918- ஆம் ஆண்டு சில ஜெர்மனி புரட்சியாளர்கள் , முன்னர் அந்நாட்டிற்குச் சொந்தமாக இருந்த புரூசியின் நிலங்களை மீண்டும் ஜெர்மனியோடு இணைக்கவேண்டும் என்று வெட்டியாக போராட்டம்

ஆள்மாறாட்ட கோல்மால்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 2 ஆள்மாறாட்ட கோல்மால்!   ரா . வேங்கடசாமி தனது தாயிடமிருந்து ஆண்டிற்கு ஆயிரம் பவுன்கள் பயணப்படியாக பெற்ற கேஸ்ட்ரோ இங்கிலாந்துக்குத் திரும்பி , தனது டிச் போர்னே எஸ்டேட்டுக்கு இயல்பாக உரிமை கொண்டாடினார் . ரோஜரின் குடும்ப விவகாரங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டவர் , அறிமுகமான எல்லோரையும் நுணுக்கமாக ஏமாற்றியது மட்டுமின்றி , தான்தான் ரோஜர் என்று பகிரங்கமாகவே சொல்லத் தொடங்கினார் . அதற்கு ஸ்டோரி வேண்டுமே ? உயிர் தப்பியதை லாஜிக் நழுவாத கதையாக மாற்றி எல்லோரிடமும் சொன்னார் காஸ்ட்ரோ. கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருக்கும்போது , ஆஸ்திரேலியா கப்பல் தன்னைக் காப்பாற்றியது ; கவனக்குறைவால் தான் பிழைத்ததை வீட்டாருக்கு சொல்லவில்லை என கூசாமல் பொய் சொன்னார். இங்கிலாந்து போகும்போதுதான் காதலியோடு நெருங்கியதால் அவள் கர்ப்பிணியாகி விட்டதாகவும் கதை கட்டினார் . இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது . எஸ்டேட் நிலங்களை பகுதியாகப் பிரித்து 100 பவுன்கள் வீதம் விற்றதால் காஸ்ட்ரோ ஏராளமாக் கரன்ஸி பார்த்துவிட்டார் . போலியான ஒ

வரலாற்று சுவாரசியங்கள் 1- ரா.வேங்கடசாமி

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 1 பணத்துக்காக மாறுவேடம் ! ரா . வேங்கடசாமி தெ ற்கு இங்கிலாந்து பகுதியில் , ஹாம்ஷைபரில் எஸ்டேட் அதிபர் டிச்போர்னே பிரபு. அவரது தலைமுறையில் பத்தாவது வாரிசு . அவருக்கு ஜேம்ஸ் என்றொரு சகோதரன். இவரின் மூத்த மகனின் பெயர் , ரோஜர் டிச் போர்னே. ரோஜர் பிறந்தது 1829-ஆம் ஆண்டு ; யார்க்‌ஷையரில். கத்தோலிக்கர்கள் படிப்பதற்கான போர்டிங் ஸ்கூல் ‘ ஸ்டோனி ஹர்ஸ்ட் ’ டில் ரோஜர் படித்தார். தனது இருபதாவது வயதில் ‘ சிக்த் டிராகூன் கார்ட்ஸ் ’ கமிஷனில் தேறியவர் வெற்றிக்களிப்போடு வெளியே வந்தார் . பத்தாவது பட்டம் வகித்த பிரபு வாரிசு இன்றி காலமாகிவிடவே அவரது ஒன்றுவிட்ட சகோதரன் எட்வர்டு டப்டி வாரிசானார். ஆனால் இவருக்கும் வாரிசு இல்லை. எனவே அவரது சகோதரி மகன் ரோஜர் பட்டத்திற்கு உரியவன் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் 1852-ஆம் ஆண்டு , ரோஜர் சர்எட்வர்டின் மகள் காதரினைக் காதலித்தார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு கத்தோலிக்க சர்ச் ஒப்புதல் தரவில்லை . என்ன பிரச்னை ? ஒன்றுவிட்ட சகோதர , சகோதரிகள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதிதான் காரணம் . காதலை அனுமதித்த சர் எட்வர்டு ஒரு ப

தலைவன் இவன் ஒருவன்! -சமூக தொழில்முனைவோர் தொடர்!

படம்
தலைவன் இவன் ஒருவன் 7 கரினா கேஸ்டில்டோ பகதூர் ராம்ஸி வகுப்பில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பது கேஷூவல் கேள்வி . அதற்கும் அப்போது மண்டையில் தோன்றியபடி , எஞ்சினியர் ஆவேன் , டாக்டர் ஆவேன் , நாசா விஞ்ஞானி ஆவேன் , போயிங் பைலட் ஆவேன் என அப்போதைய உயர்ந்த ஆசையை மாணவர்களும் குட்பாய் என்று பெயர் வாங்க ஒப்பிப்பார்கள் . ஆனால் கரினா தயங்கவேயில்லை . நான் புயல் கணிப்பாளர் ஆகப்போகிறேன் என்றார் . இன்று தன் சமூகத்தினருக்கான வாழ்வை வடிவமைப்பில் உதவுவது அவரின் லட்சிய ஆசைதான் . அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்திலுள்ள மியாமியில் பிறந்த கரினா , மியாமி பல்கலையில் இரண்டு மீட்டராலஜி பட்டங்களைப் பெற்றவர் . அவசரகால உதவிகளை அளிக்கும் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவங்களை கொண்டவர் கரினா .  " நான் வெறுமனே கம்ப்யூட்டருக்கு முன்னே அம்மர்ந்து கொண்டு புரோகிராம் எழுத விரும்பவில்லை . நான் எனது பணி மூலம் மக்களின் தினசரி வாழ்க்கை பிரச்னை எதிலாவது தீர்வு கொண்டுவர நினைத்தேன் "  என ஆச்சர்ய பதில் தருகிறார் கரினா . கரினா வசிக்கும் கடற்கரைக்கு அருகிலுள்ள குடியிருப்பில் கடல் அடிக்கடி